மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 162 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1297 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் 117 பேர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் அதிகரித்து கொண்டே போவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வரை மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1135 ஆக இருந்த நிலையில், இன்று 1297 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 16வது […]
Tag: #கொரோனா
சென்னை அயனாவரத்தில் மதுகிடைக்காததால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொரோனா வைரஸ் தொற்று காட்டு தீயைப்போல வேகமாக பரவி வருவதன் காரணமாக இந்தியா முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மளிகை கடைகள், பால், இறைச்சி உட்பட அத்தியாவாசியப் பொருள்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் மதுபான கடைகளும் அடங்கும்.. இதனால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மது கிடைக்காத விரக்தியில் பலரும் இருந்து வருகின்றனர். மதுவுக்கு […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்.,14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனோவை வெல்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக தேவையான நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து அதிபர் ட்ரம்ப் இந்தியாவின் செயலை பாராட்டி ட்வீட் […]
கொரோனாவிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பாதுகாப்பதற்கு ரோபோ ஒன்றை பொறியியல் மாணவர் ஒருவர் கண்டுபிடித்து அசத்தி உள்ளார். நாடு முழுவதும் வேகமாக பரவும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனோவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இருந்தாலும் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் மேல் கடந்துள்ளது. இது மேலும் தொடர்ந்து பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையாக உயர தொடங்கிவிடும். இதனை […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா வைரசால் முதல் பலி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 540 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 5,734 ஆக உயர்ந்துள்ளது. இதில் 473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 17 பேர் பலியாகியுள்ள நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. தினமும் கொரோனவால் உயிரிழப்பு நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதுவரை ஜார்கண்ட் […]
விழுப்புரத்தில் கொரோனா இரண்டாவது பரிசோதனை முடிவு வரும் முன்பே அலட்சியத்தால் 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 4 நோயாளிகள் அரசு மருத்துவமனையில் இருந்து கடநத 7 ஆம் தேதி தவறுதலாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். முதல் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்த நிலையில் 2வது பரிசோதனை முடிவு வரும் முன்பே 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று வந்த இரண்டாவது ஆய்வு முடிவில் நால்வருக்கும் கொரோனா இருப்பது […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 540 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை (21 நாட்கள்) ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் பீதியில் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 540 பேருக்கு […]
கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் ஸ்பெயினை முந்தி அமெரிக்கா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]
கொரோனா ஊரடங்கால் பாக்கெட்டில் வைத்து விற்கப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலையேற்றம் இருக்குமா ? என்ற அச்சம் எழுந்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதன் கோர தாண்டவத்தை காட்டிவருகிறது. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் கொரோனாவின் கொடூரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரரா மாநிலம் தான் கொரோனவள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா […]
கொரோனா தடுப்புக்காக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அனுப்பிய இந்தியாவுக்கு அமெரிக்கா அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியாவில் உள்நாட்டு பயன்பாட்டு பற்றாக்குறையாக மாறிவிடக் கூடாது என்பதால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்து. இதனால் அமெரிக்க அதிபர், இந்தியாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி இருந்தார். இந்தியா மருந்து கொடுக்கவில்லை என்றால் […]
கொரோனா வைரஸ் எதிரொலியால் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொடு வருகின்றது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மாநில அரசாங்கம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, 144 தடை உத்தரவு, போக்குவரத்து சேவை நிறுத்தம், மக்கள் வெளியே வர தடை என ஏராளமான நடவடிக்கைகள் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 2 நாட்களில் மட்டும் 3902 பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு […]
சென்னையில் 74 வயது மூதாட்டி கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 48 பேருக்கு குறைவான உறுதி செய்யப்பட்டதால் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா பாதித்த 21 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக […]
மும்பையில் முகமது மீராஜ் இக்ரமுல் ஹக் என்பவரிடம் இருந்து பதுக்கிவைக்கப்பட்ட 57,500 முகமூடிகளை மும்பை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த முக கவசங்களை இவர் அதிக விலைக்கு விற்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள முகமூடிகளின் மதிப்பு சுமார் 17.25 லட்சம் இருக்கும் என போலீசார் கூறியுள்ளர். இதையடுத்து அந்த நபர் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் கோரப்பசிக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி […]
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெறும் நிதியை கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வரின் நிவாரண நிதியுதவு, பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியாக கணக்கிட தமிழக அரசு தெளிவுரை அளித்துள்ளது. வைரஸ் தடுப்பு பணிகளுக்கு அளிக்கப்படும் நிதி, சிஎஸ்ஆர் பங்களிப்பிற்கு பெறும் முதல்வரின் நிவாரண நிதியுதவி, பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியாக கணக்கிட தெளிவுரை அளித்துள்ளது. முதல்வர் பொது நிவாரண நிதியை பாதுகாப்பு உபகரணங்கள் , வெண்டிலேட்டர் உபகரணங்கள் வாங்க […]
மக்கள் ஒவ்வொருவரும் முகக்கவசங்கள் கட்டாயமாக அணிய வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனா இந்தியாவில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியும் ஓன்று. டெல்லியில் இன்று ஒரேநாளில் 51 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 117 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1135 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் மும்பை மாநகரில் சுமார் 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மும்பையில் மட்டும் 696 […]
ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் மட்டும் மளிகை கடைகள் செயல்பட வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக இருந்து வருகிறது. இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று மாலை ஆறு முப்பது மணி அளவில் திடீரென்று வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயது முதியவர் ஒருவர் திடீரென்று கொரோனா பாதிக்கப்பட்டதால் உயிரிழந்தார். […]
அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டு லட்சுமணனை காப்பாற்றியது போல பிரேசில் மக்களின் உயிரைக் காக்க இந்தியா மருந்து தர வேண்டும் என பிரேசில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ்சுக்கான மருந்து இதுவரை கண்டறியப்படாத போதிலும் மலேரியா காய்ச்சல் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் நோய் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்திய மருந்து நிறுவனங்கள் பல இம்மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதால் போதுமான அளவில் கையிருப்பு உள்ளது. இதனால் நோயின் தாக்கம் சமூகபரவலை எட்டிய நாடுகள் இந்தியாவின் உதவியை நாடியுள்ளனர். ஒவ்வொரு […]
விழுப்புரத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட இளைஞர் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அந்தந்த மாநிலத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனை சம்மந்த பட்ட மாவட்ட சுகாதாரத்துறை கண்காணித்து வருகின்றது. டெல்லியிலிருந்து நேர்காணலுக்கு வந்த இளைஞர் கொரோனா பரிசோதனைக்காக […]
கொரோனா வைரஸ் பரிசோதனையை இலவசமாக செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது. கொரோனா அறிகுறிகள் தென்படுவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ள கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை தனியார் பரிசோதனை மையங்களில் வசூலிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னும் நிறைய சோதனை மையங்களில் இது கூடுதலான விலையில் பரிசோதனை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளும் இருக்கக் கூடிய நிலையில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதே போல ஒழுங்காக ஊரடங்கு […]
சென்னையில் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 48 பேருக்கு குறைவான உறுதி செய்யப்பட்டதால் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா பாதித்த 21 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் இதன் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏராளமானோர் வருமானத்தை இழந்திருக்கிறார்கள். பெரிய அளவிற்கு பலரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் மத்திய அரசு பொருளாதார ரீதியில் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது வருமான வரியில் திருப்பி அளிக்க வேண்டிய தொகை ஐந்து லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் அதை உடனடியாக அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.அதே போல வருமான வரியில் பிடித்தம் செய்யப்பட்ட சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேலும் 14 பேர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா அனைத்து நாடுகளையும் ஆட்டிப்படைத்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194 ஆக உயர்ந்துள்ளது. அதில் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4643 ஆகும். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கடந்த […]
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,065ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.46 லட்சம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.08 லட்சம் ஆக உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்து எதிர்கட்சிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய மோடி, முழு உலகமும் தற்போது கரோனாவின் கடுமையான […]
தமிழகத்தில் 738 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆய்வு முடிவுக்காக 344 பேர் காத்திருக்கின்றனர். முகக் கவசங்கள் […]
தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் […]
இதுவரை 1,21,271 பேருக்கு கொரோனா சோதனைகள் மேற்கொண்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194 ஆக உயர்ந்துள்ளது. அதில் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4643 ஆகும். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 773 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் […]
இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பு செய்வது குறித்து 11ஆம் தேதி முடிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய மாநில அரசு அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது. ஏப்ரல் 14ம் தேதியுடன் முடியும் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை மத்திய அரசு […]
கொரோனா நிவாரணம் வழங்கிய நடிகர் அஜித் குமாருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனிடையே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அதேபோல தமிழக முதல்வர் பழனிசாமியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவியளிக்க கோரிக்கை வைத்தார். அரசின் வேண்டுகோளின் படி, மத்திய […]
கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியாவில் உள்நாட்டு பயன்பாட்டு பற்றாக்குறையாக மாறிவிடக் கூடாது என்பதால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டிற்க்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்து கொடுப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது. இதைத்தொடர்ந்து ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா அமெரிக்காவிற்கு கொடுத்து உதவி செய்தது. மேலும் இலங்கை அரசும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் […]
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஏப்ரல் 11-இல் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகின்றார். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய மாநில அரசு அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது. ஏப்ரல் 14ம் தேதியுடன் முடியும் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை மத்திய அரசு தரப்பில் நடைபெற்று வருகிறது. […]
கொரோனா அதிகமாக பாதித்த 15 மாவட்டங்களை உத்தரபிரதேச அரசாங்கம் சீல் வைத்துள்ளது. கவுதம் புத் நகர் (நொய்டா), தலைநகர் லக்னோ, காசியாபாத், மீரட், ஆக்ரா, கான்பூர், வாரணாசி, ஷாம்லி, பரேலி, புலந்த்ஷஹர், ஃபிரோசாபாத், மகாராஜ்கஞ்ச், சீதாபூர், சஹரன்பூர் மற்றும் பஸ்தி ஆகிய 15 மாவட்டங்களை அம்மாநில அரசாங்கம் சீல் வைத்து மக்கள் செல்ல தடை விதித்துள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்கள் ஹோம் டெலிவரி மூலம் கொண்டு சேர்க்கப்படும் என்றும் மற்றும் மருத்துவ குழுக்கள் மட்டுமே உள்ளே செல்ல […]
ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டுமென்று அனைத்து மாநில அரசும் கோரிக்கை விடுத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் நாட்டில் உள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அனைத்துக்கட்சி கூட்டம் என்ற வகையில் அமைந்த இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி பேசிய விஷயங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது அதில், ஒவ்வொரு உயிரையும் காப்பது தான் அரசாங்கத்தின் மிக […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த கொடிய கொரோனா இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக வேகமாக பரவ தொடங்கி விட்டது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்தியாவில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ள மாநிலத்தில் முதலிடம் வகிக்கிறது. […]
பாலிவுட்டில் முன்னணி நடிகராக விளங்கும் சல்மான் கான், கொரோனாவால் அச்சத்தில் இருப்பதாக கூறியுள்ளார். பரவி வரும் கொரோனோவால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால், இந்திய திரையுலகம் முழுவதும் முடங்கி போய் உள்ளது. இதனால் அனைத்து மொழி நடிகர்-நடிகைகளும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். இதில் சிலர் நகரத்திற்கு வெளியே உள்ள தங்களது பண்ணை வீடுகளில் தங்கியுள்ளனர். அதேபோல சல்மான்கானும் தனது சகோதரர் மற்றும் மகனுடன் இணைந்து பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். அந்த வீட்டில் இருந்து அவர் வீடியோ ஒன்றை வெளிட்டார். அந்த […]
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை அனுஷ்கா, கொரோனா குறித்து உருக்கமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சீனாவில் வுஹான் நகரத்தில் இருந்து உருவெடுத்த கொரோனா என்ற உயிரை பறிக்கும் வைரஸ் உலக நாடுகளை நிலைகுலைய வைத்தது மட்டுமில்லாமல், இந்தியாவிலும் அதன் கோர பசியை தீர்த்து வருகிறது. அதோடு மட்டும் நின்று விடாமல் தமிழகத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த பாதிப்பில் இருந்து நம்மை காப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை […]
நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதில் திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குளுத் தலைவர் டி.ஆர். பாலு, அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றனர். இந்த நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த நவநீதகிருஷ்ணன், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை கூடுகிறது என்பதை ஆலோசனையில் கூறினேன் என தெரிவித்துள்ளார். மருத்துவ, பொருளாதார ரீதியாக எடுத்த நடவடிக்கைகள் […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளியே வருபவர்களின் ஓட்டுநர் உரிமங்களை இடைநீக்கம் செய்ய வேண்டும். கொரோனா பரிசோதனை செய்ய தவறினால் கட்டாயப்படுத்தலாம் […]
ஊரடங்கால் வீட்டில் தங்கியுள்ள மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். அதை தாம் புரிந்து கொள்வதாகவும், மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால் மக்கள் சலிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்காக தாம் வருந்துவதாக கூறிய அவர், ஆனால் கொரோனா வைரசை வெல்ல வீட்டில் தங்குவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் கூறியுள்ளார். அதே சமயம் சீனாவின் வுஹான் பகுதியில் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிய செய்தியையும், கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன […]
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கியது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு கொரோனா நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.510 கோடி ஒதுக்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.966 கோடி, மத்தியபிரதேசத்துக்கு ரூ. 910 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மக்களிடையே COVID19 குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக கொரோனா வைரஸ் போன்ற உருவம் கொண்ட காரை சுதா கார்ஸ் அருங்காட்சியகம் வெளியிட்டது. சுதா கார்ஸ் அருங்காட்சியகத்தை சொந்தமாகக் நடத்தும் சுதாகர் என்பவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த கார் 100 சிசி எஞ்சின் கொண்டது. இது நான்கு சக்கரங்களை கொண்ட ஒற்றை இருக்கை கார். இந்த காரில் ஒருவர் 40 கி.மீ வரை வசதியாக பயணிக்க முடியும். இந்த மாதிரியைத் தயாரிக்க அருங்காட்சியத்தின் […]
வருவாயின்றி மக்களிடம் மெல்ல வறுமை புகும் சூழலில், நிவாரணத் தொகையான ரூ.1000 போதவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. கொரோனாவின் இறுதி விளைவாக பட்டினிச்சாவுகள் ஏற்பட்டு விடாமல் தடுக்க உரிய திட்டமிடலை அரசுகள் அலட்சியமின்றி மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், கொரோனா நோய்த்தொற்று அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவினைப் பின்பற்றி, தமது வாழ்க்கைக்கான அன்றாடத் […]
கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் அரசு, தனியார் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்களுக்கான செலவினங்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளது. மேலும், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்கள் ஆகியவற்றின் தட்டுப்பாடுகளை உடனடியாக […]
நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதில் திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குளுத் தலைவர் டி.ஆர். பாலு, அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றனர். இந்த நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த டி.ஆர்.பாலு, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கருத்து வேறுபாடுகளை மறந்து மத்திய, மாநில அரசுகள் பணியாற்ற கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை […]
கொரோனா ஊரடங்கை மீறியதால் பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தும் கொரோனா ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதில் முக்கியமாக அந்த நாட்டிலுள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் லாகோசில் என்ற பகுதியில் அதிகளவில் கொரோனா பாதிப்பு உள்ளது. இதனால் அந்நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கும், இறுதி சடங்கு மற்றும் திருமணங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
நடிகர் விஜய் தேவரகொண்டா மாஸ்க் பயன்படுத்துவதற்கு பதிலாக, முகத்தைமூட துணியை பயன்படுத்துங்கள் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ், தெலுங்கு, என அனைத்து மொழி படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்பதால், திரையுலகப் பிரபலங்கள் பலரும் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதையடுத்து வீட்டில் இருக்கும் பெரும்பாலான பிரபலங்கள் கொரோனா குறித்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். […]
நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குளுத் தலைவர் டி.ஆர். பாலு, அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 5,194பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 124ல் இருந்து 194ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 70 பேர் உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோ வைரஸ் மேலும் […]
உளுந்தூர்பேட்டையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் 10க்கும் மேற்பட்ட கடைகள் இழுத்து மூடப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு 144 தடை உத்தரவை ஏப்ரல் 21 ஆம் தேதி வரை அமல்படுத்தியுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைக்கு வெளியே பொருட்கள் வாங்க வெளியே வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் மக்கள் சமூக விலகலை பின்பற்றாமல் கடைகளில் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் […]
கொரோனா சிகிச்சை நெறிமுறைகளை வகுக்க சிறப்பு நிபுணர் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக 19 மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், பேராசிரியர்கள் இந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். சென்னை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ரகுநந்தன், ராமச்சந்திரா, அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்பட 19 பேர் தமிழக அரசின் குழுவில் இடம்பெற்றுள்ளனர். கொரோனா சிகிச்சை நெறிமுறைகளை வகுக்க இந்த சிறப்பு […]