தமிழகத்தில் பண்டிகை நாட்களில் பொருட்களை வாங்கிச் செல்லும் போது பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்பதால் இன்னும் ஓராண்டிற்கு முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பணிபுரியம் தூய்மை பணியாளர் பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார். […]
Tag: கொரோனா நடவடிக்கை
சென்னையில் பண்டிகை விடுமுறை நாட்களில் வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அரசின் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து வணிக வளாகங்களில் பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை குறைந்த எண்ணிக்கை நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து இந்தப் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் முகக்கவசம் அணிபவர்கள் மீது […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் பணியாற்றி வருகிறார். இவர் வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்த 5 தேதி முதல் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முன்பே அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மு.க. ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடாமல் கட்டுப்படுத்துதல் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து கொரோனா பரவல் போன்றவற்றைக் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் சேவைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா தொற்று கணிசமாக குறைந்த நிலையில் ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கப்பட்டு முன் பதிவு செய்திருந்தால் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி விட்டு நிற்பது போன்ற கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் […]
விஜய் சேதுபதியின் படக்குழுவினருக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வருகிறது. நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. படப்பிடிப்பை காண்பதற்காக அப்பகுதியில் இருக்கும் பொது மக்கள் அந்த மண்டபம் முன் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சுகாதாரத் துறையினர் அங்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் மற்றும் ஊழியர்கள் […]
கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றி மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு நாட்டு மக்களின் நலன் கருதி ஊரடங்கு காலத்தில் பல்வேறு தளர்வுகளை கொடுத்திருக்கிறது. இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் கூறுகையில், “தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளான பொதுப்போக்குவரத்து, அதாவது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு அனுமதி, வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, இவை அனைத்தும் மக்களின் பொருளாதார இழப்பை ஈடு செய்யும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது, மற்றபடி கேளிக்கைகளில் நடத்தவும் […]
திருப்பூர் தொடர்ந்து ஈரோட்டிலும் கிருமிநாசினி சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. காய்கறி சந்தைக்கு வரும் மக்களுக்கு இந்த சுரங்கப்பாதை வழியாக ஐந்து வினாடிகள் சென்றாலே வைரஸ் அழிந்துவிடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஈரோட்டில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார். கொரோனா தமிழகத்தில் பாதித்த மாவட்டங்களில் அதிகம் இருக்கக்கூடிய மாவட்டங்களான ஈரோடு மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. மொத்தம் 32 பேர் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 28 பேர் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பூரண குணமடைந்து வீட்டில் மருத்துவர் ஆலோசனையில் இருக்கின்றார். மதுரையை சேர்ந்து ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று கன்னியாகுமரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 40 வயது நபர் உயிரிழந்துள்ளார். இதனிடையே உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் இரண்டு நாளில் வீடு திரும்ப இருப்பதாக […]
மருத்துவமனைகளில் உயிர் காக்கும் கருவிகள் தட்டுப்பாடின்றி பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடுகள் விதித்து கொள்ள வேண்டும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனோவை எதிர்கொள்ள பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகள் விதித்து கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.ஏழை எளிய குடும்பங்கள் ஒவ்வொன்றிக்கும் அரசாங்கம் உடனடியாக 3000 ரூபாய் வழங்க முன்வரவேண்டும். ரேஷன் கார்டுகள் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தாமல் அடையாள அட்டைகளை சரிபார்த்து வழங்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் […]