மனைவியுடன் தனிஅறையில் 2 மணிநேரம் செலவிடுவதற்கு கைதிகளுக்கு அனுமதி வழங்கும் சலுகையினை நடைமுறைபடுத்த பஞ்சாப் அரசானது திட்டமிட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. பஞ்சாப் சிறைத்துறையின் இம்முடிவு தொடர்பாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, பஞ்சாப் சிறைகளிலுள்ள கைதிகள் தங்களது மனைவி (அல்லது) கணவருடன் தனி அறையில் 2 மணிநேரம் செலவிட அனுமதி வழங்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது. வருகிற 27ஆம் தேதி முதல் இது அமலுக்கு வர இருக்கிறது. நபா மாநகரிலுள்ள கோயிந்த் வால் மத்திய […]
Tag: கைதி
பஞ்சாபில் இருக்கும் சிறை கைதிகளுக்கு அம்மாநில அரசு ஒரு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அமைந்துள்ள சிறையில் கைதிகளுடைய திருமண உறவை வலுப்படுத்தும் விதமாக அம்மாநில அரசு புதிய முன்னெடுப்பு எடுத்துள்ளது. அதன்படி சிறையில் கைதிகள் தங்களுடைய மனைவிகளை அதற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள தனி அறையில் சந்திக்கலாம் என்று தெரிவித்துள்ளது. சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகளுக்கு அவர்களது மனைவியுடன் நேரத்தை கழிக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 3 மாதங்களுக்கு ஒருமுறை அட்டாச்ட் பாத்ரூமுடன் கூடிய […]
கோவையில் ஓடும் ரயிலில் இருந்து கைதி குதித்து தப்பியுடைய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக் கோடு பகுதியை சேர்ந்த அனீஸ் பாபு(41) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கேரள மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதில் திருட்டு வழக்கு தொடர்பாக அனீஸ் பாபுவை பாலக்காடு போலீசார் சில மாதங்களுக்கு முன் அங்குள்ள சிறையில் அடைத்துள்ளனர். இந்த சூழலில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் […]
நெல்லை மாவட்டம் ராதாபுரம் மதகனேரி பகுதியில் வசித்து வருபவர் டேவிட் (46). இவர் மீது தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, நெல்லை நீதிமன்றத்தில் சென்ற 2018 ஆம் வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து டேவிட் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்துவந்தார். இந்நிலையில் சிறையிலிருந்தபோது டேவிட் எந்த தவறும் செய்யாமல் சிறை விதிகளை கடைபிடித்து நடந்ததால், அவரை நன்னடத்தை கைதி என […]
ஸ்வீடன் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் ஒரு கைதியிடம் எதிர்பாராதவிதமாக ஒரு துப்பாக்கி கிடைத்துள்ளது. அந்தத் துப்பாக்கி கிடைத்தவுடன் யாராக இருந்தாலும், அதை வைத்து சிறைச்சாலையில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை தான் யோசிப்பார்கள். ஆனால் அந்த கைதி ஒரு காவலரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி எனக்கு 20 பீட்சா வேண்டும் என கேட்டுள்ளார். இதைக் கேட்ட அனைத்து காவலர்களும் மிகவும் ஆச்சர்யப்பட்டனர். இதனையடுத்து அந்த கைதிக்கு 20 பீட்சா வாங்கி கொடுத்துள்ளனர். அந்தக் கைதி அந்த […]
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மாதையனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையில் சந்தன ம்ரக்கடத்தல் வீரப்பனின் அண்ணனான மாதையன் என்பவர் கடந்த 1987-ஆம் ஆண்டு சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இருதய நோய், சர்க்கரை நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து மீண்டும் அவருக்கு உடல்நலம் […]
‘கைதி’ ஹிந்தி ரீமேக் படத்தின் டைட்டில் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து, இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ”மாஸ்டர்”. தற்போது நடிகர் கமலஹாசனை வைத்து ”விக்ரம்” படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 3ம் தேதி ரிலீசாக உள்ளது. இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் ”கைதி”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் […]
சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புழல் ஜெயில் கைதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், அம்பேத்கர் நகர் பெரிய தெருவில் வசித்து வந்தவர் லோகேஷ் என்ற சந்தோஷ் (27). இவர் பாலியல் பலாத்கார வழக்கு சம்பந்தமாக சேத்தியாதோப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிதம்பரம் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. அதனால் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கைதிகளை சந்திக்க பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் கைதிகளை சந்திக்க பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளதாக தமிழக சிறைத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக சிறைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் கைதிகளை அவர்களது உறவினர்கள் வாரம் இருமுறை சந்திக்க அனுமதிக்கப்படுவர். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 3 […]
வேலூர் சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி நந்தா (எ ) முத்துக்குமார் திடீரென்று காணாமல் போய்விட்டார். சிறையிலுள்ள ஆலோசனை கூட்டத்தை சுத்தம் செய்ய முத்துக்குமார் உள்ளிட்ட 21 கைதிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் உணவு இடைவேளையின்போது 20 பேர் மட்டுமே இருந்துள்ளதை கண்டு சிறை காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முத்துக்குமார் மாயமானதை சிறை காவலர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போது சிறைக்காவலர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் முத்துக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை அரசரடி அருகே புது ஜெயில் ரோடு பகுதியில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 1,300க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறை என 2 வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறையில் முதல் தளத்தில் இருந்த பழைய சிறைவாசிகளுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறைக்கு வந்த திருச்சியை சேர்ந்த சிறைவாசிகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் கைதிகள் […]
‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”கைதி”. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கார்த்தி தற்போது ‘விருமன்’ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ படத்தை […]
கைதி படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. கார்த்தி கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. கைதி படத்தின் கதையை மன்சூர் அலிகானை மனதில் வைத்துதான் லோகேஷ் கனகராஜ் எழுதியதாக கூறப்பட்டது . இதன்பின் கார்த்தி இந்த […]
கார்த்தியின் ‘கைதி’ படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸாக உள்ளது. தமிழ் சினிமாவில் கார்த்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”கைதி”. இந்த படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற இந்த படம் பல்வேறு விருதுகளையும் வென்றது. இந்நிலையில், இந்த படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸாக உள்ளது. ஜப்பானில் ”கைதி டில்லி” என […]
ஜாமினில் வெளியில் வர இருந்த கைதி திடீரென உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு அம்மைபிள்ளை தெரு பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்தார். இதில் கார்த்திக்கிற்கு திருமணம் முடிந்து நீலா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்களில் கார்த்திக் மீது காவல் நிலையத்தில் அடிதடி, லாட்டரி சீட்டு விற்பனை வழக்குகள் இருக்கிறது. இந்த வழக்குகளில் கடந்த 17-ஆம் தேதியன்று கார்த்திக் […]
விசாரணைக்கு அழைத்து சென்றபோது தப்பி ஓடிய கைதியை காவல்துறையினர் துரத்தி கையும் களவுமாக பிடித்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள வீரகனூரில் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவரை அதே பகுதியில் நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில் தலைவாசல் காவல்துறையினர் கைது செய்து மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக ஆயுதப்படை காவல்துறையினர் சேலம் சிறையில் இருந்து கண்ணனை போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு நீதிமன்றத்திற்கு வந்தனர். இதனையடுத்து கண்ணனை […]
லண்டனில் உள்ள care facility-ல் இருந்து தலைமறைவான தமிழர் ஒருவரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். லண்டனின் Ilfordல் உள்ள care facilityல் இருந்து பாலசங்கர் நாராயணன் என்ற இளைஞர் கடந்த 7-ஆம் தேதியன்று தப்பிச் சென்று விட்டார். இதனையடுத்து நாராயணன் குறித்த சில முக்கிய தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டனர். அதாவது நாராயணன் மூர்க்கத்தனம் கொண்டவராக இருக்கலாம் என்றும் பொதுமக்கள் அவரை பார்த்தால் அருகில் சென்று அணுக வேண்டாம் என்றும் காவல்துறையினர் எச்சரித்தனர். ஆகவே பொதுமக்கள் யாரும் நாராயணனை பார்த்தால் […]
கைதி திரைப்படத்தில் முதலில் யார் ஹீரோவாக நடிக்க இருந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து நரேன், தீனா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் கைதி திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது விஜய் சேதுபதிதான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு அப்போது கால்ஷீட் கிடைக்காததால் கைதி திரைப்படத்தில் அவரால் நடிக்க […]
பிரிட்டனில், பெண் சிறை காவல் அதிகாரி ஒருவர் சிறையில் இருந்த கைதியை முத்தமிட்ட ரகசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தில் இருக்கும் West Lothian-ன் HMP Addiewell சிறையில் கெவின் ஹாக் என்ற கைதி போக்குவரத்து விதிமுறையை மீறியதால் 3 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், கெவின் ஹாக், பெண் சிறை காவலரை, முத்தமிடுகிறார். இதனை கெவின் சிறையில் தடை செய்யப்பட்டிருக்கும் மொபைலை பயன்படுத்தி ரகசியமாக வீடியோ எடுத்திருக்கிறார். https://videos.dailymail.co.uk/video/mol/2021/08/20/4870934017039813773/640x360_MP4_4870934017039813773.mp4 அந்த வீடியோ […]
கர்நாடக மாநிலத்தில் சிறை வாழ்க்கை எப்படி இருக்கும்? என்பதை அறிந்து கொள்ளும் திட்டத்தை ஹிண்டல்கா மத்திய சிறைச்சாலை அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி ரூபாய் 500 செலுத்தி ஒரு நாள் முழுவதும் சிறைச்சாலையில் தங்கி சிறை வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று தெரிந்து கொள்ளலாம். சிறையில் கைதிகள் நடத்தப்படுவது போல் பார்வையாளர்கள் நடத்தப்படுவர் . கைதிகளுக்கு வழங்கும் சாப்பாடும் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும்.
ஜெயிலில் பரோலில் சென்ற கைதி தலைமறைவாக இருப்பதனால் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள வாணியங்குளம் பகுதியில் வேலு என்ற வேல்முருகன் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு ஓட்டேரி பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து வேல்முருகன் புதுக்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் 2017ஆம் ஆண்டு வேலூர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் தனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி பரோல் […]
சிறைச்சாலையில் உள்ள கைதிகள் உறவினர்களுடன் வீடியோகால் மூலம் பேசுவதற்கு வசதி வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறைச்சாலை மற்றும் பெண்கள் தனிச்சிறை இருக்கின்றது. இந்த சிறைச்சாலைகளில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் பெரும்பாலானோர் இருக்கின்றனர். எனவே கொரோனா தொற்று பரவலின் காரணமாக சிறைச்சாலையில் உள்ள கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கைதிகள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வீடியோ கால் மூலம் பேசுவதற்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. […]
கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கைதி. இதையடுத்து இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் நடிகர் கார்த்தியின் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
வேலூரில் காவலரை தாக்கிய கைதியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி தாலுகா பாரதி நகரைச் சேர்ந்த மாபாஷா என்பவரை திருட்டு வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து சிறைச்சாலை வளாக கண்காணிப்பு பணியில் காவலர் உமையன் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியில் சென்ற மாபாஷாவை காவலர் நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர் கோபுர பகுதிக்கு செல்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து காவலர் […]
கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சிறையில் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அன்னை சத்யா நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மகாலிங்கம். கடந்தவாரம் நடத்தப்பட்ட வாகன சோதனையில் கஞ்சா இருந்ததாக காவல்துறையினர் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சைதாப்பேட்டையில் உள்ள சிறையில் வைக்கப்பட்டிருந்த மகாலிங்கம் நேற்று காலை திடீரென இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நீதிமன்றத்தின் […]
சிறை கைதி எஸ்டிபிஐ உடன் வைரமுத்து இருப்பதுபோன்று வரைந்த ஓவியத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ளார். மதுரை மாவட்டத்தில் இருக்கும் மத்திய சிறையில் கைதியாக இருப்பவர் வைரமுத்துவிற்கு பரிசு ஒன்றை வழங்கினார். அது அவர் கைப்பட வரைந்த ஓவியம் ஆகும். தற்போது சமூக வலைதளத்தில் அந்த ஓவியம் வைரலாக பரவி வருகிறது. கோயம்புத்தூரை சேர்ந்த பாதமுத்து என்பவர் ஆயுள் தண்டனை பெற்ற சிறைக் கைதியாக சிறையில் இருந்து கொண்டு ஏராளமான ஓவியங்களை வரைந்து வருகிறார். […]
திருநள்ளாறு காவல் நிலையத்தில் கைதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு காவல் நிலையத்தில் விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. திருநள்ளாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுரக்குடியை சேர்ந்த வாகன ஓட்டுநர் ஒருவர், தகராறு வழக்கு ஒன்றில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நடத்திய சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக […]
கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க இருக்கும் கதாநாயகன் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளனர் கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த கைதி திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் எந்த ஒரு பாடல்களும் இல்லாது இயக்கப்பட்ட படம். கைதி திரைப்படம் பிகில் வெளியாகும் நாளில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. இதனை தொடர்ந்து கைதி திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ட்ரீம் வாரியர் இணைந்து […]