கொரோனா விதிமுறைகளை மீறிய தனியார் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கொரோனா விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்கிறார்களா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனை அடுத்து எஸ்.என்.புரம் பகுதியில் 3 தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்கள் முகக் கவசம் அணியாமல் பணியில் ஈடுபட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் 3 தனியார் நிறுவனங்களுக்கும் தலா 5000 […]
Tag: கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் வந்த நபர்கள்
லண்டன் மேயர் ரயில்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அது கிரிமினல் குற்றமாகும் என்பதை சட்டமாக்க வேண்டும் என பிரிட்டனை அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி எராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த ஜனவரி முதல் கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்ததால் கடந்த ஜூலை 19 ஆம் தேதி முதல் கொரோனா கட்டுபாடுகள் விலக்கப்பட்டது. இதனிடையே பேருந்து, […]
முகக்கவசம் அணியாமல் வந்த 30 நபர்களிடம் காவல்துறையினர் அபராதம் வசூலித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் இருக்கும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் வந்த 30 நபர்களை காவல்துறையினர் பிடித்துள்ளனர். இதனையடுத்து முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் காவல்துறையினர் ரூ.200 அபராதம் வசூலித்துள்ளனர். மேலும் காவல் துறையினர் அவர்களிடம் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு எச்சரித்து அனுப்பியுள்ளனர்.