Categories
உலக செய்திகள்

இந்த நாடுகளிலிருந்து இங்க வராதீங்க..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்… பிரபல நாடு எச்சரிக்கை..!!

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா உள்ளிட்ட கொரோனா அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்க நேரிடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு சமீபத்தில் இந்தியாவில் இருந்து கட்டார் தலைநகர் தோஹா வழியாக வந்த […]

Categories
உலக செய்திகள்

இளைஞர்களை குறிவைக்கும் கொரோனா வைரஸ்…. 3 வது அலை உருவாகலாம்…. சுகாதாரதுறை எச்சரிக்கை….!!!

இந்தியாவைப் போலவே இலங்கையிலும் புதிய உருவ மாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதன்படி தற்போது இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா போன்ற  நாடுகளிலும் இந்த புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் தாக்குதல் பரவி வருவதாக கூறியுள்ளார். மேலும் இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களை விட இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும் மக்களிடையே  மிக வேகமாக பரவ கூடியதாகவும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு பயணத் தடை ரத்து…. அமெரிக்காவின் பாதுகாப்பு செயல்…. மக்களுக்கான முன்னெச்சரிக்கை…!!!

இந்தியாவில் கொரோனா 2 வது அலை மிக வேகமாக பரவி வருவதால் அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2-ம் அலை மிக வேகமாக பரவி வருவதால் பல நாடுகள் இந்தியாவிற்கு பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும் விமான பயணங்களையும் ரத்து செய்து வருகின்றனர்.அந்த வகையில் அமெரிக்கா பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு செல்வது குறித்து மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பயணத்திற்கு தடை விதித்திருந்தது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒருமாதத்தில் 25 குழந்தைகளை காப்பாற்றியிருக்கிறோம் – கோவை மருத்துவக்கல்லூரி முதல்வர்

கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பிரிவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குழந்தைகள் வீடுகளில் இருப்பதால் சிறிய பொருட்களை மிழுங்கிவிடுகிறது. தீக்காயங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகம் வந்ததாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் கூறினார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து ஏழு நாட்களான குழந்தை உட்பட 25 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கு தகரம் அடிப்பு …!!

கொரோனா பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் அப்பகுதிக்கு தகரம் அடிப்பதற்கு காரணம் என்னவென்று சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரியங்கா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது கணவருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதித்திருப்பது கண்டறியபட்டதாகவும் எங்கு சிகிச்சை பெறுகிறீர்கள் என தங்களை கேட்காமல் வலுக்கட்டாயமாக மையத்திற்கு அழைத்து சென்றதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் திட்டம் மூலம் 8.78 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

வந்தே பாரத் திட்டம் மூலம் இதுவரை 8.78 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மூன்று கட்டத்திட்டங்கள் முடித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், தெற்காசிய நாடுகளில் இருந்த இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஏ.சி இரயில் பெட்டிகளில் பயணமா.? இனி கம்பளி வழங்கப்படமாட்டாது..! தெற்கு ரயில்வே அதிரடி..!!

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதுவரை 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரவியுள்ளது. இதனை குறைக்கும் எண்ணத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதில் ஒருபகுதியாக பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள், கல்லூரிகள், பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில்  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏ.சி இரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கம்பளிப் போர்வைகள் வழங்கப்படமாட்டாது. தேவைப்படும் பட்சத்தில் தங்களது தேவையான கம்பளியை பயணிகள்  கொண்டுவரவேண்டும். ஆனால்  தலையணை மற்றும் பெட்ஷீட் தொடர்ந்து வழங்கப்படும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை – அனைத்து மாவட்டத்திற்கும் அதிரடி உத்தரவு ……!!

கொரோனா வைரஸ் சம்பந்தமாக எல்லா மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அனைத்து மாவட்ட சுகாதாரத்துரை அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலமாக உரையாடி பல்வேறு உத்தரவுகளையும் , அறிவுறுத்தலையும் பிறப்பித்தனர். அதில் மாவட்ட வாரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எந்த அளவில் இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கொரோனா பீதி : தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம்…..!!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி  , உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் பயோமெட்ரிக்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதியில் தற்போது பயோமெட்ரிக் வருகை பதிவை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் தரப்பிலிருந்து அதற்கான உத்தரவு என்பது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கடந்த வாரத்திலேயே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மத்திய […]

Categories

Tech |