கேமரூனில், போகோஹரம் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியா, மாலி, நைகர், சாட் மற்றும் கேமரூன் போன்ற நாடுகளை இணைத்து முஸ்லிம் மத அடிப்படையில் அரசாங்கத்தை உருவாக்கக்கூடிய எண்ணத்தோடு போகோஹரம் என்ற தீவிரவாத அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு படையினர், இந்த தீவிரவாத இயக்கத்தை அழிப்பதற்காக அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறார்கள். அதே சமயத்தில் இந்த தீவிரவாத இயக்கம், பாதுகாப்பு படை வீரர்களையும், மக்களையும் குறி வைத்து தாக்குதல் […]
Tag: கேமரூன்
கேமரூன் நாட்டில் கால்பந்து போட்டியை காண மைதானத்திற்கு செல்ல முயற்சித்த போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கேமரூன் நாட்டின் தலைநகரான யாவொண்டேவில் இருக்கும் ஒலெம்பே கால்பந்து மைதானத்தில் ஆப்ரிக்க கோப்பை தொடரின் முக்கிய போட்டி நேற்று நடந்தது. இதில் கேமரூன்-கொமொரோஸ் அணிகள் மோதின. எனவே, அதிகமான ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய முயற்சித்தனர். அப்போது அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதாவது அந்த மைதானத்தில் 60,000 நபர்கள் தான் பார்வையிட […]
கேமரூனின் வர்த்தக கண்காட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேமரூன் நாட்டின் தென்மேற்கு ஆங்லோபோன் பகுதியில் பியூபா எனும் இடத்தில் வர்த்தக கண்காட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் அங்கு கூட்டம் அதிகம் இருந்த பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. இதனால் 10 நபர்கள் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் சிலரின் நிலைமை கவலைக்குரியதாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். […]