கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து கருமத்தம்பட்டி செல்லும் சாலையில் காடுவெட்டி பாளையம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அதில் எச்சரிக்கை இங்கு இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி இங்கு மதப் பிரச்சாரம் செய்யவும் மத கூட்டங்கள் நடத்தவும் அனுமதி இல்லை. அதனை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் இப்படிக்கு காடுவெட்டி பாளையம் ஊர் பொதுமக்கள் என எழுதப்பட்டிருக்கிறது. சர்ச்சைக்குரிய இந்த பேனர் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக […]
Tag: கொந்தளிப்பு.
இலங்கையிலிருந்து மகிந்த ராஜபக்சே வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் நேற்று கடும் வன்முறை வெடித்திருக்கிறது. பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக மகிந்தராஜ பக்சே அறிவித்திருந்த சிலமணி நேரங்களில் ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், அரசுக்கும் எதிராக போராடுபவர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தியதில் பல பேர் காயமடைந்து இருக்கின்றனர். இதனால் பாதுகாப்பு பணியில் ராணுவம் ஈடுபட்டிருக்கிறது. இருப்பினும் இலங்கை முழுவதும் பதற்றம் அதிகரித்து வருகின்றது. […]
தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாக நீதி கிடைக்க வேண்டி பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர் கூறியிருந்ததாவது, திமுக ஆட்சி முடிய இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. ஆனால் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி நீடிக்குமா என்பது சந்தேகம்தான். சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவர் கூட இல்லை. நான்கு பேர் இருந்தாலும் பாஜகவினர் தான் […]
நடிகை கனிகா, பயில்வான் ரங்கநாதன் தன்னை பற்றி ஆபாசமாக பேசியது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் காட்டமாக பதிவிட்டுள்ளார். நடிகை கனிகா கடந்த 2002ஆம் வருடம் வெளியான 5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து இவர் வரலாறு, ஆட்டோகிராஃப், எதிரி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரைப் பற்றி அவதூறாக பேசிய பயில்வான் ரங்கநாதன் பற்றி இவர் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ள கருத்து தற்போது வைரலாக பரவி வருகிறது. சினிமாவில் வில்லனாக நடித்து வந்த […]
“பெரியார் சிலையை அவமதிப்பது மனநிலை பாதித்த காரியம் இல்லை. இது திட்டமிட்ட சதிச்செயல் எனவே இதனை செய்தவரை கடுமையாக தண்டிக்க வேண்டும்” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளலூரில் பெரியார் சிலைக்கு கடந்த சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் செருப்பு மாலை போட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவைக் கொண்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவத்தில் […]
உலகில் பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் இருக்க முடியாது என்ற மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அதில் பேசிய அவர், “நாங்கள் மேற்குவங்க மக்களுக்காக பணியாற்றி வருகிறோம். அவர்கள் எங்களை எப்போதும் திருடர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் கிடையாது. அவர்கள் மிகப் பெரிய கொள்ளைக் காரர்கள். மேலும் இந்து, முஸ்லிம் […]
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி தமிழக பள்ளிக் கல்வித் துறை வழியாக நடத்தப்பட்ட புதிர் போட்டியில் தமிழை தவிர்த்துவிட்டு ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே கேள்விகள் கேட்கப் பட்டதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வழியாக நடத்தப்பட்ட தமிழக மாணவர்களுக்கான புதிர் போட்டியில் தமிழை […]