கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 5-ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறும். மேலும் கிழக்கு திசை காற்றின் மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி […]
Tag: கேரள
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
கேரள மாநிலம் முன்னாள் உள்துறை அமைச்சர் குடியேறி பாலகிருஷ்ணன் மகன் பெனிஸ் குடியேறியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். கன்னடத் திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக நடிகைகள் அனேக, ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் உடன் கேரள மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பெனிஸ் குடியேறியை தொடர்பு இருப்பது […]
திருச்சி விமான நிலையத்தில் 15 லட்சம் மதிப்பிலான 292 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமான பயணிகளிடம் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த உஸ்மான் என்பவர் 292 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட உஸ்மானிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேஸ்புக் காதலனை பார்க்க கேரளாவிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்த பள்ளி மாணவியை காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே முக்கம் பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி ஃபேஸ்புக் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பகுதியில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்த தரணி என்பவருடன் பேசி வந்துள்ளார். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பித்த நிலையில் தரணியை பார்ப்பதற்காக தனது நண்பர் விபின் […]
தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள சொப்னா ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் வங்கி கணக்கு மூலம் வெளிநாட்டிலிருந்து 58 கோடி ரூபாய் முறைகேடாக பெற்றது அம்பலமாகியுள்ளது. கேரளா அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் துணையுடன் தனி ராஜ்ஜியம் நடத்தி வந்த சுவப்னாசுரேஷின் மோசடிகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை மற்றும் சுங்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்த அமலாக்கத்துறை ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் தொண்டு தேவைகளுக்கு எனக்கூறி தனி […]
கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் உடன் டெங்கு மற்றும் எலி காய்ச்சல்களும் பரவுவதாக அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், மாநிலத்தில் நேற்று புதிதாக 1417 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 1426 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணம் அடைந்ததாகவும், மேலும் 5 பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறினார். […]
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ந்த கோர விபத்துக்கு ஓடுதளத்தில் விமானத்தை தரையிறக்கவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. துபாயில் இருந்து கோழிக்கோட்டை அடுத்த கரிப்பூர் விமான நிலையத்திற்கு 190 பயணிகளுடன் வந்த விமானம் ஓடுதளம் 28 தரையிறக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது பெய்த கனமழையால் ஓடுதளம் 28 யை விமானியல் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இதையடுத்து உடனடியாக ஓடுதளம் 10 தரையிறக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து ஓடுதளம் 10 தரையிறக்க விமானம் திருப்பப்பட்ட […]