நடிகர் வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்காக லண்டன் சென்றிருந்த நிலையில் லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வடிவேலு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tag: கொரோனா தொற்று
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் பல்வேறு அலைகளாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் அலையில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிக அளவில் இல்லை. ஆனால் 2-வது அலையில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதால், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டெல்லியில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு இன்று 125-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் வைரஸும் மிரட்டி வருகிறது. இதன் காரணமாக புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. குறிப்பாக ஒமைக்ரான் பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து […]
கொரோனா தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் என டென்னிஸ் வீரர் ரபேல் நடால் தெரிவித்துள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நடால் கடந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். இந்நிலையில் போட்டி முடிந்து நாடு திரும்பிய அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டார். இதுகுறித்து ரஃபேல் நடால் தெரிவிக்கையில்,’ சில லேசான கொரோனா […]
உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து, மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் ரோஷன் எழுதியுள்ள அந்த கடிதத்தில், உள்ளூர் அளவில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை […]
கொரோனா தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் கடந்த 2 வருடங்களாக எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நோய்த்தொற்று கட்டுக்குள் வந்ததால் கோவிலில் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. பின்னர் தினசரி அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐயப்பனுக்கு பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் வரை நெய்யபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கேரள தேவசம் அமைச்சர் […]
சென்னையில் ஆர்டிபிசிஆர் ஆய்வகம் மூலம் கொரோனா பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லி சாலையில் தனியார் ஆர்டிபிசிஆர் ஆய்வகத்தில் பணியாளர் 7 பேர் மூலமாக 13 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. பணியாளருக்கு தொற்று உறுதியான நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்தபோது, 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரிட்டனில் கொரோனா தொற்று எண்ணிக்கை, காண்பிக்கப்பட்ட தரவுகளை விட அதிகம் இருக்கும் என்று சுகாதார செயலாளரான சஜித் ஜாவீத் கூறியிருக்கிறார். பிரிட்டனின் சுகாதார செயலாளரான சஜித் ஜாவித் தெரிவித்திருப்பதாவது, இப்போது வரை ஒமிக்ரான் தொற்றின் சரியான தரவுகள் எங்களுக்கு தெரியவில்லை. தரவுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட தொற்று அதிகமாக பரவி வருகிறது. நாட்டில் தொற்று எண்ணிக்கை அறிவிக்கப்பட்டிருப்பதை காட்டிலும் அதிகம் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், அனைத்து மக்களும் பரிசோதனை செய்து கொள்ளவில்லை. மேலும் அவர்கள் பரிசோதனை செய்து கொண்டதற்கான […]
ஜெர்மன் அரசு, ஓமிக்ரான் தொற்றை தடுக்க, தங்கள் நாட்டிற்கு வரும் பிரிட்டன் மக்கள் 14 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது. பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. எனவே அந்நாட்டில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, சுமார் 15-ற்கும் அதிகமான நாடுகள், பிரிட்டன் சுற்றுலா பயணிகளுக்க தடை அறிவித்துள்ளது. இதனிடையே, ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டு பிரிட்டனில் சுமார் ஏழு நபர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே […]
பிரான்ஸ் அரசு கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புத்தாண்டு கொண்டாட தடை அறிவித்திருக்கிறது. பிரான்ஸ் பிரதமரான ஜீன் காஸ்டெக்ஸ், இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, கொரோனாவின் ஐந்தாம் அலை அதிகமாக பரவி வருகிறது. மேலும் வரும் ஜனவரி மாதத்திலிருந்து ஒமிக்ரான் பரவலால், கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, விடுமுறை நாட்களில் பொது இடங்களில் புதுவருட கலை நிகழ்ச்சிகள், வானவேடிக்கை போன்றவற்றிற்கு தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அதிகமாக கூட்டம் கூடுவது தவிர்க்கப்படவேண்டும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போதும் குறைவான அளவில் […]
தமிழகத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பொள்ளாச்சிப் பகுதியில் அரசு பள்ளி ஒன்றில் 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போதுதான் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி […]
கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளன. பெரும்பாலான உலக நாடுகள் அனைத்து மக்களுக்கும் 2-வது தவணை தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்வதற்கு மிக அருகில் உள்ளன. மேலும் சில நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு மேலாக […]
பிரபல நடிகரான அர்ஜுன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரானா தொற்று காரணமாக மக்கள் மற்றும் பிரபலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்போதுதான் எல்லாம் பழைய நிலைமைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் நோய் தொற்று இன்னும் முடியவில்லை. அடுத்தடுத்து மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் கமல்ஹாசன் அவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் குணம் அடைந்துள்ளார். இந்நிலையில், பிரபல நடிகரான அர்ஜுனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் […]
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தொற்று பரவல் படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்கள். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உருமாறிய ஒமைக்ரான் புதிதாக கொரோனாவின் மூன்றாவது அலையாக பரவ தொடங்கியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று […]
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தொற்று பரவல் படிப்படியாக குறைந்து மக்கள் இயல்புநிலைக்கு திரும்பி உள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில், உருமாறிய கொரோனா தொற்று மூன்றாவது அலையாக பரவ தொடங்கியுள்ளது. எனவே மூன்றாவது அலையை எதிர்கொள்ள பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதியவகை கொரோனா வைரஸ் ஒமைக்ரான் மிகவும் […]
உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் பரவ தொடங்கியுள்ளது. இந்தநிலையில், 2 மணிநேரத்தில் ஒமைக்ரானை கண்டறியும் பரிசோதனை கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். தென்னாபிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் கால்பதித்த உடனே அசாம் மாநிலம் டிப்ருகருல் உள்ள ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் கொரோனா அதிவிரைவாக கண்டறியும் கருவியை வடிவமைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதன்மூலம் 1000-கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் சாம்பிள்களை பரிசோதித்ததில் 2 மணிநேரத்தில் கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கொல்கத்தாவில் அதிக அளவில் உற்பத்தி […]
இந்தியாவில் உள்ள 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. கேரளம், மிசோரம், புதுச்சேரி, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களின் தலைமைச் செயலாளருக்கு மத்திய நலவாழ்வு துறை செயலர் ராஜேஷ் பூசன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் இரவு ஊரடங்கு, கூட்டம் கூடுவதற்கு தடை, விழாக்களில் பங்கேற்போர் எண்ணிக்கையை வரையறுத்தல் உள்ளிட்ட முறைகளை பின்பற்றும் படி அறிவுறுத்தியுள்ளது.
புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் இந்தியாவிற்கும் வந்துவிட்டது. அதில் குறிப்பாக, கொரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்று வந்துவிட்டது. தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பைக்கு வந்த 33 வயதுடைய இன்ஜினியர் ஒமைக்ரான் தொற்றால் கடந்த 4-ஆம் தேதி பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து தொடர்ச்சியாக பச்சிளம் குழந்தை உள்பட 17 பேருக்கு தொற்று இருப்பது […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், அங்குள்ள பள்ளிகள் வரும் டிசம்பர் 13 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில், கொரோனா தொற்றினால், புதிதாக 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் இறந்துள்ளதாகவும், அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் புதிதாக பரவிவரும் மைக்ரான் தொற்று ஏதும் இல்லை என்றும், சுகாதாரத்துறை நேற்று அறிவித்திருந்தது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட்-19 மீட்பு விகிதம் 97.72%, இறப்பு விகிதம் 2.22% […]
பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களுக்கு மக்கள் செல்ல கோரோனா பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டு பிரதமர் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். கடந்த வருடம் முதல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மக்கள் தடுப்பூசி செலுத்தி வருவதால், கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. அதனால் அரசு ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகளை அறிவித்து, மக்கள் மீண்டும் இயல்பு […]
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. மேலும் ஊரடங்கு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. அதில் குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர்களை தடுக்கும் விதமாக சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் வெளிநாட்டில் இருந்து வரும் மக்கள் மூலமாக நோய் தொற்று பரவும் விகித அளவு குறைந்தது. மேலும் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துவிட்டது. மேலும் சர்வதேச விமான நிலையம் உலகின் […]
கமலின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மைய கட்சித் தலைவராகவும் வலம் வருபவர். இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இவரின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை […]
கமல் அமெரிக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மைய கட்சித் தலைவராகவும் வலம் வருபவர். இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இவர் கொரோனா தொற்றுக்கு […]
ஸ்பெயினின் சுகாதாரத்துறை தடுப்பூசி எடுத்துக் கொண்ட மக்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டிய நிலை குறைந்திருப்பதாக கூறியிருக்கிறது. ஸ்பெயினில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி கரோலினா டரியாஸ் கூறியிருக்கிறார். மேலும், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத நபர்களுக்கு அதிகம் கொரோனா தொற்று பரவுவதாகவும் தெரிவித்திருக்கிறார். அந்நாட்டில் சுமார் 546 நபர்கள் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர். தற்போது வரை 2 டோஸ் தடுப்பூசிகள், 79% பேர் எடுத்துக்கொண்டனர். தடுப்பூசி எடுத்துக் கொண்ட மக்களிடையே தொற்று பாதிப்பு […]
கமலின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மைய கட்சித் தலைவராகவும் வலம் வருபவர். இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இவரின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை […]
ஜெர்மன், கொரோனா பரவலின் நான்காம் அலையை எதிர்கொள்ள, தேசிய அவசர நிலையை சந்திக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜெர்மன் நாட்டில் கடந்த சில நாட்களில், கொரோனா தொற்று எண்ணிக்கை 60% அதிகரித்திருக்கிறது. இந்த எண்ணிக்கை, மேலும் இரு மடங்காக அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கிறார்கள். இந்நிலையில், ஜெர்மனியின் சுகாதார அமைச்சரான, ஜென்ஸ் ஸ்பான், நாட்டில் கொரோனா பரவல் நிலை கடந்த வாரத்தில் மோசமாகி இருக்கிறது. எனவே நாடு, தேசிய அவசர நிலையை சந்திக்கவுள்ளது என்று கூறியிருக்கிறார். […]
கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரியாவிலும் கொரோனா தொற்று பரவலானது அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக நான்கு அலைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 5வது அலையும் உருவாகலாம் என்று கூறப்படுகிறது. எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களுக்காக சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நோய் தொற்று […]
கொரோனா தொற்று அடுத்த ஆண்டு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் விளக்கம் கொடுத்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில்கேட்ஸ் அடுத்த ஆண்டு கொரோனா தொற்று எவ்வாறு இருக்கும் என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, அடுத்த ஆண்டு பருவகால காய்ச்சலை விட கொரோனா தொற்று பாதிப்பானது குறைவாக இருக்கும். மேலும் அதன் உருமாற்றத்தில் ஏதேனும் புதிய மாறுதல்கள் நடைபெறாத பட்சத்தில் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் கொரோனா தொற்றினால் […]
இந்தியாவில் கொரோனா தொற்றை சமாளிப்பதற்கு அனைத்து சவால்களையும் ஜனநாயக முறை அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும். இந்தியாவில் 110 கோடி தடுப்பூசி மைல்கல்லை கடந்துள்ளோம். ஒரு காலத்தில் சாத்தியம் இல்லை என்று எண்ணிய ஒரு செயல் தற்போது சாத்தியமாகியுள்ளது. மேலும் வரும் ஆண்டுகளில் இந்தியாவை ஒரு புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இலக்குகளை அடைய வேண்டும். இவை அனைவரின் முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும். நம் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தி புதிய உச்சங்களை அடைய வேண்டும் […]
இங்கிலாந்தில் சிறையிலிருந்த 70 வயது கைதி கொரோனா தொற்று ஏற்பட்டு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஹிண்ட்லி என்ற நகரில் வசித்த 70 வயது முதியவரான, டென்னிஸ் ஸ்மலி கடந்த 1970 ஆம் வருடத்திலிருந்து 45 வருடங்களாகத் தொடர்ந்து கற்பழிப்பு குற்றங்களை செய்து வந்திருக்கிறார். பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு, கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்டதால், கடந்த 2014 ஆம் வருடத்தில் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது 25 பாலியல் […]
ஜெர்மனியின் பக்கத்து நாடான ஆஸ்திரியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் மட்டும் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியே வர முடியாது என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆஸ்திரியாவில் இந்த விதிமுறையை மக்கள் மீறுகிறார்களா? என்று கண்டறிவதற்காக காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், ஜெர்மன் அரசும், இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. ஏனெனில் ஜெர்மனி நாட்டில் சுமார் 14 மில்லியன் நபர்கள் தற்போது வரை தடுப்பூசி செலுத்தவில்லை. அங்கு கொரோனோவின் நான்காம் அலை பரவி வருகிறது. எனவே அந்நாட்டு அரசு, […]
ஸ்விட்சர்லாந்தின் அறிவியல் ஆலோசனை குழுவிற்கான தலைவர் நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால், இந்த குளிர்காலம் கடுமையாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். சுவிட்சர்லாந்தின் அறிவியல் ஆலோசனை குழுவிற்கான தலைவர் Tanja Stadler தெரிவித்துள்ளதாவது, இன்னும் சில மாதங்களுக்கு அரசாங்கம் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டிவரும் என்று தான் கருதுவதாக கூறியிருக்கிறார். புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனில், 30 ஆயிரம் நபர்கள் வரை கொரோனாவால் மருத்துவமனையில் சேர வேண்டிய நிலை உண்டாகும் என்று கூறியிருக்கிறார். எவ்வாறான நடவடிக்கைகள் […]
பிரான்சில் கொரோனா தொற்று அதிகமாக பரவுவதால் நாடு முழுக்க தொடக்கப்பள்ளிகளில் முகக்கவசம் அணியும் விதிமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரான்சில் ஒவ்வொரு நாளும் கொரனோ பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, பள்ளி மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று விதிமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த செப்டம்பர் மாத கடைசியில் கொரோனா தொற்று குறைவாக இருக்கும் ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகள் கட்டாயமாக முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அரசு அறிவித்திருந்தது. மேலும், பல்வேறு துறைகளில் முகக்கவசம் கட்டாயமில்லை […]
ஜெர்மன் அரசு அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையும், தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பும் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே நான்காவது கொரோனா அலையை எதிர்கொள்ளும் வகையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் […]
சீன நாட்டின் டலியான் என்னும் நகரத்தில் திடீரென்று கொரோனா தொற்று அதிகரித்ததால் அந்நகரைச் சேர்ந்த 1500 பல்கலைக்கழக மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவில் உள்ள ஷூவாங்கே என்னும் பல்கலைகழக நகரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. எனவே, அந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களையும் தனிமைப்படுத்துமாறு நேற்று முன்தினம் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த பல்கலைகழகத்தை சேர்ந்த 1500 மாணவர்களை ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு காணொலி காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகிறது. மேலும் அவர்களுக்கு […]
ஆஸ்திரிய அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை வீட்டிலேயே லாக்டவுனில் வைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. ஆஸ்திரியாவின் மக்கள்தொகை சுமார் ஒரு கோடி. இதில் 65% சதவீத மக்கள் மட்டும் தான் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். எனவே, தடுப்பூசி செலுத்தாத நபர்களிடமிருந்து கொரோனா தொற்று பரவ விடாமல் தடுக்க அவர்களை வீட்டில் லாக் டவுனில் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தடுப்பூசி செலுத்தாத 12 வயதுக்கு அதிகமான நபர்கள் அல்லது சமீபத்தில் கொரோனா ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்ததற்கான ஆதாரங்களை நிரூபிக்க முடியாதவர்கள், இனிமேல் […]
சீனாவில் புதிதாக 52 நபர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் தான் முதன் முதலில் கொரோனாத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்பு, உலக நாடுகள், கொரோனா தொற்றுடன் போராடிக்கொண்டிருந்த சமயத்தில், சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. எனவே, சீனா முதல் நாடாக ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது அங்கு மீண்டும் தொற்று பரவ தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக 52 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில், 32 நபர்கள் உள்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், மீதமுள்ள […]
ஸ்வீடன் அரசு, கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களுக்கு, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. எனினும் ஸ்வீடனில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது குறைந்துவிட்டது. இது தொடர்பில், சுவீடனின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது, தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டாலும் பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது. மேலும், அந்நாட்டின் சில பிராந்தியங்களில், இலவச கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாது என்ற அறிவிப்பு […]
கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கையாக நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலகில் கொரோனா தொற்று பரவலானது தற்பொழுது கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது.மேலும் சில நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று உருவெடுத்துள்ளதால் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நெதர்லாந்திலும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக நேற்று பொது முடக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளை முன்கூட்டியே […]
கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 25.31 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 25.31 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் 25,31,82,737 பேருக்கு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே 22,89,71,028 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம் 51 லட்சத்து 03 ஆயிரத்து 629 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 1,91,08,080 பேர் கொரோனா […]
ஜெர்மனியில் இதுவரை இல்லாத அளவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து, நேற்று தான் அதிகமான தொற்று எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ராபர்ட் கோச் என்ற தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று 37,120 நபர்களுக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுதான் அதிகமான தொற்று எண்ணிக்கையாக பதிவாகியிருந்தது. இந்நிலையில், நேற்று மட்டும் 39,676 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. நாட்டில் இருக்கும் பல்வேறு […]
கொரோனா தொற்று பாதிப்பானது செல்லப்பிராணிகளுக்கு பரவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் வளர்ப்பு நாய் ஒன்றிற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வெய்பிரிட்ஜில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்கள் சுகாதார ஆய்வு குழு கடந்த 3 ஆம் தேதி மேற்கொண்ட பரிசோதனையில் அந்த வளர்ப்பு நாய்க்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து தொற்று பாதித்த அந்த நாய்க்கு வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் நாய்க்கு அதன் உரிமையாளரிடம் இருந்து […]
கொரோனா தொற்று பரவல் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கபப்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் முதன் முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து இது உலகம் முழுவதும் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதிலும் இதன் இரண்டாம் அலை தாக்கத்திற்கு பின்னர் தான் உலகம் முழுவதும் தொற்றிலிருந்து படிப்படியாகப் மீண்டு வருகின்றது. இந்த நிலையில் கொரோனா தொற்று எங்கே தொடங்கியதோ அங்கேயே திரும்பியுள்ளது. அதாவது, சீனாவில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் […]
முதல்முறையாக அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பு இரண்டு கழுதை புலிகளுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டென்வர் உயிரியல் பூங்காவில் முதல்முறையாக கழுதைப் புலிகள் இரண்டுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்னதாக புலிகள், சிங்கங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த உயிரியல் பூங்காவில் 23 வயதான கிபோ மற்றும் 22 வயதான கோஸி ஆகிய கழுதைப்புலிகள் இரண்டுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த […]
ஸ்கார்பரோவில் கொரோனா தொற்று காரணமாக ஒரு துவக்க பள்ளி அடைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்கார்பரோவில் ஒரு தொடக்கப்பள்ளியில் 13 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, பள்ளியின் நிர்வாகம், பள்ளியை அடைக்க தீர்மானித்திருக்கிறது. அதாவது அப்பள்ளியை சேர்த்த மாணவர்கள் 11 பேருக்கும், பணியாளர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒன்ராரியோ மாகாணத்தில் செப்டம்பர் மாதத்திலிருந்து, கடந்த வெள்ளிக்கிழமை வரை வெளியிடப்பட்ட தரவுகளின்படி, பள்ளியில் சுமார் 913 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. எனினும், அக்டோபர் […]
பிரிட்டனில் கொரோனா பாதிப்பால் முதியோர்கள் உயிரிழப்பு அதிகரிப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்திருக்கிறது. பிரிட்டனில் கொரோனா தொற்று ஏற்படக்கூடிய நிலையில் இருக்கும் மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை விரைவில் செலுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்படுகிறது. இல்லையென்றால் அடுத்த மாதத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று சுகாதாரத்துறை குறிப்பிட்டிருக்கிறது. 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த எண்ணிக்கை தொற்றை கட்டுப்படுத்த தேவையானதாக இல்லை. எனவே இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்கள் பூஸ்டர் […]
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவருக்காக பூங்காவில் அனைவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சீனாவில் உள்ள பூங்காவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கிருந்த 34,000 பேரும் உள்ளேயே அடைக்கப்பட்டனர். இது குறித்து பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்டதில் “சீனாவிலுள்ள ஷாங்காய் மாகாணத்தில் Disneyland என்ற மனமகிழ் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் கடந்த சனிக்கிழமை அன்று பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து கடந்த திங்கட்கிழமை அன்று கொரோனா […]
கொரோனா தொற்று பரவல் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளதால் முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தலைநகர் மாஸ்கோவில் நடந்த 28 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தற்பொழுது ரஷ்யாவில் இன்று முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் வீதிகளில் வழக்கம்போல சுற்றித்திரிந்து வருகின்றனர். மேலும் ஊரடங்கானது வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. […]
ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 92%-த்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். எனவே, அந்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால், அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கொரோனா விதிமுறைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கான்பெர்ரா என்ற நகரத்தில் இருக்கும் திரையரங்குகள், கலை மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள் போன்றவற்றில் 75% இருக்கைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், உடற்பயிற்சி வகுப்புகளும், குழுவாக இணைந்து விளையாடும் விளையாட்டுகளும் மீண்டும் விளையாட […]
ரோஜா சீரியலில் நடித்து வரும் வி.ஜே.அக்ஷயாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று ”ரோஜா”. இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், டி.ஆர்.பியிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனிடையே, இந்த சீரியலில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அணு கதாபாத்திரத்தில் நடித்து வரும் அக்க்ஷயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் ,மருத்துவர்கள் உதவியுடன் குணமாகி வருவதாகவும் […]
சீனாவில் ஏற்கனவே இரண்டு நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் நேற்று ஹெய்கே நகரத்திலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் கொரோனா தொற்று சீனாவில் 2019 இன் இறுதியில் கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், சீனாவில் சமீபகாலமாக கொரோனா மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. சீன சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த நோய்த்தொற்றுகளில் பெரும்பாலானவை வெளி ஊரில் இருந்து […]