சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று 626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 455 பேருக்கு […]
Tag: கொரோனா தோற்று
செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கொரோனா நோய் தொற்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் ஹாசூர் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் போட்டி நடைபெறும் தேதிகள் குறித்து பின்னர் […]
கொரோனா தொற்று காரணமாக ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமான சேவை கொரோனா கட்டுப்பாட்டின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா காரணமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பாகிஸ்தான், இந்தியா போன்ற எட்டு நாடுகளை சேர்ந்த விமான பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் இருந்து வரும் விமான பயணிகள் 48 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். மேலும் இதில் […]
ஷாங்காய் நகரில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது தினமும் 5 ஆயிரம் வரை பதிவாகி வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டில் போடப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் உலகளாவிய வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஷாங்காய் நகரில் நேற்று கொரோனா அறிகுறி இல்லாமல் 6,500 பேர் மற்றும் அறிகுறியுடன் 260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அந்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர்களிடம் […]
துபாய்க்கு செல்லும் இந்திய பயணிகள் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபு எமிரேட்ஸ் இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்தது. தற்போது இந்தியாவில் கொரோனா குறையத்தொடங்கியுள்ளது. எனவே அரபு நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் கோல்டன் விசா உள்ளவர்கள் மட்டும் சிறப்பு விமானங்களில் துபாய் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரபு எமிரேட்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விமானத்தில் பயணிக்கும் மக்களிடம் குடியிருப்பு விசா இருக்க வேண்டும். மேலும் […]
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கொரோனா தொற்று உறுதியாகிய நோயாளிகள் சிகிச்சைக்கு செல்ல மறுத்து சுகாதாரத்துறை ஊழியர்களை அலைக்கழித்ததுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அருப்புக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட குல்லூர் சந்தை பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளனர். அவர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது அதில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் நான்கு பேர் மட்டுமே சிகிச்சைக்கு ஒத்துழைத்து மருத்துவமனைக்கு சென்றனர். மீதமுள்ளவர்கள் […]
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. ஜூலை 26ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 74,622 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 957 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் மட்டும் இன்று காலை நிலவரப்படி 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 963 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் […]