சீனாவில் நேற்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி அந்நாட்டின் தலைநகரில் தொடங்கியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியது. தற்போது, உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த கொரோனா வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நேற்று 3-11 வயது வரையிலான அனைத்து […]
Tag: கொரோனா தொற்று
அமெரிக்காவில் கொரோனா தொற்று ஏற்பட்டு இறைச்சிகளை பேக்கிங் செய்யக்கூடிய 269 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு 80% இறைச்சி தேவைகளை நிறைவு செய்யும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட்டது. அதில், இதற்கு முன்பு குறிப்பிடப்பட்ட விவரங்களை விட மூன்று மடங்கு அதிகமான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி 59,000 நபர்களுக்கு கொரோனா தொற்று […]
கொரோனா தொற்று அதிகமாக ஐரோப்பா மணடலத்தில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பா மண்டலமானது 53 நாடுகளை உள்ளடக்கியது. அங்கு கடந்த வாரத்தில் கொரோனா தொற்று பாதிப்பானது 18% உயர்ந்துள்ளது. குறிப்பாக உலகின் அதிக அளவு உயிரிழப்பும் ஐரோப்பா மண்டலத்தில் தான் காணப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் சமீபகாலமாக 14% மரணங்கள் ஐரோப்பா மண்டலத்தில் பதிவாகியுள்ளது என்று வாராந்திர தரவுகள் தெரிவித்துள்ளன. அதிலும் அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா […]
புதிய வகை கொரோனா தொற்று பரவலை ஆரம்பத்திலேயே மட்டுப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் கொரோனா தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இது உலகம் முழுவதும் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. மேலும் இதற்காக மருத்துவ உலகம் தடுப்பூசிகளை கண்டுபிடித்து அதனை செலுத்தும் பணிகளை தீவிரமாக்கியது. இருப்பினும் கொரோனா தொற்று பல்வேறு விதத்தில் உருமாற தொடங்கி அதன் தீவிரத்தை பன்மடங்கு பெருக்கியது. குறிப்பாக ஒரு வைரஸ் கிருமி தனது சுற்றுச் சூழலைப் பொறுத்து […]
கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற தடுப்பூசி ஒன்றே தீர்வாக இருக்கிறது. தடுப்பூசி கண்டறிய படாமல் கொரோனா முதலாவது அலையில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதனால் சர்வதேச மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதற்கு தீவிரம் காட்டின. அதன்பின்னர் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு உபயோகத்துக்கு வந்தது. தொடக்கத்தில் தடுப்பூசி பல இடங்களில் கிடைப்பதற்கு சவாலாக இருந்த நிலையில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. […]
கொரோனா தொற்று பிரிட்டன், சிங்கப்பூரில் அதிகரித்து வருவதனால் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 174 ஆவது வார்டு மடுவின்கரை பாரதி தெருவில் 30,லட்சம் ரூபாய் செலவில் நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சிங்கப்பூரில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் இப்போது […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று வைரஸ் பரவல் பல்வேறு அலைகளாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1- அலையில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிக அளவில் இல்லை. ஆனால் 2- வது அலையில் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்பட்டது. அது மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தற்போது கொரோனா தொற்று 2- வது அலை குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். மேலும் வருமானம் ஈட்டும் நபர்கள் கொரோனா […]
உலக நாடுகளில் காசநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம், கொரோனா தொற்று காரணமாக காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது, சுகாதார நிதிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பயன்படுத்தப்பட்டதால் காசநோய் அதிகரித்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் நபர்கள் காசநோயால் பாதிப்படைகிறார்கள். குணப்படுத்தக்கூடிய அந்த நோயை அழிப்பதற்காக கடந்த பல வருடங்களில், காணப்பட்ட மேம்பாடு, வீணானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காசநோயால் […]
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணிக்கவும், அதனை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளைப் பற்றியும், அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று நிலையினை கருத்தில் கொண்டு முதல்வர் முக. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் […]
சுவிட்சர்லாந்து அரசு இன்றிலிருந்து இலவச கொரோனா பரிசோதனைகள் கிடையாது என்று அறிவித்திருக்கிறது. ஸ்விட்சர்லாந்து அரசாங்கம், இந்த அறிவிப்பிற்கு பின் நாட்டில் பல மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வார்கள் என்று கருதுவதாக தெரிவித்துள்ளது. இலவச கொரோனா பரிசோதனைகள் கிடையாது என்று அறிவிக்கப்பட்டாலும், சில விதிவிலக்குகள் நடைமுறையில் இருக்கிறது. அதாவது, 16 வயதுக்குட்பட்டவர்கள், கொரோனா தொற்று அறிகுறிகள் ஏற்பட்டவர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் சேரவிரும்பும் வயதானவர்கள் போன்றோருக்கு இலவசமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். எனினும் அவர்களுக்கு கொரோனா சான்றிதழ் அளிக்கப்படாது. இதனால் […]
கனடாவிலுள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில் 52 பள்ளிகளில் கொரோனா தொற்று பரவுவது கண்டறியப்பட்டிருப்பதால் 702 பள்ளிகள் எச்சரிக்கப்பட்டுள்ளது. கனடாவிலுள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில், கொரோனாவின் 4-ஆம் அலைக்கான தாக்கம் பள்ளிகளில் பரவுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாகாணத்தின் சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், சுமார் 54 பள்ளிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அங்கு 10-க்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதனால், 702 பள்ளிகளுக்கு கொரோனா தொற்று குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் வருகின்ற 10-ஆம் தேதி வரை தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. அதில் 2 லட்சத்து 10 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர்தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள மொத்த மக்கள்தொகை 38 லட்சத்து 33 ஆயிரத்து 280 பேர். இதில் 18 வயதுக்கு மேற்பட்ட 27 லட்சத்து 98 ஆயிரத்து 194 பேர் இருக்கின்றனர். இவர்களில் 17 லட்சத்து 17 ஆயிரத்து 306 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 61%.மீதமுள்ள […]
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, கொரோனா தொற்று காரணமாக அரசு பள்ளி இழுத்து மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 131 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இவர்களில் ஒரு ஆசிரியருக்கு கடந்த 30 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவ குழுவினர் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள், […]
கனடாவின் ஒரு மாகாணத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கனடாவின் Saskatchewan என்ற மாகாணத்தில் கடந்த புதன்கிழமை நிலவரத்தின்படி, 4313 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதே நேரத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகமாக இருந்திருக்கிறது. பெடரல் அரசு, கடந்த ஒரு வாரத்தில் நாட்டிலேயே Saskatchewan மாகாணத்தில் தான் கொரோனாவால் அதிக நபர்கள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. மேலும், […]
தமிழகத்தில் கொரானா தொற்றை முழுவதுமாக ஒழிக்கும் நோக்கத்தோடு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு அங்கமாக தொடர்ந்து நான்கு வாரங்களாக முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்படுகின்றது. தமிழகத்தில் இதுவரை 80% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அம்மாவட்டத்தில் உள்ள […]
பிரிட்டனில் 15 வயதுடைய சிறுமி கொரோனோ தடுப்பூசி போடவிருந்த நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள போர்ட்ஸ்மவுத் என்ற பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஜோர்ஜா ஹாலிடே. இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ஒரே வாரத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளார். கொரோனா தடுப்பூசி போடவிருந்த நாளில் உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிறுமியின் தாயாரான டிரேசி ஹாலிடே தெரிவித்துள்ளதாவது, என் மகள் அதிக சுறுசுறுப்புடன் இருப்பாள். அவள் நண்பர்களுடனும் சகோதர சகோதரிகளுடன் […]
சுவிட்சர்லாந்தில் சுகாதாரத்துறையானது கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அதிகப்படியான கர்ப்பிணி பெண்கள் சேர்க்கப்படுவது மிகவும் கவலை அளிப்பதாக கூறி உள்ளது. சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் பாதிக்கபட்ட கர்ப்பிணி பெண்கள் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதில் பலர் அறுவை சிகிச்சை பகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களின் எண்ணிக்கையானது நான்காவது அலையின் போது அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இவர்களுள் சில கர்ப்பிணி பெண்கள் […]
அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி செய்தி தொடர்பு அதிகாரியான நெட் பிரைஸிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஜோபைடன் அரசின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பு அதிகாரியான நெட் பிரைஸிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. எனவே, 10 தினங்களுக்கு, அவர் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நெட் பிரைஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, முதல் தடவையாக சில அறிகுறிகள் எனக்கு ஏற்பட்டது. அதன்பின்பு, பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, அடுத்த பத்து […]
கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளார். அமெரிக்கா நாட்டில் நியூயார்க் நகரம் அமைந்துள்ளது.அந்நகரில் 76 வது ஐ.நா சபை பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் உலகநாடுகளில் இருந்து வந்த பல தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்று பேசியுள்ளார். அதில் இந்திய பிரதமர் மோடி கூறியதாவது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத நிலையை உலக நாடுகள் கடந்த ஒன்றரை வருடங்களாக […]
நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற ஐநா பொது சபை கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் அதிபரின் மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஐநா பொதுச்சபைக் கூட்டமானது, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது, இக்கூட்டத்தில், பிரேசில் நாட்டின் அதிபரான போல்சனாரோவும் கலந்து கொண்டார். அதிபரின் மகனும் கலந்து கொண்டார். இவர்களுடன், அமைச்சர்களும் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இதில் அமைச்சர் மற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அதிபரின் […]
கொரோனா 3வது அலை பரவாமல் இருப்பதற்கு, தமிழக அரசானது கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். கொரோனா 3வது அலை பரவலை குறித்து ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், “பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஏற்ற,இறக்கமாகவே உள்ளது. இந்நிலையில் வரும் 3வது அலையானது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அச்சத்தை போக்கும் வகையில் சமூக இடைவெளியை, அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகளிலும் கடைபிடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை உள்ளே அனுமதிக்க கூடாது போன்ற […]
உலகின் முன்னணி விமான நிறுவனமான எமிரேட்ஸ் நிறுவனத்தில், 3500 நபர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, உலகம் முழுக்க இருக்கும் விமான நிறுவனங்கள், தங்கள் விமான சேவையை ரத்து செய்திருந்தது. இதனால், கடந்த இரண்டு வருடங்களாக விமான நிறுவனங்கள், அதிக நஷ்டத்தை அடைந்துள்ளது. எனவே, இந்நிறுவனங்கள், நிதி நெருக்கடி காரணமாக, வேலையாட்களை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. எனினும் தற்போது, உலகின் பல்வேறு நாடுகளிலும், கொரோனா தொற்று குறையத்தொடங்கி இருக்கிறது. எனவே, விமான சேவைகள் […]
பிரேசில் நாட்டில் நேற்று ஒரே நாளில் 34, 407 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலின் சுகாதார அமைச்சகமானது, நாட்டில் நேற்று ஒரே நாளில் 34, 407 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. இதனால் பிரேசிலில் மொத்தமாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,10,69,017 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக பதிவாகியுள்ளது. இதனால், நாட்டில் தற்போதுவரை கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை, 5,89,240 ஆக […]
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியானது நாளை நடைபெறவுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் இந்த கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேச் சென்றது. குறிப்பாக கொரோனா வைரஸினால் பெரிதும் பாதிக்கப்பட்டும் அதிக உயிரிழப்புகளையும் சந்திந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியானது நாளை நடைபெறவுள்ளது. இதற்காக வாஷிங்டன் […]
பிரான்சில் கொரோனா தொற்றை சரியாக கையாளவில்லை என்று முன்னாள் சுகாதார அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சராக, கடந்த 2017ஆம் வருடம் மே மாதத்தில் அக்னஸ் புசின் என்பவர் பொறுப்பேற்றார். ஆனால், நாட்டில் கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில் அக்னஸ் புசின், பாரீஸ் மேயர் பதவியில் போட்டியிட 2020 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் தன் பதவியிலிருந்து விலகினார். மேலும் அவர் அப்போது, கொரோனா பாதிப்பு, குறைவான ஆபத்து உடையது […]
இந்திய அணி பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து அணி வீரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது . விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த பந்துவீச்சு […]
ஈரானில், தற்போது கொரோனா தொற்று குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில், கொரோனா தொற்று பாதிப்பு பட்டியலில் 10-ஆம் இடத்தில் ஈரான் இருக்கிறது. மேலும், ஈரானில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 40,000-த்திற்கும் அதிகமாக இருந்தது. எனினும், தற்போது அங்கு கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தற்போது வரை 41,17, 098 நபர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள். 6, 72,449 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக ஈரான் சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவில், கொரோனாவை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கை எதிர்த்து நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆஸ்திரேலிய நாட்டில், பல நகர்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருக்கிறது. எனவே, அங்கு ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், நாட்டின் மிகப் பெரிய நகரான சிட்னி, மெல்போர்ன், தலைநகர் கான்பெர்ரா ஆகிய நகர்களில் கொரோனா தொற்று, சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே, இந்த நகர்களில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர பிற காரணங்களுக்காக பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம் என்று […]
இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே, நாட்டின் அனைத்து மக்களுக்கும் அடுத்த மாதம் 10ஆம் தேதிக்குள் 2 தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இலங்கையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. எனினும் அதிபர் கோட்டபாய ராஜபக்சே, ஊரடங்கு அமல்படுத்த மறுத்து வந்தார். இறுதியில் புத்த மத குருக்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் கொடுத்த அழுத்தத்தினால் இம்மாதம் 30ஆம் தேதி வரை பத்து தினங்களுக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தினார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாட்டு மக்களுடன் அதிபர் தொலைக்காட்சியில் […]
பிரிட்டன் அரசின், பயணப் பட்டியலில் புதிய பிரிவுகளை இணைக்கும் திட்டத்தை பிரதமர் கைவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் பிரதமர், போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டின் பயணத்திட்டத்தை முடிந்த அளவிற்கு எளிதானதாக அமைக்க நினைப்பதாக நேற்று மாலையில் தெரிவித்திருந்தார். பிரிட்டன் அரசு கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர தங்கள் நாட்டின் பயண பட்டியலில் கடுமையான விதிகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி, பச்சை, அம்பர், சிகப்பு போன்றவை பட்டியலில் இருந்தது. தற்போது புதிதாக பச்சை கண்காணிப்பு மற்றும் அம்பர் பிளஸ் […]
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் . ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே-வுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவன் தற்போது லண்டன் ஸ்பிரிட் டி20 அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். இந்நிலையில் அணியில் இருந்தவருக்கு திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .இதனால் அணியின் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது ,ஷேன் வார்னே-வுக்கு தொற்று […]
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான 2-ம்தர இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து நடந்த டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் 2-வது டி20 போட்டியின் […]
இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவித்த பின்பு கொரோனா பரவத்தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகள் பழைய நிலைக்கு திரும்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் கடந்த 19 ஆம் தேதி அன்று ஊரடங்கு விதிமுறையில் தளர்வுகளை ஏற்படுத்தினார். எனவே முகக்கவசம் அணிந்து கொள்வது மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுவது ஆகிய விதிமுறைகள் அவசியம் இல்லை […]
சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு 76-ஆக அதிகரித்துள்ளதாகவும் கிழக்கு நகரமான நாஞ்சிங்கில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட உடன் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டாக்ஸி சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரு நாளைக்கு 5 என பதிவாகி வந்த நிலையில் தற்போது ஒரே நாளில் 40 […]
ஓமனில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஓமனில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்த ஊரடங்கு நேற்று காலை 4 மணியுடன் நிறைவடைந்த நிலையில் , நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து […]
இங்கிலாந்து நாட்டில் இன்றிலிருந்து கொரோனா தொடர்பான விதிமுறைகள் அனைத்தும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் சமீப தினங்களாக கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் இன்றிலிருந்து ஊரடங்கு விதிமுறைகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவை மருத்துவ நிபுணர்கள் எதிர்த்தனர். எனினும் அரசாங்கம் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு கொரோனா தொற்று குறைந்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. மேலும் இரவு நேரத்தில் இயங்கக்கூடிய கிளப்புகள், உள்ளரங்கு கட்டடங்கள் போன்றவை எந்த வித தடைகளும் இன்றி இயங்கும். முகக்கவசம் அணிவதும், வீட்டிலிருந்து பணி […]
இலங்கை அணி பேட்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி தற்போது தாயகம் திரும்பி உள்ளது. இந்நிலையில் அணி வீரர்கள் ,பயிற்சியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான கிரான்ட் பிளவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனிடையே இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி வருகின்ற 13 ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ள நிலையில் […]
உலக அளவில் 16.97 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. கொரோனா பெரும் தொற்றால் உலக அளவில் 18.53 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே 16.97 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இதுவரை 40.08 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]
இந்தோனேசியாவில் அவசரகால உபயோகத்திற்கு மாடர்னா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகமாக பரவி வருகிறது. எனவே அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாத முடிவிற்குள் நாட்டிலுள்ள மொத்த மக்கள் 27 கோடியில் சுமார் 18 கோடி மக்களுக்கு தடுப்பூசி அளிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். எனவே ஒவ்வொரு நாளும் சுமார் 10 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து […]
உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் வருடத்தில் சீனாவில் உள்ள வூஹான் என்ற நகரத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. அதன் பின்பு படிப்படியாக உலக நாடுகள் முழுவதிலும் பரவியது. கொரோனா பாதிப்பு பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அதனை தொடர்ந்து இந்தியா, பிரேசில், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இருக்கிறது. எனவே உலக நாடுகள் தடுப்பூசி செலுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் பல நாடுகளில் […]
ஸ்பெயினில் உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்கள் பார்ட்டி நடத்தியதால் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் உள்ள உயர் நிலை பள்ளியில் பயிலும் மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வுகள் முடிவடைந்ததால், மத்தியதரைக்கடல் மல்லோர்கா தீவில் கடந்த வாரம் பார்ட்டி கொண்டாடியுள்ளார்கள். இதில் ஆட்டம், பாட்டம், இசை நிகழ்ச்சி மற்றும் விருந்து என்று ஆரவாரமாக கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வில் ஸ்பெயின் மாணவர்கள், பிற நாடுகளிலிருந்து வந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்றுள்ளனர். இதுதான் தற்போது […]
ஆயுதப்படை தளபதிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இங்கிலாந்து ராணுவத்தில் ஆயுதப்படை தளபதியாக இருப்பவர் நிக் கார்ட்டர் .இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது . இதனால் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இந்த தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன்பாக கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த மூத்த ராணுவ அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் ராணுவப் படைத் தளபதி நிக் கார்ட்டர் கலந்துகொண்டார் . இந்த ஆலோசனை […]
கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து வங்காளதேசத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதில் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மீண்டும் அந்நாட்டில் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் பாதிப்பு அந்நாட்டின் பரவியிருப்பதால் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாடு தழுவிய முழு ஊரடங்கு மறு அறிவிப்பு […]
ராமநாதபுரத்தில் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு முன்பே கொரோனாவால் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கவரங்குளம் பகுதியில் கோகுல்நாத்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி ராதிகா இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ராதிகா மீண்டும் கர்பமாகியுள்ள நிலையில் பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கோகுல்நாத்தின் தந்தைக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கோகுல் அவரை கவனித்து வந்துள்ளார்.இதனை தொடர்ந்து தந்தை […]
போலந்து அரசு, இங்கிலாந்திலிருந்து வரும் மக்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. போலந்தில் சமீபத்தில் கொரோனா தொற்று நன்றாக குறையத்தொடங்கியுள்ளது. எனவே ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகளும் ஏற்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் புதிதாக கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் தற்போது பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே போலந்து அரசு, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் விமான போக்குவரத்தில் பல விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது, இங்கிலாந்து நாட்டிலிருந்து போலந்திற்கு, வரும் […]
உலக நாடுகளில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் வெளியாகியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. எனவே பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எந்த நாடுகளில் தடுப்பூசிகள் பணிகள் தீவிரமாக்கப்பட்டதோ அங்கே கொரோனா குறைய தொடங்கியுள்ளது. எனவே மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 17,95,34,405 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 16,41,62,300 நபர்கள் கொரோனாவிலிருந்து மீண்டு […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற 9 பேர் கொண்ட உகாண்டா அணியில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப்போட்டியில் பங்கேற்க உள்ள அணிகள் தற்போது ஜப்பான் நாட்டிற்கு செல்லத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக ஆப்பிரிக்கா கண்டத்தைச் 9 பேர் கொண்ட உகாண்டா […]
பிரேசிலில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அந்நாட்டு மக்கள் அதிபரை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரேசில், உலக நாடுகளில் கொரோனா தொற்றில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தீவிரமடைந்து வருவதால் உலக நாடுகளின் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையிலும் பிரேசில் முதல் இடத்தில் இருக்கிறது. எனவே நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனராவை பதவி நீக்கம் செய்ய கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 26 […]
பாகிஸ்தானில் தற்போது கொரோனா பரவல் குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்த வருடத்தில் தற்போது வரை இல்லாத அளவிற்கு மிக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தேசிய சுகாதார அமைப்பு கூறியுள்ளதாவது, கடந்த ஒரே நாளில் 1043 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இது தான் இந்த வருடத்தில் பதிவான குறைந்த பட்ச கொரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்டு சுமார் 39 நபர்கள் தற்போதுவரை உயிரிழந்துள்ளனர். இதனால் பாகிஸ்தானில் மொத்தமாக […]
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் தொடர்பில் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் வருடத்தில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா, படிப்படியாக உலகம் முழுவதும் பரவியது. எனினும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டதால், பல்வேறு நாடுகளில் கொரோனா குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். எனினும் கொரோனா தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. எனவே உலக நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 17.77 கோடி மக்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். […]