அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர்கள் உங்களின் தோல், உதடுகள் மற்றும் நகங்கள் சாம்பல் நிறத்தில் காணப்பட்டால் அது கொரோனா அறிகுறியாக இருக்கும் என்று எச்சரித்திருக்கிறார்கள். அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் தெரிவித்திருப்பதாவது, ஒருவருக்கு, தோல், நகங்கள் அல்லது உதடுகள் சாம்பல் நிறத்தில் இருந்தால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறது. இவ்வாறு சாம்பல் நிறத்தில் இருக்கும் உதடுகள், தோல் அல்லது நகங்கள் ஒமிக்ரான் தொற்றின் அறிகுறிகளாக கூறப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து […]
Tag: கொரோனா அறிகுறிகள்
கொரோனா அறிகுறிகளை வரிசைப்படுத்துவது தொடர்பான ஆய்வு ஒன்றை அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அது தொடர்பான ஆய்வுகளில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கொரோனா தொற்றின் அறிகுறிகளை வரிசைப்படுத்துவது தொடர்பான ஆய்வு ஒன்றினை அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். அந்த ஆய்வின் முடிவுகள் ‘பிரண்டியர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த்’ என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அந்த […]
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பியல் பிரச்சனைகள் இருக்குமென ஆய்வின் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர் உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களிடம் பல விதமான அறிகுறிகளை காட்டுகின்றது. இதனையடுத்து அன்னல்ஸ் ஆஃ நியூரோலஜி என்ற இதழ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றிய ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளில் பாதி பேர் தலைசுற்றல், விழிப்புணர்வு குறைதல், தலைவலி, வலிப்பு, கவனம் செலுத்துவதில் சிரமம், வாசனை மற்றும் சுவையின்மை கோளாறுகள், தசைவலி போன்ற நரம்பியல் […]
12 வயதான ஜூலியட் என்ற சிறுமி மரணத்தின் விளிம்புவரை சென்று கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வந்துள்ளார். அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வசித்து வருபவர் ஜெனிபர் டேலி தம்பதி மகன் மகள் என சந்தோஷமாக வாழ்ந்து வந்த குடும்பத்தின் மீது கொரோனாவின் பார்வை விழுந்துள்ளது. இதுகுறித்து ஜெனிபர் கூறுகையில் “எனது மகள் ஜூலியட்க்கு திடீரென உடல்நிலை மிகவும் மோசமானதால் நியூ ஆர்லியன்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தேன். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனா தொற்று இருப்பதாக கூறினர். ஆனால் இதுவரை […]
50 வயதுக்கு உட்பட்டவர்களின் உடலில் கொரோனா என்னவெல்லாம் செய்யும் என்பது பற்றிய தொகுப்பு சர்வதேச அளவில் ஆராய்ச்சியாளர்கள் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஆய்வு கொண்டதன் மூலம் கூறிய கருத்துக்கள் மூளையில் ரத்தத்தை உறையச் செய்கிறது 30 அல்லது 40 வயதுடையவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்னனர். மருத்துவ குறைபாடு இல்லாதவர்கள், லேசான அறிகுறி அல்லது அறிகுறி கட்டாதவர்களுக்கும் மூலையில் ரத்தத்தை உறைய செய்யும். இதனால் பக்கவாதம் ஏற்படுகிறது. இதற்கு அவசர சிகிச்சை கொடுக்காவிட்டால் மரணம் ஏற்படும். பக்கவாதம் என்றால் என்ன? மூளைக்கு […]
சீனாவில் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்படுவது அந்நாட்டிற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா முதலில் கண்டறியப்பட்டது சீனாவில் இருக்கும் வூஹான் நகரில். பின்னர் தீவிர சிகிச்சை மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மூலம் அந்நாட்டில் தொற்றை கட்டுப்படுத்தி உள்ளனர். சீனாவின் இந்த நடவடிக்கைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவில் எந்த ஒரு அறிகுறியும் இன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது அந்நாட்டிற்கு புதிதாய் தலைவலியை […]
கன்னியாகுமரியில் பெண் போலீஸ் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதிதாக கொரோனா அறிகுறிகளுடன் வந்த 4 பேரின் ரத்த மாதிரிகளை நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அந்த நால்வருக்கும் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும். பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கும் […]
சீனாவின் வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ்சை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. […]