Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன்… பங்குனி திருவிழா… கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அரியாகுறிச்சி குறிச்சி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் நேற்று முன்தினம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பின் வெட்டுடையார் காளி அம்மனுக்கு நேற்று முன்தினம் காலையில் சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் செய்யப்பட்டது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோலாகலமான பங்குனி உத்திர திருவிழா… கொடியேற்றத்துடன் தொடக்கம்… பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!!

பெரம்பலூரில் மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெரம்பலூரில் சிறப்பு வாய்ந்த மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா தொற்று காரணமாக பங்குனி உத்திர திருவிழாவிற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் பக்தர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு அந்த கோவிலில் திருவிழாவை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இரண்டு நாட்கள் தாமதமாக பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கொடியேற்றத்தை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் கோவில்… பங்குனி உத்திர திருவிழா… கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூரில் உள்ள பரிமள ரங்கநாதர் கோவிலில் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிழந்தூரில் சிறப்பு வாய்ந்த பரிமள ரெங்கநாதர் கோவில் உள்ளது. இது பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க கோவில்களில் ஐந்தாவது கோவிலாக விளங்குகிறது. மேலும் 108 திவ்ய தேசங்களில் 22-வது திவ்ய தேசமாக திகழ்கிறது. இது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இந்த கோவிலில் வருடம்தோறும் பங்குனி உத்திர திருவிழா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சௌந்தரநாயகி அம்மன் கோவில்… மாசி திருவிழா… கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சௌந்தரநாயகி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் சிறப்பு வாய்ந்த புஷ்பவனேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அருணகிரிநாதர், அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர்களால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்தின் கீழ் இந்த கோவில் உள்ளது. சிவபெருமானுடைய 64 திருவிளையாடல்களில் 36-வது திருவிளையாடல் இந்த கோவிலில் நடைபெற்றது. இந்த கோவிலில் வருடம்தோறும் 11 நாட்கள் பங்குனி திருவிழா நடைபெறுவது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில்… மாசி பங்குனி திருவிழா… கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

காரைக்குடியில் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி, மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி, மாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியுள்ளது. இந்த கோவிலில் திருவிழா ஒரு மாதத்திற்கு மேலாக நடப்பதால் பக்தர்கள் எங்கு இருந்தாலும் இந்தத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்துவிடுவார்கள். இந்த விழாவை முன்னிட்டு அம்மனுக்கு அலங்கார பூஜைகள், சிறப்பு அபிஷேகம், அதன்பின் கொடிமர பூஜை ஆகியவை நடைபெற்றுள்ளது. இதையடுத்து காலை […]

Categories

Tech |