தமிழ்நாட்டில் கொரானாவின் தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துவருகிறது. இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனோ சிகிச்சை பிரிவில் 110 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஈரோட்டைச் சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இனிமேல் இருசக்கர வாகனங்களில் ஒரு நபர் மட்டுமே மாஸ்க் அணிந்து வர வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி 2 பேர் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என […]
Tag: கொரானா எதிரொலி
ஆந்திராவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 44 ஆக இருந்த நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் 43 பேருக்கு புதிதாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஆந்திர தலைமைச் செயலாளர் நிலம் சாவ்னி நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டார் அதில், “ஆந்திர அரசு முதலமைச்சர், அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோரின் மாதச் சம்பளத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளார். கொரானா வைரஸை எதிர்த்துப் போராடுவதைக் […]
உலக நாடுகள் ஊரடங்கு முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் நாளுக்குநாள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோயை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரையில் மருந்து இந்நோய்க்கு கண்டுபிடிக்கவில்லை. இதனை தடுப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு […]
ஊரடங்கை மீறினால் தனிமைப்படுத்துதலுக்கான முகாமில் 14 நாட்கள் இருக்க நேரிடும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதால் வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் அவரவர் மாநிலம் செல்ல முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். நேற்று தலைநகர் டெல்லியில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களின் சொந்த மாநிலத்துக்கு திரும்ப டெல்லி ஆனந்த் விஹார் […]
சீனாவில் உருவான கொரானா வைரஸ் பல நாடுகளை ஆட்டிபடைத்தது வருகிறது. கொரானாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் வருகிறது. இதனையடுத்து கொரானா வைரசைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு பல கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்திவருகிறது. இதில் தற்போது பொதுப்பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினர், கடை ஊழியர்கள் முன் பொதுமக்கள் யாராவது இருமினால் 2 ஆண்டுகள் சிறைவிதிக்கப்படும் என பிரிட்டனின் பொது வழக்கு விசாரணை இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் கொரானாவை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களை பாதுகாத்தால் தான் இந்த […]
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 195க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் குடியேறி மிரட்டி வருகிறது. இதனிடையே மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் இந்தியாவில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10 […]
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 492ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரசால் அங்கு 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,261 பேர் உயிரிழந்தனர். கடந்த நான்கு நாட்களாக அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரானாவால் 9 பேர் பலியாகியுள்ளனர். […]
ஊரடங்கு உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் அதை பின்பற்றாத 2000 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவு , கொரோனா அறிவுறுத்தலை முழுமையாக கடைபிடிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்திருந்தார். பொதுமக்கள் சிலர் வைரஸை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், அரசுகள் கொடுக்கக்கூடிய அறிவுரைகளை முழுமையாக பின்பற்றவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் […]
தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதங்களில் 9,000_திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை […]
தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனோ வைரஸை அழிப்பதற்கான மருந்து தயாரிக்கும் பணியில் சீனா அமெரிக்கா உள்ளிட்ட மிகப்பெரிய வல்லரசு நாடுகளும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். அமெரிக்காவில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை சுமார் 300-ஐ தாண்டியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. மேலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரானா […]
பல்லாயிரம் உயிர்களை பலிவாங்கிய கொரானாவால் தற்போது அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று இத்தாலியில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவில் கட்டுப்பாட்டை மீறி ஒருவர் சாலையில் சுற்றி திரிந்துள்ளார். பிரித்தானிய அதிகாரிகள் அவரிடம் கேட்டபோது ; “தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வீட்டுக்குள்ளே இருக்கவோ நான் தயாராக இல்லை” என்றார். மேலும், கொரானாவை விட எனது மனைவி மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளார் என்றும் வீட்டில் தனிமையாக இருப்பதை விட நான் கொரானா என்ற அசுரனுடன் தொடர்பு கொள்வதை விரும்புகிறேன் தெரிவித்தார். […]
கோழியால் கரோனா பரவுகிறது என்ற வதந்தியால் கறிக்கோழி மற்றும் முட்டையின் விலை கடும் சரிவை கண்டது இதைத்தொடர்ந்து சென்னையில் மீன் கடைகளும் காற்று வாங்கத் தொடங்கியுள்ளன. சீனாவில் உருவான கரோனா வைரஸ் நாடெங்கும் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதைவிட அது மிருகங்களிடமிருந்து பரவியிருக்கலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இருப்பினும் மக்கள் தேவையற்ற […]
சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ்சை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் […]
சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 206ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ்சை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை 22ஆம் […]
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. கொரானாவிற்கு இந்தியாவில் 3 பேர் பலியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவன் எண்ணிக்கை 171 […]
பஞ்சாபின் பகத்சிங் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் 35 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய அந்த இளைஞருக்கு கொரானா தொற்று அறிகுறிகள் இருப்பதது. ஆகையால் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த தார். அவர் பரிசோதனை முடிவுகாக காத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் 7-வது மாடியிலிருந்து அந்த இளைஞர் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூட என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். […]
சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரஸ் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் மக்களை கொன்று குவித்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் சீனாவை விட இத்தாலியில் பலி எண்ணிக்கை உயரும் என்றே தெரிகிறது. இத்தாலியில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொரோனா கொன்றுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா தாக்கியதில் பலியானவர்களுள் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கொரானா […]
கொரோனா முன்னெச்சரிக்கை சென்னை தி.நகரில் உள்ள கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ்சை தடுக்க மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, திரையரங்குகள் , திருமண மண்டபங்கள் , மால்களில் திறக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். மேலும் மக்கள் அதிகமாக கூட வேண்டாம் என்றும் , திட்டமிட்ட திருமண நிகழ்வுகள் மட்டும் […]
மத்திய ரயில்வேயில் நடைமேடைகளுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பை, அகமதாபாத் மற்றும் ராஜ்கோட் உட்பட 6 கோட்டங்களில் உள்ள 250 நடைமேடைகள் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கொரானா எதிரொலியால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் நடைமேடை கட்டணம் 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்வு அமலில் இருக்கும் என மத்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம், “கொரானா வைரஸ் பரிசோதனை பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ஒரு நாடு தழுவிய வலைத்தளத்தை உருவாக்குவதில் அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதாக” தெரிவித்தார். இந்த செயலுக்காக கூகுள் நிறுவனத்திற்கு நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து, பேசிய அவர் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக கூறினார். ஆனால் […]
கொரானா எதிரொலி ஆஸி. மகளிர் கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் நியூசிலாந்துக்கு எதிரான ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் பார்வையாளர்கள் பங்குபெற அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது