கர்த்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டி நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் பணியில் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பெண் நிருபர் டாமினிக் மெட்ஜ்கர் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த ஹேன்ட் பேக் ஒன்று காணாமல் போனது. அதனை டாமினிக் சரியாக கவனிக்கவில்லை. இதனையடுத்து டாமினிக் இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது போலீசார் கூறிய பதிலை கேட்டு டாமினிக் ஆச்சரியமடைந்தார். அதாவது பெண் காவலர் ஒருவர் […]
Tag: கேமரா
தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி வாகனங்களில் விபத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்கக்கூடிய வகையில் அனைத்து பள்ளி பேருந்துகளில் முன்புறமும், பின்புறமும் கேமரா, சென்சார் பொருத்துவதை கட்டாயமாக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மோட்டார் வாகன சட்டத்தின் திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரைவு கடந்த ஜூன் 29ஆம் தேதி உள்துறை செயலாளரால் அரசிதழில் வெளியிடப்பட்டது. இது குறித்த உத்தரவை வெளியிட அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த உத்தரவு தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனம் தற்போது வாட்ஸ் அப்பில் புதிதாக ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ் அப் கேமராவில் போட்டோ எடுக்கும் வசதி மட்டுமே இருக்கும். ஒருவேளை வீடியோ எடுக்க வேண்டும் என்றால் கேமராவை நீண்ட நேரத்திற்கு டச் பண்ண வேண்டும். ஆனால் தற்போது வாட்ஸ் அப்பில் வீடியோ மற்றும் போட்டோ எடுக்கும் இரு வசதிகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை டிப்ஸ்டர் Wabetalnfo, Android 2.22.21.8 பீட்டா பதிப்பில் உள்ள பயன்பாட்டின் கேமரா மூலம் பெற்றுக்கொள்ள […]
தனது மனைவி வேறொரு நபருடன் பைக்கில் சென்றதை அறிந்த கணவர் நடுரோட்டிலேயே சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேறு ஒரு நபருடன் தனது மனைவி இருசக்கர வாகனத்தில் சென்றதை அறிந்த கணவர் தொடர்ந்து சென்று கையும் களவுமாக பிடித்த காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. சில நொடிகள் மட்டுமே காணப்படும் இந்த காட்சியில் ஸ்கூட்டியில் மனைவியையும் காதலனையும் பார்த்த கணவன் முதலில் முழு சம்பவத்தையும் கேமராவில் படம் பிடிக்க திட்டமிட்டு இருப்பதை காணலாம். […]
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பள்ளி நிர்வாகம் தங்களது பேருந்துகளில் அழைத்துச் சென்று மீண்டும் வீடுகளுக்கு கொண்டு சென்று விடுகிறது. இந்த வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா ,எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவை கட்டாயம் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி வாகனங்களின் முன் பக்கமும், பின்பக்கமும் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்ததால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தனியார் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பள்ளி பேருந்துகளில் சென்று வருகிறார்கள். ஒரு சில சமயங்களில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம், அல்லது ஓட்டுநரின் கவனகுறைவு காரணமாக பள்ளிப்பேருந்துகளிலேயே குழந்தைகளுக்கு விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் […]
கர்நாடகாவில் பி.யூ.சி இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிற நிலையில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகின்றது. இந்த தேர்விற்க்காக மாநிலம் முழுவதும் 1,076 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றார்கள். தேர்வு மையங்களை சுற்றிலும் 200 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு எழுதும்போது மாணவர்கள் […]
குமரிமாவட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி முடிவடைந்த பின் குற்ற சம்பவங்கள் குறையும் என குமரி மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆயுதப்படை வளாகத்தில் ரூபாய் 9.71 லட்சத்தில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை இன்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் திறந்து வைத்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியபோது, அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் எண் , நம்பர் பிளேட் தெளிவாக தெரிவதால் […]
கேரள மாநிலத்தில் பிரபல ஹோட்டலில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கோழிக்கோடு நகரின் மையப்பகுதியில் ஒரு பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த ஹோட்டலுக்கு தம்பதியர் ஒருவர் உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். சாப்பிட்டு முடித்த பிறகு அந்தப் பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது ஜன்னல் அருகே வெள்ளை காகிதத்தில் ஏதோ ஒரு பொருள் வைக்கப்பட்டு இருந்ததை கவனித்த அந்த பெண் […]
ஆஸ்திரேலியா தூதரகத்தில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா தூதரகம் தாய்லாந்து நகரிலுள்ள பாங்காங்கில் அமைந்துள்ளது. இந்த தூதரகத்தில் பெண்கள் கழிவறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய தூதரகத்தின் முன்னால் பணியாளர் ராயல் தாய் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அவரை கடந்த மாதம் கைது செய்திருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து வெளிவுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், தங்களுக்கு அனைத்து ஊழியர்களின் […]
சென்னை கிண்டியில் உள்ள பிரபல சங்கீதா ஹோட்டல் கழிப்பறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த சம்பவம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கண்ணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மற்றொரு கழிப்பறையில் உள்ள அட்டை பெட்டியை அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் அவசர அவசரமாக எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்றும் சமூக விரோத செயல்களில் இருந்து பள்ளியை பாதுகாக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான முந்தைய உத்தரவை நிறைவேற்ற இதுவரை என்னென்ன […]
குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் கேமராவுடன் இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்லும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ரோந்து பணியை தீவிரப்படுத்துவது குறித்து ஆயுதப்படை மைதானத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமை தாங்கினார். மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நவீன்குமார், ராஜா, […]
அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராவில் கொடூர உருவம் ஒன்று பதிவாகியுள்ளது. அமெரிக்காவிலுள்ள லாஸ்வேகல்ஸ் என்ற பகுதியில் Tory McKenize என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவரது வீட்டிலுள்ள ஒரு அறையில் Tory -ன் 2 வயது பேத்தி Amber-ம் , 7 மாத பேரனும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அவரது பேத்தி Amber நடுராத்திரியில் தள்ளிப்போ என் கிட்டே வராதே என்று கத்தியுள்ளார். இதனை கவனித்த Tory குழந்தைகளின் அறையில் […]
சாலையில் பழுதாகி நின்ற கார் மீது திடீரென வந்த மற்றொரு கார் மோதியதில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் சேர்ந்த 62 வயதுடைய நர்கிஸ் பிகம் என்ற பெண்மணி தன் கணவருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் பழுதாகியது. அதனால் அப்பெண்மணி காரிலிருந்து இறங்கி காருக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அவரது கணவர் சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டிருந்தார். திடீரென வேகமாக வந்த மற்றொரு கார் நர்கிஸ் பிகம் […]
அத்தியாவசிய பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்க வேண்டும் … “கேமரா பொருத்துங்க” உயர்நீதிமன்றத்தில் வழக்கு…!! சென்னை ஐகோர்ட்டில் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது,தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் மொத்தம் 32, 722 ரேஷன் கடைகள் உள்ளன அதில் 1,97, 82, 593 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருளான அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. 2011 ஆம் ஆண்டு முதல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக […]
கோவை மாநகர காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருக்கும்போது கேமராவை தங்களது சீருடையுடன் இணைத்து அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வியாபாரிகள் அடித்து கொடூரமாக காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அளவிலான பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த வழக்கில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். அதேபோல் பொதுமக்களுடன் காவல்துறை அதிகாரிகள் நல்லுறவை […]