கோவில் நிலத்திற்கு பட்டா கொடுக்கக் கூடாது என கூறுவதற்கு நீதிபதிக்கு என்ன அருகதை இருக்கிறது ? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது நீதிபதியை அமைதிக்கும் பேச்சு அல்லவா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பூவை பூ என்றும் சொல்லலாம், புஷ்பம் என்றும் சொல்லலாம் என்றார் போல என்பது போல மழுப்பலான பதிலை கூறியுள்ளார். தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக […]
Tag: கே. பாலகிருஷ்ணன்.
மனிதநேய மக்கள் கட்சி நடத்திய ஆர்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நான் இன்னொன்றையும் சொல்லிக் கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன், அந்த தடை செய்யப்பட்டு இருக்கின்ற ( பிஎப்ஐ ) அமைப்பின் மீது எங்களுக்கு மாறுபட்ட பல கருத்துக்கள் உண்டு. அந்த அணுகுமுறையை நாங்கள் ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை, அந்த அமைப்பிற்கும், எங்களுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. மனிதநேயம் மக்கள் கட்சியை சகோதரத்துவத்தோடு ஏற்றுக் கொள்கின்ற நாங்கள், அகில இந்திய முஸ்லிம் லீக் […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசிய போது, ஆர்.எஸ்.எஸ்-ஐ விட ஒரு பயங்கரவாத அமைப்பு இந்தியாவிலே இருக்கிறதா ? ஆர்.எஸ்.எஸ்-ஐ விட ஒரு தேசவிரோத அமைப்பு இந்தியாவில் இருக்கிறதா? ஆர்எஸ்எஸ் ஐ விட தீவிரவாத அமைப்பு இந்தியாவில் இருக்கிறதா? நான் மோடியை பார்த்த கேட்கிறேன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்த்து கேட்கிறேன், இப்படி நீதிமன்றத்திலே பயங்கரவாத குண்டு வெடிப்பிற்கு காரணம் நாங்கள் தான் என்று ஒரு அமைப்பு பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்த […]
தோழர் சு வெங்கடேசன் எம்பி குறித்து அமைச்சர் கே என் நேரு ஒருமையில் பேசி இருப்பது அரசியல் நாகரீகம் அற்றது என்று கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அமைச்சர் கே என் நேரு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம் பி வெங்கடேசனை அவன் இவன் என்று பேசியதாக ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த கே என் நேரு எதார்த்தமாக இயல்பாக பேசக்கூடியவர். வாய்க்கு வந்ததை சட்டென்று பேசிவிடுவார். அதுவே அவருக்கு சில நேரங்களில் சிக்கலாக வந்துவிடும். […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]
ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைப்பது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவிக்கிறார். பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் சட்டப்படி தேர்வு செய்யப்பட்டவர்.தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைப்பது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு கே. பாலகிருஷ்ணன் தமிழக அரசு சார்பில் ஒரு தீண்டாமை வழக்கு கூட பதிய வில்லை என தெரிவித்துள்ளார்.
ஊரடங்கால் எந்த ஒரு பயனும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஊரடங்கு தளர்வுகள் ஏழை எளியோருக்கு எந்த வகையிலும் பயனுள்ளதாக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை அரசு முழுமையாக நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.