Categories
அரசியல்

ஒலி,ஒளியால் மட்டும் கொரோனாவை ஒழிக்க முடியாது: ப. சிதம்பரம் கருத்து

“ஒலி,ஒளியால் மட்டும் கொரோனாவை ஒழிக்க முடியாது” – முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேக்குது தெரிவித்துள்ளார்.மேலும், கொரோனா தடுப்பு தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ” எதிர்க் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்தாலோசித்ததை எல்லோரும் வரவேற்கிறோம் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 6 நாட்களாகவே கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுமார் 571 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் உள்ளது. 3ம் நிலைக்கு போகக்கூடாது என ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

சந்தையில் கூடிய மக்கள்… காற்றில் பறந்த சமூக இடைவெளி!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் ஒடிசாவில் பொதுமக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. மேலும் நோய் பரவாமல் இருக்க அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வர் சந்தையில் சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி பெருமளவில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்கம்; இந்தியா முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது – ப. சிதம்பரம் ட்வீட்!

இந்தியாவில் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மத்திய அரசு பலவேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். நேற்று அவர் முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களுடன் திடீரென ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இத்தலைவர்கள் தங்களுடைய ஆலோசனையை பிரதமரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறத. இந்த நிலையில் இதுகுறித்து […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

விதிகளை பின்பற்றாமல் இறைச்சி விற்பனை… கடைகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி!

சென்னையில் விதிகளை முறையாக பின்பற்றாமல் இறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவையான மளிகைக்கடைகள், பால், இறைச்சி கடை மட்டுமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விதிகளை பின்பற்றாமல் இறைச்சி விற்பனை செய்து வந்த கடைகள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள்

சேலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட முதியவர் உயிரிழப்பு …!!

 சேலத்தில் வீட்டில் தனிமை படுத்தப்பட்ட முதியவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 50 க்கும் அதிகம் என்ற எண்ணிக்கையில் இருந்து வந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  571 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்த நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் தமிழக அரசு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா : கொரோனா பாதிப்பு 4ஆயிரத்தை தாண்டியது ….!!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்தை தாண்டியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி  இந்தியாவிலும் அதன் பாதிப்பை அதிகரித்து வருகிறது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவதால் மக்களுக்கு சற்று அச்சம் எழுந்துள்ளது. இருந்தபோதிலும் மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். தினம்தோறும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த […]

Categories
உலக செய்திகள்

அடுத்த எச்சரிக்கை….. ”விலங்குக்கு பரவும் கொரோனா” மனிதன் மூலம் புலிக்கு பரவியது …!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மனிதனிடம் இருந்து விலங்குக்கு பரவியுள்ளது இதன் தாக்கத்தை உணர்த்துகின்றது. உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவை சின்னாபின்னமாக்கியுள்ளது. கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த நாடுகளில் வரிசையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கின்றது. அங்கு 336,830 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்ப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 1,272,860- பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 69,424- பேர் உயிரிழந்துள்ளனர். மனிதனை தாக்கும் கொரோனா வைரஸ் விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக  பேசப்பட்டன. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

அணைந்தது மின் விளக்கு.. ஒளிர்ந்தது தமிழகம்.. ஒற்றுமையை வெளிப்படுத்திய மக்கள்..!!

கொரோனாக்கு எதிரொலியாக பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் விளக்கு ஏற்றி மக்கள் ஓற்றுமையை வெளிப்படுத்தினர். பிரதமரின் அழைப்பை ஏற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றார். சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் அகல் விளக்கு ஏற்றினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் விளக்கு ஏற்றினார். தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் பிரதமரின் அழைப்பை ஏற்று விளக்கு ஏற்றினர். கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

9 மணி…. 9 நிமிடம்…. ”ஒற்றுமையுடன் இந்தியா” பிரதமர் பின்னால்… கொரோனாவுக்கு எதிராக ….!!

பிரதமர் மோடியில் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் மொத்தமாக நம்பிக்கை ஒளி ஏற்றினர். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கொரோனவை நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து எதிர்க்க வேண்டும். நாட்டு மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும்  மின் விளக்குகளை அணைத்து டார்ச் லைட்டுகள் மற்றும் அகல் விளக்குகளை ஏற்றுங்கள் என்று வேண்டுகோள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் தடையை மீறி மது விற்பனை… ஹோட்டல் உரிமையாளர் உட்பட இருவர் கைது!

தூத்துக்குடியில் ஊரடங்கு தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஹோட்டல் உரிமையாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்கிறது. மற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு கிடக்கின்றன. அதேபோல தமிழகம் முழுவதுமுள்ள மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எச்.ராஜா வீட்டில் ஒற்றுமை ஒளி….. பிரதமரின் வேண்டுகோளை நிறைவேற்றினார்….!!

கொரோனாவை ஒற்றுமையுடன் எதிர்த்து போராட நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை ஒளி ஏற்றி பிரதமரின் வேண்டுகோளை நிறைவேற்றினர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 21 நாள் நாடுமுழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கொரோனாவை எதிர்க்க வேண்டும். மக்களின் ஒற்றுமையை அதனை வலியுறுத்தி அனைவரும் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கையில் மெழுகுவர்த்தி…. 9 மணி, 9 நிமிடம்…. ஒற்றுமை தீபம் ஏற்றிய ரஜினிகாந்த் ..!!

கொரோனாவை ஒற்றுமையுடன் எதிர்த்து போராட நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை ஒளி ஏற்றி பிரதமரின் வேண்டுகோளை நிறைவேற்றினர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 21 நாள் நாடுமுழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கொரோனாவை எதிர்க்க வேண்டும். மக்களின் ஒற்றுமையை அதனை வலியுறுத்தி அனைவரும் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

9 மணி, 9 நிமிடம்…. இருண்ட இந்தியா…. ஒற்றுமை ஒளியாய் ஜொலித்தது …!!

கொரோனாவை ஒற்றுமையுடன் எதிர்த்து போராட நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை ஒளி ஏற்றி பிரதமரின் வேண்டுகோளை நிறைவேற்றினர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 21 நாள் நாடுமுழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கொரோனாவை எதிர்க்க வேண்டும். மக்களின் ஒற்றுமையை அதனை வலியுறுத்தி அனைவரும் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“9 மணிக்கு 9 நிமிடங்கள் ஒளியேற்றுவோம்”… விராட்கோலி!

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இன்று இரவு 9 மணியளவில்  உலகிற்கு காண்பிப்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் ஒரு வீடியோ  பதிவில், ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒருவருக்கொருவர் ஒற்றுமையைக் காட்ட (ஏப்ரல்5) இன்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மின் விளக்குகளை அணைக்கும்படியும், 9 நிமிடங்கள் மெழுகுவர்த்தி, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

28 நாட்களில் எப்போனாலும் கொரோனா வரும் – எச்சரிக்கையாக இருங்கள் …!!

28 நாட்கள் கண்காணிப்பில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா வைரஸ் வரலாம் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தெரிவித்த அவர் 127 பேர் அரசு கண்காணிப்பிலும், 90,824 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2ஆம் நிலையில் இருக்கும் கொரோனா – சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2ஆம் நிலையில் உள்ளது என்று  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தை நடுங்க வைத்து வருகின்றது. கடந்த 6 நாட்களாகவே 50க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி 485 பேர் கொரோனா பாதித்தவர்களாக இருந்த நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார்.   இன்று கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தை நடுங்க வைத்து வருகின்றது. கடந்த 6 நாட்களாகவே 50க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி 485 பேர் கொரோனா பாதித்தவர்களாக இருந்த நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 571ஆக உயர்வு ….!!

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயளாலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு குறித்து தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறும் போது, தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். 127 பேர் அரசு கண்காணிப்பில் […]

Categories
உலக செய்திகள்

இரட்டை குழந்தைகளின் தாய் மரணம்… 4 நாட்களில் உயிரை பறித்த கொரோனா!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் கோர தாக்குதலுக்கு இரட்டை குழந்தைகளின் தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இங்கிலாந்து நாட்டில் நியூமார்ஸ்கி என்ற பகுதியில் இருக்கும் தீசைடு என்ற நகரத்தை சேர்ந்தவர் கரோலைன் சான்பை (Caroline Saunby) . 48 வயதான இவருக்கு 6 வயதில் ஜோசப் மற்றும் எலியட் என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றார்கள். இவரது கணவர் பெயர் விக்.கரோலைன் நன்கு ஆரோக்கியமாக இருந்தார். இந்த நிலையில் கடந்த 26ம் தேதி அவருக்கு தொண்டையில் வலி ஏற்பட்டது. அதை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பயப்படாதீங்க…. ”கொரோனா இப்படி பரவாது” பீதியை போக்கி மாஸ் காட்டிய இந்தியா ….!!

கொரோனா வைரஸ் பரவல் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட தகவல் உலக மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே மிரட்டு வரும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 12 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரை குடித்த கொரோனா வைரஸ் அசுரத்தனமாக வேகத்தில் பரவி வருகின்றது. இந்த தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் முழுமையும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தி உள்ளன. இதனால் சமூக விலகலை கடைப்பிடித்து கொரோனா வைரஸ் பரவலை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்…. 472 பேர் பாதிப்பு, 11 பேர் உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை

கடந்த 24 மணி நேரத்தில் 472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அஃகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த எண்ணிக்கை 3,374ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பு 79ஆக உயர்ந்துள்ளது. 267 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 490 பேரும், தமிழகத்தில் 485 பேரும், டெல்லியில் 445 பேருக்கும், கேரளாவில் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

பள்ளி, கல்லுரி எப்போது ? தேர்வுகள் உண்டா ? மத்திய அமைச்சர் பதில் …!!

ஊரடங்கு முடிந்த பிறகு தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவிவரும் நிலையில் மத்திய அரசு ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் முழு உத்தரவு அமல்படுத்தியது. மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் எப்போது நடத்துவது தொடர்பான கேள்விகள் பல்வேறு தரப்பிலிருந்து எழுப்பப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மனிதவள மேம்பாட்டுத்துறை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு: உலகளவில் 65,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

கொரோனா வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 12,10,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பாதிப்பில் இருந்து சுமார் 2,50,000-க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களை குறி வைக்கும் கொரோனா… இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களில் 42 சதவீதம் பேர்  21 முதல் 40 வயதுள்ளவர்கள்!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளானவர்களில் 42 சதவீதம் பேர்  21 வயது முதல் 40 வயது வரை உள்ள வரம்புக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் 1,374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 77 பேர் உயிரிழந்த நிலையில் 267 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் மத்திய நல்வாழ்வு துறை இணைச் செயலர் லவ் அகர்வால் டெல்லியில் செய்தியாளர்களை […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் கொரோனா பாதித்த அரியங்குப்பம் பகுதியில் 21 காவலர்கள் தனிமைப்படுத்திகொள்ள உத்தரவு!

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உள்ள பகுதியில் வசிக்கும் 21 காவலர்களை தனிமையில் இருக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள மாஹேவைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவருக்கு முதன் முறையாக கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வந்த இவருக்கு மாஹே அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் புதிதாக மூன்று பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

“அடுத்த 2 வாரங்களில் நிறைய மரணம் ஏற்படும்”… அச்சத்தில் அதிபர் டிரம்ப்!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அடுத்த இரண்டு வாரங்களில் பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்பு நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அச்சம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து அச்சுறுத்தி வருகின்றது கொரோனா வைரஸ். இந்த வைரசின் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 3 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு : பெண்களுக்கு எதிராக அதிகரித்த குற்றம் – அதிர்ச்சி புள்ளி விவரம் …!!

ஊரடங்கு உத்தரவு காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்ததையடுத்து மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். நாடே வெறிச்சோடி இருக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் வெளியே சென்று, பொருட்களை வாங்கி வருகின்றனர். தேவையில்லாமல் மக்கள் யாருமே வெளியே வரவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும், பெண்களுக்கு […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

வேலைக்கு வராதீங்க, சம்பளம் உண்டு…. புதுவையில் 21 போலீசுக்கு உத்தரவு …!!

புதுசேரியில் 21 காவலர்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது. புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை 4 பேருக்கு கொரோனா நோயால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதித்த 3 பேர் அரியாங்குப்பம் பகுதியிலும், ஒருவர் திருவட்டார் பகுதியிலும் வாசிக்கக்கூடியவர். இந்நிலையில் அந்தப் பகுதியில் இருக்க கூடிய 2 காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 21 காவலர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள புதுச்சேரி காவல் துறை உத்தரவிட்டு இருக்கின்றது. அரியாங்குப்பம், திருவட்டார் பகுதி […]

Categories
தேசிய செய்திகள்

தனது மகனுக்கு ‘கொரோனா’ என்று பெயர் வைத்த ஊர்காவல் படை வீரர்!

உத்தரபிரதேசத்தில் கொரோனா எதிர்ப்பு பணியில் இருக்கும்போது பிறந்த தனது மகனுக்கு ஊர்காவல் படை வீரர் ஒருவர் கொரோனா என்று பெயரிட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் பில்தாரா காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார் ரியாசுதீன். கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இவர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் பிரசவ வலியால் துடித்த ரியாசுதீனின் மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 நாட்களில்… தமிழகத்தில் ஊரடங்கை மீறிய 64,733 பேர் கைது!

ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் 64,733 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொரோனா பற்றி வதந்தி – மாரிதாஸ் மீது வழக்கு பதிவு ….!!

கொரோனா வைரஸ் பற்றி வதந்தி பரப்பிய மாரிதாஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485ஆக அதிகரித்த நிலையில் உயிரிழந்தோரின் எண்னிக்கை 5ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7ஆகவும் இருந்து வருகின்றது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் வதந்திகளும் பரவியது. இதனை கட்டுபடுத்த மத்திய மாநில அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. ஆங்கங்கே வதந்தி பரப்பியவர்களை […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா ஆபத்தை உணராமல்… வயல்வெளியில் சமைத்து சாப்பிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு!

நெல்லையில் கொரோனா ஆபத்தை உணராமல் வயல்வெளியில் கூட்டாகச் சேர்ந்து உணவு சமைத்து சாப்பிட்ட 8 இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகஅரசு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் துபாய் சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழகத்தில் கொரோனா பலி 5ஆக உயர்வு …!!

தமிழக்த்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  சென்னையை சேர்ந்த 60 வயது நபர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏப்ரல் 1ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 1.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார. ஏற்கனவே இராமநாதபுரத்தை 71வயதான நபர் கொரோனாவால் சென்னை ஸ்டாலின்லி மருத்துவமனையில் உய்ரிழ்ந்தார். 2ஆம் தேதி காலை 9.45க்கு அனுமதிக்கப்பட்ட 71வயதான நபர் 2ஆம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி… திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை!

கொரோனா வைரசஸ் தொற்று பரவுவதை தடுக்க அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் முதல்முறையாக கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த ஆட்சியர், “வரும் 7ஆம் தேதியன்று அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பெளர்ணமி கிரிவலம் செல்வதற்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம். தனியார் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 267ஆக உயர்வு …..!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 267ஆக அதிகரித்துள்ளது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த எண்ணிக்கை 3,072லிருந்து 3,374ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 490 பேரும், தமிழகத்தில் 485 பேரும், டெல்லியில் 445 பேருக்கும், கேரளாவில் 306 பேருக்கும், தெலுங்கானாவில் 269 பேருக்கும், உ.பியில் 227 பேருக்கும், ராஜஸ்தானில் 200 பேருக்கும் கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி ….. உயிரிழப்பு 4ஆக உயர்வு ..!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது மக்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485ஆக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்..!!

கொரோனோவால்  பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகள் தயாரிக்கும் பணிகள் கரூரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளொன்றுக்கு 500 க்கும் அதிகமான பாதுகாப்பு கவச உடைகளை தயாரிக்கும் தொழிலாளிகள் அவற்றை கரூர், நாமக்கல்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பத்தாயிரம் உறைகள் தேவைப்படும் நிலையில் சில உபரி பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டை போக்கினால் மிகவேகமாக அதிகளவில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு கவசங்களை தயாரிக்கலாம் என்கிறார்கள் இந்த நிறுவனங்களை சேர்ந்தவர்கள். கண்ணுக்குப் புலப்படாத கொரோனாக்கு […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனாவால் 4ஆவது உயிரிழப்பு …!! பாதித்தவர்கள் எண்ணிக்கை 485 ஆக அதிகரிப்பு ..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. 400க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.  தமிழகத்தில் அதிகமாக டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்த 8 பேர் குணமடைந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் ஏப்ரல் 2-ல் இறந்த நோயாளிக்கு கொரோனா இருந்தது நேற்று உறுதியாகியுள்ளது. துபாயில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தாக்காத 18 நாடுகள் எவை ? இதான் காரணமாம் …!!

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் உலகளவில் 18 நாடுகளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நாடுகளை 200க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிக்காதா நாடுகள் உள்ளதா ? என்ற கேள்வி எழுகிறது. ஆம் 18 நாடுகளில் கொரோனா கால் பாதிக்கவே வைக்கவே இல்லை என்பதை அறியலாம். எந்தெந்த நாடுகள் என்பதை பார்க்கலாம்:  வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அறவே இல்லை என்று சொல்லப்படுகின்றது. இது பற்றி எந்த தகவலும் வெளி உலகிற்கு வரவில்லை. அதே […]

Categories
தேசிய செய்திகள்

”கேரளா – தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசு” மக்கள் அதிர்ச்சி …!!

மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட தமிழகம், கேரளாவுக்கு மிகக் குறைந்த அளவுநிதி ஒதுக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் முதல்முதலாக கொரோன வைரஸ் கண்டறியப்பட்ட கேரளாவில் 2 உயிரிழந்துள்ள நிலையில் 295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல மகாராஷ்டிராவில் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவும் மாறி மாறி அதிக பாதிப்பு பெற்ற […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

நம்முடைய பந்தம் ஆழமானது- நாம் இணைந்து விரட்டுவோம் – பினராயி விஜயன்

கொரோனா சவாலை கேரளா – தமிழகம் ஒருங்கிணைந்து  முறியடிப்போம் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.   இந்தியாவிலே கொரோனா முதலில் பாதித்த மாநிலமாக கேரளா. அதை தொடர்ந்து அதிகளவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் வரிசையில் கேரளா , மகாராஷ்டிரா என மாறி இருந்த நிலையில் தமிழகம் அதிக பாதிப்பு பெற்ற மாநிலங்களின் வரிசையில் கேரளாவை முந்திச் சென்றது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் தமிழ்நாட்டில் இருந்து வரும் அனைத்து சாலைகளையும் கேரளா மூட போகின்றது என்ற செய்தி […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா…. பீதியில் உறைந்த உலக நாடுகள் ….!!

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அசுரத்தனமாக பரவி வருவது உலக மக்களை மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். […]

Categories
ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் நாமக்கல் பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,072 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதன் தாக்கத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ள இந்த கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது காட்டு தீயை போல வேகமாக பரவி வருகின்றது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,072 […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சு …!!

அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார்கள்.  சிங்கப்பூர் போன்ற நாடுகள் கொரோனாவை மிக வலிமையாக எதிர்த்துப் போராடுகின்றது. அதற்கு அடுத்தபடியாக கொரோனவை கட்டுப்படுத்துவதில்  இந்தியா சிறப்பாக இருந்து வருவதை நாம் பார்க்கிறோம். சற்று காலம் தாழ்த்தப்பட்டாலும் கூட முழுமையான ஊரடங்கு அமல் படுத்தி நாட்டு மக்களை ஒருங்கிணைத்து அதில் ஓரளவு நாம் முன்னேறி இருக்கிறோம். அமெரிக்காவில் இது சற்று கையை மீறி விட்டதாகவே பார்க்க முடிகிறது.குறிப்பாக நியூயார்க்கில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏராளமாக ஏற்படுகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்ற 2,300 பேரில் 500 பேருக்கு கொரோனா அறிகுறி: டெல்லி முதல்வர் தகவல்!

டெல்லி மர்கஸ் மசூதியில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்ட சுமார் 2300 பேரில், 500 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று காணொலி மூலம் மக்களிடம் பேசிய அவர், மீதமுள்ள 1800 பேர் தனிமைப்படுத்தலில் இருக்கிறார்கள் என கூறினார். அவர்கள் அனைவரையும் நாங்கள் சோதித்து வருகிறோம் என்றும், அவற்றின் முடிவுகள் 2-3 நாட்களில் வரும் எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனக் கூறியுள்ளார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உஷார் : இண்டிகோ, ஏர் ஏசியா விமானப் பயணிகளுக்கு அறிவுறுத்தல் …!!

டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த விமான பயணிகளை தனிமைப்படுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 485ஆக அதிகரித்துள்ளது. இதில் 422 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இவர்கள் டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்தவர்கள் 28 நாட்கள் தங்களை வீட்டிற்குள்ளே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் பெயர், எண் ஆகியவற்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவி செய்த லேடி சூப்பர் ஸ்டார்!

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரூ 20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு (இந்தியா) முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு துறைகள் முடங்கி கிடக்கின்றன. மேலும் நாட்டு மக்கள் அனைவரும் வேலைக்கு எங்கும் வெளியே செல்ல முடியாமல் வருமானமின்றி பாதிப்படைந்துள்ளனர். […]

Categories

Tech |