கொரோனா தொற்றுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட ஸ்பிரே வடிவிலான திரவநிலை தடுப்பு மருந்தை சீனா கண்டுபிடித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை தடுக்க அனைத்து நாடுகளும் பல விதமான தடுப்பு மருந்துகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் சீனா கொரோனா தொற்றுக்கு எதிராக ஸ்பிரே வடிவிலான திரவநிலை தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த திரவநிலை தடுப்பு மருந்தை மூக்கில் அடித்து, அதனை உள்ளிழுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது தடுப்புமருந்து நுரையீரலுக்குள் சென்று கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்கிறது. இந்த […]
Tag: கொரோனா தடுப்பு மருந்து
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]
இந்தியாவிற்கு கொடுத்து உதவும் அளவிற்கு எங்களிடம் போதிய கொரோனா தடுப்பு மருந்து இல்லை என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியா உலக நாடுகளின் உதவியை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி பிரித்தானியா, அமெரிக்கா, பாகிஸ்தான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்களால் முடிந்த உதவியை செய்வோம் என்று கூறியிருந்தது. அதன்படி உலக நாடுகள் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை முடிந்த அளவிற்கு செய்துவரும் நிலையில் […]
சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]
கொரோனா நோய்க்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி வினியோகத்தில் உலக நாடுகளுக்கு இடையே கடும் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரசால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கு எதிராக கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசிகளை போடும் பணியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் களமிறங்கியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் […]
கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்த பயணிகள் விமானத்தில் எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸிலிருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் உருமாறிய கொரோனாவும் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்திற்கான ஒத்திகை இந்தியாவில் நடைபெற்றது. இதையடுத்து தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்துவதற்கு மத்திய அரசு கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு மருந்துக்கு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து […]
பிரிட்டன் உலகிலேயே மலிவான தடுப்பூசியை தயாரித்து அதனை மக்களுக்கு செலுத்த தொடங்கியுள்ளது. பிரிட்டன் உள்நாட்டு தயாரிப்பு மருந்தான அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு என்ற தடுப்பூசியை இன்று முதல் மக்களுக்கு அளிக்க தொடங்கியுள்ளது. மேலும் 82 வயதுடைய டயாலிசிஸ் நோயாளி பிரையன் பிங்கர் என்பவர் தான் ஆக்ஸ்போர்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்த மருந்தை எடுத்துக் கொண்ட முதல் நபராகும். மேலும் உலகிலேயே மிக குறைந்த விலையாகவும், எளிதில் போக்குவரத்திற்கு உரியதாகவும் இருந்ததால் இந்த தடுப்பு மருந்து அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்ட் […]
தடுப்பு மருந்தினால் பெண்களுக்கு உடலில் முடி வளர்ச்சி இருக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கினர். இதையடுத்து தற்போது தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து வெளிநாடுகளில் இந்த தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டு வருகின்றது. கொரோனா பரவி கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு தடுப்பு […]
கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் ஒருவருக்கு பக்க விளைவு ஏற்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி கோவிஷில்டை சோதனை முறையில் சென்னை அண்ணா நகரை சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் செலுத்திக் கொண்டார். […]
கொரோனா தடுப்பு மருந்து புழக்கத்திற்கு வந்தாலும் மக்கள் முகக்கவசம் அணிவதை தவிர்க்க கூடாது என்று தோற்று நோய் வல்லுநர் தெரிவித்துள்ளார். உலகமெங்கும் மிகப்பெரிய தொற்று நோய் பரவலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக அமெரிக்காவிலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டியுள்ளது. இந்நிலையில் மூன்றாம் கட்ட பரிசோதனையில் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்புமருந்து 90 […]
கொரோனா தடுப்பு மருந்தை இந்திய மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி ஒன்றை கண்டறிந்து, அதன் இறுதி கட்ட சோதனையில் உள்ளது. அந்த தடுப்பூசி 90 சதவீதத்திற்கும் மேல் கொரோனாவை குறிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த தடுப்பூசியை இந்தியாவில் சேமித்து வைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார். அது […]
அமெரிக்காவின் Pfizer நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை -70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும் என்றும் இது கிராமப்புற பகுதிகளில் மிகவும் கடினம் என்றும் எய்ம்ஸ் இயக்குனர் திரு. ரன்தீப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் Pfizer நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து 90% வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளதாக நேற்று முன்தினம் Pfizer நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் Pfizer நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசியின் விலை அதிகமாக இருக்கும் என்றும் […]
சாமானிய மக்களுக்கு 2022-ஆம் ஆண்டுதான் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. பல்வேறு நாடுகளும் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிகள் பல்வேறு கட்டங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பெரும் தொற்று வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி எப்போது வரும் என நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் சாமானிய […]
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. பல்வேறு நாடுகளும் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிகள் பல்வேறு கட்டங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பெரும் தொற்று வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி எப்போது வரும் என நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கான முதல் தடுப்பு மருந்து 90 சதவீத மக்களுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் என Pfizer நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆறு […]
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கோவிட் தடுப்பூசி மருந்து சாதகமான ஆய்வகம் முடிவுகளை அளித்து வருவதை அடுத்து அந்த மரத்தின்மீது உலக அளவில் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரோ ஜெனிக்க நிறுவனம் தயாரித்துள்ளது. இரண்டு கட்ட சோதனையில் திருப்திகரமான முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் அந்த தடுப்பு மருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மூன்றாவது கட்டமாக மனிதர்கள் மீது செலுத்தப்பட்டு சோதனை இடப்படுகிறது. […]
கொரோனா தடுப்பு மருந்தை பெற பொதுமக்கள் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என பாஜகவின் பீகார் தேர்தல் அறிக்கை குறித்த திரு. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கொரோனா தடுப்பு பொருளாதாரச் சரிவு சீனாவுடனான எல்லை பிரச்சினை உள்ளிட்ட பல விவகாரங்களில் திரு. ராகுல் காந்தி மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்புப்பூசி வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் […]
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இயங்கி வரும் பாரத் பயோடெக் நிறுவனம் ICMR மற்றும் தேசிய பயாலஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினை உருவாக்கியுள்ளது. இந்த மருந்து வேலை செய்யும் விதம் குறித்து விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்த நிலையில் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்த 18 வயது முதல் 55 வயதுடைய ஆரோக்கியமான தன்னார்வலர்களின் […]
சென்னையில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டை பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா தடுப்பூசியை கண்டறிந்து பதிவு செய்துவிட்டோம் என்று கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் கோரொனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் தயாரிக்கப்பட்டுள்ள மூன்று விதமான தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் […]
கொரோனா வைரஸ்க்கான தடுப்பு மருந்தை சித்த மருத்துவ இயக்குனரகம் தொடங்க இருப்பதாக இன்று கையெழுத்திட்டுள்ளது. உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சென்னை டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிய சித்த மருத்துவக் குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. துணை வேந்தர் சுதா சேஷய்யன் முன்னிலையில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் கணேஷ், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் […]
கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ள ரஷ்ய தரப்புடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கமலயா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி என்ற ஸ்பூட்னிக்-வி தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்திய ரஷ்ய அதிபர் விளாடிமிர்புதின் தனது மகளுக்கு அதனை செலுத்திருப்பதாக தெரிவித்தார். இதனை உலக அளவில் ரஷ்யாவின் […]
அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டதை டுவிட்டர் நீங்கிய பின்னும் அவர் தொடர்ந்து 14 டுவிட்டுகளை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா நோய்க்கு இதுவரை அங்கீகாரம் பெற்ற சிகிச்சைகள் மற்றும் தடுப்பு தடுப்பூசிகள் எதுவும் கிடையாது. மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின், நோயால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளின் ஒன்றாக இருக்கின்றது. இந்த மருந்தானது இரண்டாம் உலகப்போரின் போது கண்டறியப்பட்டது. மேலும் இத்தகைய மருந்தானது ருமடாய்டு ஆர்த்ரைட்டீஸ் என்ற நோய்க்கு […]
தடுப்பூசியை முதலில் தயாரிக்க விரும்பினால் சீனாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் அதிரடியாக கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் முதல் பட்டியலில் இருப்பது அமெரிக்கா. இங்கு நேற்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 39 இலட்சத்தை கடந்து விட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,42,000 ஐ தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து தோன்றிய கொரோனா வைரஸை ஆரம்ப நிலையிலேயே மூடி மறைத்து பிற நாடுகளுக்கு பரவ விட்டுள்ளது. சீனா […]
கொரோனா தடுப்பு மருந்து எப்போது மக்களுக்கு கிடைக்கும் என்ற உண்மை தகவலை உலக சுகாதார நிறுவன உறுப்பினர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை உலக மக்களை சென்றடைவதற்கு இரண்டரை வருடங்கள் ஆகும் என உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்புப் பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார். கொரோனாவுக்குரிய தடுப்பு மருந்து உருவாக்க குறைந்தது 18 மாதங்கள் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அதிக அளவு உற்பத்தி செய்து 7.8 பில்லியன் உலக மக்களுக்கு கொண்டு செல்ல […]
தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாகவும் இந்தியா மற்றும் அமெரிக்கா நிறுவனத்துடன் தயாரிப்பை தொடங்க இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது சீனாவின் தொடங்கி உலகம் முழுவதும் தொற்று அதிக அளவில் பரவி ஏராளமான தாக்கத்தை ஏற்படுத்தி உயிர் பலிகளை எடுத்துள்ளது. இதனால் உலக மக்கள் அனைவரும் கொடுந்தொற்றில் இருந்து எப்பொழுது தீர்வு கிடைக்கும் என்றும் எப்பொழுது தப்புவோம் என்றும் காத்திருக்கின்றனர். ஆனால் மக்களின் எண்ணம் நிறைவேறுவதற்கு தடுப்பூசி அத்தியாவசியமாகிறது. கொரோனா தொற்றை தடுப்பதற்கான மருந்து கண்டுபிடிக்காத வரை தொற்றிலிருந்து […]
அமெரிக்க நிறுவனமும் இத்தாலியை சேர்ந்த நிறுவனமும் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது சீனாவில் தொடங்கி உலக நாடுகள் பலவற்றிற்கும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றை தடுக்க தடுப்பு மருந்தை கண்டறியும் பணி பல்வேறு நாடுகளில் நடந்து வருகின்றது. வைரஸ்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்கள் ஈடுபட்டு வரும் நிலையில், ஜெர்மனியின் பயான்டெக் மற்றும் அமெரிக்காவின் பைசர் இணைந்து ஆர்என்ஏ தொழில்நுட்பத்துடன் கூடிய கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை […]
தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு உலக அளவில் பெரிய தொகையை நன்கொடையாக பிரிட்டன் வழங்கியுள்ளது கொரோனா தொற்று தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பது நமது வாழ்நாளில் மிகவும் அவசரமான பகிரப்பட்ட பெரிய முயற்சி என நடைபெற இருக்கும் சர்வதேச உறுதிமொழி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்ட இந்த அறிக்கையின்படி தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சிக்கு பிரிட்டானியா நன்கொடையாளராக உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. அந்நாடு 483 மில்லியன் டாலர் ஆராய்ச்சிக்கு […]