Categories
டென்னிஸ் விளையாட்டு

“சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி” இரட்டையர் பிரிவில் கனடா, பிரேசில் ஜோடி சாம்பியன் பட்டம்….!!!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவில் கனடாவை சேர்ந்த கேப்ரியல்லா டாப்ரோஸ்கி மற்றும் பிரேசிலைச் சேர்ந்த லுசா ஸ்டெபானி ஜோடி, ஜார்ஜியாவின் நடிலா ஜலாமிட்ஸ் மற்றும் ரஷ்யாவின் அன்னா லின்கோவா ஜோடியுடன் மோதியது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்ரியல்லா டாப்ரோஸ்கி-லுசா ஸ்டெபானி ஜோடி 6-1,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர்

Categories

Tech |