கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அவசர கால பயன்பாட்டிற்கு தயாராக வைக்கவும், கொரோனா வார்டுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tag: கொரோனா தடுப்பு
பைசர் தடுப்பூசியைப் செலுத்தி கொண்டால் 96% டெல்டா வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று இங்கிலாந்து சுகாதாரத் துறையின் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் 2 வது அலைக்கு மிக முக்கிய காரணம் டெல்டா வகையைச் சார்ந்த கொரோனா வைரஸ் தான். இந்த வைரஸ் தற்போது மென்மேலும் உருமாறி டெல்டா பிளஸ்சாக தோன்றியுள்ளது. ஆனால் இந்தியாவில் புதிய டெல்டா ப்ளஸ் வகையால் மிகவும் குறைவான நபர்களே பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இந்தியாவில் 2 ஆவது […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு முன்கள பணியாளர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தினை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஹாங்கீர் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மேலும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் அந்தக் கூட்டத்தில் முன்னிலை வகித்தார். அந்தக் கூட்டத்தில் கிராமங்களுக்கு சென்று முன் […]
திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்கு தினமும் 200 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிறப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 1,600-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் 270 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மக்கள் நெருக்கடி அதிகமாக உள்ள இடங்களில் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி பகுதிகளான பாண்டியன் நகர், பர்மா காலனி, போக்குவரத்து நகர் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாண்டியராஜன் கலந்து கொண்டு கொரோனா […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வுக் கூட்டமானது பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது, அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, சிங்கம்புணரி வணிகர் நல சங்க தலைவர் வாசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. […]
கொரோனா தடுப்பு குறித்து கம்பத்தில் பொதுமக்களுக்கு முககவசம் கொடுத்து போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கொரோனா 2-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறையினர் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கம்பம் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகில் நேற்று […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டாங்கிபட்டி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின் படி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முக கவசம் வழங்கி கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் மந்திரகாளி தலைமையில் சிவகங்கையை அடுத்த கண்டாங்கிபட்டி ஊராட்சியில் […]
கொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் காளாப்பூர், பிரான்மலை, செவல்பட்டி உள்பட 30 ஊராட்சி செயலாளர்களும், ஊராட்சி மன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர். கொரோனா பரவலை […]
கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் திண்டுக்கல் நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை பேரூராட்சி செயல் அலுவலர் சரவணகுமார் தலைமை தாங்கி நடத்தினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், வட்டார மருத்துவ அலுவலர் சேக்அப்துல்லா, வர்த்தகர்கள் சங்க தலைவர் சேக்ஒலி ஆகியோர் இந்த கூட்டத்தில் முன்னிலை வகித்தனர். துப்புரவு ஆய்வாளர் சடகோபி என்பவர் வரவேற்றார். இதில் வாடிக்கையாளர்களை வர்த்தக நிறுவனங்களுக்கு கைகளை […]
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஒற்றை இலக்க எண்ணில் இருந்த கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் கொரோனா வைரஸ் நோயை […]
திருநெல்வேலியில் தேர்தல் பணியை மேற்கொள்ளும் காவலர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்கள். தமிழகத்தில் மீண்டும் கொரோனா படையெடுப்பதால், தற்போது நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசியை போடுவதற்கு அறிவுறுத்தப்பட்டார்கள். அந்த வகையில் நெல்லையில் மாவட்ட கலெக்டரும் , போலீஸ் சூப்பிரண்டான மணிவண்ணனும் தடுப்பூசி போட்டுக்கொண்டத்தையடுத்து சில முக்கிய அதிகாரிகளும் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர் . மேலும் நெல்லையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு […]
தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றபடுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் […]
கோயம்பேடு சந்தைக்கு அதிக அளவில் பொது மக்கள் வருவதை தவிர்க்க ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தை பராமரிப்பு பணிக்காக வாரம் ஒரு முறை விடுமுறை விட வேண்டும் என சந்தை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சந்தையை சுற்றியுள்ள சில குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் காய்களை வாங்க காய்கறிகளை வாங்க குவிந்து வருவதால் இனி வரும் அனைத்து விடுமுறை ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகாமல் தடுப்பதற்கு மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “தமிழகத்தில் குறைவான பாதிப்பே மிக வேகமாக குறைந்து கொண்டிருக்கிறது. கொரோனா பரிசோதனை முடிவுகளை மிக விரைவாக அளிக்கக்கூடிய வகையில் பல முன்னேற்றம் அடைந்துள்ளது. பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஒருகோடி ஆர்டி பிசிஆர் கருவிகளை வாங்கி அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் முன்னோடியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தற்போது வரை […]
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொளியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமெரிக்கா களிம்பு ஒன்றை கண்டறிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, தற்போது பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் அமெரிக்காவில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்று, கொரோனாவை தடுப்பதற்கான களிம்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறது. அதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதன் பின்னர் அந்த களிம்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பரிசோதனை கூடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்த களிம்பை […]
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் இடையே ஒத்துழைப்பு இல்லை என ஐநாவின் பொது செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார். சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதற்காக பல உலக நாடுகள் தொடர்ந்து பாடுபட்டு வரும் சூழ்நிலையில், கொரோனா பாதிப்பை தடுப்பதில் உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை என்று ஐநாவின் பொது செயலாளர் ஆண்டோனியா குட்ட்ரஸ் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் […]
அரியலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என ஆட்சியர் ரத்னா அறிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என ஆட்சியர் ரத்னா அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் முழுவதும் […]
முதல்வர் நிவாரண நிதிக்கு கரூர் வைஸ்யா வங்கி ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கொரோனா தடுப்புப் பணிக்கு தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நிவாரண நிதி வழங்க முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில் திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள்என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிக்கு தற்போது பெறப்பட்ட மொத்தத் தொகை ரூ.160.93 கோடி […]
பயன்படுத்தி குப்பையில் வீசப்படும் முகக் கவசங்களினால் கொரோனா தொற்று பரவும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் கொரோனா தொற்றிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள முக கவசத்தை பயன்படுத்த சொல்லி உலக சுகாதார அமைப்பகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பயன்படுத்தி குப்பையில் போடப்படும் முகக் கவசங்களினால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை மக்கள் குப்பையிலோ அல்லது சாலையிலேயே அப்படியே தூக்கி போட்டு விடுகிறார்கள் என தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டியதாக அரசு ஊடகம் ஒன்று […]
கொரோனா தொற்றைத் தடுக்க முடியாமல் திணறி வரும் அமெரிக்காவிற்கு உதவ நாசா மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க தொடங்கியுள்ளது சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றிலும் பெருமளவு பாதித்து பல உயிர்களை பலி எடுத்துள்ளது. அதில் அமெரிக்கா அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றினை சமாளிக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் அமெரிக்கா பெரிதும் திணறி வருகிறது. இச்சூழலில் அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கலிபோர்னியா மாகாண […]
கொரோனா தொற்றுக்கு எதிராக பல்நோக்கு தடுப்பூசியை பயன்படுத்த சோதனை செய்து வருகிறது இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையம் உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனாவிற்கு எதிராக இந்தியா பல்நோக்கு தடுப்பூசியை சோதனை செய்து வருகிறது என அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த இயக்குனர் ஜெனரல் டாக்டர் சேகர் மண்டே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது “கொரோனா வைரஸ்க்கு எதிராக திறன்பட செயலாற்றும் பல்நோக்கு தடுப்பூசியை விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து வருகிறார்கள். மேலும் அந்த […]
கொரோனா தொற்றுக்கு அதிக அளவு உயிர் பலியை கொடுத்த இத்தாலி தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்தது எப்படி எனும் தகவல் வெளியாகியுள்ளது உலக நாடுகளை கொரோனா தொற்று பரவ தொடங்கி 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதிக உயிரிழப்புகளை கொடுத்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இத்தாலி தற்போது மூன்றாம் இடத்தில் வகிக்கிறது. இதுவரை இத்தாலியில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் […]
கைகளை கழுவ சனிடைசர் இல்லாத காரணத்தினால் ஆல்கஹாலை பயன்படுத்த ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்றை தடுக்க அடிக்கடி கைகளை சனிடைசர் மூலம் கழுவ வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனால் அதிக நாடுகளில் சனிடைசர்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சனிடைசர் எனப்படும் கிருமிநாசினியில் 70% முதல் 80% வரை ஆல்கஹால் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜப்பானிலும் சனிடைசர் எனும் கிருமிநாசினி தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தினால் அதற்கு பதிலாக […]
கள்ளை பயன்படுத்தி கிருமிநாசினி தயாரிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கேட்டுள்ளார் இந்தோனேசியாவில் கிருமிநாசினி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பனை மரங்களிலிருந்து கள் இறக்கி புளித்த கள்ளை கிருமி நாசினி தயாரிக்க முக்கிய பொருளாக பயன்படுத்தி வருகின்றனர் என தமிழ்நாட்டு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : “கொரோனா வைரஸ் இந்தோனேசியாவில் இருக்கும் பாலித்தீவில் பரவ தொடங்கியதை அடுத்து அங்கு கிருமிநாசினி […]
கொரோனா தடுப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைநடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் சுமார் 34 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் சென்னையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்., 14ம் தேதி வரை […]
கொரோனா வைரஸை தடுப்பதற்காக பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவிகள் செய்து மனம் நெகிழ செய்துள்ளனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதை தடுப்பதற்காக மத்திய அரசு 144 தடை உத்தரவு 21 நாட்களுக்கு அறிவித்தது. இதனால் அனைத்து பாமர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்குள் அடைந்து இருக்கின்றனர். இந்த தொற்று பரவாமல் தடுப்பதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகிய அனைவரும் இரவு […]
கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நிலையில் தெருக்களில் உணவின்றி தவிக்கும் நாய்களுக்கு நடிகை ஒருவர் உணவு அளிக்கிறார். உலகில் ஒவ்வொரு நாட்டையும் உலுக்கி எடுத்துவிட்டு இப்பொழுது இந்தியாவிற்கு பரவிய கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர். அதேபோல்தான் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறை சேர்ந்த பிரபலங்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் கன்னட திரைப்பட […]
ஊரெல்லாம் வாசம் வீசும் மல்லிகை மலர் பெரும்பாலும் அவை விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை மட்டும் மணக்க வைக்கவே இல்லை. இந்த நிலையில் கொரோனாவால் மலர் சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் மல்லிகை விவசாயிகள் பெருத்த வேதனையில் முடங்கிப் போயுள்ளனர். செடியில் வாடி வதங்கி கிடக்கும் இந்த மலர்களை போலவே மதுரை மல்லிகை விவசாயிகள் வேதனையில் வாடி உள்ளனர். மல்லிகைக்கு பெயர்போன மதுரையில் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே மல்லிகைக்கு சீசன். இந்த […]
கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக 2642 விசாரணைக் கைதிகள் ஜாமினில் விடுவிக்க பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சிறையிலுள்ள கைதிகளின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைப்பதற்கான நடவடிக்கையை தமிழக சிறைத் துறை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் தமிழக சிறையில் உள்ள 2,642 விசாரணைக் கைதிகளை ஜாமினில் விடுவிக்க வைப்பதற்கான அந்த ஆணை என்பது தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பரோலில் வெளியே வெளியில் சென்ற கைதிகளுக்கும் பரோல் நீட்டிப்பு செய்யப்படுள்ளது. […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொழிலாளர்களுக்கு சில அறிவிப்புகளை அறிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்த நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் மட்டும் பலி எண்ணிக்கை 7 […]
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொள்கின்றார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் […]
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் 5 பேருக்கு மேல் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படுமென்று டெல்லி போலீஸ் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக டெல்லி அரசு திரையரங்குகள் , பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை மூடும்படி உத்தரவிட்டிருக்கிறது. மக்கள் அதிகளவில் கூடும் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று தடை விதித்துள்ளது. இதை அமல் படுத்துவதற்காக டெல்லி போலீசார் புதிதாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் டெல்லி போலீஸ் சட்டத்தின் 32 ஆவது பிரிவின் கீழ் […]