உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் 3 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கொரோனா கட்டுப்பாட்டு முறைகளை தீவிர படுத்தியுள்ளது. அதன்பிறகு மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப் பட்டுள்ளதோடு, […]
Tag: கொரோனா வைரஸ்
சீன நாட்டில் தற்போது உருமாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் 3 பேர் பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை இந்தியாவில் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், பிரதமர் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டானின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய அறிவுரைகளை வழங்கினார். அவர் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையின்படி கொரோனா பரவலை […]
சீன நாட்டில் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்திற்குள் சீன நாட்டில் புதியதாக 31,454 பேருக்கு கொரோனா நோய் தொற்று பரவியுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இவர்களில் 27,517 பேருக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. இந்த கொரோனா நோய் பாதிப்புகளால், அந்நாட்டில் பெரியளவில் ஊரடங்குகளை விதிக்கவும், அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளை நடத்தவும், […]
சீனாவில் உள்ள உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 வருடங்களாக பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், தற்போது தடுப்பூசியின் காரணமாக தொற்றின் தாக்கம் ஓரளவு குறைந்து மக்களின் இயல்பு வாழ்க்கையானது திரும்பியுள்ளது. இருப்பினும் ஒமைக்ரான் போன்ற உருமாறிய வைரஸ் தொற்றுகள் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. சீனாவில் […]
சீனா நாட்டில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகின்றது. சீனா நாட்டில் உகான் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தான் கொரோனா நோய் தொற்று உலகிலேயே முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி வரலாறு காணாத அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில தினங்களாக […]
இனி வருகின்ற நாட்களில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா விளங்குகிறது அங்கு வைரசின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழலில் ஒமேக்கான் வைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் விதமாக புதுப்பிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை ஜனாதிபதி பைடன் நேற்று முன்தினம் செலுத்திக் கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து […]
உலக சுகாதார மையம், உலக நாடுகளில் கொரோனா தொற்று 24% குறைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலக நாடுகளில் தற்போது கொரோனா தொற்று குறைந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பியா மற்றும் ஆப்பிரிக்காவில் ஏறக்குறைய 40% மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு கொரோனா பரவல் குறைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புகளும் குறைய தொடங்கியிருக்கிறது. எனினும், ஆசியாவின் ஒரு சில இடங்களில் அதிகமாக இருக்கிறது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தினுடைய தலைவராக இருக்கும் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ், […]
உலக சுகாதாரத்துறை நிறுவனத் தலைவர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று இன்று உலகம் முழுவதும் பரவி மக்களை பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றினால் பொதுமக்கள் உடல் அளவிலும், மன அளவிலும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறு விதமான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் காரணமாக பொதுமுடக்கங்கள் போடப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டதால் ஓரளவு தொற்றின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸின் திரிபான ஒமைக்ரான் வைரஸ் […]
வடகொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் மேல் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலக நாடுகளை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் வட கொரியாவில் கொரோனா தொற்று இல்லை என்று கூறிவந்த அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 12 ஆம் தேதி அன்று தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தினார். மேலும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தினார். எனினும் ஒவ்வொரு நாளும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை அன்று 2 […]
கனடாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸிற்கு எதிரான தாவர அடிப்படைக்கொண்ட தடுப்பூசியை கண்டுபிடித்திருக்கிறார்கள். கனடாவில் மெடிகாகோ என்னும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள்கொரோனாவிற்கு எதிரான தாவர அடிப்படை உடைய தடுப்பூசியை தயாரித்திருக்கிறார்கள். தடுப்பூசியின் சிறப்பான செயல்பாட்டிற்காக, ஏஎஸ் 03 என்ற பொருள் சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்தடுப்பூசிக்கான மூன்றாவது கட்ட பரிசோதனையானது சுமார், 24,141 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்த தாவர தடுப்பூசியானது, ஐந்து விதமான உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ்களை எதிர்த்து 69.5% செயல் […]
கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் மொத்தம் நாற்பத்தி ஏழு லட்சம் பேர் ஆனால் மோடி பொய் கூறுகிறார் ராகுல் காந்தி குற்றச்சாட்டு. உலக சுகாதார அமைப்பு இதுவரை கொரோனா அல்லது சுகாதார அமைப்பு மற்றும் சமூகத்தின் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 1.49 கோடி மக்கள் உயிரிழந்துள்ளதாக வியாழக்கிழமை அன்று தெரிவித்தது. இதில் இந்தியாவில் மட்டும் 47 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது உலக அளவில் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு […]
பீஜிங்கில் கொரோனா வைரஸுக்கு புதிதாக 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த ஒரே நாளில் கொரோனா வைரஸின் பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் ஷாங்காய் நகரை தொடர்ந்து பீஜிங்கிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் பீஜிங்கில் ஏறத்தாழ 2 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 46 பேருக்கு தோற்று உறுதி […]
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் தற்போது 6 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ஒன்றிய அரசு அனுமதியுடன் தடுப்பூசி வழங்கப்பட்டது. […]
இத்தாலி நாட்டில் தினசரி பலி எண்ணிக்கை 143 பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இத்தாலியில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,62,609 ஆக இருந்தது. இது ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களில் பிரிட்டனை அடுத்து இரண்டாவது மிகப்பெரிய எண்ணிக்கை ஆகும். இந்த நிலையில் நேற்று இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ்க்கு 70, 520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் […]
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனா வைரஸுக்கு 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் மருத்துவம் தமிழகத்தில் நேற்றைய கொரோனா வைரஸ் பதிகபட்டவர்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 17 ஆயிரத்து 125 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 12 ஆண்கள், 10 பெண்கள் உட்பட 22 பேர் கொரோன வைரஸுக்கு பாதிக்கபட்டுள்ளனர். மேலும் அதிகபட்சமாக சென்னையில் 8 மாவட்டங்களில் 12 பேருக்கு தொற்று பதிவாகி உள்ள நிலையில் 30 மாவட்டங்களில் […]
ஒமிக்ரானின் துணை வைரஸான BA.2 அமெரிக்காவில் காட்டுத்தீயைப் போல வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க மருத்துவரான Dr. Anthony Fauci கொரோனா முற்றிலும் காணாமல் போகப் போவதுமில்லை, ஒழிய போவதுமில்லை என்று கூறியுள்ளார். மேலும் விழாக்களுக்கோ, விருந்து நிகழ்ச்சிகளுக்கோ செல்பவர்கள் தாங்கள் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க போகிறோம் என்பதை தாங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் அமெரிக்காவில் அண்மையில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். […]
இனி தடுப்பூசி முகாம் கிடையாது என்று சுகாதாரத்துரை தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் தடுப்பூசி முகாம் அமைத்து மக்களை பயனடையச் செய்கிறது தமிழ்நாடு அரசு. தமிழகத்தில் மேகா தடுப்பூசி முகாம்களுடன் இணைந்து வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டு 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த தொடங்கிய நிலையில் 12 […]
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவிலான கொரோனா நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இந்த நிலையில் உலக மொத்தம் கொரானா வைரஸுக்கு ஒரே வாரத்தில் 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு கடந்த வாரத்தை விட 16% குறைந்துள்ளது. மேலும் புதிதாக 26,௦௦௦ பேர் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உலக அளவில் கொரோனா வைரஸ் […]
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2129 பேருக்கு கொரோனா வைரஸுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் மூலமாகவும் பரவி வருவதாக தெரிவித்த நிலையில் அந்நாட்டு அரசு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சீனாவில் கடந்த 24 மணி […]
அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் 54.9% பேர் பிஏ2 வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி ஒமைக்ரான் வைரஸின் துணை வைரஸன பி. ஏ. 2 ஆத்திகம் செலுத்துகிறது என்று தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பி. ஏ. 2 வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியது என்றும் பி.ஏ.1 வைரஸை விட 30% அதிகம் பரவும் என்று அறிவித்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த ஒரு வாரத்தில் […]
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,393 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கி உள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சீனாவில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலமாக தான் கொரோனா வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேசிய சுகாதார ஆணையம் […]
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 9 மருத்துவமனைகளில் 549 நாட்களுக்கு பிறகு குணமைடைந்து வீடு திரும்பி உள்ளார். சீனாவில் முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸை தடுப்பதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால் தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க நாட்டின் நியூமெக்சிகோ மாநிலம் ரோஸ்வெல் நகரைச் சேர்ந்தவர் டானல் ஹண்டர் (வயது 43) . இவருக்கு அக்டோபர் மாதம் 2020 ஆம் ஆண்டு […]
சீனாவில் கடந்த ஒரே நாளில் மட்டும் 214 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி கடந்த ஒரே நாளில் மட்டும் 214 பேரை கொரோனா பாதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சீனாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு அதிகபட்ச தொற்று எண்ணிக்கை இதுதான். இந்த […]
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவசர நிலை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரானா வைரசால் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 8 கோடியை தாண்டியுள்ள நிலையில் 9.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் […]
ஜப்பான் இளவரசி யாகோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜப்பான் நாட்டின் இளவரசி யாகோ ஆவர். இவர் கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் யகோவிற்கு நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனை வளாகத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு […]
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எணிக்கை அதிகரித்து வருவதாக ஐரோப்பிய சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து மக்களிடம் அதிக பதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புகளை கட்டுப் படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தி வருகிறோம். ஆனாலும் வைரஸ் உருமாற்றமடைந்து அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40. 34 கோடியாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச சுகாதார […]
சீனாவில் உள்ள பெய்ஸ் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. உலகிலேயே சீனாவில் தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உலகில் பெரும்பாலான நாடுகளில் இந்த வைரஸ் பரவத்தொடங்கியது. மேலும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கவிருக்கும் நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையயில் சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள பெய்ஸ் நகரில் திடீரென்று கொரோனா,ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியது. மேலும் பெய்ஸ் […]
கொரோனா வைரஸின் அனைத்து வகை உருமாற்றங்களையும் தடுப்பதற்கு புதிய வகை தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் உள்ள காசி நஸ்ருல் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள விஞ்ஞானிகள் இணைந்து கொரோனா வைரஸின் அணைத்து உருமாற்றத்தையும் தடுக்கும் வகையில் தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இனிமேல் கொரோனா வைரஸ் எந்தவித மாற்றத்தை அடைந்தாலும் அதனைத் எதிர்த்து இந்த தடுப்பூசி செயல்படும் என்று உறுதியளித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் அபிஸ்கோவேக் தடுப்பூசி நோய் […]
வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி ஜமைக்காவில் இன்று நடைபெற இருந்தது. ஆனால் அயர்லாந்து அணியில் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று […]
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேசமயம் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ்பரவல் அதிகரித்து வருவதால் 3-வது அலையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ‘ஒமைக்ரான்’ வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் […]
பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. பிரபல கால்பந்து நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அணி வீரர்களிடமிருந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அதோடு பிஎஸ்ஜி கிளப் அணியில் இடம்பெற்றிருந்த 4 வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் வன்னஸ் நகரில் பிரெஞ்சு கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த சீசன் பிக் பேஷ் டி20 லீக் போட்டியில் மீதமுள்ள போட்டிகள் மெல்போர்னில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 11-வது சீசன் பிக் பேஷ் டி20 லீக் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது . இதில் நேற்று மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது . பலத்த பயோ பபுள் பாதுகாப்பில் இருந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது […]
பிரபல டென்னிஸ் வீரர் பெனாய்ட் பைரேவுக்கு 250 வது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ், ஒமைக்ரான் வைரஸ் என கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.இதில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வீரர், வீராங்கனைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பிக்பாஷ் தொடர், ஆஷஸ் டெஸ்ட் , ஜூனியர் உலக கோப்பை என பல்வேறு போட்டிகளில் வீரர் , வீராங்கனைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க இருந்த அயர்லாந்து அணியில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது . அயர்லாந்து கிரிக்கெட் அணி வருகின்ற ஜனவரி மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது .இத்தொடரில் பங்கேற்பதற்காக அயர்லாந்து அணி ஃபுளோரிடாவில் இருந்து ஜமைக்காவிற்கு வந்தடைந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங், ஷேன் கட்கே […]
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான கங்குலி கடந்த 28-ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் கொல்கத்தாவிலுள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் லேசான அறிகுறிகளுடன் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த சவுரவ் கங்குலி இன்று மருத்துவமனையில் இருந்து […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று 610 ஆக இருந்த தொற்று இன்று 739 அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 758 ஆகவும், 614 பேர் டிஸ்டார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,02,588 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கிடையே ஆட்டம் ரத்து செய்யப்பட்டது . 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் இலங்கை – வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 32.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்திருந்தபோது ,நடுவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் .இதனால் அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் “பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று மாலை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . […]
பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் பங்குபெறும் வீரர்கள் மற்றும் பணியாளர்கள் 103 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது . இங்கிலாந்தில் நடந்து வரும் பிரபல கால்பந்து போட்டியான பிரீமியர் லீக் போட்டி கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்று வந்தது .அதோடு போட்டியில் பங்கு பெறும் வீரர்கள் மற்றும் மைதான ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி கடந்த வாரம் வீரர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 15,189 பேருக்கு ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது […]
இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருந்த 2-ம் நாள் ஆட்டதில் வீரர்கள் குழுவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அரைமணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்னில் சுருண்டது. இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் வீரர்கள் […]
பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் கடந்த வாரத்தில் மட்டும் 90-க்கும் மேற்பட்ட வீரர்கள், பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் சில போட்டிகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் லிவர்பூல்-லீட்ஸ் மற்றும் வோல்வ்ஸ்-வாட்போர்டு அணிகளுக்கிடையேயான ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் – லீட்ஸ் யுனைடட் அணிகள் மோத இருந்தது .அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரெர்ஸ் – வாட்போர்டு அணிகள் விளையாட இருந்தது .இந்நிலையில் […]
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3 வீரர்கள் உட்பட 4 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டனர். இந்நிலையில் வெஸ்ட் […]
கொரோனா தொற்று எதிரொலி காரணமாக பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ப்ரென்ட்போர்டு – மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோத இருந்தது . ஆனால் கொரோனா தொற்று எதிரொலி காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது .இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் வீரர்கள் மற்றும் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து […]
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பரவியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக […]
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் அரையிறுதிப் ஆட்டத்தில் இந்தியா-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. 12-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் இந்தியா-ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதற்கு முன் நடந்த காலிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்திய , இந்திய அணி […]
தென்கிழக்காசிய நாடுகளில் புதிதாக உருமாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தற்போது உருமாற்றமடைந்துள்ளது. இந்த உருமாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸிற்கு ஓமிக்ரோன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு தென்கிழக்காசிய நாடுகளை எச்சரித்துள்ளது. அதாவது புதிதாக உருமாற்றமடைந்த கொரோனாவிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி அதிகமான பொதுமக்கள் ஓரிடத்தில் ஒன்றாக கூடுவது […]
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உள்நாட்டு பயணங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை சீன அரசு கொண்டு வந்துள்ளது. சீனாவில் மூன்றில் இரண்டு பங்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கானோர் புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு உகானிலிருந்து கொரோனா வைரஸ் பரவி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது பரவத் தொடங்கி உள்ள புதிய வகை வைரஸ் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது கடந்த 2019ஆம் […]
சீனாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பள்ளிகளை மூடவும் விமானங்களை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் சீனாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் மீண்டும் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. இதில் சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து சீனாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதால் நாடு முழுவதும் மின்தடை அதிகரித்துள்ளது. இதனால் மங்கோலியாவில் இருந்து […]
கொரோனா வைரஸ் பரவலானது விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் அடுத்த ஆண்டு இளவேனில் பருவத்தில் கொரோனா வைரஸ் பரவலானது முடிவுக்கு வந்துவிடும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn கூறியுள்ளார். அதிலும் தடுப்பூசியால் தடுக்க இயலாத ஒரு திடீர் மாறுபாடு அடைந்த புதிய வைரஸானது உருவாகாத வரை இதனை நாம் எளிதாக கையாண்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடலாம் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக எந்த தொற்றானாலும் நெடுங்காலமாக […]