ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற செயலாளர் இருவருக்கும் ஏற்கனவே இருந்த முன்விரோத்தால் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆகிய இருவரும் வந்துள்ளனர். அப்போது ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் ஆகிய இருவருக்கும் ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு […]
Tag: கைகலப்பு
பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த ஷைன் டாம் சாக்கோ பொதுமக்களுடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை நெல்சன் இயக்குகின்றார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் டாம் சாக்கோ நடித்துள்ளார். இவர் தற்போது மலையாளத்தில் “தல்லுமலா” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் கொச்சியில் நடைபெற்று வருகின்றது. படப்பிடிப்பின்போது படக்குழுவினர் சாலையிலேயே […]
பாகிஸ்தானில் அரசியல் கட்சி தலைவர்கள் இருவர் டி.வி நேரலையின் போது கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தான் பீபுள் கட்சியை ( PPP ) சேர்ந்த கிட்டிற் கான் மண்டோக்ஹெல் மற்றும் பாகிஸ்தானை ஆளும் பாகிஸ்தான் டெஹரீக்-ஏ-இன்சப் ( PTI ) கட்சியின் மூத்த உறுப்பினரான பிரடோஸ் ஆஷிக் அவன் ஆகிய இருவரும் “ஊழல்” என்ற தலைப்பில் பாகிஸ்தானில் உள்ள பிரபல டி.வி சேனல் ஒன்றில் நேரலையில் விவாதித்து கொண்டிருந்தனர். […]
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வியாபார போட்டியில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியதில் 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே சிறப்பு வாய்ந்த தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முடவேலி கிராமத்தில் வசித்து வரும் முருகன், ராஜேந்திரன் ஆகிய இருவரும் பழம்-தேங்காய் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகின்றனர். இவர்களுடைய கடைகள் அருகருகில் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களை தங்கள் கடையில் பொருட்களை வாங்கி செல்லுமாறு […]
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதியில் அமமுக மற்றும் பாமகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி […]
மயிலாடுதுறையில் சொத்து தகராறு காரணமாக கைகலப்பு ஏற்பட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அடியாமங்கலம் நடுத்தெருவில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மூத்த மகனும், வெற்றிவேல், சிங்காரவேல், சரவணன் ஆகிய மகன்களும் உள்ளனர். செந்தில்குமார் திருமணம் முடிந்ததும் தனது மனைவி சத்யப்ரியாவுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமாருக்கும், அவரது சகோதரர்களுக்கும் சொத்துப் பிரச்சனை காரணமாக […]