Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதல் முறையாக சுற்றுப்பயணம்… கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு… சேலம் வந்த முதலமைச்சர்..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வந்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகளை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் முறையாக சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

O குரூப் ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கும் வாய்ப்பு குறைவு!!

ஓ குரூப் ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லோரும் கரெக்டா கடைபிடிக்கிறார்களா… திடீரென பேருந்தில் ஏறி சோதனை…. காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் பேருந்துகளில் முக கவசம் அணிந்து பயணிக்கிறார்களா என்று காவல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொது இடங்களில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பொது மக்கள் முறையாக பின்பற்ற  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையத்திலிருக்கும் காவிரி பாலத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வாகனங்களை நிறுத்தி  […]

Categories
உலக செய்திகள்

கொரோனா போனாலும்…. இதிலிருந்து மீள முடியாது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடையவில்லை என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மக்கள் தற்போது தான் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை வைத்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்தாலும்  அதற்க்கான அறிகுறிகளில் இருந்து மீள முடியாமல் தவித்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் பிறப்பிடம் எது…? ஆய்வு செய்ய…. சீனா கிளம்பும் ஆய்வாளர்கள்…!!

கொரோனாவின் பிறப்பிடம் குறித்து ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார அமைப்பு சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுகாண் நகரில் முதன் முதலாக தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதுமாகப் பரவி மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் 2019 ஆம் வருடம் இறுதியில் வுகானில் உள்ள மார்க்கெட்டில் பரவ தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சீனாவில் இந்த வைரஸ் உருவாகவில்லை என்று அந்நாட்டின் தரப்பில் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா உருவானது […]

Categories

Tech |