காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூா்த்தி பவனில் நவம்பர்.15 ஆம் தேதி கோஷ்டி பூசலால் கடும் மோதல் ஏற்பட்டது. இவ்விவகாரத்தில் பொருளாளா் ரூபி மனோகரன் மற்றும் கே.எஸ்.அழகிரியின் ஆதரவு மாவட்டத் தலைவா் ரஞ்சன் குமாருக்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மேலும் இவ்விவகாரத்தில் அழகிரி மேல் காங்கிரஸ் மூத்தத் தலைவா்கள் குற்றம்சாட்டி வருகின்றனா். அதாவது கட்சி நிா்வாகிகள் நியமனம் குறித்து புகாாளிக்க வந்தவா்களின் மீது அழகிரி தூண்டுதலில் பேரிலேயே அவா் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர் […]
Tag: கே.எஸ் அழகிரி
இந்தியாவில் பழமை வாய்ந்த கட்சியாக இருக்கும் காங்கிரஸில் தற்போது கோஷ்டி மோதல்கள் அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் சமீபத்தில் கோஷ்டி மோதல் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்தும் கோஷ்டி மோதல் நடைபெற்றது. தற்போது காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே பதவியேற்றுள்ளார். இதேபோன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் கே.எஸ் […]
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். காஷ்மீர் வரை 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். அதேசமயம், ஆளுங்கட்சியான பாஜக, ராகுல் காந்தியின் பயணத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. அவ்வகையில் பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு விமர்சித்துள்ளது. ஒன்று ராகுல் காந்தியின் புகைப்படம். மற்றொன்று அவர் அணிந்திருந்ததுபோன்ற […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி, இந்தியாவினுடைய 75 ஆவது சுதந்திர தின விழாவை தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஏனென்று சொன்னால், இந்த சுதந்திரத்தை பெற்று தந்தவர்களில் முதன்மையானவர்கள் நாங்கள், முக்கியமானவர்கள் நாங்கள், அந்த பெருமை எங்களுக்கு இருக்கிறது. அதை நாங்கள் யாரிடமும் தயவு செய்து வாங்கவில்லை, போராடி இரத்தம் சிந்தி, உயிர் நீத்த வாங்கி தந்திருக்கிறோம். எனவே அந்த வகையில் இந்திய தேசத்தின் உடைய 75வது […]
கள்ளக்குறிச்சி பகுதியில் பல நிகழ்ச்சிகளுக்கு வருகைதந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ஒரு தனியார் விடுதியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும். தமிழக காவல்துறை புகழ்பெற்றது ஆகும். ஆனால் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காவல்துறை அடைந்துள்ள தோல்வி ஒரு இமயமலை அளவிலானது. இதனை கண்டறிய முடியாமல் போனது, சமூகவலைதளங்களில் இச்சம்பவம் காட்டுத் தீயாக பரவியபோது இதன் பின்னணியில் இருப்பது யார்..? எதற்காக இந்த செய்திகளை […]
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான கே.எஸ்.அழகிரி நேற்று சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில் நுபுர் சர்மா, அதிமுக உட்கட்சி பூசல் உட்பட பல விவகாரங்கள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய கே.எஸ்.அழகிரி, “முகமது நபியை (இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர்) பற்றி அம்மதத்தை சாராத ஒருவர் விமர்சிக்கலாமா..? அவ்வாறு விமர்சித்தால் கலவரம் தான் வரும். மேலும் மக்களுக்கு கருத்து வேறுபாடு வரும். அத்துடன் அப்படி விமர்சித்தால் மக்கள் இரண்டாக பிளவுபட்டுதானே நிற்பார்கள். […]
தமிழகத்தில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகம் முழுவதும் நாளை காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொலை செய்தவர்கள் தமிழர்கள். அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமல் அப்படியே இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் […]
நெல்லை மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் தினமும் வெடிபொருட்கள் மூலம் பாறைகள் தகர்க்கப்பட்டு கற்களை அள்ளும் பணி நடந்து வருகிறது. கடந்த 14ஆம் தேதி சுமார் 4 ஆயிரம் அடி ஆழம் கொண்ட இந்த குவாரியில் கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தன.ர் அப்போது திடீரென்று பலத்த சத்தத்துடன் பாறைகள் சரிந்து விழுந்தது. அங்கு பணியாற்றி வந்த ஆறு பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அங்கு நின்றிருந்த மூன்று லாரிகள் 2 […]
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும்மசோதா கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதற்கு கண்டனத்தை தெரிவித்த தமிழக அரசு சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. இதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஆளுநர் இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தக் கூடாது […]
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது ” தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தொடர்ந்து மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக. தலைமையிலான அரசுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக தமிழக மக்கள் இடையே ஆளுநர் மீது கடும் எதிர்ப்பும், கொந்தளிப்பான நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மக்களிடையே எழுந்த எதிர்ப்பின் காரணமாக கருப்புகொடி போராட்டம் செய்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு […]
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முதலமைச்சர் நேரடியாக வழக்கை தலையிட்டு சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே இந்த வழக்கு துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. […]
சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “வசந்தகுமாரிடமிருந்து கட்சி செலவுக்காக 10 ரூபாய் வாங்குவது என்பது கூட கல்லிலிருந்து நார் உரிப்பது போன்றதாகும். அவரை ஏதாவது ஒரு கூட்டத்தில் பங்கேற்க வைப்பது என்றால் நான் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவருடன் தொடர்ந்து பேசி சம்மதிக்க […]
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் பாஜக அரசியலை கையில் எடுத்துள்ளதாக பரபரப்பாக பேசியுள்ளார். அதாவது கே.எஸ் அழகிரி, பாஜக அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. மேலும் அந்த மாணவியை 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டாய மதமாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பாஜகவினர் கூறுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அரசியல் செய்வதற்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் தற்போது […]
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “பிரதமர் மோடி இந்தியாவை ரூ.375 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார நாடாக உயர்த்தி காட்டுவேன் என்று பலமுறை உறுதியோடு கூறிவருகிறார். ஆனால் இந்தியாவோ தற்போது 7 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும் மத்திய பாஜக அரசு நாட்டில் நிலவுகின்ற பட்டினியையும், வறுமையையும் உச்சநீதிமன்றத்தில் மூடிமறைக்கின்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. அதோடு மட்டுமில்லாமல் 20 கோடி இந்தியர்கள் நாள்தோறும் வெறும் வயிற்றுடன் பசியோடு உறங்குகிறார்கள். அதேபோல் இந்தியர்கள் 7 ஆயிரத்திற்கும் […]
பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணம் குறித்து தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. மேலும் இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசும் பொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு கேள்விகளை கேட்டு டுவிட் பதிவு செய்துள்ளார். அதாவது பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் பயணம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. (1) ஹெலிகாப்டரில் செல்ல வேண்டிய பிரதமரின் பஞ்சாப் பயணம், கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டவுடனே […]
தமிழக பாஜகவை சேர்ந்த எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ரங்கராஜ் பாண்டேவுக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்திருந்த பேட்டியை விமர்சித்து வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதாவது அந்த வீடியோவில் கே.எஸ்.அழகிரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து கருத்துகளை தெரிவித்திருந்தார். ஸனாதன (இந்து) தர்மத்தை அழிக்க வேண்டும். அதற்கு காங்கிரஸ் நம்மோடு இருக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியதை ஏற்கும் இந்த இந்து விரோத காங்கிரஸை அடையாளம் கண்டு புறக்கணிப்போம். இந்த வீடியோவை ஒவ்வொரு வீட்டிற்கும் […]
புத்தாண்டை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சிறப்பான திட்டங்கள் செயல்பட்டு வருவதாகவும், தவறு செய்தவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் முதல்வரின் இந்த அதிரடியான நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி முழு மனதோடு வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக தமிழகம் இருந்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]
மு.க.ஸ்டாலினின் 6 மாத கால ஆட்சி மிக அற்புதமாக இருப்பதாக கே.எஸ்.அழகிரி பாராட்டியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, 1955 ஆம் ஆண்டு பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அன்றைய முதல்வராக இருந்த காமராஜர் நேரடியாக பாதிப்படைந்த பகுதிகளில் களப்பணி ஆற்றினார். அதனை எதிர்க்கட்சி தலைவராக இருந்த அறிஞர் அண்ணா பாராட்டினார். இதனை எவராலும் மறக்க முடியாது. இதேபோல் தற்போது முதலமைச்சராக இருந்து […]
100 கோடி தடுப்பூசி போட்ட முதல் நாடு இந்தியா என்பதை மத்திய அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டு இருப்பதாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவின் தவறான தடுப்பூசி கொள்கை காரணமாக, தொடக்கத்தில் தடுப்பூசி பொறுப்பு முழுவதும் மாநில அரசுகள் மீது சுமத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த 20 மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் அவதி அடைந்து வருகின்றன. தொற்று பரவல் தற்போது படிப்படியாக […]
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக திரண்டு போராட வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மக்களுடைய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் சூழலில் மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தி மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றி வருகிறது. இதனால் மக்கள் கடும் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த […]
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, சீமான் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், அன்னை சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி, தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இவர் வெளியிட்ட அறிக்கையாவது ,”சீமான் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத மற்றும் எதற்கும் அடங்க மறுக்கிற அடாவடித்தனமான செயலை செய்யும் சமூகசீர்குலைவு சக்தியாக இருக்கிறார். எனவே தமிழக காவல்துறையினர் சீமான் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, குண்டர் […]
ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக இருந்தவர்கள் ஆளுநராக பொறுப்பேற்ற இடங்களில் சிறப்பாக பணியாற்றி இருப்பதாகவும், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல கே.எஸ் அழகிரி பேசியதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக அண்ணாமலை, ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருந்தவர்கள் ஆளுநராக இருந்த போது சிறப்பாக பணியாற்றினார்கள். கவர்னராக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தகுதி இல்லை என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். கிரண்பேடி அவர்கள் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து […]
விதிமுறைகளை மீறியதாக ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கத்தை அந்நிறுவனம் முடக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெயரை Rahu lgandhi என்று மாற்றியுள்ளார். இதனால் இந்த ட்விட்டர் கணக்கை திடீரென்று பார்ப்பதற்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் புகைப்படங்களை profile ஆக வைத்த நிலையில் கே.எஸ் அழகிரி ட்விட்டர் பக்கத்தில் பெயரையே மாற்றியுள்ளார்.
இன்று காலை 11 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சிலை அருகில் ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டனப் பேரணி நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் போன்றோர் வேவு பார்க்கப்பட்டது, குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட கோரி காங்கிரஸ் கமிட்டி கண்டன பேரணி நடத்தியது. இந்தப் பேரணி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்றது. இந்த பேரணியில் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய […]
தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுகவை மக்கள் எப்பொழுதும் அனுப்ப மாட்டார்கள் என்ற கே எஸ் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு முதன் முதலாக நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்பிருந்து திமுகவும் காங்கிரஸ் கட்சியினரும் நீட் தேர்வு வரக்கூடாது என மிக உறுதியாக இருந்தனர். மேலும் 2014இல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு திணிக்கப்படவில்லை என்று கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இந்த […]
தமிழகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்கள் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி வரலாறு காணாத அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இன்று மீண்டும் விலை உயர்ந்த நிலையில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் ஒரு லிட்டர் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்தது. இந்நிலையில் மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய இடங்கள் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.எஸ் அழகிரி கோரிக்கை வைத்துள்ளார். 2020இல் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியும், மொத்தமுள்ள 3,400 இடங்களில் 405 இடங்கள் மட்டுமே அரசு […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]
சீனாவில் கொரோனா தடுப்பூசி அதிகமாக இருக்கின்றது, அங்கே கொரோனா இரண்டாம் அலை இல்லை என கே.எஸ் அழகிரி தெரிவித்தார். 2நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, மக்களிடையே எழுகின்ற கோபத்தின் காரணமாக 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருக்கிறது. எங்கே இருக்கு தடுப்பூசி. உங்களுடைய தடுப்பூசியின் உடைய உற்பத்தி எவ்வளவு ? வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா மோடி? நீங்கள் உங்களுடைய இரண்டு நிறுவனத்திலும் எவ்வளவு தடுப்பூசி தயார் செய்கிறீர்கள் […]
வாக்கு என்னும் மையத்தில் யாரேனும் தவறு செய்ய முற்பட்டால் எங்களிடம் பிடிபடுவார்கள் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். 2நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரியிடம், 10மணியில் இருந்து 4மணி வரை இரவு நேர ஊரடங்கு தமிழக அரசு போட்டுள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அரசியல் கட்சிகள் செல்வதற்கு தடை இருக்கா ? என்ற கேள்விக்கு 10மணியில் இருந்து 4மணி வரைக்கும் நடமாட்டம் தான் இருக்க கூடாது. அங்க போய் படுத்துக்கலாம், 9மணிக்கே போய் அங்க […]
கொரோனா பொதுமுடக்கத்தால் இந்தியாவில் 5ஆண்டுகளுக்கு பொருளாதார வீழ்ச்சியும், 10ஆண்டுகளுக்கு வேலையில்லா நிலையும் ஏற்படும் என கே.எஸ் அழகிரி எச்சரித்துள்ளார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, நான் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதே குற்றம் சுமத்துகிறேன். ஏன்னென்றால் இவ்வளவு பெரிய கொரோனா தொற்று இருக்கும் பொழுது தேர்தல் ஆணையம் தமிழகத்தில், மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும், அஸ்ஸாம் போன்ற பகுதிகளில் இவ்வளவு பெரிய பரப்புரை செய்வதற்கு அனுமதி வழங்கி இருக்கக்கூடாது. தலைவர் […]
முழு ஊரடங்கு போடுவதை தவிர்த்து விட்டு கிராமம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டும் என கே.எஸ் அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, முழு ஊரடங்கு என்பது தீர்வாகாது. தமிழக காங்கிரஸ் கட்சி தமிழக அரசுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் முழு ஊரடங்கு என்கின்ற சித்தாந்தத்தை தயவு செய்து கைவிட்டுவிடுங்கள். அது தமிழக மக்களுக்கு பயனளிக்காது. ஏன்னென்று சொன்னால சென்ற முறை நாம் பார்த்தோம் ….. முழு […]
நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி, இந்தியாவைப் பொறுத்தவரை…. தமிழகத்தைப் பொறுத்தவரை மோடி, எடப்பாடி அரசாங்கம் இரண்டும் கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் பரிதாபகரமாக தோல்வி அடைந்து இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இவற்றை விளக்கி சொல்ல வேண்டியது அவசியமாகும். தேசத்தின் நலன் கருதி, மக்களுடைய நலன் கருதி என்ன தவறுகள் நடந்து இருக்கிறது ? எங்கே சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறது ? என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டியது காங்கிரஸ் கட்சியினுடைய கடமை. முதல் தொற்று அலை […]
நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, தேர்தலுக்குப் பிறகு உங்களை சந்திக்கிறேன். முன்னாள் பாரதப் பிரதமரும் உலகத்தினுடைய மிகச்சிறந்த பேரறிஞருமான மன்மோகன்சிங் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அகில இந்திய மருத்துவக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த தேசத்தின் உடைய வளர்ச்சிக்காக அமைதியாக உழைத்தவர். பகட்டாக நடந்து கொள்ளாமல் பக்குவமாக நடந்து கொண்டவர். இன்றைக்கு தேசம் பல அங்குலம் வளர்ந்து இருக்கிறது என்று சொன்னால் அதற்கு அவர் தான் மிக முக்கிய காரணம். […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, கொரானா இரண்டாவது தொற்று வேகமாக பரவி வருகிறது. நம்முடைய பிரதமர் ஆரம்பத்திலிருந்து சொன்னது என்னவென்றால், இந்திய மக்கள் அனைவருக்குமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன, கைவசம் இருக்கிறது என்று சொன்னார். ஆனால் இன்றைக்கு மும்பை நகரம்…. இன்னும் வட இந்தியாவில் பல பகுதிகளில் மக்கள் அந்த தடுப்பூசியை போட்டு கொள்ள முடியாமல் வெளியேறுகிறார்கள். காரணம்? கையிருப்பு இல்லை. இந்த நேரத்தில் மத்திய அரசாங்கம் 6 கோடி […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, தமிழகம் முழுவதும் இருந்து எங்களுக்கு வருகின்ற தகவல்கள் 200 தொகுதிகளுக்கு மேல் எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும் என்கிற செய்திதான் வந்து கொண்டு இருக்கிறது. அது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பாரதிய ஜனதா – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பணபலம், அதிகார பலத்தை மீறி மக்கள் பலம் வெற்றி பெறுகிறது. அரசாங்கத்தினுடைய தடைகளை தகர்த்து எறிந்து வெற்றியின் சிகரத்தை நாங்கள் அடைகிறோம் என்பது மிகுந்த […]
கண் இருந்தால் கண்ணீர் வரும் என்று கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அதிரடியாக பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
திமுக உடனான தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ள நிலையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்டு அழுதார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமையவிருக்கும் ஆட்சிக்கு கடன் சுமையை விட்டுச் செல்வதுதான் அதிமுகவின் சாதனை என கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் […]
இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, எரிபொருள் விலை வரலாறு காணாத வகையில் மோடி ஆட்சியில் அதிகரித்திருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து இவ்வளவு பெரிய விலை ஏற்றத்தை இதுவரை சந்தித்ததில்லை. பேரறிஞர் மன்மோகன்சிங் அவர்கள் இந்திய பிரதமராக இருந்த பொழுது கச்சா எண்ணெய் விலை 108டாலர் விற்ற பொழுதும் கூட 70 ரூபாய்க்கு அவர் பெட்ரோலை விற்பனை செய்தார். ஆனால் இன்றைக்கு கச்சா எண்ணெய் விலை 55, 56 டாலர் இருக்கின்ற […]
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சொல்வதைத் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். சென்னை கொடுங்கையூர் குப்பை வளாகத்தை அகற்றக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வட சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சிப்பிங் டெல்லிபாபு தலைமையில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தை கே.ஸ் அழகிரி தொடங்கி வைத்தார். பின்னர் மேடையில் பேசிய அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக […]
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தால் எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி இன்று கோவையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிமுக பாஜக கூட்டணியை வேரோடு வீழ்ந்த வரும் 23,25 தேதிகளில் […]
தமிழகத்தில் அதிமுக வை உடைக்க ரஜினி என்ற மையப் புள்ளியை வைத்து பாஜக போட்ட சதித்திட்டம் படுதோல்வி ஆகிவிட்டது என கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் […]
மக்கள் பணத்தை பார்ப்பதில்லை ஜெயலலிதா அவர்களே தோற்றுள்ளார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அதிமுக 2500 ரூபாய் பொங்கல் பொங்கல் பரிசாக அறிவித்திருப்பது கவரக்கூடிய ஒன்றாக இருக்கும் நிலையில் மக்கள் ஆதரவை அவர்களுக்கு கொடுத்து விடுவார்களோ என்ற நெருக்கடி திமுக கூட்டணிக்கு இருக்குமா என்பது குறித்த கேள்விக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எல் அழகிரி கூறும் போது, பொதுவாகவே பொங்கலுக்கு பணம் கொடுப்பது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பதையெல்லாம் தமிழக அரசியல் கட்சிகள் பல நேரங்களில் செய்திருக்கிறார்கள். […]
நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல் மக்களின் பிரச்னையை தான் எடுத்து கூறுகின்றோம் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கிராமசபை கூட்டங்களில் மூலமாக தனது இரண்டாம் கட்ட பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், “அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற கருத்து அவர்களுடைய முகத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக கூறும் கருத்தாக இருக்கும். இந்தத் தேர்தலை பொறுத்தவரை எங்களின் மதசார்பற்ற கூட்டணி என்பது மிகவும் பலமான […]
அதிமுக-பாஜகவை போன்று நாங்கள் அடிமை கூட்டணி கிடையாது, சுதந்திர கூட்டணி என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, “அதிமுக-பாஜகவை போன்று, திமுக மற்றும் காங்கிரஸ் அடிமை கூட்டணி கிடையாது. நாங்கள் சுதந்திர கூட்டணி. ஜனநாயக ரீதியான கூட்டணி என்பதால் சுதந்திரமாக கருத்துக்களை நாங்கள் தெரிவிக்கிறோம். நாங்கள் கூட்டணி கட்சிகள் மட்டுமே தவிர ஒரே கொள்கை கொண்ட கட்சிகள் அல்ல. 7 பேர் விடுதலை பற்றி நீதிமன்றம் தான் […]
தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி 7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, ஏழு பேர் விடுதலைக்கு ஆளுநருக்கு திமுக உள்பட அரசியல் கட்சியினர் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இது குறித்து இவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றம் தான் என்றும், அவர்களை விடுவித்தால் சிறைச்சாலைகளில் 25 ஆண்டுக்கும் […]
பாஜக நடத்தும் ரத யாத்திரையை தடை செய்யக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை சட்டக்குழு சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் வாரம் பாஜக நடத்த இருக்கும் வெற்றிவேல் ரத யாத்திரையை தடை செய்யக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை சட்டக்குழு, சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல் துறை தலைமை அலுவலகம் சென்னை, காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் உள்துறை செயலர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளித்துள்ளது. புகார் […]
இந்த வருடம் நீட் தேர்வு குறித்து சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் அதிமுக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது மிகவும் கடினம் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 76வது பிறந்தநாளை ஒட்டி திருப்பூர் ராயபுரம் பகுதியில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சுற்றுப்பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”நீட் தேர்வு பயம் காரணமாக கோவையில் நேற்று மாணவி […]