ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று இல்லை என்று அளிக்கப்படும் சான்றிதழ் இன்னும் ஒரு வருடத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒரு நபர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொண்டார் அல்லது சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்திருக்கிறது அல்லது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு விட்டார் என்பதை காண்பிக்கும் விதமாக கொரோனா சான்றிதழ் அளிக்கப்படும். தற்போது வரை அங்கு இச்சான்றிதழ் நடைமுறையில் இருக்கிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருக்கும், 27 […]
Tag: கொரோனா சான்றிதழ்
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தடுப்பூசி சான்றிதழ் அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிஃபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டாப் தியேட்டரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதனை தொடந்து இந்த விழா மார்ச் மாதம் 24ஆம் தேதி நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்பிக்க அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ்பெற்ற ஏழுமலையான் கோயில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு மிகவும் பிரபலமானது. நாடு முழுவதும் கொரோனா அதிகரிக்க தொடங்கியதிலிருந்தே கோவிலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் பக்தர்களுடைய வருகையும் குறைந்தது. தற்போது படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் உள்ளூர் பக்தகர்களை தவிர மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமே […]
சுவிட்சர்லாந்தில், செப்டம்பர் 13 ஆம் தேதியிலிருந்து, கொரோனோ சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே, உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு செல்ல முடியும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி செலுத்திய மக்கள், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் சான்றிதழ் வைத்திருக்கும் மக்கள் தான், உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் சான்றிதழ்களை, உணவக பணியாளர்கள் சரிபார்த்த பின்பே அனுமதிப்பார்கள். அதாவது, கொரோனாவால், வருமானத்தை இழக்கக்கூடாது, […]
இனிமேல் பொது இடங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள உணவகங்கள், கச்சேரி நடக்கும் இடங்கள், பொழுது போக்கு அமைப்புகள் போன்ற பகுதிகளுக்கு செல்ல இனிமேல் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கண்டிப்பாக தேவை. மேலும் திறந்தவெளியில் உட்கார்ந்து உண்ணுவதற்கோ மதுபானம் அருந்துவதற்கோ தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் இன்று முதல் அடுத்த […]
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஒரு சில மாநிலங்களில் இருந்து வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல வெளிநாடுகளுக்கு செல்ல விமானங்களில் 72 மணி முதல் 96 மணி நேரத்திற்குள் பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழை கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரிசோதனை சான்றிதழ் பெறுவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் கோவின் செயலியிலிருந்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட […]
பிரான்சில் 140 முதல் 350 யூரோக்கள் வரை செலவிட்டு சிலர் கொரோனா குறித்த போலி சுகாதார ஆவணத்தை பெறுகிறார்கள். பிரான்சில் கொரோனா குறித்த தடுப்பூசியை முழுமையாக பெற்றுக் கொண்டவர்களுக்கும், கொரோனா குறித்த பரிசோதனையில் நெகட்டிவ் என்ற முடிவு வந்தவர்களுக்கும் அந்நாட்டின் அரசாங்கம் சுகாதார பாஸ் என்னும் ஆவணத்தை கொடுக்கிறது. மேலும் இந்த சுகாதார ஆவணம் இருந்தால்தான் ரயில்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதிமுறையையும் பிரான்ஸ் அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் […]
கனடா அரசு, கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து, கனடா செல்லும் நேரடி விமானங்களுக்கான தடை, வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கனடா அரசு, இந்தியாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் மக்கள் வேறு நாட்டிற்குச் சென்று அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கிறது. இந்த விதியால், கனடா நாட்டில் படிப்பிற்காக செல்லக்கூடிய இந்திய […]
கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநில எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும் இரு மாநிலங்களை ஒட்டியுள்ள 8 மாவட்டங்களில் இரவு நேர மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கர்நாடகா வருபவர்கள் அனைவரும் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டு […]
பிரான்ஸ் அரசாங்கம், டெல்டா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகளை கையாண்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஷாப்பிங் மால், மருத்துவமனை, நீண்ட தூர ரயில் பயணம் மற்றும் உணவகம் போன்ற இடங்களுக்கு செல்லும் மக்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சிறப்பு கொரோனா சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் என்று பிரதமர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்திருக்கிறார். இந்த கொரோனா சான்றிதழ் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது அல்லது சமீபத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை காட்டும். 12 வயதுக்கு அதிகமான அனைத்து மக்களுக்கும் திரையரங்கம், […]
பிரிட்டனில் கொரோனாவின் நான்காம் அலையை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா அதிகம் பரவியதால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. எனவே இன்னும் சிறிது நாட்களில் கொரோனா விதிமுறைகளும் தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கொரோனாவின் நான்காம் அலையில் மாட்டாமல் இருப்பதற்கு கொரோனா சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே உணவகங்கள், பப்புகளுக்கு செல்ல முடியும் என்ற திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதனால் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவார்கள். எனவே அரசின் இலக்கை அடைய […]
கொரோனோ சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் கடவுச்சீட்டில் இருந்து வேறாக இருந்தால் பயணங்கள் தடை செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்கள் கடவுச்சீட்டிலும் இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் பயணங்கள் அல்லது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் பல பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்த சமயத்தில் அவர்களின் பெயரில் ஒரு வார்த்தை அல்லது எழுத்தில் பிழை ஏற்பட்டிருக்கலாம். எனவே அதனை, […]
பிரிட்டனில் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத பகுதிகளுக்கு கொரோனா பாஸ் கட்டாயம் என்று அரசு அறிவித்திருக்கிறது. பிரிட்டனில் நான்காம் அலையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவார்கள். மேலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். எனவே கொரோனாவின் நான்காம் அலையை தடுக்க பார்கள், உணவகங்கள் மற்றும் பப்களுக்குள் செல்வதற்கு பிரிட்டன் மக்கள் கொரோனா சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. இதனால் […]
சுவிட்சர்லாந்தில், கொரோனா சான்றிதழ் திட்டம் தொடங்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. சுவிட்சர்லாந்தில் முன்னரே அறிவித்தபடி, கொரோனா சான்றிதழ் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காகிதம் அல்லது மின்னணு வடிவத்தில் இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதனை சர்வதேச பயணம் தொடங்கி பலவற்றிற்கு பயன்படுத்தலாம். மேலும் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா சான்றிதழ் light என்று மற்றொன்றும் உருவாக்கப்படவுள்ளது. இந்த light சான்றிதழை நாட்டிற்குள்ளாக மட்டும் உபயோகிக்கலாம். அதாவது தகவல்கள் திருடுவதை கட்டுப்படுத்துவதற்காக இச்சான்றிதழ் உருவாக்கப்பட்டுள்ளது. பயணம் மேற்கொள்வதற்கு கொரோனா சான்றிதழ் […]
சுவிட்சர்லாந்தில் நாளையிலிருந்து கொரோனாவிற்கான சான்றிதழ் நடைமுறைக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் அனைத்து மாநிலங்களிலும் இச்சான்றிதழ் வெளியிடப்படும். இதனை நகலெடுத்து உபயோகிக்கும் படியும், மொபைல் செயலியில் வைத்திருக்கும்படியும் செயல்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் ஜூன் மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்றும் பெர்ன் மாநிலத்தில் முதலாவதாக, வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் மருத்துவர்கள், மருந்தகங்கள் மற்றும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட இடங்கள் போன்றவற்றில் இச்சான்றிதழை மக்கள் பெறலாம். அதாவது தடுப்பூசி செலுத்தியவர்கள், கொரோனா […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
சபரிமலை அய்யப்பன் கோவில் வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடை திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்டது. அப்போதிலிருந்து வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் குறைந்த அளவு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். அதன்பிறகு பல்வேறு கோரிக்கைகள் இருந்ததால், தினமும் […]
கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் இ பாஸ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. […]
பக்தர்களிடம் கொரோனா சான்றிதழ் இருந்தால் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் டிசம்பர் 27-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா அறிவித்துள்ளார். 48 மணி நேரத்திற்கு முன்பாக பரிசோதனை செய்து சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக […]