நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. இதனால் ஒருசில மாநிலங்களில் கொரோன குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த தளர்வுகளை பயன்படுத்தி மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிகின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்படும். இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை எனவே தளர்வுகள் அறிவிக்கக் கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். […]
Tag: கொரோனா 2வது அலை
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சுனாமி போன்று இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை […]
இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் அதிகமாக காணப்படுவதால் ஹாங்காங் அரசு விமான சேவைக்கு தடைவிதித்துள்ளது. சீனாவில் இருந்து கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸின் பாதிப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்திருந்தது. ஆகையால் மக்கள் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்தனர். ஆனால் தற்போது இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனவைரஸ் 2-ம் அலை காட்டுத்தீ போல் பரவி கொண்டு வருகிறது. ஆகையால் பல நாடுகள் இந்தியாவுடன் கூடிய விமான சேவையை ரத்து […]
இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனவைரஸ் தற்போது இங்கிலாந்திலும் பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து கடந்த வருடம் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று பல கோடி மக்களின் உயிரை சூறையாடியது. மேலும் மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு தடுப்பூசி கண்டறியப்பட்டு நாடு முழுவதும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்ததால் தொற்றின் பாதிப்பு குறைந்து தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை சுனாமி போல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு ₹20 லட்சம் கோடி மதிப்பில் […]
நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை 100 நாட்கள் வரை நீடிக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]