வடிகால் உடைந்து வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை நேற்று மாலை சுமார் 3:30 மணி நேரத்திற்கு மேல் கொட்டி தீர்த்தது. இதனால் கொடி மரத்து மூளை பகுதியில் இருக்கும் அகழியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இங்கிருந்து வடியும் தண்ணீர் வடிகால் மூலம் வடவாற்றிற்கு சென்று சேரும். இந்த நிலையில் வடிகாலில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வெளியேறி நூற்றுக்கும் […]
Tag: கொட்டி தீர்த்த கனமழை
உடா மாகாணத்தில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. அமெரிக்கா நாட்டில் உடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மோவாப் பகுதியில் கடைகளுக்குள் புகுந்த வெள்ள நீரால் வியாபாரம் பாதிக்கப்பட்டு கடை உரிமையாளர்கள் அவதிக்குள்ளாகினர். இந்த வெள்ள நீரை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட சில சாலைகள் மற்றும் பாலங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளதாக மோவாப் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு சீனாவில் ஏற்பட்ட திடீர் கனமழையினால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேரைக் காணவில்லை என்று சீன அரசு ஊடகம் நேற்று தகவல் தெரிவித்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் சுமார் 250 மில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சீனா நாட்டில் கிங்காய் […]
ஆப்கானிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் கிழக்கு பகுதியில் பர்வான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. இந்த கனமழையின் காரணமாக நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இங்கு […]
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் சிச்சுவான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைப் போன்று வடமேற்கு சீனாவின் கிங்காய் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டு […]
பலூசிஸ்தான் மாகாணத்தில் தொடர் கனமழையால் 7 அணைகள் உடைந்ததில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் அழிந்து போயுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளின்றி திறந்த வெளியிலேயே வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏறக்குறைய அனைத்தும் சேதமடைந்து விட்டன என்று ஏ.ஆர்.ஒய். நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மாகாண […]
தெஹ்ரான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டில் தெஹ்ரான் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையினால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என அந்நாட்டு […]