மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் என்ற பகுதியில் பாஜக தலைவி தடுப்பூசி செலுத்தும் மையத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பாஜக தலைவி மாதிரி ஜெய்ஸ்வால் தனது பிறந்த தடுப்பூசி செலுத்தும் மையத்தில் கொண்டாடினார். இந்தூரில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற மதூரி ஜெய்ஷ்வால் அங்கு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். ஆனாலும் அவர் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் கொண்டாடப்பட்ட இந்த பிறந்தநாள் […]
Tag: கொண்டாட்டம்
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அவ்வப்போது அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்று மக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது. அதுமட்டுமல்லாமல் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. […]
நடிகர் அஜித் தனது பிறந்தநாளை சிம்பிளான முறையில் கொண்டாடியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் அப்டேட்டை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் அஜித் தனது 50வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். ரசிகர்களும், திரை பிரபலங்களும் அஜித்தின் பிறந்த நாளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதேபோல் ஆண்டுதோறும் அஜித் தனது குடும்பத்துடன் சிம்பிளான முறையில் தனது பிறந்தநாளை கொண்டாடி […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் […]
பாஜக அலுவலகத்திற்கு முன்பு திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதை அடுத்து இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மேற்கு வங்க மாநிலத்தில் தொடக்கம் முதலே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி […]
பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது 15வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதில் இடம் பெறும் நடிகர், நடிகைகள் எப்படி பிரபலமாகி வருகிறார்களோ அதே போல இந்த சேனலில் தொகுப்பாளர்களாக இருப்பவர்களும் மிகவும் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் பல ஆண்டுகளாக விஜய் டிவியில் பணியாற்றி பிரபலமானவர் தான் மாகாபா […]
கர்ணன் திரைப்படம் சொன்னபடி இன்று ரிலீஸ் ஆனதால் தனுஷ் ரசிகர்கள் அதனைக் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஆனால் திடீரென கொரோனா கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப் பட்டதால் கர்ணன் திரைப்படம் இன்று வெளியாகாது என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு கட்டாயம் சொன்னபடி ஏப்ரல் 9ஆம் தேதி கர்ணன் திரைப்படம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி கர்ணன் திரைப்படம் […]
ஈஸ்டர் தினத்தை கொண்டாடிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னணி நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக ஒருவருக்கொருவர் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இதற்கிடையில் இவர்கள் அடிக்கடி வெளியில் சுற்றுலா சென்று அங்கு இருவரும் சேர்ந்து எடுத்த கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு […]
அண்ணாத்த படப்பிடிப்பில் கபாலி பட நடிகர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். சிவா இயக்கத்தில் முன்னணி நடிகர் ரஜினி நடித்து வரும் படம் “அண்ணாத்த”. கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடந்து வந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பின் போது நான்கு டெக்னீசியன்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கபாலி படத்தை தொடர்ந்து அந்த படத்தில் இணைந்துள்ள […]
சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிகவும் புகழ்பெற்றவர் வடிவேலு. அவருக்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம். அவரின் பெயரை சொன்னாலே அவரின் நகைச்சுவை மட்டுமே அனைவர் மனதிலும் வரும். அவருக்கு பல்வேறு பேரும் புகழும் உண்டு. அதில் வைகைப்புயல் வடிவேலு என்பது மிக சிறந்தது. அப்படிப்பட்ட பல்வேறு புகழுக்கு உரியவர் நீண்ட நாட்களாக திரையுலகில் வரவில்லை. அவருக்கு பட வாய்ப்புகள் […]
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் எப்படி இருக்கும் என்பதை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். எச்.வினோத்இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படம் எப்படி இருக்கும் என்பதை நேர்காணல் ஒன்றில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். அதில் வலிமை நிச்சயமாக அஜித் ரசிகர்களையும், சினிமா காதலர்களையும் திருப்திப்படுத்தும். கடினமான அதிரடி சண்டைக் காட்சிகளால் நிரம்பிய ஒரு பவர் பேக் குடும்பப் படமாக இருக்கும் என்றார். மேலும் அஜித் பிறந்தநாளில் வலிமை பஸ்ட் லூக் […]
நடிகர் அஜித்தின் பில்லா திரைப்படம் ரிலீசை அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதிலும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை அதிகமாக உள்ளனர். இவர்களுக்கு மத்தியில் தல, தளபதி என்ற போட்டியில் அடிக்கடி நடக்கும். தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் ரசிகர்களை கவர்ந்தவர்கள் விஜய் மற்றும் அஜீத். இந்நிலையில் அஜித் நடிப்பில் 2007ஆம் ஆண்டு பில்லா திரைப்படம் வெளியாகியது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பில்லா திரைப்படம் நெல்லை […]
மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனைகள் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனமாடி உள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் வரும் “வாத்தி கம்மிங்” பாடல் வெளியானது முதல் இன்று வரை ஹிட் அடித்து வருகிறது. இந்நிலையில் இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனைகள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி உள்ள வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் […]
நடிகர் அல்லு அர்ஜுன் தனது திருமண நாளை கொண்டாட தாஜ்மஹால் சென்றுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவருக்கு ஆந்திராவின் பிரபல தொழிலதிபரின் மகள் ஸ்னேகா ரெடி என்பவருடன் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்னேகா ரெட்டி தங்களது 10 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்கு தாஜ்மஹால் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்துக் […]
அர்ச்சனாவின் தங்கை வளைகாப்பு விழாவில் பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்டனர். தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா விஜய் டிவியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு சென்று அன்பு தான் ஜெயிக்கும் என்று கூறிக்கொண்டு தனக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்கி கொண்டார். பிறகு நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அர்ச்சனா தொடர்ந்து பல்வேறு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அதில் ஒரு கொண்டாட்டமாக அர்ச்சனா கர்ப்பமாக இருந்த தன் தங்கைக்கு சீமந்தம் நடத்தியுள்ளார். அந்த […]
மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை “பராக்கிரம” தினமாக கொண்டாட முடிவெடுத்துள்ளது. தேசத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஜனவரி 23ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது 125-வது பிறந்த நாளான இந்த வருடம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறப்பான முறையில் கொண்டாட இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நாட்டுக்காக தன்னலமற்ற சேவையை வழங்கியுள்ளார். அவரது அணையாத விடுதலை உணர்வை போற்றும் […]
நடிகர் அஜித் பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில் அவரது ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தை தொடங்கி உள்ளனர். தமிழ் திரை உலகில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவ்வரிசையில் நடிகர் அஜித் அனைவராலும் தல என்று அழைக்கப்படுவார். அவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் வருகின்ற மே 1 ஆம் தேதி தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், […]
தமிழகத்தில் அனைவராலும் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித் குமார் பற்றிய ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்தில் உள்ள நடிகர்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் அனைவராலும் ‘தல’ கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித்குமார். அவருக்கு தல என்ற அடைமொழி தீனா திரைப்படத்தின் மூலமே அறிமுகமானது. அதன்பிறகு அனைவராலும் தல என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு சிலரும் சமூகத் தொண்டுகள் செய்து வருகிறார்கள். […]
வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வேலூர் மாவட்டத்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவற்றில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்து அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவும் சூழல் நிலவுவதால் டிசம்பர் 31ஆம் தேதி இரவு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளார்
புத்தாண்டு தினத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை மாநகராட்சியின் காவல்துறை அறிவித்துள்ளது. புத்தாண்டு நள்ளிரவு வரை இரவு நேரங்களில் கடும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சில உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தன்று சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். குறிப்பாக மது போதையில் […]
புதுச்சேரியில் அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டை கொண்டாட அனுமதி அளித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனால் பொதுமக்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டை கொண்டாட அனுமதி அளித்து முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேலும் மக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து புத்தாண்டை கொண்டாடலாம். விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட 200 நபர்களுக்கு மட்டுமே […]
கடந்த மார்ச் மாதம் முதலே நோய்த்தொற்றின் பரவல் அதிகமாக உள்ளதால் உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வந்தது. அந்த வகையில் தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் நோய்த்தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் பல்வேறு கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் திருமணங்கள் அனைத்தும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இருப்பினும் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் தடை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021 ஆம் […]
கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக கடற்கரைகள் எல்லாம் மூடப்பட்டு இருந்தன. கடற்கரைகளுக்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போதுதான் கடற்கரைகளுக்கு அனுமதி நிபந்தனைகளுடன் அளிக்கப்பட்டிருக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் பெரும்பாலும் கடற்கரை மற்றும் சாலைகளில் கொண்டாடுவது வழக்கம். தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு இருப்பதால் கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டை கொண்டாட அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி நடைபெறும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு […]
இன்று உலகம் முழுவதும் சர்வதேச டீ தினம் தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் ஊழியர்களை போற்றும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று உலகில் டீ தினம் கடைபிடிக்கப்படுகிறது. தேயிலையின் நிலையான உற்பத்தி மற்றும் தேயிலை பயன்பாட்டுக்கு ஆதரவான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான கூட்டு நடவடிக்கையை வளர்க்கவும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை உணர்த்தவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு பன்னாட்டு மாநாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளில் தேயிலை பயிர் செய்யப்பட்டாலும், சீனா, இந்தியா, இலங்கை, ஜப்பான் […]
நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை முன்னிட்டு இப்ப இல்லனா எப்பவும் இல்ல என்ற வாசகம் கொண்ட கேக் வெட்டி கொண்டாடினார். நடிகர் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் ரசிகர்கள் அனைவரும் பல்வேறு சமூக நலன்களை செய்து, ரஜினிகாந்த் வீட்டை சுற்றிலும் போஸ்டர்கள் ஒட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் […]
சூப்பர் ஸ்டார்ட் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கோ பூஜை, கோவில்களில் பூஜை என கொண்டாடி வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. அவரின் […]
ஆண்டுதோறும் டிசம்பர் 11ஆம் தேதி சர்வதேச மலைகள் தினம் மலைகள் வகிக்கும் முக்கியத்துவத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 11ஆம் தேதி சர்வதேச மலைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.மனித நலவாழ்வில் மலைகள் வசிக்கும் பணியின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. மேலும் மலைகளினால் உண்டாகும் வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் மலைகளின் மேம்பாட்டில் உள்ள இடர்களை முன்னிலைப்படுத்தி காட்டுவதற்கும், மலைவாழ் மக்களிடையேயும் சுற்றுச்சூழல் பகுதிகளிலும் நேர்மறையான மாற்றங்களை கொண்டுவர ஆக்கபூர்வ […]
தீபத் திருவிழாவையொட்டி இன்று மாலை மலை உச்சி கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோவிலில் கடந்த 20ஆம் தேதி முதல் கொடியேற்றப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் தீபத் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதேபோல் இன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
தமிழகத்தில் புயல் காரணமாக என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம் என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி கூறியுள்ளார். தமிழகத்தில் புயல் காரணமாக பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களை காக்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுவை கரையை நோக்கி வருகிறது என வானிலை ஆய்வு மையம் […]
அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் வெற்றிக்கு சொந்த ஊர் மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். அவரின் சொந்த ஊர் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் என்ற கிராமம். கமலா ஹாரிஸ் தாய்வழி தாத்தா பாட்டி ஆகியோர் மன்னார்குடியை சேர்ந்தவர்கள். அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் தமிழகத்தை பூர்விகமாக […]
[அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் அவரின் ஆதரவாளர்கள் தங்கள் கொண்டாட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று வெற்றி இலக்கை அடைந்துள்ளார். அதன் மூலமாக அமெரிக்காவில் 46வது அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அமெரிக்காவின் […]
சென்னையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை அம்பாள் நகர் காக்ஸ் காலனி அருகே ரவுடி கும்பல் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. அது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிந்தாதிரிப்பேட்டை என்.என் காலணியை சேர்ந்த ரவுடி சஞ்சய் கடந்த 10ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியது விசாரணையில் தெரிய வந்தது. இது […]
உலக மனநல தினத்தை முன்னிட்டு ஓவியம் வரையும் நிகழ்ச்சி. உலக மனநல தினத்தை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள பணியாளர்கள் ஓவியம் வரையும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். உலக மனநல தினத்தை முன்னிட்டு கீழ்பாக்கம் அரசு காப்பகம் மருத்துவ வளாகம் மனநலர்கள் சிறப்பாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களின் எண்ணங்களை வண்ணமாக தீட்டி உள்ளார்கள்.
தேசிய அஞ்சல் தினம் இன்று முதல் ஒரு வாரத்திற்கு கொண்டாடப்பட இருக்கிறது. தேசிய அஞ்சல் தினம் அக்டோபர் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அஞ்சல் துறை பற்றி விழிப்புணர்வு நடத்தப்படுவதன் மூலம் அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது. முதன் முதலாக அக்டோபர் 9ம் தேதி உலக அளவில் அஞ்சல் தினம் கொண்டாடபட்டதால் இன்றுவரை அக்டோபர் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 9 முதல் 15 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று கொண்டாடப்படும் இந்திய விமானப்படையின் 88 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை வீரர்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்திய விமானப்படையின் 88 ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை படைவீரர்களுக்கு தெரிவித்தனர். மேலும் இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு உத்திர […]
கேரள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை தமிழகத்திலும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலையாள மொழி பேசும் அனைத்து மக்களாலும் வருடம் தோறும் ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, தமிழகத்திலும் கேரள எல்லையோர மாவட்டங்களில் வெகு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா தாக்கத்தால் எளிமையான முறையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு, தனிநபர் இடைவெளியுடன் ஓணம் பண்டிகையை கொண்டாட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார். அதனை […]
அமெரிக்க வாழ் இந்தியர்கள் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடி வருகின்றனர். அயோத்தியில் பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பின்னர் ராமர் கோயில் கட்டுவதற்கான அனுமதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து ‘ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை உருவாக்கியது. அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டுவது பற்றி முடிவு செய்து, இந்த அறக்கட்டளை மூலமாக கட்டுமான […]
ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளதை மயிலாடுதுறையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு பூக்களைத் தூவி வரவேற்றனர். பிரான்ஸ் நாட்டிலிருந்து அதிவிரைவு தாக்குதல் திறன் கொண்டுள்ள 5 ரஃபேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் இந்தியா வந்தடைந்திருக்கின்றது. இந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் விரைவில் சேர்க்கப்பட இருக்கின்றன. இந்த நிலையில் ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளதை கொண்டாடக் கூடிய வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசுகள் […]
ராஜஸ்தானில் நட்சத்திர ஓட்டலில் எம்.எல்.ஏக்களின் கொண்டாட்டத்தை மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கண்டித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியானது நடந்து கொண்டிருக்கிறது. துணை முதல்வராக பணியாற்றிய சச்சின் பைலட் அவர்கள் தன் ஆதரவாளர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆகிய 18 நபர்களுடன் இணைந்து கெலாட் அரசிற்கு எதிராக போர் கொடியினை தூக்கி இருக்கின்றார். இத்தகைய காரணத்தால் கெலாட்டின் ஆட்சி எந்த சமயத்திலும் கவிழக்கூடிய சூழ்நிலையானது உருவாகியுள்ளது. இச்சூழ்நிலையில் குதிரை பேரம், […]