Categories
தேசிய செய்திகள்

ஆடல் பாடல் இல்லாமல் எளிமையாக ஓணம் கொண்டாடிய மலையாள மக்கள்…!!

புதுச்சேரியில் மலையாள மக்கள் வீட்டிலேயே எளிமையாக ஓணம் பண்டிகையை கொண்டாடினர். புதுச்சேரியில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் கூடி ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவர். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் வசிக்கும் கேரள மக்கள் தங்கள் வீடுகளிலேயே எளிமையாக கொண்டாடினார். உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைக்காமல் ஆடல்பாடல் உள்ளிட்ட கொண்டாட்டங்கள் இன்றி அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை அவர்கள் கொண்டாடினர்.

Categories

Tech |