ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை ஏராளமான மக்கள் கண்டுகளித்து செல்வார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் கோடை விழா நடத்தலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், ஏற்காடில் 45வது கோடைவிழா வரும் 26ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை […]
Tag: கொடைவிழா
நெல்லை மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி அருகில் பழவூர் எனும் இடத்தில் அம்மன் கோவில் கொடைவிழா நடந்தது. இதற்காக பாதுகாப்பு பணிக்கு காவல்உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா உட்பட காவலர்கள் பழவூர் சென்றிருந்தனர். இதையடுத்து கோவில் கொடைவிழா முடிந்த பின் அங்கு வைக்கட்டிருந்த பிளெக்ஸ் போர்டுகளை அகற்றும்போது ஆறுமுகம் என்ற நபருக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்கு வாதத்தின்போது ஆறுமுகம் திடீரென்று காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த காவல் உதவி […]
மேல ஆழ்வார்தோப்பு ராமசாமி கோவிலில் நடைபெற்ற ஆவணி கொடை விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடியில் மேலஆழ்வார்தோப்பு ராமசாமி கோவிலில் நடைபெற்ற ஆவணி கொடை விழாவில் பால்குடம், அபிஷேகம், அலங்கார பூஜைகள் சிறப்பாக நடந்தது. இதனையடுத்து தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து கொண்டுவரப்பட்டது. அதன்பின் வில்லிசை, நையாண்டி மேளம், கரகாட்டம் கொடை விழாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்துடன் ராமபிரான், சீதாபிராட்டி, லட்சுமண பெருமாள் பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு […]
வேலூரில் சமூக இடைவெளியுடன் கொடைவிழா எளிமையான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கெங்கையம்மன் கொடை விழா வருடந்தோறும் கோலாகலமாக நடைபெற்று வந்திதிருக்கின்றது. இந்த கொடைவிழாவில் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த கொடை விழாவினால் குடியாத்தம் பகுதி மட்டுமல்லாமல், அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளும் விழாக்கோலம் போல் காட்சியளித்தன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், தமிழகம் முழுவதும் கொடை விழாவிற்கு தடை […]
அறந்தாங்கியில் கோவில் கொடை விழாவில் மாட்டு வண்டி போட்டி கோலாகலமாக நடைபெற்றது. அறந்தாங்கி அருகே உள்ள கடையாதுப்பட்டியில் அரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. அங்கு 33வது ஆண்டு மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதில் மாட்டுவண்டி பந்தயம் நடத்தினர். மேலும் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு பந்தயம் நடத்தப்பட்டது. இப்பந்தயத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளான தஞ்சை ராமநாதபுரம் புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 45 ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. மேலும் பந்தயம் மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. […]