தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]
Tag: கொரோனா வார்டு
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
குஜராத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நடந்த தீ விபத்தில் 18 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பருச் நகர் உள்ள கொரோனா சிகிச்சை மையமான நலன்புரி மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 1 அளவில் திடீரென கொரோனா வார்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த வார்டில் இருந்த சுமார் 50 கொரோனா நோயாளிகள் தீ விபத்து ஏற்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் சிலர் அங்கிருந்து தப்பித்து வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து […]
குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் வார்டில் திடீரென்று தீ பற்றி எரிந்ததில் 18 பேர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் பருச் என்ற நகரில் இருக்கும் நலன்புரி மருத்துவமனையில் அதிகாலை 1 மணிக்கு கொரோனா நோயாளிகளின் வார்டில் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. அங்கு சுமார் 50 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதனால் தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பால்கர் […]
திண்டுக்கல்லில் அரசு கல்லூரி விடுதி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கொரோனா வார்டாக மாற்றப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு எம்.வி.எம். மகளிர் கல்லூரியில் கொரோனா தோற்று அதிகரித்தபோது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொரோனா வார்டு அமைக்கப்பட்டது. அதன்பிறகு தொற்று குறைந்ததன் காரணமாக வார்டு மூடப்பட்டது. இந்நிலையில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால் மறுபடியும் கொரோனா வார்டு கல்லூரியில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின. இதனை முன்னிட்டு கிருமி நாசினி மருந்து தெளித்து […]
உத்திரப்பிரதேசம் ஜான்சி மாவட்டத்தில் சிறைச்சாலையில் 128 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நான்கு கூடங்கள் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தில் இருக்கின்ற சிறைச்சாலையில் 128 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் அங்கு இருக்கின்ற நான்கு கூடங்கள் கொரோனா மருத்துவமனை வார்டாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து சிறைச்சாலை இயக்குனர் கூறும்போது, சிறைச்சாலையில் முதலில் இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறி இருந்ததாகவும் பின்னர் அவர்களுக்கு தொற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது எனவும் கூறினார். […]
கொரோனா வார்டுகளில் பணியாற்ற கூடுதல் மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களை வழங்குமாறு டெல்லி அரசிடம் தனியார் மருத்துவமனை கோரிக்கை வைத்துள்ளது உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றின் தாக்கம் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதுவரை 47,102 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 837 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப் பட்டதால் தொற்றின் பரவல் மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அரசின் மதிப்பீடு படி […]
கொரோனா குறித்து விழிப்புணர்வோடு இருக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. வைரஸ் குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டால் அரசு மருத்துவமனை அல்லது சுகாதார நிலையங்களை அணுகுமாறு பொதுமக்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் ஏற்பட்டால் மருந்தகங்களுக்கு சென்று ஊசி போட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல பெருந்துறையில் மாவட்ட வருவாய் அலுவலர் […]