நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலையால் இதுவரை 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவலை தடுக்க பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனையடுத்து நாமக்கல் நகராட்சியில் 4-வது வார்டு உட்பட்ட காதிபோர்டு காலனி, என்.ஜி.ஓ காலனி, ராஜீவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் நகராட்சி ஆணையர் பொன்னம்பலத்தின் உத்தரவின்படி நேற்று தூய்மைப் பணியாளர்கள், சுகாதார அலுவலர் சுகவனம் மற்றும் சுகாதார […]
Tag: கொரோனா 2ஆம் அலை
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
இந்தியாவின் தற்போதைய நிலைமையை விளக்கும் வகையில் ஒரு புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தியாவை கொரோனாவின் இரண்டாம் அலை புரட்டிப் போட்டுவருகிறது. அதாவது கொரோனா பரவிய காலகட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அப்போது வெளிமாநிலங்களிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வந்தனர். அதன் பின்பு படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மீண்டும் வெளிமாநிலங்களுக்கு திரும்பினர். தற்போது கொரோனா ருத்ரதாண்டவம் ஆடி வருவதால் புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர், அதனை உணர்த்தும் வகையில் ஒரு புகைப்படம் […]
கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த 150 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தபடும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் 2ஆம் அலை நாட்டில் மிக மோசமாக பரவி வருகிறது. இந்நிலையில் தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து அனைத்து மாவட்டங்களில் தொற்றின் பாதிப்பு 15% மேல் இருந்தால் […]
கொரோனா தொற்று இந்தியாவில் மோசமடைந்து வரும் நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் இந்தியாவிற்காக பிராத்திப்போம் என பதிவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை மிக மோசமான நிலையை உருவாக்கியுள்ளது. உலகிலேயே கொரோனா தொற்று அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பு மருந்து தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனையடுத்து மற்ற நாடுகளிடம் உதவி கேட்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பல உலக நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு […]
கொரோனாவின் 2ஆம் அலையால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கூகுள் தலைமை செயல் அதிகாரி மற்றும் அமெரிக்க பிரதமர் உதவ முன்வந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றின் முதலாவது அலையை இந்தியா அனைவரும் பாராட்டத்தக்க விதத்தில் சமாளித்துள்ளது. ஆனால் தற்போது கொரோனாவின் 2ஆம் அலையில் இந்தியா மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3 லட்சத்திற்கு அதிகமானோர்பாதிக்கப்பட்ட நிலையில், 2,800 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் […]
ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், கொரோனா அபாயம் காரணமாக இந்தியாவிற்கு பயணத் தடை விதித்துள்ளது. இந்தியா தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையில் தத்தளித்து வருகிறது. இதனால் தினந்தோறும் நிலைமை மிகவும் மோசமடைந்துகொண்டே வருகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமையில் இருந்து சுமார் பத்து நாட்களுக்கு இந்திய பயணிகள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல தடை அறிவித்திருக்கிறது. இந்த தடையானது ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று இரவு 11:59 மணியளவிலிருந்து அமல்படுத்தப்படுகிறது. மேலும் கடந்த இரு வாரங்களில் இந்திய […]