Categories
உலக செய்திகள்

நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் ஆர்ப்பாட்டம்… தடுப்பூசியை எதிர்க்கும் ரஷ்ய மக்கள்…!!!

ரஷ்ய நாட்டில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திர வாகன அணிவகுப்பு போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பானது, கொரோனாவிற்கு எதிராக நடக்கும் போரில் தடுப்பூசி தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. எனவே ஒரு சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. அந்நாடுகளில், மக்கள் கட்டாய தடுப்பூசியை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கனடா மற்றும் நியூசிலாந்து […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே மகிழ்ச்சி செய்தி…! கொரோனாவுக்கு புதுவித மாஸ்க்…. அசத்தல் கண்டுபிடிப்பு…!!!!

கொரோனாவில்  இருந்து பாதுகாக்க புதுவித மாஸ்க் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில் தொடங்கி தற்போது ஒட்டுமொத்த உலகையும் ஆட்டி வரும் கொரோனா வைரசில்  இருந்து பொதுமக்களை காப்பாற்ற அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை  உலக நாடுகள் தொடர் நடவடிக்கையாக செயல்படுத்தி வருகின்றன. மேலும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டாலும் கொரோனா  மக்களை பாதிக்க தான் செய்கிறது. அதனால் பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில் இந்திய […]

Categories
உலக செய்திகள்

“தலைதூக்கும் கொரோனா”…. மருத்துவமனை பற்றாக்குறை…. தவிக்கும் பிரபல நாட்டு மக்கள்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில்  தலீபான் ஆட்சிக்கு வந்த பின்னர் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாடு தலீபான்களின் தேசமாக மாறி விட்டது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக குன்றி சோதனை காலம் தொடங்கியுள்ளது. மேலும் அந்நாட்டின் சொத்துக்கள் சுமார் 1000 கோடி டாலர் முடக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் ஒரு வேளை உணவுக்கே திண்டாடுகின்றனர். மேலும் 90 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தனது […]

Categories
மாநில செய்திகள்

மக்களே நிம்மதியா இருங்க…. தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்கு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

சென்னை, கிண்டி கிங் அரசு கொரோனா புறநோயாளிகள் பிரிவு, மருத்துவமனை கட்டமைப்பு ஆகிய வசதிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 70 சதவீதத்தினர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். ஆகவே தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே உயிரிழப்பில் இருந்து தற்காத்து கொள்ளலாம். தற்போது வரையிலும் 9.72 கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு கோடி, 10 லட்சத்து, 21 ஆயிரத்து […]

Categories
உலக செய்திகள்

பாலஸ்தீனத்தில் உச்சத்தை தொட்ட கொரோனா…. தீவிர கட்டுப்பாடுகள்… தடுப்பூசி முகாம்கள் அதிகரிப்பு…!!!

பாலஸ்தீனத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்திருப்பதை தொடர்ந்து பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. பாலஸ்தீனத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 64 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது. மருத்துவமனைகளில், படுக்கைகளுக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும் அதிக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. காஸா, வெஸ்ட் பேங்க் போன்ற பகுதிகளில் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசாங்க அதிகாரிகள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், பல பகுதிகளில் கொரோனா பரிசோதனை மையங்களும், தடுப்பூசி செலுத்தும் முகாம்களும்  அதிகமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: டிக்டாக் பிரபலம் திடீர் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!!

கொரோனா தொற்று காரணமாக சினிமா நட்சத்திரங்கள் பலரும் உயிரிழந்து வந்த நிலையில் தற்போது டிக்டாக் பிரபலம் பாஸ்கரன் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக்கில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தவர் பாஸ்கரன். இவருடைய நகைச்சுவையான டிக்டாக் வீடியோக்களை பார்த்து பலரும் இவரை பின்தொடர ஆரம்பித்தனர். மேலும் இவர் காதல் பாடல்களுக்கு அதிகமாக ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்ததால் இவரை எல்லோரும் செல்லமாக “Remo பாஸ்கரன் Daddy” என்று அழைத்தனர். இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று […]

Categories
உலக செய்திகள்

“சீனாவுக்கு இதுவும் வேணும்”… “இன்னமும் வேணும்”…. கொரோனா வக்கிது ஆப்பு… எகிரும் பாதிப்பு….!!

சீனாவில் கடந்த ஒரே நாளில் புதிதாக 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா முதன் முதலாக சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொடிய வைரஸ் உருமாறி இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு பரவி பெரும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தாலும் கூட அந்த பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதன்படி […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு “ஒரு முடிவே” கிடையாதா…? “மீண்டும் ரெடியாகுது புதிய வைரஸ்”…. எச்சரிக்கை விடுத்த WHO….!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா ஓமிக்ரானோடு நிற்காமல் அடுத்த சில திரிபுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் தொற்றுக்கான தொழில்நுட்ப ஆய்வு பிரிவு தலைவர் கூறியுள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா மென்மேலும் உருமாறி அனைத்து நாடுகளுக்கும் பரவுவதால் பொது மக்கள் பெரும் அச்சத்திலுள்ளார்கள். இந்நிலையில் கொரோனா ஓமிக்ரானோடு நிற்காமல் அடுத்து சில திரிபுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் தொற்றுக்கான தொழில்நுட்ப ஆய்வு பிரிவு தலைவரான மரியா வான் கூறியுள்ளார். மேலும் இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி அவசியம்”…. ஆராய்ச்சியின் முடிவுகளை…. வெளியிட்ட பிரபல நாடு….!!!

கொரோனா தடுப்பூசியின் ஆராய்ச்சி முடிவுகளை ஸ்வீடன் நாடு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசியை  அமலுக்குக் கொண்டு வந்தது. தற்போது ஸ்வீடன் நாட்டில் கொரோனா  தடுப்பூசி செலுத்துவதன் மூலம் ஏற்படும் பாதுகாப்பு பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் இந்த ஆய்வில் இரண்டாவது கட்ட தடுப்பூசி செலுத்தி 7 மாதங்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்கி விடுகிறது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஆனால் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தியிருந்தால் […]

Categories
உலக செய்திகள்

ஒமிக்ரான் பாதிப்பால் 5 லட்சம் பேர் பலி…. உலக சுகாதார மையம் வெளியிட்ட தகவல்…!!!

ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து தற்போது வரை சுமார் 5 லட்சம் மக்கள் பலியாகியிருப்பதாக உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அப்போதிருந்து, தற்போதுவரை சுமார் 13 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டா தொற்றை விட ஒமிக்ரான் வைரஸ் வீரியம் குறைவாக இருக்கிறது. மேலும், ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தக் கூடிய திறன் தடுப்பூசிக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 லட்சம் மக்கள் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் இறந்த நண்பன் மனைவியை…. மறுமணம் செய்த இளைஞர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

கொரோனாவால் இறந்த தன் நண்பரின் மனைவியை இளைஞர் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேத்தன் குமார் என்பவர் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கொள்ளேகால் தாலுகாவில் உள்ள  முள்ளூர் கிராமத்தில் வசித்து வந்தார். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஹனூர் டவுனை சேர்ந்த அம்பிகாவுடன் திருமணம் செய்தார். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்த நிலையில் கொரோனா 2-வது அலையின் போது சேத்தன் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட “ஆதார் கார்டு கட்டாயமில்லை”…. மத்திய அரசு அதிரடி….!!!

தடுப்பூசி போடுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்டில்  பொதுநல மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தடுப்பூசி போடுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் இல்லை என மத்திய அரசின் யு.ஐ.டி.ஏ.ஐ அமைப்பு கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்திருந்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆதார் கார்டு இல்லை என்றாலும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பலன்கள் கிடைப்பதை மறுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் சில தடுப்பூசி முகாம்களில் ஆதார் கார்டு இல்லையென்றால் தடுப்பூசிகள் செலுத்தப்பட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. சுகாதாரத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 5,104-ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 4,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 4,516 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 37 பேர் உயிரிழந்துள்ளனர். 20,237 பேர் குணமடைந்துள்ளனர். 1,15,898 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,20,505-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 32,92,559 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்…. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் தொடரப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் கௌதம் ஸ்ரீனிவாஸ் திங்கள்கிழமை தெரிவித்தாா். சேலம்-விருதாச்சலம் இருப்புப் பாதையில் வருடாந்திர ஆய்வு செய்த சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் கௌதம் ஸ்ரீனிவாஸ் ஆத்தூா் ரயில் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் கூறியதாவது கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் தொடர வேண்டும் என்று ரயில்வே துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், அனுமதி வந்தவுடன் ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவித்தாா். அதுமட்டுமல்லாமல் ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை…. மாநில அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் சமீப காலங்களாக மூடப்பட்டது. மேலும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது 6 முதல் […]

Categories
உலக செய்திகள்

3 வேளையும் இந்த சாப்பாடு தான்… வீரர்களுக்கு கொடுக்கப்படும் உணவால் சர்ச்சை… ரஷ்யா கண்டனம்…!!!

சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் உணவு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வரும் நிலையில் இதில் பங்கேற்க பல நாடுகளில் இருந்து வீரர்கள் வந்திருக்கிறார்கள். அதில் பல வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ரஷ்யாவில் இருந்து வந்த பனிச்சறுக்கு துப்பாக்கி சூடு வீராங்கனையான வலிரீயா வாஸ்நெத்சோவா என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், அவர் தனக்கு கொடுக்கப்பட்ட மோசமான உணவின் புகைப்படத்தை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போடணுமா…. இனி ஆதார் கார்டு கட்டாயமில்லை…. மத்திய அரசு அதிரடி….!!!!

கடந்த இரண்டு வருடமாக நாடு முழுவதும் கொரோனா எனும் கொடிய வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் பொதுமக்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் கார்டு கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று நிலவரம்…. சுகாதாரத்துறை செயலாளர் சொல்வது என்ன?… வெளியான தகவல்…..!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகமாக பரவி வந்தது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு […]

Categories
மாநில செய்திகள்

புத்தகக்கண்காட்சிக்கு போகணுமா…? எங்கு முன்பதிவு செய்யணும்..? வெளியான அறிவிப்பு…!!!

புத்தகக் கண்காட்சிக்கான முன்பதிவு ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 14 ஆம் தேதியில் இருந்து மார்ச் 6ஆம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறவிருக்கிறது கொரோனா பரவல் காரணமாக அதிக கூட்டத்தை தவிர்க்கும் வகையில், சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சியில் பங்கேற்கவுள்ள நபர்கள், இணையத்தளத்தில் முன்பதிவு செய்து அனுமதி சீட்டு பெற வேண்டும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் கூறியிருக்கிறது. மேலும், டிக்கெட் முன்பதிவானது bapasi.com என்ற இணையதளத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு பத்து ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. தமிழகம் முழுவதும் தேர்தலுக்கு பிறகு?….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகமாக பரவி வந்தது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பின் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தவகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. கேரளா அரசின் புதிய கட்டுப்பாடுகள்…!!!

கேரள அரசு, சர்வதேச பயணிகள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு அறிகுறிகளை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 38,684 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 28 நபர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கேரள அரசு, பிற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு புது கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, சர்வதேச பயணிகள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் கேரளாவிற்கு வந்ததிலிருந்து ஒரு வாரத்திற்கு கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என்று தங்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று…. இவ்ளோ பேருக்கா?…. சுகாதாரத்துறை சொன்ன பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று புதிதாக 7,524 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,04,762 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 23,938 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,28,151 ஆக உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

புதிய உச்சம்: “பிரபல நாட்டை” கதிகலங்க வைக்கும் “கொரோனா”…. பீதியில் மக்கள்…. அதிகரிக்கும் உயிரிழப்பு….!!

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் புதிய உச்சமாக 9,00,000 யும் கடந்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த தொற்றை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்கள். இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் புதிய உச்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,00,000 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?…. அடுத்த 3 வாரம் முக்கியமான காலகட்டம்…. சுகாதாரத்துறை செயலாளர்…!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகமாக பரவி வந்தது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பின் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தவகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு […]

Categories
தேசிய செய்திகள்

10 நாட்களுக்குள் கொரோனா இழப்பீடு…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நாகரத்னா போன்றோரை கொண்ட அமர்வு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து விசாரணைக்குப் பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதை சுலபமாக்குவதற்கு மாநில சட்ட சேவை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளருடன் ஒருங்கிணைந்து செயல்பட, அர்ப் பணிப்புடன் செயல்படக் கூடிய தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். அதன்பின் இறந்தவர்களின் பெயர், முகவரி, இறப்பு […]

Categories
மாநில செய்திகள்

இந்த தேதியில் தான் கொரோனாவின் 3 வது அலை உச்சம் பெற்றதாம்…. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவின் மூன்றாவது அலை வேகம் எடுக்க தொடங்கியது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு என இந்த வரிசையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை எந்த தேதியில் உச்சம் பெற்றது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 21 ஆம் தேதி தேசிய அளவில் தினசரி பாதிப்பு நாடு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. தமிழகத்தில் இன்று (பிப்…5)…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி தினசரி 1 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இப்பணியை மேலும் தீவிரப்படுத்தும் அடிப்படையில் மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி, அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும், 100 சதவீதம் நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஷாக்!…. “இனி விடுமுறை இவ்ளோ நாள் தானா?”…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

ஒடிசா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறையாக 14 நாட்கள் வழங்கப்பட்டு வந்தது. இதனால் ஊழியர்கள் வீட்டிலேயே வசதியாக ஓய்வெடுத்துக் கொள்ள முடிந்தது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கபடும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விடுமுறை வழிகாட்டுதல்களை ஒடிசா மாநில பொது நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை மாற்றியுள்ளது. அதன்படி இனி அரசு ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 7 நாட்கள் மட்டுமே அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும். அதேசமயம் காய்ச்சல் 7 நாட்களுக்கு மேல் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியால் கருத்தரிப்பதில் பாதிப்பு ஏற்படுமா…? அமெரிக்க நிபுணரின் விளக்கம்…!!!

அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொள்வது கர்ப்பம் தரிப்பதை குறைக்குமா? என்பது தொடர்பில் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் பெண்கள் கருத்தரிப்பது குறையும் என்ற தகவல்கள் பரவி கொண்டிருக்கிறது. இதுகுறித்து அமெரிக்க ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவன இயக்குனரான டாக்டர் ஆன்டனி பாசி தெரிவித்திருப்பதாவது, கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கர்ப்பமாவதை குறைக்கும் என்பது தவறானது. கொரோனா தடுப்பூசியால் கருவுறுதலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தற்போதைய […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு…. வெளியான தகவல்…!!!

சீனாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 39 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. உலகிலேயே சீனாவில் தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகில் பெரும்பாலான நாடுகளில் பரவத்தொடங்கி, தற்போது கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. அந்தவகையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 39 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 18 நபர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் தற்போது வரை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 241 நபர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த பகுதி மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளதால் பள்ளிகள் பிப். 1-ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகளும் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி நேரடி முறையில் வகுப்புகளை நடத்துகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் […]

Categories
உலக செய்திகள்

“இதுக்கும் ஒப்புதல் கொடுத்தாச்சு”…. இனி “கொரோனாவை” விரட்டிவிடலாம்… இங்கிலாந்தின் அதிரடி திட்டம்….!!

இங்கிலாந்தில் Novavax என்ற கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியினை பொதுமக்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசியினை மிகத்தீவிரமாக செலுத்தி வருகிறது. அதன்படி இங்கிலாந்தில் தற்போது வரை மாடர்னா உட்பட 4 தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அரசாங்கம் novavax என்ற nuvaxovid நிறுவனம் தயாரிக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியினை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. ஆகையினால் அந்நாட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன அண்ணி இப்படி பண்ணிட்டீங்க!”…. ஐஸ்வர்யாவின் இன்ஸ்டா பதிவால்…. ஷாக்கான தனுஷ் ரசிகர்கள்….!!!!

ஜனவரி 17-ஆம் தேதி அன்று தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். ஆனால் ஐஸ்வர்யா அதன்பிறகு இன்ஸ்டாகிராம் பக்கமே வரவில்லை. இதற்கிடையே ஐஸ்வர்யாவையும் தனுஷையும் ஒன்றாக சேர்த்து வைக்க அவர்களுடைய குடும்பத்தினரும், நண்பர்களும் முயற்சி செய்து வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் தனுஷூடன் தான் ஐஸ்வர்யா வாழ வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக உள்ளாராம். எனவே ரஜினி நீ தனுஷுடன் தான் இருக்க வேண்டும் என்று ஐஸ்வர்யாவிடம் கோபப்பட்டுள்ளார். இதனால் ஐஸ்வர்யா மிரண்டு போனாராம். எனவே […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!!

உலகம் முழுவதும் கொரோனா எனும் பெருந்தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையில் கொரோனா தொற்றால் இறப்போரின் குழந்தைகள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பெற்றோர்களை இழந்த 3,855 குழந்தைகளுக்கு பி.எம் கேர்ஸ் திட்டத்தில் இருந்து உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு நிறுவனங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு ரூபாய் 2,160-ம், பாதுகாப்பு நிறுவனங்களில் இல்லாத குழந்தைகளுக்கு 2,000 […]

Categories
மாநில செய்திகள்

அடடே!…. தமிழகத்தில் இவ்ளோ குறைஞ்சிடுச்சா?…. இனி ஒரே ஹேப்பி தான் போங்க….!!!!

தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 14,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நேற்று தமிழகத்தில் 16,096-ஆக இருந்த தொற்று பாதிப்பு இன்று மின்னல் வேகத்தில் குறைந்துள்ளது. அதேபோல் கொரோனாவால் ஒரே நாளில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 37,636-ஆக அதிகரித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,88,599-லிருந்து குறைந்து 1,77,999-ஆக உள்ளது. தினசரி பாதிப்பு 30,000-ஐ நெருங்கிய நிலையில் தற்போது பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

சோதனைக்கு மேல சோதனை…. எப்படி தாங்குறது….? ஐஸ்வர்யா தனுஷ்க்கு வந்த சோதனைய பாத்தீங்களா….!!!

ஐஸ்வர்யா தனுஷ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் ஒரு திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகி மற்றும் நடனக்கலைஞரும் ஆவார். இவர் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுசின் மனைவியும் ஆவார். தனது கணவர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இவர் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி இவரது கணவர் தனுஷுடன் விவாகரத்து செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். தற்போது கொரோனா […]

Categories
சினிமா

தொடர்ந்து அடி வாங்கும் ஐஸ்வர்யா…. இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ…?

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுசை காதலித்து கடந்த 2004 ஆம் வருடத்தில் திருமணம் செய்தார்.இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக தங்கள் இணையதள பக்கங்களில் அறிவித்தார்கள். அதன்பின்பு, இருவரும் தங்கள் படப்பிடிப்புகளில் பிஸியாகி விட்டனர். இந்நிலையில், ஐஸ்வர்யா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தன் இணையதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதில் […]

Categories
உலக செய்திகள்

என்ன விவாகரத்து எண்ணிக்கை குறைந்துள்ளதா….? ONS தெரிவித்த புள்ளி விவரம் இதோ….!!

விவாகத்துகளின் எண்ணிக்கை பிரித்தானியாவில் குறைந்துள்ளதாக தேசிய புள்ளியல் அலுவலகம் ONS தெரிவித்துள்ளது. தேசிய புள்ளியல் அலுவலகம் ONS பிரித்தானியாவில் விவாகரத்துகளின்  எண்ணிக்கை கொரோனா ஆண்டான 2020-ஆம் ஆண்டில் குறைந்துள்ளதாக கூறியுள்ளது. பிரிட்டன் மற்றும் வேல்ஸில் 1,03,592 விவாகரத்துகள் 2020-ஆம் ஆண்டில் நடந்ததாக ONS வெளியிட்ட புள்ளிவிவரங்களில் கூறியுள்ளது. இந்த புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கையில் 2019-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விவாகரத்துக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 4.5 சதவீதம் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. தற்காலிகமாக குடும்ப நீதிமன்றங்களின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பது, […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு மேலும் நீட்டிப்பு…. 9-12 ஆம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இமாச்சலப் பிரதேச அரசு பல்வேறு கோவிட்-19 தடுப்பு தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் வாரத்தில் 6 நாட்கள் வழக்கம் போல் திறந்திருக்கும். இதையடுத்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மறு உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. தற்போது மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறையத் தொடங்குவதால் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கில் 1 மணி நேரம் தளர்வு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

மாநிலம் முழுவதும் கொரோனா 3-வது அலை பரவல் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் தற்போது உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஒடிசா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “இனி இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் நகர்ப்புறங்களில் இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும். கொரோனா நெறிமுறைகளின்படி பக்தர்கள் அனுமதி இன்றி கோவில்களிலும், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட பள்ளிகளிலும் […]

Categories
உலக செய்திகள்

“போடு!”… கொரோனாவால் லாபம் பார்த்த வீடியோ கேம் நிறுவனங்கள்… பிரபல நிறுவனத்தின் பிளான்…!!!

சோனி நிறுவனம் சுமார் 26,600 கோடி ரூபாய்க்கு ஹேலோ மற்றும் டெஸ்டினி வீடியோ கேம்களை தயாரித்திருக்கும் நிறுவனத்தை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரனோ தொற்றால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கில் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. எனவே வீடியோ கேம் துறை பல மடங்கு வளர்ச்சி கண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அளவில் வீடியோ கேம் துறையில் 11 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகளும் ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மட்டும் சோனி நிறுவனமானது, […]

Categories
உலக செய்திகள்

30 லட்சத்தை தாண்டிய தொற்று எண்ணிக்கை…. செக் குடியரசில் அதிகரித்த கொரோனா…!!!

செக் குடியரசு நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செக் குடியரசு நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் புதிதாக 53 ஆயிரத்து 441 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்நாட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்து 43 ஆயிரத்து 84 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் நேற்று ஒரே நாளில் 11 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 37,243 ஆக அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். […]

Categories
சினிமா

தனுஷ் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா மருத்துவமனையில் அனுமதி…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நடிகர் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு இசை ஆல்பம் ஒன்றுக்காக ஐதராபாத்தில் தங்கி இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories
அரசியல்

“நான் போலீஸை பாத்து ஓடினேன்!…. ஆனா இப்போ போலீஸ் என்ன பாத்து ஓடுது!”…. ஜோக்கடித்த ராஜேந்திர பாலாஜி….!!!!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைதான முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து உச்சநீதிமன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால நிபந்தனையாக ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த நிலையில் குற்றப்பிரிவு காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜியை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். எனவே ராஜேந்திர பாலாஜி வக்கீல்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் படைசூழ மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார். அப்போது தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகள் தீவிரம்…. வீரர்கள் உட்பட 37 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!!

சீனத் தலைநகரான பீஜிங்கில் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வந்த வீரர்களுக்கும் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் அடுத்த மாதம் 4ஆம் தேதியிலிருந்து 20-ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கவிருக்கிறது. கொரோனா பரவலுக்கு இடையில் பீஜிங் மாகாணத்தில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே அங்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வந்தவர்கள் மற்றும் போட்டி  ஏற்பாட்டாளர்களுக்கு சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு […]

Categories
உலக செய்திகள்

ரகசிய ஊரடங்கு…. கடும் கட்டுப்பாடுகள்…. சீனாவில் நடக்கும் மர்மம்…!!!

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் இருபத்தி மூன்று நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இரண்டு மாவட்டங்களில் கடும் ஊரடங்கு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடப்பதற்கு இன்னும் நான்கு நாட்கள் தான் இருக்கிறது. இந்நிலையில் பீஜிங் நகரத்தின் பகுதிகளில் அதிகாரிகள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள். அங்குள்ள Fengtai என்ற மாவட்டத்தில் சுமார் 2.26 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். இதனுடன் சேர்த்து 68 ஆயிரம் மக்கள் வசிக்கும் Anzhenli என்ற பகுதி போன்றவற்றில் கடும் […]

Categories
உலக செய்திகள்

“நான் தலைமறைவா இல்ல டா… எனக்கு “வேற நோய்” வந்துட்டு…. வலுவடைந்த போராட்டம்… அதிரடி கொடுத்த “ஜஸ்டின் ட்ரூடோ”….!!

கனடாவின் பிரதமர் அந்நாட்டில் நடந்த போராட்டத்தை கண்டு ஓடி மறைந்து விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கனடாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையே எல்லையை கடக்கும் ட்ரக் டிரைவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான டிரக் டிரைவர்கள் தலைநகர் ஒட்டாவாவில் ஒன்று திரண்டு போராட்டத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கொரோனாவால் தள்ளிப்போகும் சூர்யா படம்”…. ரசிகர்கள் ஏமாற்றம்….!!!!

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா காரணமாக படத்தை மார்ச் 11-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியான நிலையில் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“தென்கிழக்குச்சீமையே” தொற்றில் இருந்து மீண்டு வருக…!! பிரபல இயக்குனர் இணையத்தில் பதிவு …!!!

முன்னணி இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உலகெங்கிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அண்மைக்காலமாக பல பிரமுகர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமாகி வருகின்றனர். தற்போது முன்னனி இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு கொரோனா பாதிப்புக்குள்ளாகி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.   இதற்கு இயக்குனர் சீனு ராமசாமி அவரின் இணைத்தளப்பக்கத்தில் கூறியுள்ளதாவது “காலத்தின் நாயகர்களே விரைந்து வருக..! இருவரோடும் பழகுவதற்கு பாக்கியம் பெற்றவனின் அழைப்பு இது. நீங்கள் தந்த ஊக்கமதை […]

Categories
மாநில செய்திகள்

இதுக்காகத்தான் குறைத்து காட்டுறாங்க…. “அத நம்பாதீங்க பொய்”… சுகாதார செயலாளர் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு பிப்ரவரி 4ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்புமனு தாக்கலை பெறுவதற்காக மண்டல வாரியாக தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமல்லாமல் வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள் தங்களுடன் 3 நபர்களை மட்டும் அழைத்துவர வேண்டும், […]

Categories

Tech |