அமெரிக்காவில் தற்போது வரை கொரோனாவுக்கு எதிரான கூடுதல் தவணை தடுப்பூசியை சுமார் 2.4 கோடி பேருக்கும் அதிகமானோர் செலுத்தியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. ஆகையினால் அனைத்து நாடுகளும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை தீவிரமாக நடத்தி வருகிறது. அதன்படி அமெரிக்காவில் தற்போது வரை 43 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக […]
Tag: கொரோனா தடுப்பு ஊசி
அடுத்தாண்டின் பாதியில் அனைத்து நாடுகளிலுள்ள 70 சதவீத மக்களுக்கும் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் மாதந்தோறும் சுமார் 150 கோடி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயார் செய்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்தாண்டின் பாதிக்குள் உலக நாடுகளிலுள்ள 70% மக்களுக்கு கொரோனா குறித்த தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். […]
ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் 12 வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு கொரோனா குறித்த 2 வகையான தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு நாடாளுமன்றம் சம்மதம் அளித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அந்தந்த நாடுகள் தன் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக நடத்தி வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து 12 வயதுக்கும் மேலான குழந்தைகளுக்கு கொரோனா குறித்த தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு நாடாளுமன்றம் சம்மதம் அளித்துள்ளது. அதன்படி 12 வயதுக்கு […]
பிரான்சிலுள்ள மருத்துவமனை ஒன்று தங்கள் நிர்வாகத்தில் பணிபுரியும் ஊழியர்களை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு கட்டாயப்படுத்தியதால் அவர்கள் மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். பிரான்சில் Montelimar என்னும் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் மருத்துவமனை நிர்வாகம் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளது. அதோடு மட்டுமின்றி தடுப்பூசியை செலுத்தி கொள்ளாவிடில் வேலையை விட்டு சென்று விட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் […]
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த முக்கிய ஆய்வு முடிவை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்கள். இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே உலக சுகாதார அமைப்பு கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளதால் ஐரோப்பா உட்பட பல நாடுகள் இதனை செலுத்தி கொண்டவர்கள் தங்கள் நாட்டிற்குள் வரலாம் என்று அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்தியாவிலுள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை ஆக்ஸ்போர்ட், சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து பல்கலைக்கழக […]
ஜெர்மனியின் பிரதமர் 2 வெவ்வேறு கொரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்தி கொண்டு அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். உலகம் முழுவதும் பரவிய கொரோனாவிற்கு எதிராக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அந்தந்த நாட்டின் அரசாங்கம் மிகவும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் 2 வெவ்வேறு கொரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்திக்கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதாவது ஜெர்மனி நாட்டின் பிரதமர் முதலில் இந்தியாவில் கோவிஷீல்டு என்று அழைக்கப்படும் கொரோனா தடுப்பூசியை […]
கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. இதற்கு முன்பாக கொரோனோ தடுப்பூசி தட்டுப்பாட்டால் பணி நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து மாநில சுகாதாரத்துறை சார்பில் 8200 டோஸ் தடுப்பூசி மருந்துகள் விருதுநகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மெயின் பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வைத்து 530 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் கிராம […]
நெல்லையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பரவிவரும் கொரோனாவின் 2 ஆவது அலையை தடுக்க பொருட்டு அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் 84 நிரந்தர மையங்களும், 25 தற்காலிக மையங்களும், கூடுதலாக 7 முகாம்களும் தடுப்பூசி போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நெல்லையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதாவது திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்திற்கு காலை 11 மணி வரையில் வந்த நபர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின் வந்த […]
ராணிப்பேட்டையில் தடுப்பூசியை போட்டுக் கொண்டால் மட்டுமே கடையை திறப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் அனைவரையும் தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் பனப்பாக்கம் பேரூராட்சியின் சார்பாக பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதிலும் முக்கியமாக கடைகளில் வேலை செய்யும் பணியாளர்களும், வியாபாரிகளும் கொரோனாவிற்கான தடுப்பூசியை செலுத்திக்கொண்டு அதற்கான சான்றிதழ்களை பேரூராட்சியிலிருந்து வாங்கியிருந்தால் மட்டுமே ஊரடங்கு […]
பெரம்பலூரில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தடுப்பூசி போடும் நேற்று துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் தடுப்பூசி செலுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன் பெயரில் பெரம்பலூர் மாவட்டத்தில் சென்ற புதன்கிழமை அன்று தேர்தல் பணியில் ஈடுபடும் 36 துறைகளைச் சேர்ந்த 4323 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. […]
பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று பாஜகவின் தேர்தல் அறிக்கைக்கு சிவசேனா கட்சியும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து உள்ளது. பீகார் மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி பாஜக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிட்டது. அதில் தேர்தலில் வெற்றி பெற்றால் பீகார் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி கிடைக்கச் செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் இத்தகைய அறிவிப்புக்கு எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். காங்கிரஸ் போன்ற கட்சிகளை தொடர்ந்து தற்போது சிவசேனா கட்சியும் […]
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் அம்மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பாஜகவின் தேர்தல் வாக்குறுதி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பாஜக மீது இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு வரும் 28 மற்றும் அடுத்த மாதம் 3,7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல்வர் திரு நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜகவும், […]
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி மூன்று மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி ஏராளமான உயிர் பலி எடுத்து வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதற்கான தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்து விட்டதாக கூறியது. சீனாவும் இந்தியாவும் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். உலக நாடுகளுக்கு தொற்றை பரப்பிய குற்றச்சாட்டிலிருந்து சீனா விலக தடுப்பு மருந்தை கண்டறிய தீவிரமாக […]
கொரோனா தடுப்பு மருந்து கட்டாயம் 50% நல்ல செயல் திறனைக் கொண்டு இருக்க வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு மருந்துகள் குறைந்த பட்சம் 50 விழுக்காடு செயல்திறனைக் கொண்டிருக்க வேண்டும் என நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் பாதுகாப்பு, நோய் எதிர்ப்பாற்றல், செயல் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், புதிய வழிகாட்டுதல்களை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமாக ஒரு தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதற்கு […]
DGCI அனுமதி கொடுத்தால் மீண்டும் தடுப்பூசி பணிகளை தொடர தயாராக உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. புனேயை சார்ந்த சீரம் நிறுவனம் தயாரித்திருந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் தன்னார்வலர் ஒருவருக்கு போட்டு பரிசோதித்து பார்த்த போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அதாவது நான்கு நாடுகளில் இந்த பரிசோதனை நிறுத்தப்பட்டதை அடுத்து, இந்தியாவில் அந்த தடுப்பு மருந்தை தயாரிக்கும் சீரம் நிறுவனமும் தங்களுடைய பரிசோதனையை நிறுத்தியது. ஆனால் […]