Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு…. மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… இந்தியாவில் 402 பேர் குணமடைந்தனர்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 402 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களை கொன்று குவித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும்  தற்போது தனது வேகத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆகவே இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை 21 நாட்கள் பிறப்பித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் […]

Categories
Uncategorized

கொரோனா அச்சுறுத்தல்: புகழ்பெற்ற ‘பெங்களூரு கரகா திருவிழா’ ரத்து!

கர்நாடக மாநிலத்தில் ஆண்டுதோறும் கொண்டப்படும் கரகா திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் நகரின் மிக முதன்மையான தேசியத் திருவிழா என்பது, சித்திரா பௌர்ணமி நாளில் நடக்கும் திரௌபதி அம்மன் கரகத் திருவிழா ஆகும். இதனைக் கொண்டாடுவதும் திகளர்கள்தான். பெங்களூரு தர்மராயா சுவாமி ஆலயம் எனப்படும் ‘திரௌபதி ஆலயத்தில்’ சித்திரை மாதத்தில் பதினோரு நாட்கள் கரகா திருவிழா நடக்கும். அதில் முக்கிய நாளான பெரிய கரகம் (Pete Karaga) எனும் கரக ஊர்வலம் சித்திரா பௌர்ணமி அன்று நடக்கிறது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 194ஆக அதிகரிப்பு…. 402 பேர் குணமடைந்துள்ளனர்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 4,798ல் இருந்து 5,194 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது!

இந்தியாவில்  கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,194ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும்  வேகமாக பரவியதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை 21 நாட்கள் பிறப்பித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் செல்வதால் மக்கள் பீதியில் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்தியாவில் 5,194பேர் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

33 மாவட்டம்… 8 பேர் பலி, 690 பேருக்கு கொரோனா … மாவட்டம் வாரியாக பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 33 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 621 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 18 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.   கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 33 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

33 மாவட்டங்களில்…. 690 பேருக்கு கொரோனா… மாவட்டம் வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 33 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 621 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 18 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 33 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில்…! ”ஒரே நாளில் 1,970 மரணம்” 4 லட்சம் பேருக்கு கொரோனா …!!

அமெரிக்காவை சின்னாபின்னமாக்கும் கொரோனா வைரசால் நேற்று ஒரே நாளில் 1970 பேர் உயிரிழந்துள்ளது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் அமெரிக்கா பாதிக்கப்பட்டது எப்படி ?

கொரோனாவால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏன் இத்தனை பாதிப்புகள் என்று உலகம் முழுவதுமே கேள்விகள் எழுப்பப்படுகிறது. அதற்கு விடை தேடும் தொகுப்பு இது தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக சீனாவில் இருந்து ஏராளமான மருத்துவக் கருவிகளும், பாதுகாப்பு கவசங்கள் விமானங்கள் மூலமாக இறங்கிக் கொண்டிருக்கின்றன. இதற்காக நியூ யார்க் நிர்வாகம் சீனாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இரு மாதங்களுக்கு முன்பு இதுபோன்று விமானங்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

14 மாத பிஞ்சு குழந்தை உயிரை பறித்த கொரோனா – குஜராத்தில் சோகம் …!!

குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். மத்திய மாநில அரசு கொரோனவை  கட்டுப்படுத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.   இந்தியாவைப் பொருத்தவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 789 ஆக அதிகரித்துள்ள நிலையில் 353 பேர் குணமடைந்துள்ள நிலையில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஆயிரத்துக்கும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வேலூர்

BREAKING : தமிழகத்தில் கொரோனா பலி 8ஆக அதிகரிப்பு …!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்த 7 உயிரிழந்த நிலையில் 19 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். கொரோனாவால் அதிகம் பாதித்த மாவட்டமாக 149 பேருடன் சென்னை முன்னணி வகிக்கின்றது. அதனை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

BREAKING : வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு ….!!

வேலூரில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர் இறந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்த 7 உயிரிழந்த நிலையில் 19 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 45 வயது நபர் வேலூர் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் கொரோனா : பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,018 ஆக உயர்வு!

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த கொடிய கொரோனா இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக வேகமாக பரவ தொடங்கி விட்டது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்தியாவில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ள மாநிலத்தில் முதலிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

1.25 கோடி ரூபாய் வழங்கிய நடிகர் அஜித்… ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்… கொண்டாடும் ரசிகர்கள்!

நடிகர் அஜித்குமார் கொரோனா தடுப்பு பணிக்காக 1.25 கோடி  ரூபாய் அளித்துள்ளதால் அவரது ரசிகர்கள்  #PerfectCitizenThalaAJITH என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித்குமார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவரது படம் குறித்த அறிவிப்பு ஏதாவது வெளியானாலோ அல்லது  படம், டிரைலர், டீசர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியானால் போதும்  ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடுவார்கள். இந்த நிலையில் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 124ஆக அதிகரிப்பு…. 353 பேர் குணமடைந்துள்ளனர்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 4,421லிருந்து 4,789ஆக உயர்ந்துள்ள நிலையில் 353 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா : பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,789 ஆக உயர்வு!

இந்தியாவில்  கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,789 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை 21 நாட்கள் பிறப்பித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் செல்வதால் மக்கள் பீதியில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் 4,789 பேர் கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 124 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் தான் அதிகம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பு  உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மகிழ்ச்சி செய்தி…. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் குணமடைந்தனர்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 19 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் 4000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

12 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி ….!!

சிமெண்ட், உரத் தொழிற்சாலை செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது கொரோனா தடுப்பு தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதிருந்தாலும் இருந்தாலும் ஒரு சில தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதியை ஏற்கனவே தமிழக அரசு கொடுத்திருந்தது. இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனைத்து துறை செயலாளர், டிஜிபி, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் அனுப்பியுள்ளார். அதில் தொழிற்சாலைகளை பொருத்தவரை ஸ்டீல், சிமெண்ட்,உரம் தொழிற்சாலை, சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயனம், ஜவுளி தொழிற்சாலை, மருந்து தொழிற்சாலைகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் 690 பேருக்கு கொரோனா….. உயிரிழப்பு 7ஆக அதிகரிப்பு …!!

தமிழகத்தில் 690 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளார் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா – பீலா ராஜேஷ்!

தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்றுள்ளவரால் 30 நாட்களில் 409 பேர் பாதிக்கப்படுவதாக ஆய்வு: மத்திய சுகாதாரத்துறை

கொரோனா நோய் தொற்று பாதித்த ஒரு நோயாளி தனிமைப்படுத்துதல் அல்லது சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என்றால், அந்த நோயாளி மூலம் 30 நாட்களில் 406 பேர் பாதிக்கக்கூடும் என சமீபத்தில் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4, 421 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தாராளமாக நிதி தாருங்கள் – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி வழங்குமாறு முதல்வர் பழனிசாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தாராளமாக நிதி தாருங்கள் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு 2வது முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரிடர் நேரத்தில் நீங்கள் அளிக்கும் சிறு தொகை கூட ஏழை, எளிய மக்களைக் காப்பாற்ற பேரூதவியாக இருக்கும் அனைத்து நன்கொடைகளுக்கும் ரசீது அனுப்பப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் பொது […]

Categories
அரசியல்

மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1,250 கோடியை விளம்பரங்களுக்காக செலவிடுகிறது: சோனியா காந்தி

மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1,250 கோடியை விளம்பரங்களுக்காக செலவிடுகிறது என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கவும் பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். மேலும், ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான அழகுபடுத்தல் மற்றும் கட்டுமானத் திட்டங்களை ஒத்திவைக்க வேண்டும் என்றும், அந்த தொகையை புதிய மருத்துவமனை அமைக்க, மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனாக்கு எதிரான […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு உத்தரவு… குறைந்து வரும் மக்கள் நடமாட்டம்.. GOOGEL நிறுவனத்தின் சேவை..!!

கொரோனா  வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மக்கள் எந்த அளவிற்கு கடைபிடிக்கின்றனர் என்பதை தற்பொழுது பார்க்கலாம். ஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறித்து அறிய தனி மென்பொருளை உருவாக்கி உள்ள கூகுள் நிறுவனம், அதன் map சேவைகளை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் மக்கள் நடமாட்டம் எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பது குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில் சில்லறைக் கடைகள், பொழுதுபோக்கு, மல்லிகை கடை, மருந்தகங்கள், பூங்காக்கள், போக்குவரத்து, ரெயில் நிலையங்கள், பணியிடங்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : கொரோனா நிவாரணம் : ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கிய நடிகர் அஜித்குமார்..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.  இந்தியாவில் கோரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதுவரை இந்த வைரசால் 114 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அதேபோல தமிழக முதல்வர் பழனிசாமியும் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவிற்கு இன்று மட்டுமே 615 பேர் உயிரிழப்பு… மொத்த உயிரிழப்பு 75,269ஆக உயர்வு!

உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75,269ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200கும் மேற்பட்ட நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நடிகர் அஜித் ரூ 25 லட்சம் நிதியுதவி!

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு, நடிகர் அஜித்குமார்  ரூ 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு (இந்தியா) முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு துறைகள் முடங்கி கிடக்கின்றன. மேலும் நாட்டு மக்கள் அனைவரும் வேலைக்கு எங்கும் வெளியே செல்ல முடியாமல் வருமானமின்றி பாதிப்படைந்துள்ளனர். அதிலும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் பிடியில் இருந்த 81,000 பேரில் 77,000 பேரை குணப்படுத்திய சீனா..!

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.  சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அப்போது அந்த வைரஸ் காரணம் புரியாத  நிமோனியா என அடையாளப்படுத்தப்பட்டதாகவும்  அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் தொடர்ந்து ஆய்வு செய்த போது தான் அது கொரோனா வைரஸ் என்று உறுதிபடுத்த பட்டதாக தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து நாளுக்கு நாள் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரிக்கு கொரோனா உறுதி!

மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி காவல்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். போபாலில் இன்று மட்டும் 13 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் சுகாதாரத்துறை ஊழியர்கள், 8 பேர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என போபாலின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் சுதிர் குமார் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு திட்டம் ? பரபரப்பு தகவல்கள் …!!

நாடு முழுவதும் ஏப்ரல் 14 பிறகு ஊரடங்கு நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது நாடு முழுவதும் ஏப்ரல்14 பிறகு உடனே நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து தகவல் வெளியாகியிருக்கிறது. நேற்றைய தினம் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது ஏப்ரல் 14 பிறகு ஊரடங்கு நீட்டிக்கலாமா ?  அல்லது முடித்துக் கொள்ளலாமா ? என்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக ஊரடங்கு முடித்துக் கொண்டால் எந்த […]

Categories
உலக செய்திகள்

ராக்கெட் வேகத்தில் கொரோனா… பலி எண்ணிக்கை 75,294 ஆக உயர்வு..!!

உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்து வரும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. இந்த கொடிய கொரோனா தாக்குதலால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில்  […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தாக்குதல்… அமெரிக்காவின் உதவி தேவையில்லை… ஈரான் திட்டவட்டம்!!

அமெரிக்காவிடம் ஒருபோதும் நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவி கேட்க மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரான் 7ஆவது இடத்தில் இருக்கின்றது. ஈரானில் இதுவரை 60,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,739 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவிடம் ஒருபோதும் நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவி கேட்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

MLAக்களின் தொகுதி நிதி பிடித்தம் – தமிழக முதல்வர் அறிவிப்பு …!!

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக முதலவர் அறிவித்துள்ளார். கொரோனா நோய் பரவுவதை தடுக்க அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயை மாநில அளவில் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு வருடத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்த மத்திய அரசு அதனை கொரோனா தொற்று […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 3 வார்டுகளுக்கு ஒரு மருத்துவர் குழு வீதம் அமைக்கப்பட்டுள்ளது – மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

தமிழகத்திலேயே சென்னையில் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நிலையில், சென்னையில் 3 வார்டுகளுக்கு ஒரு மருத்துவர் குழு வீதம் அமைக்கப்பட்டு உள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பபட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திருவொற்றியூர் பகுதியில் கொரோனா அறிகுறி உள்ளதா என்று கண்டறிய வீடு, வீடாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொரோனா பாதிப்புடன் ஈரோடு வந்த தாய்லாந்து நாட்டினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு!

கொரோனா பாதிப்புடன் தாய்லாந்தில் இருந்து மதப்பிரச்சாரத்திற்காக ஈரோடு வந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21ம் தேதி தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் ஈரோடு வந்துள்ளனர். அவர்கள் ஈரோடு சுல்தான்பேட்டை பள்ளிவாசலில் தங்கி, அங்கிருக்கும் மக்களிடம் மதபோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவர்களுக்கு ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில், அவர்களுக்கு கொரோனா இருப்பது […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்திவைப்பு …!!

 கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை வேகப்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதித்தவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களை எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றன. முன்னதாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் முழு […]

Categories
உலக செய்திகள்

புதிதாக யாருமே இறக்கவில்லை… கொரோனாவை அடக்கிய சீனா!

சீனாவில் புதிதாக கொரோனா வைரசால் யாரும் உயிரிழக்கவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கி தற்போது உலகையே அதிரவைத்து வருகிறது கொரோனா வைரஸ். தற்போது சீனாவை தவிர்த்து ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது.  தொடக்கத்தில் சீன மக்களை கொரோனா கொத்து கொத்தாக கொன்று குவித்தது. ஆனால் தற்போது சீனாவில் இதன் பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. இன்றைய […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மேலும் 23 பேருக்கு கொரோனா உறுதி… பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 891ஆக உயர்வு!

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 891ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,281லிருந்து 4,421ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் எண்ணிக்கையானது தொடர்ந்து உயர்ந்தது வருகிறது. நேற்று ஒரே நாளில் 120 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் கொரோனா நோயினால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 868ஆக இருந்தது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் 23 பேருக்கு கொரோனா உறுதி […]

Categories
சற்றுமுன் டெக்னாலஜி தேசிய செய்திகள்

BREAKING : கொரோனா வதந்தி : வாட்ஸ் அப்பில் புதிய கட்டுப்பாடு …!!

கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை கட்டுப்படுத்துவதற்கு வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. கொரோனா வைரஸை சமாளிப்பது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம்  அதுதொடர்பான வதந்திகளை சமாளிப்பது என மத்திய மாநில அரசு பேரும் போராட்டங்களை நடத்தி வருகின்றது. பொதுமக்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்த வதந்திகளை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு எத்தனையோ நடவடிக்கை எடுத்தாலும், அதையும் மீறி தொடர்ச்சியாக தேவையில்லாத வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக வாட்ஸ் அப்பில் தான் இந்த மாதிரியான […]

Categories
தேசிய செய்திகள்

மற்ற நாடுகளுக்கு உதவலாம்… ஆனால் இந்தியர்களே முதலில் முக்கியம் – ராகுல் காந்தி கருத்து!

இந்திய நலனுக்கு தான் முன்னுரிமை தரவேண்டும், இந்தியர்களே முதலில் முக்கியம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியாவில் உள்நாட்டு பயன்பாட்டு பற்றாக்குறையாக மாறிவிடக் கூடாது என்பதால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அமெரிக்க அதிபரின் வேண்டுகோள் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்க்கு நேற்று […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்ய அவசரகால தொலைபேசி எண்கள் – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தெரிவு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்றும் விவசாயிகளிடம் காய்கறி வாங்கி விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும் என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும், குளிர்பதன கிடங்கு பயன்பாட்டு கட்டணம் ஏப்ரல் 30 வரை […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் 198 சுகாதார அதிகாரிகள் பணிக்கு வராமல் ‘ஆப்சென்ட்’: சட்டப்படி நடவடிக்கை .. அரசு எச்சரிக்கை

பீகார் மாநிலத்தில் இதுவரை 198 சுகாதாரத்துறை அதிகாரிகள் பணிக்கு வருவதில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணிக்கு வராததின் விளக்கத்தை கேட்டு அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம் -2005 மற்றும் தொற்று நோய் சட்டம் -1897 இன் கீழ் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை விளக்கி 3 நாட்களுக்குள் பதில் சமர்ப்பிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கடமையில் இல்லாத நிலையில் காணப்பட்ட மாநிலத்தின் மற்ற 122 சுகாதார அதிகாரிகள் மீதும் பீகார் அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : வணிகர்கள் 1% சந்தைக் கட்டணம் செலுத்த தேவையில்லை …!!

வணிகர்கள் அரசுக்கு செலுத்தும் 1 சதவீத சந்தைக் கட்டத்தை செலுத்த தேவையில்லை என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் பிறப்பித்துள்ளார். அந்த அடிப்படையில் தற்போது நெல், சிறு தானியங்கள், பயிறு வகைகள், நிலக்கடலை, எள், தேங்காய், பெருங்காயம், புளி, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும்போது வியாபாரிகளிடமிருந்து விற்பனை மதிப்பில் ஒரு சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது நிலவிவரும் சூழலை கருத்தில் கொண்டு விவசாயிகளிடமிருந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்ற 3,300 பேர் ஆய்வு…. யாருக்கும் கொரோனா இல்லை – மாநகராட்சி ஆணையர்!

சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்ற 3,300 பேரை ஆய்வு செய்ததில் இதுவரை யாருக்கும் கொரோனா இல்லை என மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பபட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், சென்னையில் மளிகை பொருட்களை 5 கி.மீ. சென்று வாங்க வேண்டிய அவசியமில்லை. வீட்டின் அருகில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர், செவிலியர்களுக்காக பிரார்த்தியுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்!

உலக சுகாதார தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் 4,421 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 114ஆக அதிகரித்துள்ள நிலையில் 321 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில் இன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுவதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். Today on #WorldHealthDay, let us not only […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட சில நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்யப்படும்: வெளியுறவுத்துறை

கொரோனா தொற்று காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில நாடுகளுக்கு மட்டும் மருந்து மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக மத்திய வெளியுறத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ” COVID19 தொற்றுநோயின் காரணமாகவும் மனிதாபிமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு, நமது திறன்களைச் சார்ந்துள்ள அண்டை நாடுகளுக்கு பாராசிட்டமால் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவற்றை இந்தியா பொருத்தமான அளவில் ஏற்றுமதி செய்ய உரிமம் வழங்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

மிரட்டல் விடுத்த டிரம்ப் ….. ஓகே சொன்ன இந்தியா…. வில்லத்தனத்தால் வென்ற அமெரிக்கா …!!

அமெரிக்கா கேட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா வழங்க முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியாவில் உள்நாட்டு பயன்பாட்டு பற்றாக்குறையாக மாறிவிடக் கூடாது என்பதால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்து. இதனால் அமெரிக்க அதிபரின் வேண்டுகோள் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்க்கு நேற்று பதிலளித்த அமெரிக்க அதிபர் , இந்தியாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,421ஆக உயர்வு… 114 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 4,281லிருந்து 4,421ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

144 தடை உத்தரவு… வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாட்டுப்புற கலைஞர்கள்..!!!

கொரோனா வைரஸ் எதிரொலியாக கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் விளாத்திகுளம் சுற்று வட்டார நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். எட்டையபுரம் தாலுகாவில் நையாண்டி மேளம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கும்மி பாட்டு, ஆடுபுலி ஆட்டம் என மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளனர். தமிழகம் மட்டுமல்ல வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் சென்று இவர்கள் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை திருவிழா சீசன் என்பதால் அந்த காலகட்டத்தில் இவர்கள் பிசியாக இருப்பது […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

மருந்து மூலப்பொருள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம் – வெளியான பரபரப்பு தகவல் …!!

மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்ய இந்தியா விதித்திருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்காவை கதிகலங்க வைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளை நடுங்கச் செய்துள்ள கொரோனா ஆயிரக்கணக்கான உயிர்களை  பறித்துச் சென்றது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது. ஒட்டுமொத்த ஆய்வாளர்களும், ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் இதற்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா கதற […]

Categories

Tech |