திருவள்ளூர் மாவட்டம் இடையூர் -கலியனுரை இணைக்கும் விதமாக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் முழுவதும் மேம்பாலம் கட்டி முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அவதி அடைந்துள்ளார்கள். பாலம் கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ளதால் ஆபத்தான முறையில் கொசஸ்தலை ஆற்றில் இறங்கி ஏணி மூலமாக பாலத்தில் ஏறி மாணவர்கள் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க […]
Tag: கொசஸ்தலை ஆற்றில்
பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே கொசஸ்தலை ஆற்று தடுப்பணையின் கரைகள் சரிந்து சேதமடைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு அருகே இருக்கும் கொசஸ்தலை ஆற்றில் சென்ற 2021 ஆம் வருடம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை சார்பாக 18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 230 மீட்டர் நீளம் 2 மீட்டர் உயரத்திற்கு தடுப்பணை கட்டப்பட்டது. இதன் பணியானது 90% நிறைவடைந்த நிலையில் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்ற சில நாட்களாகவே […]
ஆந்திர மாநிலத்தில் பெய்த கனமழையால் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் 5-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு தாலுகாவில் எல்லையில் உள்ள ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் சித்தூர் மாவட்டம் அம்மாப்பள்ளி உள்ள கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் இருந்து 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பள்ளிப்பட்டு அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த […]