கேரளாவில் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் போன்றோருக்கு உடனடியாக கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கேரளாவில் மீண்டும் கொரோனா கண்காணிப்பு பிரிவு தொடங்கப்பட்டது. மேலும் கூட்ட நெரிசலான பகுதிகளில் முக கவசம் அணிய அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
Tag: கேரளா
கேரள மாநிலம் வடசேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நள்ளிரவு நேரத்தில் கழுத்தில் ரத்த காயங்களுடன் வீட்டின் கதவை தட்டியுள்ளார். அப்போது கதவை திறந்த இளம்பெண்ணின் பெற்றோர் தன்னுடைய மகளின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் கூறியதாவது, இளம்பெண் எப்போதும் பேஸ்புக்கில் இருந்துள்ளார். அதோடு பல மணி நேரம் சாட்டிங்கிலும் ஈடுபட்டுள்ளார். […]
பாப்புலர் பிராண்ட் அமைப்பிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிராண்ட் அமைப்பின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைப்பற்றியுள்ளனர். இந்த சோதனையை தொடர்ந்து பாப்புலர் பிராண்ட் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். அதில் கேரளாவில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். பாப்புலர் பிராண்ட் ஆப் […]
கேரள மாநிலத்திலுள்ள குருவாயூர் கோயிலில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது திருமண கொண்டாட்டத்தில் இருந்த மணமகள் தன்னுடைய கணவர், தந்தை ஆகியோருடன் இணைந்து செண்டை மேளம் அடிக்க தொடங்கினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதனிடையில் மணப்பெண்ணிண் தந்தை செண்டை மேள கலைஞர் என்பது கவனிக்கத்தக்கது ஆகும். Longer video of a joyous bride taking part in the chenda melam (WA forward; said to […]
சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த BF 7 கொரோனா இந்தியாவிலும் நுழைந்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி தமிழகத்திலும்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாகோட்டயத்தில் பறவைகாய்ச்சல் காரணமாக 6000 பண்ணைக் கோழிகள் அழிக்கப்பட்டன. இன்ப்ளுயென்சா எனப்படும் வைரஸ் மூலம் பறவைகளுக்கு ஏற்படும் இந்தக் காய்ச்சல், அதனை உண்ணும் மனிதர்களுக்கும் தொற்றுகிறது. கேரள எல்லை மாவட்டமான கோவைதான் தமிழகத்தின் […]
கேரளா கோட்டயம் மாவட்டத்திலுள்ள 3 பஞ்சாயத்துகளில் பறவைக் காய்ச்சல் பரவியதை அடுத்து அங்கு 6,000 பறவைகள் அழிக்கப்பட்டது. பறவைக் காய்ச்சல் பறவைகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றக்கூடிய ஒரு வகை நோய் ஆகும். கோட்டயம் மாவட்டத்தின் வேச்சூர், நீண்டூர் மற்றும் ஆர்ப்பூக்கரை ஊராட்சிகளில் நேற்று மொத்தம் 6,017 பறவைகள் கொல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதில் வெச்சூரில் 133 வாத்துகளும், 156 கோழிகளும், நெண்டூரில் 2,753 வாத்துகளும், ஆர்ப்பூக் கரையில் 2,975 வாத்துகளும் கொல்லப்பட்டது. அதுமட்டுமின்றி கேரளாவில் […]
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அரிம்பூர் பகுதியில் நிதின் மற்றும் மனு ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களின் வங்கி கணக்கில் திடீரென எதிர்பாராத விதமாக கோடிக்கணக்கான பணம் டெபாசிட் ஆகியுள்ளது. இந்த பணம் தங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என நினைத்து நிதின் மற்றும் மனு ஆகியோர் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர். அதோடு ஐபோன் வாங்குதல், பங்குச் சந்தையில் முதலீடு செய்தல், வேறு வங்கிகளில் கணக்கு திறந்து பணத்தை டெபாசிட் செய்தல் என பல வழிகளில் […]
மகப்பேறு விடுப்பு என்பது பொதுவாக பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படுவது. ஆனால் நாட்டிலேயே முதன்முறையாக கல்லூரி மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க கேரளா, கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலை., முடிவு செய்துள்ளது. இதன்படி மாணவிகளுக்கு 60 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். திருமணமான பிறகு படிக்க விரும்பும் பெண்களுக்கு இந்த மகப்பேறு விடுப்பு பயனுள்ளதாக இருக்கும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்து வரும் மாணவிகள் கர்ப்பமாக […]
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் ரெதீஷ்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமுருகன் பூந்தியை அடுத்த ராக்கியாபாளையம் ரோட்டில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் ரெதீஷ் நேற்று காலை அந்த பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு லாரி ரெதீஷ் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரெதீஷ் மீது லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே […]
கேரள மாநிலம் பத்தினம் திட்டாம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தர்மபுரியை சேர்ந்த பெண் உட்பட இரண்டு பேர் நரபலி கொடுக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பெண்ணின் உடல் பாகங்கள் சமீபத்தில் தான் அவருடைய மகன்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கொச்சியை சேர்ந்த பெண் ஒருவரை நரபலி கொடுக்க முயற்சி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், குடகு பகுதியில் சேர்ந்த பெண் ஒருவர் கொச்சியில் […]
கேரளாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரூ.50 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பாகவே கேரள ரசிகர்கள் ஆழ்கடலில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைப்பது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கத்தாரின் லுசைல் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா இரண்டாவது […]
மலையாள சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் உல்லாஸ் பந்தளம். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நிலையில், மம்முட்டியின் தெய்வந்தின்டே ஸ்வந்தம் க்ளீடஸ் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார். இவர் தன்னுடைய மனைவி ஆஷா மற்றும் மகன்கள் சூரியஜித், இந்திரஜித் ஆகியோருடன் பட்டினம் திட்டா பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் உல்லாஸ் தன்னுடைய மனைவி ஆஷாவை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் […]
பொதுவாக குழந்தைகள் என்றாலே எந்த பொருளை எடுத்தாலும் உடனடியாக வாயில் போட்டு விடுவார்கள். எனவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் பொருட்களை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். குழந்தைகள் எளிதில் எடுத்து வாயில் போட்டு விழுங்கக்கூடிய பொருட்களை அவர்கள் கைகளில் கொடுக்காததோடு அவர்களுக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் எதையும் எடுத்து வாயில் போட்டு விழுங்க மாட்டார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை டிவி பேட்டரியை வாயில் போட்டு விழுங்கியுள்ளது. […]
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராகவும், தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தர் ஆகவும் வலம் வருபவர் பிரித்திவிராஜ். இவருடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த வியாழக்கிழமை வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இதேபோன்று பிரித்திவிராஜ் மற்றும் நடிகர் மோகன்லால் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், மம்முட்டியின் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் ஆன்டோ ஜோசப் மற்றும் தயாரிப்பாளர் மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 50 இடங்களில் வருமானவரித்துறையினர் […]
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி பாலா. இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ள நிலையில், மலையாள சினிமாவில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் பாலா திடீரென தனக்கு கேரளாவில் தங்க விருப்பமில்லை எனவும் சென்னைக்கு செல்ல போகிறேன் என்றும் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் உன்னி முகுந்தன் தயாரித்து நடித்த செஃபிக்கிண்டே சந்தோஷம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் நடிகர் பாலா […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சபரிமலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருக்க கூடிய இந்த நிலையில் தற்பொழுது முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தரிசனம் செய்வதற்காக தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியதால் பாதுகாப்பு கருதி முதியோருக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சபரிமலையில் தினமும் பக்தர்கள் வருகை 90,000க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அரபிக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில், கேரளா – கர்நாடகா கடற்கரை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமினலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14.12.2022முதல்17.12.2022 வரை தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் […]
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் சாருதத். இவர் ஓவியம் வரைவதில் மிகவும் வல்லவர். குறிப்பாக இலை ஓவியங்கள் வரைந்த அசத்துவதில் அதிக திறமைகள் வாய்ந்தவராக இருக்கிறார். இந்நிலையில் கத்தார் நாட்டில் தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் கால்பந்து வீரர்களின் ஓவியத்தை இலையில் வரைந்து சாருதத் அசத்துகிறார். இதுகுறித்து சாருதத் பேட்டியில் கூறியதாவது, எனக்கு இலையில் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது. தற்போது பிபா உலகக் கோப்பை கால்பந்து […]
இந்தியாவின் முதல் கார்பன்-சம நிலை பண்ணையாக கொச்சியின் அலுவாவிலுள்ள விதைப் பண்ணையை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “கேரளா உணவில் தன்னிறைவு அடையவேண்டும். எனினும் சுற்றுச்சூழல் சம நிலையை பராமரிக்க வேண்டும். விவசாயத்திலிருந்து வெளிவரும் கரியமில வாயுவை குறைப்பதன் வாயிலாக காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியும். இந்த பண்ணையில் முன் மாதிரியான கண்டுபிடிப்புகளானது செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கார்பன்-சம நிலை பண்ணைகள் துவங்கப்படும். பழங்குடியினர் […]
கேரள மாநிலத்தின் திருச்சூரில் புனித தாமஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் விலங்கியல் துறை மாணவர்கள் இடுக்கி மாவட்ட பகுதியில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் நீரில் மிதக்கும் புது வகை அந்து பூச்சியை விலங்கியல் துறை மாணவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து இந்த வகை பூச்சிக்கு கல்லூரி நினைவாக யூமாசியா தோமசி என்று பெயரிட்டனர். இது இந்தியாவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 3-வது வகை பூச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருந்தவர் ஜெய்சன் ஜோசப் (44). இவர் லவகுசா, ஜமுனா பியாரி போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் கொச்சியில் உள்ள பனம்பில்லி பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவருடைய குடும்பத்தினர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், 2 நாட்களாக ஜெய்சன் ஜோசப்பை உறவினர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு ஜெய்சன் உறவினர்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அவரை வீட்டில் சென்று […]
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் அவனுடைய தாய் வீட்டில் இருந்த பப்பாளி மரத்தை வெட்டியுள்ளார். இதை பார்த்த அந்த சிறுவன் சீருடையை கூட மாற்றாமல் வெட்டிய மரத்தின் அருகில் அமர்ந்து கதறி கதறி அழுகிறான். அதோடு இந்த மரத்தை வெட்டியதற்காக உங்களுக்கு சாபம் கண்டிப்பாக கிடைக்கும் என்று தன்னுடைய தாயை சிறுவன் திட்டுகிறான். இந்நிலையில் அழுது கொண்டிருந்த சிறுவனை அவனுடைய பாட்டி சமாதானப்படுத்திய […]
நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் மூலம் மாதாந்திர ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் கேரளாவில் ரேஷன் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனால் மக்கள் கூட்டம் ரேசன் கடைகளில் அதிகரித்துள்ளது. இதனால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் முறையில் […]
மலையாள சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர் கே.எஸ் பிரேம்குமார் என்ற கொச்சி பிரேமன். இவர் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான தில்லி வாலா ராஜகுமாரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நாடக கலைஞராக இருந்து பின் சினிமாவுக்குள் நுழைந்த கொச்சி பிரேமன் மூச்சு கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். இவருக்கு தற்போது 68 வயது ஆகிறது. மேலும் நடிகர் கொச்சு பிரேமன் மறைவிற்கு […]
பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பி.டி.எம் லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்(22) ஒருவர் கிராபிக் டிசைனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இளம்பெண் இரவு தன்னுடைய நண்பர்கள் வீட்டில் கேளிக்கை நிகழ்ச்சிக்காக சென்ற போது மது குடித்துள்ளார். அதன் பின் நீலட்நகரில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக பைக் டேக்ஸி முன்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து பைக் டாக்சி டிரைவராக சகாபுதீன்(26) என்ற நபர் வந்து அந்த இளம்பெண்ணை […]
சபரிமலை ஐயப்பன் கோவில்களுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யக்கூடாது என கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவதால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேரளா அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் கேரள மோட்டார் வாகன துறை சார்பாக அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சாமி தரிசனம் செய்ய வரும் ஐயப்ப பக்தர்கள் […]
வளர்ப்பு நாயின் கண்களை தோண்டி எடுத்து தெருவில் விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பட்டாம்பியில் பிரபல ஓவியர் துர்கா மாலதி என்பவரின் வளர்ப்பு நாய் கடத்தப்பட்டு அதன் கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாகு என்ற வளர்ப்பு நாயை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி முதல் காணவில்லை. வீட்டார் அக்கம் பக்கத்தில் தேடியும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று வீட்டின் கேட் […]
கேரள மாநிலத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு துவங்கும் தேதியை கல்வித்துறை இன்று அறிவித்து உள்ளது. அந்த வகையில் 10ம் வகுப்பு தேர்வுகளானது 2023-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி துவங்கி மார்ச் 29-ம் தேதி முடிவடைகிறது. அத்துடன் மாதிரித் தேர்வுகள் பிப்ரவரி 27-ம் தேதி துவங்கி மார்ச் 3-ம் தேதி முடிவடைகிறது. 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கும் எனவும் […]
கேரள மாநிலம் கோட்டயம் ஏட்டுமானூரில் கலால் துறையினரை கண்டு கஞ்சாவை விழுங்கிய இளைஞர் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட நபர் மம்மூட்டைச் சேர்ந்த லிஜூமோன் ஜோசப் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சங்கராந்தி-பேரூர் சாலையில் நேற்று இரவு 8 மணியளவில் நடந்துள்ளது. ஏட்டுமானூர் கலால் குழுவினர் மம்மூட் சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த லிஜூமோன் உடல் பரிசோதனைக்கு பயந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் கலால் குழுவினர் அவரை கையும் […]
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ராகுல் மற்றும் கார்த்திகா ஜோடிக்கு கடந்த 10-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தங்களுடைய திருமண அழைப்பிதழில் ராணுவத்தினருக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதில் எங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் உங்களுக்கு எப்போதும் நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு பத்திரிக்கை மற்றும் கையால் எழுதப்பட்ட கடிதம் போன்றவற்றை இராணுவத்தினருக்கு கார்த்திகா மற்றும் ராகுல் தம்பதியினர் அனுப்பி தங்களுடைய திருமணத்திற்கு வருகை புரியுமாறு அழைப்பு விடுத்திருந்தனர். அதன் பிறகு கையால் […]
மலையாள சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருந்தவர் ஷகீலா. 1990-களின் காலகட்டத்தின் போது ஷகிலா நடித்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தியது. முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக ஷகிலாவின் படங்களும் வசூல் வேட்டை நடத்தியதால் மறைமுகமாக ஷகிலாவின் படங்களை வெளியிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகு ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய ஷகிலா தமிழ் சினிமாவில் காமெடி ரோல்களில் நடித்து வந்தார். இவர் தற்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். அந்த […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அணையில் நீர்மட்டம் 138 அடியை எட்டியுள்ளதால் கேரள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அலையின் நீர் வரத்து 1542 கன அடியாக உள்ளது. வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி வரை அழகி நீர்மட்டத்தை […]
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டு கார்த்திகை மாதமான இன்று பக்தர்கள் முறையாக மாலை அணிவித்து 41 நாள்கள் விரதத்தை தொடங்குகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றது. […]
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நேற்றிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் 41 நாட்கள் நடை திறக்கப்பட்டு இருக்கும். மேலும் இன்று முதல் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரின் தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையை திறந்து தீபம் ஏற்றினார். இதனையடுத்து ‘வெர்ச்சுவல் க்யூ’ மூலம் […]
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருகை புரிவார்கள். இந்நிலையில் மண்டல மகர விளக்கு பூஜை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் ஐய்யப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து கடும் விரதம் இருப்பார்கள். மேலும் நேற்று மாலை சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரின் தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையை திறந்து தீபம் […]
பாலிவுட் சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மேடை நிகழ்ச்சி ஒன்றினை நடத்துவதற்கு 20 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார். அதோடு வாங்கிய முன் பணத்தையும் திருப்பிக் கொடுக்காததாக கூறப்படும் நிலையில், சன்னிலியோன் மீது காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நடிகை சன்னிலியோன் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான […]
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் என்ற இடத்தில் விகாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகள் ஷ்ரத்தா(26). அப்துல் அமீன் பூனாவாலா என்ற வாலிபருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அந்த காதலை ஷ்ர்த்தாவின் பெற்றோர் எதிர்த்தனர். இதனையடுத்து காதல் ஜோடி டெல்லியில் தங்கி இருந்தனர். மும்பையில் உள்ள பெற்றோருடன் ஷ்ரத்தார் பேசி வந்தார். ஆனால் கடந்த மே மாதத்திலிருந்து ஷ்ரத்தாவே அவருடைய பெற்றோரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து […]
கேரளாவில் வேஷ்டியால் முகத்தை மறைத்து ஆசாமி ஒருவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு என்ற 34 வயதுமிக்க ஒருவர் பாலக்காடு பகுதியில் வசித்து வருகிறார். இவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தனிமையில் வீடு திரும்பும் பெண்களை குறி வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பெண்களின் பின்னாலையே சென்று திடீரென தன் வேட்டியை அவர்களின் முகத்தில் போட்டு மூடிவிட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதேசமயம் பாலியல் சீண்டல் முடிந்ததும் கண்ணிமைக்கும் நொடியில் […]
கேரளாவை சேர்ந்தவர் விஷ்ணு (34). இவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தனியாக வீடு திரும்பும் பெண்களை குறி வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்படி தனியாக செல்லும் பெண்கள் பின்னாலே சென்று திடீரென்று தன்னுடைய வேட்டியை அவர்களின் முகத்தில் போட்டு மூடி விட்டு பாலியல் சீண்டாலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பாலியல் சீண்டல் முடிந்ததும் கண்ணிமைக்கும் நொடியில் மறைந்து விடுவாராம். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு […]
கேரளாவில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். உற்பத்தியாளர்களின் இந்த கோரிக்கையை பரிசீலித்து அறிக்கை அளிக்க அரசு குழு ஒன்றை நியமித்தது. பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள், விற்பனை முகவர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்த குழு பால்விலையை உயர்த்துவது குறித்து தமது பரிந்துரை அறிக்கை அரசிடம் அளித்துள்ளதாம். இந்த அறிக்கை அடிப்படையில் தொழிற்சங்கம் பிரதிநிதிகளுடன் அரசு அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இந்த ஆலோசனை […]
கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையின் கீழ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடது ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறி மாறி ஆட்சியை கைப்பற்றி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வெற்றி பெற்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி அமைந்தது. இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தற்போது ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார். […]
கேரளாவில் சென்ற சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால் அங்கு பதினொரு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. இடுக்கி, கோட்டயம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இடுக்கி மாவட்டத்தில் தொடர்மழை நீடிக்கும் என்பதால், மஞ்சள் […]
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் ரகு என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சிக்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அர்ச்சனா என்ற பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது ரகுவின் நண்பர்கள் மணப் பெண்ணிடம் ஒரு பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். அந்த பத்திரத்தில் கணவரை இரவு 9 மணி வரை நண்பர்களுடன் இருப்பதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த நேரத்தில் போன் செய்து தொந்தரவு செய்யக்கூடாது […]
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது காலில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்க சொன்னதால் அவர் ஸ்கேன் சென்டருக்கு சென்றுள்ளார். அங்கு ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுப்பதற்கு முன்பாக உடையை மாற்றச் சென்றார். அப்போது உடையை மாற்றும் முறையில் ரகசிய செல்போன் ஒன்று மறைத்து வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனைப் பார்த்த போது பல பெண்களின் உடைமாற்றும் வீடியோ இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து […]
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர பூஜை காலம் வருகின்ற 17ஆம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் கார்த்திகை 1 ஆம் தேதி முதல் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருப்பது வழக்கம். இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை புரிவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் வரும் வழியில் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தங்கி இளைப்பாறி செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த […]
கேரள மாநிலத்தை சேர்ந்த ரகு என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்பவருக்கும் நவம்பர் 5ஆம் தேதி பாலக்காட்டிலுள்ள கஞ்சிக்கோட்டில் திருமணம் நடந்தது. அந்த திருமணத்துக்கு வருகை புரிந்த ரகுவின் நண்பர்கள் மணப்பெண்ணிடம் தங்களது நண்பனை தங்களுடன் இரவு 9 மணிவரை நேரத்தை செலவிட அனுமதிக்கவேண்டும் எனக்கூறி ஒரு திருமண ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்தை வாங்கினர். இச்சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மலையாளத்தில் எழுதப்பட்ட பத்திரத்தில் மணமகள் அர்ச்சனா கையெழுத்திட்டு இருக்கிறார். அதாவது அந்த […]
காதலனை விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் காதலி சொன்ன பரபரப்பு வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் மூறியன்கரை பகுதியைச் சேர்ந்த ஷாரோராஜ்(23) என்பவரும், குமரி மாவட்டம் ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா(22) என்பவரும் காதலித்து வந்த நிலையில் கிரீஷ்மாவிற்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதற்கிடையே கிரீஷ்மா, ஹாரோன்ராஜை வீட்டிற்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்தால் அவருடைய உடல் நலம் மோசம் அடைந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் […]
கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு தற்போது நடந்து வரும் நிலையில் மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியா. இவர் கேரள மாநிலம் பாறசாலை அருகே முறியங்கரை பகுதியைச் சேர்ந்த சுதீர் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த […]
கேரளாவில் காதலன் கசாயம் கொடுத்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவலானது வெளியாகியிருக்கிறது. காதலன் சரோனை 2 மாதத்தில் 10 முறை கொல்ல முயற்சித்ததாக காதலி க்ரீஷ்மா தற்போது வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கல்லூரி கழிவரையில் வைத்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொல்ல முயற்சி செய்ததாகவும் தற்பொழுது அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் வடக்கு கண்ணூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பிரசாந்த் (29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் முதல் கோழிக்கோடு பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் தலைமுடி உதிர்வுக்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால் பல வருடங்களாக சிகிச்சை அளித்தும் வாலிபருக்கு தலைமுடி உதிர்வு நிற்கவில்லை. இது குறித்து மருத்துவரிடம் வாலிபர் பலமுறை புகார் தெரிவித்துள்ளார். இதனால் […]