Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீங்க உத்தரவு போட்டா….. நாங்க கேட்கணுமா ? சட்டத்தை நாடிய திமுக …!!

தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் உணவு பொருட்கள் வழங்க  அரசு விதித்த தடையை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உணவில்லாமல் சாலை ஓரங்களிலும் பலர் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு கண்டறிந்து உணவு வழங்கி வரும் நிலையில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு, நிதியுதவியை வழங்கி வந்தனர். இதுபோன்று சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்று தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

அபாய நிலையில் மும்பை தாராவி: கொரோனாவுக்கு வேகமாக பாதிக்கப்படும் பகுதி… அச்சத்தில் மக்கள்!

மும்பை தாராவியில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை தாராவியில் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மருத்துவப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகின்றதா? என ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. கொரோனவால் இந்தியாவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் என்றால் அது மகாராஷ்ட்டிரா தான். இங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,700-ஐ தாண்டியது. அதேபோல, உயிரிழப்புகள் எண்ணிக்கை 100ஐ தாண்டியது. இந்த நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

அரசின் தடை உத்தரவு எங்களுக்கு அதிர்ச்சி…. பரிசீலனை செய்யுங்கள்… தமிழக முதல்வருக்கு நடிகர் லாரன்ஸ் கோரிக்கை!

இனி தன்னார்வலர்களோ தனி நபர்களோ உணவுப்பொருட்கள் எதையும் வழங்கக்கூடாது என்ற  தடை உத்தரவை தயவு செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட வேலைக்கு செல்ல முடியாமல் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களிலிருந்து கிடைத்த முக்கிய செய்திகள்…. ட்விட்டரில் பட்டியலிட்ட ப. சிதம்பரம்!

மாநிலங்களிலிருந்து கிடைத்த முக்கிய தகவல்கள் குறித்து ட்விட்டரில் ப. சிதம்பரம் தகவல் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை நீடிக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்களும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நாட்டு நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். அதில் ஊரடங்கை இரு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு: சொல்ல முடியாத துயரம்…. வாழ்க்கை குறித்த அச்சம்…. கலங்கி நிற்கும் பிஞ்சு குழந்தைகள்…!!

ஊரடங்கு உத்தரவினால் இந்தியாவில் 4 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெரும் துயரத்தை அனுபவிப்பதாக குழந்தைத் தொழிலாளர்கள் சங்க இயக்குனர் சஞ்சய் குப்தா தெரிவித்துள்ளார். இந்தியாவில் 47.2 கோடி குழந்தைகள் உள்ள நிலையில் அதிக அளவில் குழந்தைகள் கொண்ட நாடு இந்தியா ஆகும். இதில் கிட்டத்தட்ட 4 கோடி குழந்தைகள் தின கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். சாலைகளில் பொருட்களை விற்பதும் விவசாயம் தொடர்பான வேலைகளை செய்வதுமே அவர்களின் வேலை. கொரோனா தொற்றைத் தடுக்க ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஏப். 15இல் திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் ….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் ணுகுமுறை குறித்து ஏப்ரல் 15 திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு முழு  21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் ஏப்ரல் 15ஆம் தேதி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐயா..! பாத்து சுத்துங்க …… இது ஒன்னும் மட்டை அல்ல…. மாஸ் காட்டிய ஜடேஜா …!!

கிரிக்கெட் வீரர் ஜடேஜா வாலை சுற்றும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும்  18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த சமூக விலகலே முதன்மையானது என்பதை கருதி அனைத்து நாடுகளும் முழு ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாளை மறுநாள் உடன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

34 மாவட்டதிற்கு பரவிய கொரோனா – ஆயிரத்தை கடந்த பாதிப்பு – முழு பட்டியல் இதோ …!!

தமிழகத்தில் 34 மாவட்டங்களை பாதித்துள்ள கொரோனாவால் 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த ஒருவர் இன்று மரணமடைந்துள்ள நிலையில் இன்று 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். 39,041 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 58,189 பேர் 28 நாள் தனிமை முடிந்தவர்களாக உள்ள நிலையில் 162 பேர் தனி வார்டில் […]

Categories
அரசியல்

“தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை அரசே ஏற்கும்”… பீலா ராஜேஷ்!  

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்று சுகாதாரத்துறை செயலாளர்  தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. நேற்று  தமிழகத்தில் 58 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக இருந்தது. இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். […]

Categories
சற்றுமுன் திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா …!!

திருப்பூரில் இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 969இல் இருந்து 1075ஆக அதிகரித்துள்ளது.  கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற  50 பேர் குணமடைந்துள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 106இல் அதிகபட்சமாக திருப்பூரில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை வென்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினார்!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏழை, பணக்காரர், அதிகாரிகள் என்று பாரபட்சம் காட்டாமல் கொரோனா  பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அண்மையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இதையடுத்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு  தீவிர […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மகிழ்ச்சியான செய்தி : தமிழகத்தில் 50 பேர் குணமடைந்துள்ளனர் …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற 50 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரை மகாராஷ்ரா கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்ததால் கொரோனா பாதிப்பில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களை […]

Categories
அரசியல்

தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா – அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 969 இல் இருந்து 1075 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை 50 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 23 பரிசோதனை ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் 14 ஆய்வகமும், தனியாரில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 1075ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 199ஆக உயர்ந்துள்ளது. இதேபோல கொவையில் மேலும் 22 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் ஒரேநாளில் 106 பேருக்கு கொரோனா…!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ்  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க  21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா பாதிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 58 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியது ….!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை மகராஷ்டிரா மாநிலத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்,  தமிழகத்தில் புதிதாக 106  பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10875ஆக […]

Categories
அரசியல்

தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற குறியீடு… எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?  

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என்று 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில் சிவப்பு, மஞ்சள் பச்சை என்று பிரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 969 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் ஒருவர் பலியான நிலையில் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து நேற்று […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க மக்களை அதிர வைக்கும் கொரோனா…!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது.  அதிகமான பாதிப்பை பெற்றுள்ள அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸ் 5,33,351 பேரை பாதித்துள்ளது. 20,583 பேர் இறந்துள்ள நிலையில் 30,502 குணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்த 4,82,033 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11,471 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்குள்ள நியூயார்க்கில் மட்டும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள நியூயார்க்கில் மட்டும் 1,81,144 பேருக்கு கொரோனா […]

Categories
அரசியல்

தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் நேரடியாக பொருட்கள் வழங்க தடை… மீறினால் சட்டப்படி நடவடிக்கை!

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களான மளிகை கடைகள், பால் உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்கப்படும், மக்கள் தேவையில்லாமல் வெளியே வர கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இவர்களுக்கு  தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர்  நிவாரண நிதியாகவும், […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கை மீறிய வெளிநாட்டவர்கள்…. காவலர்கள் அளித்த நூதன தண்டனை !

உத்தரகாண்ட் மாநிலத்தில்  ஊரடங்கு உத்தரவுகளை மீறியை வெளிநாட்டவர்களுக்கு காவல்துறையினர்  நூதன தண்டனை வழங்கினர். உலகம் முழுவதும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட  பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுவருகிறது. அதில் முக்கிய அறிவிப்பாக  நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் சிலர் ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிகின்றனர். அவர்களுக்கு போலீசார் நூதனமான முறையில் தண்டனை வழங்கி வருகின்றனர். இந்நிலையில்  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த 10 பேர்  […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகள் மீது கொலை முயற்சி வழக்கு… இதுதான் காரணம்!

திருச்சியில் கொரோனா பாதித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று  58 ஆக உயர்ந்ததால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஈரோட்டில் முதியவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா மொத்தம் 34 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவர்கள், செவிலியர்கள்  இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு  சிகிச்சையளித்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் […]

Categories
மாநில செய்திகள்

அம்பேத்கர் பிறந்தநாள் – மக்கள் வெளியே கொண்டாட தடை

அம்பேத்கார் பிறந்த நாளை பொதுமக்கள் வெளியே கொண்டாடக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. நாளுக்குநாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகள் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மூன்றாவது மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. இந்நிலையில்க் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடு விதித்துள்ளது. குறிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்க வேண்டாம்”- தமிழக சுகாதாரத்துறை!

தமிழகத்தில் காய்கறி சந்தை பகுதிகளில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்க வேண்டாம் என அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவை  கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் வெளியே காய்கறி வாங்க சந்தைகளுக்கு செல்கின்றனர். காய்கறி வாங்க மக்கள் கூட்டமாக வருவதால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதன் […]

Categories
உலக செய்திகள்

6 நாளில் 11,717 பேர் மரணம்…. அமெரிக்காவில் பலி 10ஆயிரத்தை தாண்டியது …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் கடந்த 6 நாட்களில் மட்டும் 11,717 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

உலகத்துக்கே குட் நியூஸ் : 4 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர் ..!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 லட்சம் பேர் குணமடைந்துள்ளது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.   […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சோறா? சோசியல் டிஸ்டன்ஸா?- நமக்கு சோறுதான் முக்கியம் – காற்றில் பரந்த சமூக விலகல்

சமூக விலகலை கடைப் பிடிக்காமல் அம்மா உணவகத்தில் உணவு வாங்க மக்கள் கூடியது கொரோனா பரவும் என்ற ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய  கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலை கடைபிடித்தால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதை உணர்ந்த மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. மேலும் மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் 969 பேருக்கு கொரோனா : மாவட்ட வாரியாக இன்றைய (11.04.20) நிலவரம்!!

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 34 மாவட்டங்களில் பரவியுள்ள கொரோனா வைரசால் 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு  குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து  தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் பேசுகையில், தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911 லிருந்து 969 ஆக அதிகரித்துள்ளது.   மேலும் ஈரோட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் கூறினார். இதனால் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பீலா ராஜேஷ்-சுக்கு என்ன ஆச்சு ? ஏன் 2 நாளாக பேட்டி கொடுக்கல – யுகங்களுக்கு முற்றுப்புள்ளி ..!!

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டு விட்டது என தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை செயலாளர் சண்முகம், கொரோனா பரிசோதனையை மிகவும் தீவிரப்படுத்த வேண்டும். நாம் செய்தது பி.சி.ஆர் டெஸ்ட் தான் . பி.சி.ஆர் டெஸ்ட் செய்வதற்கு 15,000 கிட்டுகள் நம்மிடம் இருக்கின்றது. அதனால் சோதனை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தனிமையில், கண்காணிப்பில் உள்ளவர்களை சோதனை நடத்த தேவையான பி.சி.ஆர் கருவிகள் நம்மிடம் உள்ளது.ரேபிட் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நம்மளோடத அமெரிக்காவுக்கு கொடுத்துட்டாங்க – ரேபிட் கிட் குறித்து அரசு தகவல் ….!!

தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் கிட் டெஸ்ட் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு விட்டது என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார். தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து  வருகின்றது. இது குறித்து இன்று செய்தியலாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சண்முகம் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911 இலிருந்து 969 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். ஈரோட்டை சார்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் உயிரிழப்பும் 10 ஆக […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள்

திருவள்ளூரில் இன்று அதிகபட்சமாக 16 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக திருவள்ளூரில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தினமும் கொரோனா பாதிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 77 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 911 ஆக இருந்தது. இதுவரையில் மொத்தம் 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை  ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி உடனடியாக ஒதுக்க பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

மருத்துவ உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். வேளாண்துறைக்கு என தனி சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் உதவ வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். பிரதமர் மோடி 3வது முறையாக மாநில முதலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 4 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் சார்பில் பல்வேறு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மோடி சொல்லுவாங்க, நாங்க செயல்படுத்துவோம் – தமிழக அரசு பளிச் பதில் …..!!

ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி அறிவிக்கும் அறிவிப்பை தமிழ்நாடு முழுமையாக கடைபிடிக்கும் என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார். கொரோனா பாதிப்பு குறித்து தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகள், கொரோனா கட்டுப்படுத்துதல் பகுதிகளில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை நடத்தப்படும்.ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாடு தழுவிய முடிவை பிரதமர் மோடி அறிவிப்பார். பிரதமரின் அறிவிப்பை ஏற்று செயல்படுத்துவோம். ஊரடங்கு கடைபிடிக்கும் மக்களுக்கு பிரதமர் மோடி நன்றியும், பாராட்டும் […]

Categories
அரசியல்

BREAKING : இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை – தலைமை செயலாளர் சண்முகம்!

“இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்” என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு மாநில தலைவர்களும் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்தனர். அதேபோல, ஏப்ரல் 30ம் தேதி […]

Categories
ஈரோடு சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : ஈரோட்டில் கொரோனா பாதித்தவர் உயிரிழப்பு …!!

ஈரோட்டில் கொரோனா வார்டில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் அதன் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பை சந்தித்து மாநிலங்களின் வரிசையில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஈரோட்டில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு அமலில் இல்லாவிடில், ஏப்.15க்குள் 8.2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பர்: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லாமல் இருந்திருந்தால், ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்குள் 8.2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1035 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7447 ஆக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி – உயிரிழப்பு எண்ணிக்கை 10ஆக உயர்வு ..!!

தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்னிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை மகராஷ்டிரா மாநிலத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழகத்தில் புதிதாக 58  பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 969ஆக […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா… 969 ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு மாநில தலைவர்களும் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்தனர். அதேபோல, ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 969ஆக உயர்வு …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 969ஆக உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தொடங்கி உலகையே மிரட்டும் கொரோனா  வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவுக்கு 1000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து இருக்க கூடிய நிலையில் அதற்கு அடுத்தபடியாக தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு பெருமளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதேபோல, மேற்குவங்க மாநிலத்திலும் ஏப்.30 வரை ஊரடங்கை நீட்டிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் ஊரடங்கை சில இடங்களில் கடுமையாகவும், சில இடங்களில் தளர்த்தியும் அமல்படுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளார்.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார். […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. ஊரடங்கு, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டாஸ்க் போர்ஸ் அமைக்கப்பட்டு அதன் தலைவராக தலைமைச் செயலர் சண்முகம் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் அடங்கிய […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவு, ஒரே நாளில் 117 பேருக்கு புதிதாக கொரோனா!

ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் 117 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 98 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியான நிலையில், இன்று மேலும் 117 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1035 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ.1,000 கோடியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்புக்காக ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஆலோசனை நடத்தினார். காணொலி முறையில் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும் முகக்கவசம் அணிந்தபடியே இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். அதில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களின் உயிரை காப்பாற்றுவது தான் அரசின் முதல் கடமை – பிரதமர் மோடி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் 7,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கை ஏப்.,14ம் தேதிக்கு பின்னர் நீட்டிப்பது குறித்து மாநில முதல்வா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். முன்னதாக நாடாளுமன்ற எதிா்க்கட்சிகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினாா். இந்த நிலையில் மாநில முதல்வா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் மோடி இன்று ஆலோசனை நடத்திய நிலையில் இதில் தமிழக பழனிசாமியும் பங்கேற்றனர். இதில் அனைத்து மாநில முதல்வர்களும் ஊரடங்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்.30 வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி பிரதமரிடம் கோரிக்கை..!

ஊரடங்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். அனைத்து மாநில தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்தி வரும் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த கோரிக்கையை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் இனி வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகளை திறக்க வேண்டும் என உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மளிகை கடைக அனைத்தும் இனி வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே திறக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறியுள்ளார். அவ்வாறு, உத்தரவை மீறும் மளிகைகடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி உள்ளிட்ட 3 நாட்கள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மளிகை கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனவின் தாக்கம் முதல் […]

Categories
மாநில செய்திகள்

அதே மின் கட்டணத்தை செலுத்துவது வீடுகளுக்கு சரி… ஆனால் வணிகர்களுக்கு சிரமம்… டிடிவி தினகரன் டுவிட்!

அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பணப்புழக்கம் இல்லாத வணிகர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் சிரமத்தை தரும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியதன் காரணமாக மார்ச் மாதத்திற்கான மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில் ஊழியர்கள் யாருமே ஈடுபடுத்தப்படவில்லை. ஆகவே முந்தைய மாத கட்டணத்தையே (ஜனவரி – பிப்ரவரி) செலுத்துமாறு மின் வாரியம் அறிவுறுத்தியது. இவ்வாறு செலுத்திய கட்டணம், பின்வரும் மாத கணக்கீட்டு மின் கட்டணத்தில் சரிசெய்யப்படும் என்றும் கூறியிருந்தது. ஆனாலும் மின்கட்டணத்தை ரத்து […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனாவுக்கு பலி… 1,500 பேர் பாதிப்பு!

அமெரிக்காவில் இந்தியா வம்சாவளிகள் 40க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1,500க்கும் அதிகமான இந்திய வம்சாவளியினருக்கு அமெரிக்காவில் கொரோனா இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் அதிக அளவிலான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதில், கேரளாவைச் சேர்ந்த 17 பேர், குஜராத்தைச் சேர்ந்த 10 பேர் , பஞ்சாபைச் சேர்ந்த 4 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் பலர் 60 வயதுக்கு மேற்பட்டோர் […]

Categories
Uncategorized திருவண்ணாமலை மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் கொரோனா சிகிச்சை பெற்ற 28 வயது இளைஞர் குணமடைந்தார்!

திருவண்ணாமலையில் கொரோனா சிகிச்சை பெற்றவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா தாக்குதல் உலகையே திக்கு முக்காட செய்து உள்ள நிலையில் அந்த கொடிய வைரசுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் 911ஆக உயர்ந்துள்ளது. நேற்று உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என தலைமைச்செயலர் சண்முகம் தகவல் அளித்திருந்தார். அதேபோல தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனோவால் உண்டாகும் மன அழுத்தம்… மீள்வது எப்படி.? சில ஆலோசனைகள்..!!

கொரோனோவால் ஏற்படும் மனஅழுத்ததிலிருந்து மீள்வது எப்படி என்று மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.  கொரோனா  வேகமாக பரவும் இக்காலகட்டத்தில் நமது மனநலம் பேணவேண்டியது மிகவும் முக்கியமாகும். ஏன் என்றால் இந்த வைரஸிலிருந்து  விடுபடவேண்டுமென்றால் தனிமைப்படுத்துதல் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் யாரிடமும் தொடர்பு இல்லாமல் இருப்பார்கள். அதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகுகிறார்கள். இனி இருக்கும் காலத்தை எதிர்கொள்ள நினைக்கும்பொழுது மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது. வீட்டில் அவர்கள் பயன்படுத்தும் அத்யாவசிய பொருட்கள் முடிந்து விடும் நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா: அரசு மருத்துவமனையை தனிமைப்படுத்த முடிவு!

சென்னையில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பழைய வண்ணாரப்பேட்டையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 3ம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய இந்த பெண் மருத்துவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பெண் மருத்துவரின் தந்தைக்கு கடந்த 4ம் தேதி […]

Categories

Tech |