தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 5 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள் என தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் சென்று திரும்பிய 43 வயது நபருக்கு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. டெல்லி சென்று திரும்பிய 5 பேரில் 3 பேருக்கு விழுப்புரத்திலும், 2 பேருக்கு மதுரை […]
Tag: கொரோனா வைரஸ்
உத்தரகண்ட் மாநிலத்தில் லாக்டவுன் விதிகளை மீறியதாக இதுவரை 1991 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விதி மீறல் காரணமாக 362 பேர் மீதி எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இதுவரை 1963 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் பல இடங்களில் பொதுமக்கள் ஊரடங்கை மீறி வெளியே நடமாடி வருகின்றனர். அவ்வாறு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது காவல்துறை […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜம்மு காஷ்மீரின் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் கூறியதாவது, நோய் தொற்று பாதித்துள்ள 4 பேரில் இருவர் ஷோபியான் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், மேலும் இருவர் ஸ்ரீநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார். 4 பேரும் வெளிநாடு சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்ட நிலையில், கொரோனா நோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை […]
தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக முதல்வர் ரூ. 9,000 கோடி கேட்டு பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளார். தமிழகத்தில் தீவிரமாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையை […]
21 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சரவை செயலாளர் ராஜீவ்கவுபா மறுப்பு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் உலகளவில் உயிரிழப்பு 40 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 1144 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை கொரோனா பாதிப்பால் 28 பேர் […]
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிழந்தவர்கள் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ள நிலையில் 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் […]
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 898ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 39 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தனிப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா அறிகுறி உள்ளவர்களை தேடி கண்டறிந்து அவர்களது வீட்டின் முன் நோட்டீஸ் ஒட்டியும் மாநகராட்சி அந்த வீட்டில் […]
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனி முகாம்களில் வைத்து சிகிச்சை அளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்களை வீடுகளில் இருந்து வெளியேற்றி தனி முகாம்களில் வைத்து சிகிச்சை அளிக்க கோரி வழக்கறிஞர் ஜான் மில்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை வழக்கு குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டை மீறி திருமண ஊர்வலம் சென்ற மணமகனை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தால் போலீசார் அவர்களை எச்சரித்தும், வழக்கு […]
கர்நாடக மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தட்சிணா கன்னட மாவட்டத்தில் உள்ள சஜீபநாடு எனும் பகுதியில் குழந்தைக்கு தொற்று நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 இருந்து வந்த நிலையில், இன்று ஒரு நாள் மட்டும் 7 பேருக்கு தோற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இந்தியர்கள் 677 பேரும், வெளிநாட்டவர் 47 பேரும் அடங்குவர். இதுவரை இந்தியாவில் குணமடைத்தவர்கள் எண்ணிக்கை 67 […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. தமிழகத்திலும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கபட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். இதனால் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் அரண்மனை, சாலை தெருவில் செயல்பட்ட சந்தைகள் தற்காலிகமாக இட மாற்றம் செய்யபட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க சந்தைகள் […]
உலகையே அச்சுறுத்தி வரும்கொரானா வைரஸ் ஒவ்வொரு நாடுகளிலும் மரணத்தை ஏற்படுத்தி கதிகலங்க வைத்து வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை மகாராஷ்டிராவில் 121 , கேரளாவில் 110 பேரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் எண்ணிக்கையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். முன்னதாக 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 45 […]
மணிப்பூர் இளம்பெண் மீது இனவெறி தாக்குதல் நடத்தி, கொரோனா வைரஸ் என்று கத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் மணிப்பூர்.. இந்த மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் டெல்லியில் உள்ள ஒரு மார்க்கெட்டில் நின்றுள்ளார். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவன் அவர் அருகில் வந்து முகத்திலும், சட்டை மீதும் எச்சில் மற்றும் புகையிலையை காரி துப்பியுள்ளான். அதுமட்டுமில்லாமல் மேலும் அப்பெண்ணை பார்த்து நீ கொரோனா வைரஸ், சீனா கொரோனா வைரஸ் வருகிறது […]
கேரளத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசால் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் […]
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை கொரோனா பரவலை தடுப்பதற்காக அனைத்து பயணிகள் […]
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தொற்று நோய்கள், அம்மை நோய்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையை தற்போது கொரோனா நோயாளிகளுக்கும் அளிப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் இரத்தத்தை எடுத்து, கொரோனா பாதித்தவர்களுக்கு செலுத்துவதுதான் செலுத்துவதன் மூலம் சிகிச்சை அளிப்பதே பழமையான சிகிச்சை முறையாகும். ஏற்கனவே தொற்றுநோய் மற்றும் அம்மை போன்ற பாதிப்புகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முன்பு வரை இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. சமீபத்தில் சார்ஸ், எபோலோ நோய்களுக்கும் இந்த […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூகங்களுக்கு இடையே பரவவில்லை என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்படும் வேகம் குறைந்துள்ளது. சமூக பரவல் இல்லை என்றாலும் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை […]
தமிழகத்தில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நிலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. #UPDATE: One new #COVID19 positive case reported from Trichy. 24 Y Male, Dubai Return at #Trichy GH. Pt in isolation & stable. @MoHFW_INDIA @CMOTamilNadu #TNHealth — Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 26, 2020 துபாயில் இருந்து […]
சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 4 லட்சத்து 86 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் பலி எண்ணிக்கை ஆயிரத்து 700-ஐ தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா […]
உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், காலை 7-9 காலை உணவு விற்கலாம். மதியம் 12 – […]
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மக்களுக்கு தடையின்றி பொருட்கள் கிடைக்க மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். தனியார், சுயநிதி நிறுவனங்கள் கடன்களை வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் வரை தடை தொடரும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முக்கியமான கடைகளை திறக்க நேர அளவு நிர்ணயம் […]
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிகையானது 500ஐ தாண்டியுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நிலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில் தமிழகத்தில் 1,093 பேரிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனையில் 933 பேருக்கு கொரோனா இல்லை. 26 பேருக்கு பாதிப்பு உள்ளது. ஒருவர் குணமடைந்துள்ளார். 80 பேரின் ரத்த மாதிரிகள் […]
சென்னையில் அவசியமின்றி வெளியே வருவோர் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவிலும் 600க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு […]
தமிழகம் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே தனியார் பால் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் பால் முகவர்களின் கடைகளில் மட்டும் அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளனர். போலீஸ் கட்டுப்பாட்டை தொடர்ந்து நாளை முதல் பால் முகவர்கள் சில்லறை கடைகளுக்கு பால் விநியோகம் செய்ய மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் விவாகரத்து பெற்ற நட்சத்திர தம்பதியர் தங்கள் குழந்தைகளுக்காக சேர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியாக உள்ளது. பிரபல ஹிந்தி நடிகரான ஹிரித்திக் ரோஷன் பேஷன் டிசைனிங் துறையை சேர்ந்த சுஸானாவை கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு பிரிந்த ஹிரித்திக் ரோஷன், சுஸானாவும் அடுத்த ஆண்டே விவாகரத்தும் பெற்றனர். இந்த நிலையில் உலகம் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. அதன் படி அத்தியாவசிய தேவையில்லாமல் பொது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், தேவையில்லாமல் சிலர் வீட்டை விட்டு வெளியே வருதால் அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். அதை தொடர்ந்து நேற்று முதல்வர் பழனிசாமி தமிழக […]
சிறை கைதிகளை பரோலில் அனுப்ப ஹரியானா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 600 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இதில் மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்கள் தான் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை நோய் தோற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் முதல் பலியும் நேர்ந்துள்ளது. இந்தநிலையில், கொரோனா தோற்று பரவுவதை தடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 24ம் தேதி […]
கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் கொரோனா பரவலை தடுக்கலாம் என்றாலும், அந்த பரவல் தடுக்கப்பட சில நாட்கள் ஆகும். குறைந்த பட்சம் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் ஆகும் […]
மணல் சிற்பத்தின் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மணல் சிற்பக்கலைஞர் பட்நாயக்கிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. ஒடிஷா மாநிலம் பூரி பகுதியை சேர்த்த பட்நாயக், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி புவனேஷ்வரில் மணற்சிற்பங்களை வடித்துள்ளார். அதில் கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்போவோரிடம் இருந்து விலகியிருக்க வலியுறுத்தியும், வைரஸிற்கு எதிரான யுத்தம் குறித்து பீதியடைய வேண்டாம் என்பதை எடுத்துரைக்கும் வகையிலும் பட்நாயக் சிற்பங்கள் வரைந்துள்ளார். மேலும் உடலால் தனித்திருப்போம் உள்ளதால் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிந்தவர்கள் எண்ணிக்கை 21,283ஆக உயர்ந்துள்ளது. 4,71,060 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும்1,14,218 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,027 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் வேகமாக பரவும் கொரோனாவால் ஒரே நாளில் 247 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் புதிதாக 13,347 பேருக்கு கொரோனா உறுதியானதால் அமெரிக்காவில் மொத்தம் 68,203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ள […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இருவர், முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல தமிழத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குணமடைந்தார் என அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட் செய்துள்ளார். டெல்லியில் இருந்து ரயிலில் வந்த உத்தரபிரதேச வாலிபர் கொரோனா பாதிப்பில் இருந்து திரும்பி வருவதாக இன்னும் 2 நாட்களில் அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவார் என அவர் மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் கொரோனா சிகிச்சைக்காக 350 படுக்கைகளுடன் கூடிய ஓமந்தூரார் மருத்துவமனை […]
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23ஆக உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே கொலை நடுங்கச் செய்து வருகிறது. 195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க […]
கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் சீனாவையும் தாண்டியது ஸ்பெயின். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே கொலை நடுங்கச் செய்து வருகிறது. 195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனா வைரசால் உலகளவில் 19, […]
கொரோனா வைரஸ் உலகம் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் மக்களிடையே அச்சம் நிலவுகிறது. இதனால் நமது முன்னோர்கள் பாரம்பரியமாக பயன்படுத்திய தண்ணீரில் வேப்பிலையும், மஞ்சளும் கலந்த இயற்கை கிருமி நாசினியை தற்போது மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வெந்நீரில் வேப்பிலையையும், மஞ்சளையும் கலந்து வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நவீன நாகரிகயுகத்தில் வீடுகளில் சாணம் வைத்து மெழுகுவது, வீட்டு வாசல் முன்பு சாணம் தெளிப்பது, மஞ்சள் நீர் தெளிப்பது போன்ற நடைமுறைகள் குறைந்துவிட்டன. தற்போது கொரோனா அச்சத்தால் […]
மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணி தள்ளிவைப்பப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை தள்ளிவைக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கான தொடக்க பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பை எவ்வாறு நடத்த […]
இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரையில் 195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனா […]
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவிலும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இன்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதில், ரேஷன் கடைகளில், பயனாளிகளுக்கு அரிசி கிலோ ரூ.3-க்கும், கோதுமை ரூ.2-க்கும் வழங்கப்படும், […]
கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் கருவிகளை தயாரிக்க 2 தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் அல்டோனா டயக்னஸ்டிக்ஸ், மைலேப் ஆகிய 2 நிறுவனங்கள் கொரோனா பரிசோதனை கருவிகளை தயாரித்து வழங்க உரிமம் பெற்றுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அனைவரையும் பரிசோதனை செய்வது சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது. முன்னதாக நேற்று புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் […]
உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19, 100 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரையில் 195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. […]
கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 14ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளனர். மேலும் இன்று மாலை 6 மணி முதல் அனைத்து டீக்கடைகளையும் மூடவும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஆதரவற்றோர், இயலாதவர்களுக்கு உணவு வழங்குவதற்காக, […]
கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மதுரையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் 1 முதல் 9ம் வகுப்பு வரை பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.அதேபோல 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்றுள்ளது. 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 2ம் தேதி தொடங்கிய நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று வேதியியல், கணக்கு பதிவியியல் தேர்வுகள் நடைபெற்றன. […]
கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் நேற்று நள்ளிரவு முதல் லாக்-டவுண் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான பால், காய்கறிகள் உள்ளிட்ட மளிகைக் கடைகள், மருந்தகங்கள் திறந்தே இருக்கும் என மத்திய அரசு தெரித்துள்ளது. இந்த நிலையில் அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் வெளியே செல்லும் […]
தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ள நிலையில் அனைவரும் இரண்டு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி வைத்திருப்போம். ஆனால் அவற்றை சரியாக பராமரித்து வைத்தால் மட்டுமே அது கெட்டுப்போகாமல் இருக்கும். காய்கறிகள் எளிதில் வீணாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம். பச்சை மிளகாயை காம்புடன் வைத்திருந்தால் சீக்கிரம் வாடி போய் விடும். சீக்கிரம் வாடி போகாமல் இருக்க பச்சை மிளகாயை காம்பை நீக்கி விட்டு வைக்க வேண்டும். இதனை ஒரு […]
கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக இருந்தது. இதற்கிடையே நேற்று நள்ளிரவு தமிழகத்தில் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டார். இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இப்போதைக்கு மனித […]
உலகளவில் கொரோனா வைரசால் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் 195க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் தொடக்கத்தில் சீனாவில் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டேவந்தது. ஆனால் சமீபத்திய நாட்களில் அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் […]
ரிலையன்ஸ் ஜியோ தனது கொரோனா வைரஸ் அறிகுறி சரிபார்ப்பு கருவியை இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவியை myjio செயலி மூலம் மக்கள் அணுகலாம். ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் myjio பயன்பாட்டைத் திறக்கும்போது கொரோனா அறிகுறி சரிபார்ப்புக்கான பேனரைப் பார்க்க வேண்டும். ஜியோவின் இணையதளத்தில் இந்த கொரோனா அறிகுறி சரிபார்ப்பை ‘Corona Harega’ பேனரின் கீழ் காணலாம். கொரோனா அறிகுறி சரிபார்ப்பை கண்டுபிடிக்க இந்த வசதியினை பின்தொடரவும். ஒரு நபர் கொரோனா வைரஸ் அறிகுறி கொண்டுள்ளாரா […]
ஜப்பானின் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி ஓர் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா ? என்ற சந்தேகம் இருந்தது. உலக நாடுகளும் தங்களுடைய நாட்டு வீரர்களை ஜப்பானில் நடைபெறக்கூடிய ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்புவதா வேண்டாமா என்பது குறித்த பல்வேறு சந்தேகங்கள் இருந்தன. கொரோனா அச்சுறுத்தல்காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.கொரோனா அச்சத்தால் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க ஜப்பான் விடுத்த […]
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 195க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் குடியேறி மிரட்டி வருகிறது. இதனிடையே மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் இந்தியாவில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10 […]
தமிழகத்தில் தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் பகுதியில் தட்டுபாடின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக டேங்கர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கும் பணியில் குறைபாடுகள் இருந்தால் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் வெவ்வேறு இடங்களுக்கு சென்று குறைகளை சரி […]
புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனாவை கண்டறியும் புதிய உபகரணத்தை பயன்படுத்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உபகரணத்தின் மூலம் ஒரு வாரத்திற்குள் 1.5 லட்சம் சோதனைகள் வரை மேற்கொள்ள முடியும் என அந்த தனியார் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய கருவியின் விலை ரூ.80 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா கண்டுப்பிடித்த இந்த புதிய கருவி இன்று முதல் பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.