பிரிட்டன் அறிவியலாளர்கள் 20 நிமிடங்களில் முடிவுகளைத் தரும் கொரோனா பரிசோதனை கருவியை கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனின் தென் வேல்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ் இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிய 20 நிமிடங்களில்முடிவுகளை தரும் ஒரு கருவியை உருவாக்கியுள்ளனர். இந்த கருவியை உருவாக்குவதற்கு 100 பவுண்டுகளுக்கும் குறைவான தொகையை போதும் என்று மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளனர்.. 100 பவுண்டு என்பது இந்திய மதிப்பில் 9,458 ரூபாய் ஆகும்.. நோயாளிகளின் மூக்கில் இருந்து எடுக்கப்படும் swap ஒன்றில் கொரோனா […]
Tag: #கொரோனா
குடியரசுத் தலைவர் மாளிகையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என ராஷ்டிரபதி பவன் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பணியாளருக்கு தொற்று என தகவல் வெளியான நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகைப் பணியாளரின் குடும்பத்தில் தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பு இருந்தது, தற்போது அவர் தனிமைப்படுத்துதலில் உள்ளார் என தெரிவித்துள்ளது. இன்று காலை டெல்லி ராஷ்டிரபதி பவனில் (குடியரசு தலைவர் மாளிகை) ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல் வெளியானது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 125 குடும்பங்களை சுய தனிமைபடுத்தக்கோரி […]
மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. சமூக விலகலால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து, உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, மக்களை வீடுகளில் முடக்கி வைத்துள்ளனர். இதனால் தனிநபர் பொருளாதாரம் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் பொருளாதாரமும் கடும் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக நேற்று அமெரிக்காவில் கச்சா எண்ணெய் ஒரு […]
ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகள், கோயில்கள் மற்றும் தேவாலயங்களுக்கு ரூ .5 ஆயிரம் உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். கொரோனா வைரசுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களுடன் இன்று வீடியோ கான்பரென்ஸ் நடத்திய போது ஆந்திர முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த கூட்டத்தில், புனித ரமலான் மாதத்தில் வீடுகளில் பிரார்த்தனை செய்யுமாறு சமூகத்தை வலியுறுத்தியதற்கான தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட […]
இரண்டு நாட்களில் 5 ஆயிரம் உயிர்களை கொரோனா வைரஸ் பறித்து சென்றிருப்பது அமெரிக்காவில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்நாட்டிலுள்ள 50 மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 30000 பேர் கோவிட்-19 வைரஸிற்கு இலக்காகி இருக்கின்றனர். பாதிப்பும், பலியும், நியூயார்க் நகரில் கட்டுக்கடங்காமல் உள்ளது. அங்கு ஒரே இரவில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சற்றும் பலன் தராத நிலையில் மாநில ஆளுநர்களிடம் அதிபர் டொனால்டு ட்ரம்ப், துணை அதிபர் […]
பள்ளிகள், கல்லூரிகள் கட்டணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது. கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு என்பது தற்போது அமலில் உள்ள நிலையில் பல தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற குறுந்செய்தி, போன் அழிப்பு வருவதாக பல்வேறு புகார்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டு இருந்தனர். தமிழகத்தின் முதலமைச்சர் கூட இதுமாதிரி கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு குறுஞ்செய்தி மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ பள்ளி, கல்லூரி […]
டெல்லி ராஷ்டிரபதி பவனில் (குடியரசு தலைவர் மாளிகை) ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 125 குடும்பங்களை சுய தனிமைபடுத்தக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் துப்புரவு பெண் பணியாளர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள மற்றவர்களை பரிசோதித்தபோது, அவர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். […]
இன்று காலை 10 மணி வரை மகாராஷ்டிராவில் 472 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத பாதிப்புகளின் எண்ணிக்கை 4,676 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று காலை வரை மாநிலத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த இறப்புகள் எண்ணிக்கை மாநிலத்தில் 232 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், கொரோனா பாதிப்பு காரணமாக 28வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் எந்த […]
சென்னையில் மே 4ஆம் தேதி முதல் அரசுப் பேருந்து சேவை தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து பணியாளர்களுக்கு சுற்றறிக்கை ஓன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள். வேலைக்கு வரும் போக்குவரத்து ஊழியர்கள் காய்ச்சல் மற்றும் கொரோனா சம்பந்தமான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல் அவரவர்கள் இருக்கும் இடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். பணியாளர்கள் அனைவரும் […]
கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் இறந்தவர்கள் உடல் சரியான பாதுகாப்புடன் கையாளப்படுகின்றன. கொரோனா தொற்றால் இறந்தவர் உடல் மூலம் வைரஸ் கிருமி பரவாது என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை […]
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தும் 250 கி.மீ., தூரம் பயணம் செய்து அமைச்சர் சாமியாரை பார்க்கச் சென்றது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பல கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றது. மக்கள் சமூக விலகலை பின்பற்றுவதற்கு ஏதுவாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் யாரும் வெளியே வராமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. வேலை வாய்ப்பை தேடி பிற மாநிலங்களுக்கு சென்றவர்கள் கூட சொந்த மாநிலங்களுக்கு […]
கொரோனா ஊரடங்கால் பெண்களுள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்படலாம் என்று ஐ.நா அகதிகள் நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நெருக்கடி காலத்தில் இடம்பெயர்ந்துள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் ரீதியிலான வன்முறைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து யு.என்.எச்.சி.ஆர் உதவி உயர் ஆணையர் மில்லியன் ட்ரிக்ஸ் தெரிவித்ததில், ஊரடங்கு காலகட்டத்தில் புலம்பெயர்ந்து இருக்கும் பெண்கள், அகதிகள், குழந்தைகள் கட்டாய திருமணத்துக்குள்ளாக்கப்படுவதோடு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படலாம். கொரோனாவை கட்டுப்படுத்தும் […]
விவசாயிகளை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஊரடங்குக்கு பின்னர் நாம் எதிகொள்ள போகும் பிரச்சனை குறித்து ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார். வல்லரசாகும் கனவிலும், பெரும் மக்கள் தொகை கொண்ட நாடு தனது சுகாதாரத்தை காக்கும் பொறுப்பில் இவ்வளவு பலவீனமாக இருக்க கூடாது. எல்லைக்கு அப்பால் இருக்கும் ஆபத்தை விட, நாட்டின் உள்ளிருக்கும் ஆபத்துகள் இன்னும் பெரிது. உலக […]
கொரோனா வைரஸ் இந்தியாவிற்கு கடந்தகால தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பையும் நமக்கு வழங்கியுள்ளது என கமல் தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஊரடங்குக்கு பின்னர் நாம் எதிகொள்ள போகும் பிரச்சனை குறித்து ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அமைப்பு சாரா தொழிலாளர்களை முறைப் படுத்துவது என்பது தேசிய நடவடிக்கையாக அரசு ஆரம்பிக்க வேண்டிய முக்கியமான பணி. உத்தரவாதமின்றி உழைக்கும் அவர்களுக்கு இது தான் முன்னேற்றத்தின் வழி. அப்போதுதான் வருமான வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கையும், […]
இங்கிலாந்து அறிவியல் ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.. சர்வதேச அளவில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தினமும் ஆயிரக்கணக்கான மக்களை வேட்டையாடி வருகிறது.. பலி எண்ணிக்கை ஒருபுறம் உயர்ந்து கொண்டே சென்றாலும் மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா, உள்ளிட்ட பல நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்து அரசும் ரூ 133 கோடி ஒதுக்கீடு செய்து கொரோனாவை ஒழிக்க தடுப்பு மருந்தை உருவாக்க தீவிர ஆய்வுகள் செய்து வருகின்றன. […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 0 டாலருக்கும் கீழே சென்றுள்ளது. சீனாவில் தொடங்கிய கொடூர கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகள் அனைத்தும் நிலைகுலைந்துள்ளது. கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடக அமெரிக்கா இருந்து வருகின்றது. அதோடு அல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடங்கி அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்காவின் […]
உலக வரலாற்றில் என்றுமே இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் அமெரிக்கா சந்தையில் சரிந்துள்ளது. உலகம் முழுவதும் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருவதால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு நோய் தொற்றுக்கு மருந்து கண்டு பிடிக்கவில்லை என்பதால் சமூக விலகலை கடைப்பிடித்து நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் வாகன போக்குவரத்து பெருமளவு முடங்கி, அனைத்து நாடுகளிலும் விமானங்களும் சேவை இல்லாமல் ஓய்வு எடுத்து […]
கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக பணியாளர்களை நியமனம் செய்வதற்கு தமிழக அரசு 2715 காலியிடங்கள் வெளியிட்டுள்ளது. இப்பணியின் பெயர் – சுகாதார ஆய்வாளர் குறிப்பு: இப்பணியிடம் 3 மாதத்திற்கு தற்காலிகமாக காலிப்பணியிடங்கள்: 2715 மாத சம்பளம் – 20,000 இப்பணியின் கட்டணம்: இல்லை தகுதி: 12ஆம் வகுப்பில் உயிரியல் மற்றும் தாவரவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மருத்துவ பணியாளர் (ஆண்கள்) சுகாதார ஆய்வாளர் பதவிக்கு தகுதியான பல்கலை மற்றும் அரசின் அனுமதி பெற்ற நிறுவனத்தில் 2 ஆண்டுகள் மருத்துவமனை பணியாளர்களுக்கான பாடப்பிரிவை தேர்வு செய்து படித்திருக்க […]
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தும் 250 கி.மீ., தூரம் பயணம் செய்து அமைச்சர் சாமியாரை பார்க்கச் சென்றது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பல கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றது. மக்கள் சமூக விலகலை பின்பற்றுவதற்கு ஏதுவாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் யாரும் வெளியே வராமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. வேலை வாய்ப்பை தேடி பிற மாநிலங்களுக்கு சென்றவர்கள் கூட சொந்த மாநிலங்களுக்கு […]
கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் இறுதிச்சடங்கு இந்த முறைகளின் அடிப்படையில் தான் நடைபெறும். கொரோனா பாதித்த ஒருவர் உயிரிழந்த உடனேயே உடலில் உள்ள அனைத்து துவாரங்களும் அடைக்கப்படும். உடலில் உள்ளே இருந்து எந்தவித திரவமும் வெளியேறாமல் தடுப்பதற்காக துவாரங்கள் அடைக்கப்படுகின்றன. பின்னர் உடலின் மீது கிருமிநாசினி தெளிக்கப்படும். உயிரிழந்தவரின் உடலை ஒரு பாலிதீன் கவரில் சுற்றி வைத்து அதன் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பின்னர் தண்ணீர் உள்ளே போகவும், வெளியேறவும் முடியாத வகையிலான தடிமனான தன்மை கொண்ட டபுள் […]
ஊரடங்கின் போது முடிதிருத்தும் கடைகளைத் திறக்க முன்னர் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் பல நிபுணர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கேரள அரசு இந்த முடிவை வாபஸ் பெறுவதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். முன்னதாக, கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரளத்தில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6 பேரும் கண்ணூரை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், […]
மலிவான அரசியல் செய்வதை எதிர்க்கட்சித் தலைவர் தவிர்க்க வேண்டும் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது, மத்திய சுகாதாரத்துறை சார்பில் அரசு மருத்துவமனையை ஆய்வு நடத்தினார்கள். எல்லாமே நன்றாக இருப்பதாக தெரிவித்தனர். இது ஒரு பேரிடர் நேரம், அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. இந்த தொற்றை ஒழிக்க உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றது. வல்லரசு நாடுகள் திணறிக்கொண்டு இருக்கும் நிலையில் தமிழகத்தில் முதலமைச்சர் சரியான நேரத்தில், சரியான முடிவுகளை […]
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 283 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது என அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். இன்று காலை 11 மணி நிலவரப்படி 283 பேருக்கு பாதிப்பு இருப்பதும், அதில் மும்பையில் மட்டும் 187 பேருக்கு கொரோனா இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை அம்மாநிலத்தில் 4,483 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வெளியான தகவலின் படி, இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17, 656 ஆக உயர்ந்துள்ளது. அதில், 14,255 […]
பெல்ஜியம் அறிவியலாளர்கள் விலங்கு ஒன்றின் உடலில் கொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தினமும் ஆயிரக்கணக்கான மக்களை வேட்டையாடி வருகிறது.. பலி எண்ணிக்கை ஒருபுறம் உயர்ந்து கொண்டே சென்றாலும் மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் லாமாக்கள் (llama) எனப்படும் ஒட்டக வகையைச் சேர்ந்த விலங்குகளின் உடலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆன்டிபாடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் […]
தமிழகத்தில் புதிதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை […]
தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 457ஆக அதிகரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனமே பாராட்டும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது என தெரிவித்த […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரே ஒரு சிவப்பு மண்டல மாவட்டம் மட்டுமே உள்ளது. இங்கு கடந்த 72 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. எனவே, சத்தீஸ்கர் முழுவதும் விரைவில் பசுமை மண்டலமாக இருக்கும் என்று தான் நம்புவதாக அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநிலத்தில் ஒரே ஒரு ரெட் சோன் பகுதி மட்டுமே […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1500யை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் பெரும் தொற்று நோயாக பரவி கொண்டிருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் நாளுக்குநாள் குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மக்களிடையே புது நம்பிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் கொரோனா குறித்த அப்டேட் வெளியாகும். அந்த வகையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் […]
மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் 171 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் 53 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என மும்பை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,265 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 559ஆக அதிகரித்துள்ளது கொரோனா பதிப்பில் […]
தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சற்று குறைவது போல தெரிந்தது.. ஆனால் கடந்த 2 நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 105 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ல் இருந்து […]
பத்திரிகையாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான செய்தி மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். பத்திரிகையாளர்கள் தங்கள் கடமை அழைப்பில் கலந்து கொள்ளும்போது, தயவுசெய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள், சமூக விலகலின் விதிமுறைகளைப் பின்பற்றுங்கள் மற்றும் முகமூடிகளை அணியுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய கடைகள் போன்று, உடனடி செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கும் பணியில் அனைத்து ஊடங்கங்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் […]
புதுச்சேரியில் மஹே, கர்நாடகாவின் கோடகு மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி கர்வால் ஆகிய பகுதிகளில் கடந்த 28 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் அறிவித்துள்ளார். குடும்பநல அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டது. அப்போது பேசிய லாவ் அகர்வால், கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து […]
கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடம் தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்து இறந்த இரண்டு மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணங்களால் உடலை தூக்கிக்கொண்டு வேறு, வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய ஒரு அவல நிலை ஏற்பட்டது. மருத்துவரின் உடலை இங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றார்கள். மருத்துவர்களுக்கு செய்யக்கூடிய மரியாதை இதுதானா என்று வீடியோ மூலமாக மருத்துவர்களும் […]
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து. அதோடு ஏப்ரல் 20ஆம் தேதி ( இன்று முதல் ) ஊரடங்கில் சில விஷயங்கள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து, அதற்கான சில அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது. இதனால் தமிழகத்திலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமா என்ற கேள்வி […]
10ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைசர் செங்கோட்டையன் தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்த உள்ளதால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறுமா ? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. குறிப்பாக ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஆல் பாஸ் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். இதற்கு தமிழக முதலமைச்சரும் விளக்கம் அளித்திருந்தார். குறிப்பாக பத்தாம் வகுப்பு தேர்வானது […]
ராஜஸ்தானில் மேலும் 57 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று பிறந்த குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,535 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ராஜஸ்தானில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பாதிக்கப்பட்டவர்களில் ஜெய்ப்பூரில் 43 பேருக்கும், ஜோத்புரில் 6 பேருக்கும், கோட்டாவில் 3 பேருக்கும் புதிதாக கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று 67 வயது நிரம்பிய நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். […]
ஊரடங்கை சரியாக பின்பற்றாத மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளை தவிர பிற சேவைகள் முழுவதும் தடைவிதிக்கப்ட்டது. மேலும் பொதுமக்கள் பொதுஇடங்களில் கூடவும் தடைவிதிக்கப்ட்டனர். இதில் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள சந்தைகளில் பொதுமக்கள் கூடி ஊரடங்கு வீதிமிறல் நடந்துள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் […]
மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 வயது கர்ப்பிணிக்கு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை ஆரோக்கியத்துடனும் இருப்பதாகவும், கொரோனா பாதிப்பு இல்லை என்றும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்தப் கர்ப்பிணி கடந்த ஏப்ரல் 16ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தைக்கு COVID19 தொற்று ஏற்படவில்லை என்றும், குழந்தை தற்போது தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளது என சசூன் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தூண்டியுள்ளது. இதுவரை 543 […]
பஞ்சாப் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல 20ஆம் தேதி (இன்று முதல் ) சில தளர்வுகள் விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியீட்டு இருக்கின்றது. குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் சில மத்திய உள்துறை அமைச்சகம் ஊரகப் பகுதியில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் இயங்கிக் […]
கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார். மக்களுக்கு ஆபத்து ஏற்படாது என்ற நம்பிக்கை ஏற்படும் சமயத்தில் விமான சேவை தொடங்கப்படும் என அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், விமான நிறுவனங்களுக்கு உரிய அறிவிப்பு, போதுமான நேரம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை 2ம் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு 27வது நாளாக […]
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சாப்பிட அரிசி இல்லாத காரணத்தால் காட்டுக்குள் சென்று பெரிய ராஜநாகத்தை வேட்டையாடி வெட்டி சமைத்து சாப்பிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பசியால் தவித்து வரும் நிலையில், உயிரினங்களை வேட்டையாடும் நிலைக்கு சிலர் சென்று விட்டனர்.. அதாவது, அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நிறைய விஷ தன்மையுள்ள பாம்பு இனங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.. […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் மாநிலம் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி. இந்த மாநில முதல்வர்களான மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் நேற்று கொடுத்த பேட்டி இந்தியாவையே அதிர்ச்சியடையவைத்தது. அதில் கொரோனா அறிகுறி இல்லாமலே அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்து கொரோனா பரபரப்பை அதிகரித்தது. டெல்லியில் 186 […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும் பகுதிகளின் விவரத்தை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதித்த மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிப்புகள் 17,265 ஆக அதிகரித்துள்ளது. அதில், இதுவரை 543 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை முன்பை விட இன்று அதிகம் என்று தான் சொல்லவேண்டும். கடந்த மார்ச் […]
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது செய்யப்பற்றுள்ளனர். சென்னையில் கொரோனா காரணமாக மருத்துவர் இறந்து போனார். அவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் மூலமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு இருக்கக்கூடிய கீழ்பாக்கம் மையானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உரிய அனுமதி பெற்று அங்கு அடக்கம் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டார்கள். ஆனால் திடீரென அந்த பகுதியில் கூடிய பொதுமக்கள் அங்கு வந்து இங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். அதே போல […]
இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்ட முதல் மாநிலமானது கோவா. கொரோனாவால் பாதித்த கடைசி நபரும் தற்போது குணமடைந்துள்ளார். கோவாவில் இதுவரை பாதிக்கப்பட்ட 7 பேரும் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இது ஏப்ரல் 3 முதல் கொரோனா வைரஸ் பதிவாகாத நாட்டின் முதல் பசுமை மாநிலமாக கோவா திகழ்கிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. அதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், மத்திய […]
கொரோனா தடுப்பில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். உலகமே கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஊரடங்கில் இருந்து வருகின்றது. கொடூர தொற்றாக மாறியுள்ள கொரோனவை கட்டுப்படுத்த இது வரை மருந்து கண்டுபிடிக்கபடவில்லை. இதனால் கொரோனவை தடுப்பது உலக நாடுகளுக்கே சவாலாக இருக்கின்றது. ஆனாலும் தொற்றை கட்டுப்படுத்த சமூக விலகல் அவசியமான ஒன்றாக இருந்து வருவதால் மத்திய மாநில அரசுக்கள் இதனை தீவிரமாக அமுல் படுத்தியுள்ளது.உலகளவில் லட்சக்கணக்கான உயிர் பலியை வாங்கிய கொரோனா இந்தியாவிலும் […]
கொரோனா நிவாரண நிதிக்கு தங்களது ஊதியத்தை திருச்சி கிராம நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். திருச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் பணியாற்றும் 150க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்கான ஒப்புதல் கடிதம் அளித்தனர். இந்த ஒப்புதல் கடிதத்தை தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெகன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் வட்டாட்சியர் காதர் அலியை நேரில் சந்தித்து வணங்கினார். […]
இன்று முதல் இயங்கும் தொழில்கள் எவை, எவை என்பது குறித்து மத்திய அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமாகி வருகின்றது. இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15த்தை தாண்டும் நிலையில் பலி எண்ணிக்கையும் 500-ஐ தாண்ட இருக்கின்றது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனை அறிவித்த பிரதமர் மோடி, இன்று (வருகின்ற 20ஆம் தேதி) முதல் கொரோனா பாதிப்பு […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். இன்று உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக விளங்குவதுகொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால், அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கு அமல் படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய […]
தமிழகத்தில் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் இன்று மேலும் 105 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ல் இருந்து 1,477 ஆக அதிகரித்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 365ல் இருந்து 411 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் உயிரிழப்புகள் இல்லை என்றும் சுகாதாரத்துறை […]