கேரளா மாநிலம் மல்லபுரம் பகுதியை சேர்ந்தவர் பிந்து(42). இவரது மகன் விவேக் (24) 10-ம் வகுப்பில் நல்ல தேர்ச்சி பெறவேண்டும் என்று அவருக்கு சொல்லிக்கொடுப்பதற்காக புத்தகத்தை பிந்து கையிலெடுத்தார். இவரது மகனின் வெற்றிக்காக எடுக்கப்பட்ட புத்தகம், இவரது வெற்றிக்கே வழிவகுத்துள்ளது. ஒரு கட்டத்தில் அரசு தேர்வுக்கு தயாராகலாம் என்று எண்ணிய பிந்து, ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்துள்ளார். 3 முறை தேர்வெழுதி அதில் தோல்வியடைந்த அவர் தற்போது தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். இதே தேர்விற்கு தயாரான […]
Tag: கேரளா மாநிலம்
கேரளா மாநிலத்தில் கிணற்றிலிருந்து தண்ணீரை காணவில்லை என்று வீட்டில் உரிமையாளர் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த வங்கினிச்சேரி என்ற பகுதியை சேர்ந்த சதீசன் தனது வீட்டில் குடிநீர் தேவைக்காக கிணறு அமைத்துள்ளார். இந்த கிணற்றின் தண்ணீரை வீட்டின் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். கிணற்றில் உள்ள ஊற்றுகள் மூலமும், மழை நீர் மூலமும் கிணற்றில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் கிணற்றில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை […]
மாநில அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு இலவச காப்பீடு திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் சேர்ந்து பயன் பெறலாம். இந்த காப்பீட்டு திட்டத்தின் பெயர் MEDSEP ஆகும். இந்த திட்டத்தில் இணைபவர்கள் மாதந்தோறும் ரூபாய் 500 செலுத்த வேண்டும். இதில் ஒரு வருடத்திற்கான காப்பீடு 4,800 ரூபாய் ஆகும். இதற்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இந்த திட்டமானது அடுத்த […]
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள திருக்காக்கரா தொகுதியில் வருகின்ற மே 31ம் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நடவடிக்கையாக மே 31(இன்று) ஒருநாள் மட்டும் அரசு பொது விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நாளன்று மக்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக வணிக நிறுவனங்கள் அனைத்து இருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறையுடன் கூடிய ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் […]
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட சாண்டி – பிரின்ஸியின் தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் தான் பென்சன் மற்றும் பென்சி. இந்நிலையில் பிறக்கும்போதே பெற்றோரின் தொற்றுடன் பிறந்த சிறுவர், சிறுமி இருவருக்கும் அட்மிஷன் கொடுக்க எந்த பள்ளியும் முன்வாராத நிலையில், எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பாகுபாடு காட்டக்கூடாது என்ற அரசின் உத்தரவை மீறி, செயல்பட்ட பள்ளிகளை எதிர்த்து பென்சனின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த விஷயம் தேசிய ஊடகங்களில் வெளியானதால் பென்சனுக்கும், பென்சிக்கும் அதே […]
கேரள மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 11 மாத குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூரில் இரிஞ்ஞாலகுடா பகுதியைச் சேர்ந்தவர்கள் நிதின், தீபா தம்பதியினர். இவர்களுக்கு மீரவ் கிருஷ்ணன் என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிதின் விடுமுறையில் தன் குழந்தையை பார்ப்பதற்காக ஏராளமான விளையாட்டு பொருட்களை வாங்கி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் நிதின் விடுமுறை முடிந்து வெளிநாட்டுக்கு […]
சைக்கிளில் ரோட்டை கடக்க முயன்ற சிறுவன் ஒருவன் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள தளிபரம்பா அருகே உள்ளது சொருக்காலா என்ற கிராமம். இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த விபத்து ஒன்றில் சிறுவன் ஒருவன், தனது சைக்கிளில் ரோட்டை கடக்க முயல்கின்றான்.அப்போது ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு பைக்கின் மீது மோதி தூக்கி வீசப்படுகிறான். அதே சமயம் பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் நூலிழையில் […]
மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சாரத்தை பயன்படுத்துவதில் கேரள அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டுவர ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளா மாநிலத்தின் மின்சாரத்துறை மந்திரியும் மற்றும் சித்தூர் தொகுதியின் எம்எல்ஏவுமான கிருஷ்ணகுட்டி செய்தியாளரிடம் கூறியுள்ளதாவது, வெயிலின் தாக்கம் தற்போது கேரளாவில் அதிகமாக இருக்கிறது என்றும் மேலும் அணைகளின் நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து வருகிறது என்று கூறியுள்ளார். இதை அடுத்து குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அணைகளில் இருந்து […]
கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டை அடுத்த செரடு என்ற பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 23). இவர் கடந்த 7ஆம் தேதி அன்று மாலை தனது நண்பர்களுடன் மலம்புழா பகுதியிலுள்ள மலைக்கு சென்றுள்ளார். மலை ஏறுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட பாபு அங்கு மலை ஏறும் போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதனால் செங்குத்தான பாறையின் இடையே சிக்கிக்கொண்டார். இதனை அடுத்து அந்த மலம்புழா பகுதிக்கு விமானப்படை, கடலோர பாதுகாப்பு படை மற்றும் ராணுவத்தின் […]
கல்லூரி மாணவி ஒருவர் கிணற்றுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து திருச்சூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலகுடா என்ற பகுதியை சேர்ந்தவர் ஜோதி பிரகாஷ். இவருடைய மகள் சந்தியா (19). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சந்தியாவை காணவில்லை. உடனே இதனை அறிந்த உறவினர்கள் சந்தியாவை அக்கம் பக்கம் […]
பெற்றோர் தனது சொந்த மகளை அனாதை என்று கூறி வியாபாரியிடம் பணம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு என்ற பகுதியை சேர்ந்த அப்துல் ஹாஜி (வயது 26). இவர் ஒரு வியாபாரி. கடந்த 6 மாதங்களுக்கு முன் இவர் சமூக வலைத்தளத்தில் தான் அனாதையாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இதனைப் பார்த்த திருவனந்தபுரத்தை சேர்ந்த பைஜு நசீர் மற்றும் […]
கணவனை பயமுறுத்துவதாக நினைத்து மனைவி வாயில் விஷம் ஊற்றி எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள வைக்கம் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் அவினாஷ் (26), ஸ்ரீலஷ்மி (23). இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில் துபாய்க்கு வேலைக்கு சென்ற கணவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஊருக்கு திரும்பினார். இதன் பின் அவரது மனைவி கருவுற்று 1மாதம் ஆன நிலையில் கணவர் துபாய்க்கு செல்வதை விட்டுவிட்டு மனைவியுடன் உதவியாக […]
கேரள மாநிலத்தில் சில்லறை மதுபான விற்பனையை பெவ்கோ என்ற பெயரில் செயல்படுத்தி வருகின்றது. உள்நாட்டு மதுபானங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு மதுபானங்கள், பீர் போன்றவையும் இதில் கிடைக்கின்றது. இதன் மூலம் மாநில அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் பொதுத்துறை நிறுவனமாக இது விளங்குகிறது. ஓணம், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் மதுபான விற்பனை அதிகளவில் இருக்கும். கேரளாவைப் பொறுத்தவரை மதுபானக்கடைகள் தனியார் இடங்களில் தான் செயல்பட்டு வருகின்றது. இந்த கடைகளில் மதுபானங்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் வாகன விபத்தில் பலியான இந்தியாவை சேர்ந்த மாணவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள Yas என்ற பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று வாகன விபத்தில் ஒரு இளைஞர் பலியானார். அவர் குறித்த எந்த தகவலும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அந்த இளைஞரின் பெயர் Ibad Ajmal என்று தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று இவர் தனியாக வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாகனம், மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயங்களுடன் […]
கேரள மாநிலத்தில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து அவர்களை கொலை செய்து நகைகளை திருடும் சம்பவம் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது வீட்டில் வைத்திருந்த நகை பணம் காணாமல் போனதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை கட்டச்சேரி அருகிலுள்ள ஒரு பகுதியில் வசிக்கும் 70 வயது மூதாட்டி […]
கேரள மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. கேரளா மாநிலத்தில் சரித்திரத்தை மாற்றி எழுதி 5 வருட ஆட்சிக்குப் பின்னர் அதை அரசியல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற போகிறது என்ற ஒரு வரலாற்றை கேரளா படைக்க போகிறது. கேரளாவில் எந்த மூத்த தலைவரும் ஏன் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்களும் செய்யாத இந்த சாதனையை பினராய் விஜயன் செய்துள்ளார். இந்த தேர்தல் முடிவுகளை பினராய் விஜயன் வெற்றியாக மட்டுமே பார்க்க முடியும். கேரள […]
கேரளா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. கம்யூனிஸ்ட் கட்சி 92 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 45 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து […]
கேரளா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. கம்யூனிஸ்ட் கட்சி 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 46 தொகுதிகளிலும், பாஜக 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் […]
கேரளா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. கம்யூனிஸ்ட் கட்சி 80 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 55 தொகுதிகளிலும், பாஜக மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் […]
கேரள இளைஞர் ஒருவர் துபாயில் வேலையின்றி தவித்த சமயத்தில் லாட்டரி குலுக்கலில் அவருக்கு 3,00000 திர்ஹாம் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. கேரள மாநிலத்தில் வசிக்கும் Afsal Khalid என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்திருக்கிறார். அதன் பின்பு, கடந்த ஒரு வருடமாக அவர் வேலையின்றி தவித்து வந்துள்ளார். இதனால் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார். அப்போது தான் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அதாவது துபாயில் ஒவ்வொரு வாரமும் நடத்தப்படும் Mahzooz என்ற டிஜிட்டல் குலுக்கலில் Afsal Khalid பெயரும் இடம்பெற்றிருக்கிறது. […]
கேரளாவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு மாயமான நபரை பெற்ற தாய் மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்து வீட்டில் புதைத்த சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது. கேரளா கொல்லம் மாவட்டத்தில் உள்ள எரூர் கிராமத்தில் ஷாஜி பீட்டர் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மாயமானதாக அவருடைய குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். மேலும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் அவர் மாயமானதாக எல்லோரும் நம்பினர். இந்நிலையில் அவரது உறவினர் ஒருவர் […]
கேரளாவைச் சேர்ந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாரம்பரிய மூலிகை மருத்துவத்தில் சர்வதேச பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். கேரளா மாநிலம் அட்டப்பாடி முக்காலி ஆதிவாசி கிராமத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் பாரம்பரிய மருத்துவ படிப்பை கேரளாவில் உள்ள கல்லூரியில் முடித்தார். தொடர்ந்து 2017இல் இலங்கையில் பாரம்பரிய மருத்துவத்தில் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி படிப்புக்கான Phd பட்டம் பெற்றார். 2018இல் தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற்றார். தற்போது அவர் கோவை தமிழக […]
கேரளா மாநிலம் மலப்புரத்தில் வளர்ப்பு தாய் வீட்டில் உள்ள ஷூவை கடித்தததால் உரிமையாளர் ஆத்திரமடைந்து செய்த நிகழ்வு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மலப்புரத்தில் உள்ள பெருங்குளம் பகுதியில் உள்ள இட கரை பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்று வீட்டில் உள்ள ஷூவை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் நாயை ஸ்கூட்டரில் கட்டி மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்து சென்றுள்ளார். இதை பார்த்த ஒருவர் பின் தொடர்ந்து சென்றும் அவர் ஸ்கூட்டரை நிறுத்தாமல் மூன்று கிலோமீட்டர் தூரம் […]
மூணாறில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தனது எஜமானரை தேடிச் சென்றபோது என்ற குவி என்ற நாய் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு பின்பு எஜமானர் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் 34 வீடுகளில் தங்கி இருந்த 34 குடும்பத்தைச் சார்ந்த 82 பேர்களில் பலி 12 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தேடலின் போது குவி […]
சென்னையிலிருந்து 50 கிலோ தங்க நகைகளை ,கேரளாவிற்கு கடத்தி வந்த 2 வட மாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர் . சென்னையிலிருந்து நேற்று மங்களா ரயில் , கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து புறப்பட்ட மங்களா ரயில் , இன்று காலை கோழிக்கோடு ரயில் நிலையத்தை சென்றடைந்தது. அந்த ரயிலில் பயணித்த 2 வடமாநில வாலிபர்கள் ரயில் நிலையத்திலேயே சுற்றித் திரிந்து உள்ளனர். இதனால் 2 வாலிபர்கள் மீது சந்தேகமடைந்த, அங்கிருந்த பாதுகாப்பு […]
கேரளாவில் ரயில் தண்டவாளத்தில் ,தென்னை மரத்தை போட்டு ரயிலை கவிழ்க்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவில் கொல்லம் மாவட்டம் வர்க்கலாவை அடுத்துள்ள எடவயல் பகுதியில், இரட்டை ரயில் தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளத்தின் வழியாக அனைத்து ரயில்களும் குருவாயூருக்கு செல்லும். அதன்படி கடந்த ஞாயிற்றுகிழமை சென்னையிலிருந்து நாகர்கோவில் வழியாக செல்லும் ,குருவாயூர் ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டுள்ளது. இந்த ரயில் இரவு 11.30 மணியளவில் எடவயல் தண்டவாளத்திற்கு ,அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலை இயக்கிக் […]
கேரளாவில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற போது ஹெல்மெட் அணியாத முதியவரை உதவி ஆய்வாளர் ஒருவர் கடுமையாக தாக்கியதற்கு கண்டனம் வலுத்துள்ளது. கொல்லம் மாவட்டம் சத்தியமங்கலம் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இரண்டு பேரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த ராமநந்தன் என்ற முதியவர் தான் வாகனத்தை ஓட்டாத போது ஏன் அபராதம் செலுத்த வேண்டும் என்று உதவி […]
மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் ஒன்பது அல்கொய்தா பயங்கரவாதிகளை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் முஸ்சிதாபாதிலும் கேரளாவிலும் எர்ணாகுளத்திலும் தேசிய புலனாய்வு முகமை இன்று அதிகாலை தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டது. அப்போது மேற்கு வங்காளத்தில் 6 பேரையும், கேரளாவில் 3 பேரையும், தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. இவர்களுடன் நடத்திய விசாரணையில் இவர்கள் அனைவரும் அல்கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என தெரியவந்தது. அதோடு இவர்கள் இரு மாநிலங்களில் உள்ள […]
கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் பெய்து வரும் பேய் மழை காரணமாக உள்ள 151 வருடகால பழமையான சி.எஸ்.ஐ. தேவாலயம் இடிந்து விழுந்துள்ளது. ஆலப்புழா நெல்வயல்களின் நடுவே தேவாலயம் ஒன்று 151 வருடங்களாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அப்பகுதியில் அமைந்திருக்கும் பம்பா அணை திறந்து விடப்பட்டதால் பெருக்கெடுத்து வந்த வெள்ளநீர் தேவாலயத்துக்குள் புகுந்து விட்டது. இதையடுத்து 151 வருட கால தேவாலயம் இடிந்து விழுந்தது. அதிகாரிகள் முன்கூட்டியே வெள்ள அபாயம் குறித்து எச்சரித்ததால், தேவாலயத்தில் இருந்த நிர்வாகிகள் நல்ல […]
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் கேரளாவில் நடக்கும் கோர சம்பவங்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் வீடுகளில் புகுந்துள்ளது. கேரளாவிலுள்ள மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 தமிழர்கள் உட்பட 78 பேர் உயிரிழந்துள்ளனர். மண்ணில் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தநிலையில் நேற்று கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு துபாயிலிருந்து 197 பேருடன் […]