Categories
மாநில செய்திகள்

கோவிட் 19 நிதியுதவி வழங்கியதில் நடந்துள்ள முறைகேடு… விளக்கமளித்துள்ள தமிழக அரசு…!!!

தமிழக அரசின் ஆணைப்படி கொரோனா நிதி உதவியானது ஒழுங்கான முறையில் வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கியுள்ளார்.  Covid-19 எனப்படும் மிகக் கொடிய கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு பலர் தங்களது குடும்பத்தினரை விட்டு உயிரிழந்துள்ள சோகமானது நிகழ்ந்துள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைடுயத்து மாநில […]

Categories
உலக செய்திகள்

கொரோனா காலத்தில்…. ஏழைமக்களுக்கு உதவி…. பேட்டி அளித்த இலங்கை நபர்….!!

கொரோனா காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்தவர்களுக்கு இலங்கையைச் சேர்ந்தவர் உதவி செய்து வருகிறார். இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அங்கு கடந்த 20ஆம் தேதி முதல் வரும் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பொருளாதார ரீதியாகவும் வேலை இன்றியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வருமானமின்றி தவிக்கும் மக்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து ஒருவர் உதவி செய்கிறார். அவர் கொழும்பில் உள்ள களனி பகுதியைச் சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு…. நிதியுதவி வழங்கிய ஈழத்தமிழ் சிறுவர்கள்…!!!

லண்டலின் வசிக்கும்  ஈழத்தமிழ் சிறுவர்கள் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 6 லட்சம்  வழங்கியுள்ளனர் . தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு தொற்றை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில்  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .மேலும் பொது மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று நிவாரண நிதி உதவி வழங்க விருப்பம் உள்ளவர்கள் “தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு” […]

Categories
விளையாட்டு

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ….டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ரூ 1 லட்சம் நிதியுதவி …!!!

தமிழகத்தில் கொரோனா நிவாரண பணிகளுக்காக பல்வேறு பிரபலங்கள் ,தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நிதியுதவி வழங்கி வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 ம் அலை வேகமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்திலும் இதன் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. அதேசமயம் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா நிதி நிவாரணப் பணிகளுக்காக தமிழக முதலமைச்சர் , பொதுமக்களுக்கு தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதை அடுத்து பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சியினர், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நூதன முறையில் கொரோனா நிதி…. கடன் தள்ளுபடி…. பாராட்டிய பொது மக்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி திரட்டி வரும் டீக்கடை உரிமையாளரை பொது மக்கள் பாராட்டியுள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வம்பன் நால்ரோடு கடைவீதியில் பகவான் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் பொது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர். இதனால் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கால் மக்கள் வேலையின்றி அவதிப்பட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளதால் டீ கடையில் கடன் வைத்திருந்த கடன் பாக்கியை தள்ளுபடி செய்துள்ளார். மேலும் கடைக்கு […]

Categories

Tech |