கொரோனா தடுப்புப் பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.62.30 கோடி நிதி கிடைத்துள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. நிறுவனங்கள், பொதுமக்களிடமிருந்து தற்போது வரை ரூ.62.30 கோடி நிவாரண நிதி கிடைத்துள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் – ரூ. 5 கோடி, சக்தி மசாலா நிறுவனம் – ரூ. 5 கோடி, ஏசியன் பெயிண்ட் நிறுவனம் – 2 கோடி கொடுத்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர். மேலும் திமுக சார்பில் ரூ. 1 கோடி மற்றும் […]
Tag: #கொரோனா
7ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படாது என தமிழக அரசு புதிய உத்தரவிட்டுள்ளது. வீடு வீடாக சென்று மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்கள் விநியோகம் அனைத்து மாவட்டத்திலும் […]
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54,045ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 13,915, ஸ்பெயினில் 10,935, அமெரிக்காவில் 6,095 பெரும் உயிரிழந்துள்ளனர். கொரோனா என்ற அதிதீவிர புயலில் சிக்கி சுமார் 204 நாடுகள் சின்னாபின்னமாகி வருகின்றன. முன்னதாக, உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்திருந்தது. மேலும், சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியிருந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போதைய […]
ஆந்திரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முதல்முறையாக ஒருவர் பலியாகியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டு தீயைப்போல வேகமாக பரவி வருகின்றது. இதனை இப்படியே விட்டுவிட்டால் நாடு பெரும் இழப்பை சந்தித்துவிடும் என்பதால், மிகப்பெரிய பாதிப்பை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று மதிய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 2500-ஐ தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில், […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2ஆம் நிலையில் உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 100 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். 90, 4 12 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளார். நாம் இரண்டாம் நிலையில் தான் இருக்கின்றோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அனைவரின் உடல்நிலை சீராக உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்புக்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 411 பேரில் […]
கர்நாடகாவின் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் கூட்டம் கூடி தொழுகை நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவின் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் தொழுகை நடத்தியவர்களை போலீசார் கடித்துள்ளனர். இதனால் தொழுகை நடத்த வந்தவர்கள் மோதலில் ஈடுபட்டனர். மோதலை கலைக்க போலீசார் தடியடி நடத்தியாக கூறப்படுகிறது. கூட்டத்தினர் கடுமையாக தாக்கியதில் 4 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். தொழுகைக்கு சென்றவர்களை சமாதானப்படுத்த சென்ற சமுதாய […]
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 91 பேருக்கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ள 384 பேரில் 58 பேர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் என கூறினார். அவர்களில் பலர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும், ஆனால் டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த 58 நோயாளிகள் மூலம் அவர்களது குடும்பத்தினரை சேர்ந்த […]
சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகள் என்பது மூடுவதற்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் நாளை முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை அனைத்து இறைச்சி கடைகளையும் மூடப்பட வேண்டும் என்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இறைச்சி கடைகள் மூடப்பட்டிருக்கிற நிலையில் தற்போது சென்னை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து வகை இறைச்சி கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ 5 கோடிக்கும் மேல் நிதியுதவியளிக்க உள்ளதாக இஸ்ரோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி கொத்து கொத்தாக மக்களை கொன்று குவித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் […]
தமிழகத்தில் புதிதாக 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதித்தவர் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 411ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை தமிழகத்தில் 309ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 411ஆக அதிகரிப்பு 7 பேர் குணமடைந்த நிலையில் 1580 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 484 பேரின் சோதனை முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட் செய்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் பதிவிட்ட ட்விட்டில், தமிழகத்தில் 2,10,538 பயணிகளை ஸ்க்ரீன் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை 309ஆக உள்ள நிலையில் நேற்று 75 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்த 309பேரில், மொத்தமாக 264 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என கூறப்பட்டது. டெல்லி மேற்கு நிஜாமுதீனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 411ஆக அதிகரித்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துரை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். நேற்று வரை 309பேர் கொரோனாவால் பாதித்து இருந்த நிலையில் தற்போது 411ஆக அதிகரித்துள்ளது . இந்த தகவலை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #CODVID19 TN STATS 03.04.20: Screened Passengers: 2,10,538Beds in Isolation Wards: 23,689Ventilators: 3,396Current Admissions:1,580Samples […]
டெல்லி மாநாட்டில் பங்கேற்று சேலம் திரும்பி வீட்டுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பிய ஏராளமானோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 300க்கும் அதிகமாகியுள்ளது. கொரோனா பாதித்த 6 பேர் குணமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற பலரையும் கண்காணித்து, அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சைகளை தமிழக சுகாதாரத்துறை […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை சுட்டுக்கொல்லுங்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் உத்தரவிட்டுள்ளார். உலக நாட்டு மக்களை கொன்று குவித்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமூக விலகலைஅனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருக்கிறது. மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து, அவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நோயின் தீவிரத்தை உணராமல் ஜாலியாக […]
கேரளா-கர்நாடக எல்லை தகராறு தொடர்பாக இரு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் சந்திப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் நடமாட்டத்தை எவ்வாறு எளிதாக்குவது என்று முடிவு செய்யவும் மத்திய சுகாதார செயலாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தீவிரத்தை தொடர்ந்து அனைத்து மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கேரளாவின் எல்லை மாநிலங்களான கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநில எல்லைகள் மூலம் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் கேரளாவிற்கு […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவூதி அரேபியாவில் மக்கா மற்றும் மதீனாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் 3 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். உணவு தொடர்பான அத்தியாவசிய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. சவுதியில் 1,885 பேர் […]
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர்கள் ஹர்ஷ் மந்தர் மற்றும் அஞ்சலி பரத்வாஜ் ஆகியோர் உச்சநீதிமந்திற்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், பேரழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரத் துறை நிபுணர்களின் உதவியோடு தேசிய மற்றும் மாநில ஆலோசனைக் குழுவை […]
சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மத தலைவர்களுடனான தலைமைச் செயலாளரின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு தற்போது வரை 309ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. மேலும் நேற்று மற்றும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். […]
தமிழக மக்கள் அனைவருக்கும் கபசுர கசாயம் வழங்க கோரி ஜோசப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை வழக்கை விசாரித்த நீதிபதி, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள அனைவருக்கும் கபசுர கசாயம் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது என்று கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் கபசுர குடிநீரைத் தினமும் 60 மிலி குடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். அன்றிலிருந்து இன்று வரை சித்த மருத்துவமனைகளிலும், நாட்டு மருந்தகங்களிலும் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு தம்பதியினர் தங்களது இரட்டை குழந்ததைகளுக்கு ‘கொரோனா’ மற்றும் ‘கோவிட்’ என்று பெயர் வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் (கோவிட்) உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. நாளுக்குநாள் இதனுடைய தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா என்ற அந்த ஒரு வார்த்தை தெரியாதவர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஆம், சிறுகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரது […]
1000 ரூபாய் நிவாரண தொகை வீட்டிற்க்கே வந்து வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்கவில்லை, முழுமையாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தும் போது கூட பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க மாநில முதல்வர்களை அறிவுறுத்தினார். தமிழகத்திலும் பல்வேறு […]
அரசு ஊழியர்களுக்கு சம்பளபிடித்தம் செய்யப்படமாட்டாது என்று தமிழக முதல்வர் தெரிவித்தார். வேளச்சேரியில் வெளிமாநிலத்தவர்களை தங்கவைக்கப்பட்டுள்ள முகாமில் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கிய தமிழக முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பதில்லை. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா தொற்று நோய் என்பதால் பொதுமக்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஏப்ரல் மாத இலவச ரேஷன் பொருட்களை இந்த […]
ஹைதராபாத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, காந்தி மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 27 மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பினை தடுக்கும் நடவடிக்கையில் அனைத்து மாநில அரசாங்கங்களும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தூண்டியுள்ளது. உயிரிழப்பு 60 ஆக உயர்ந்துள்ளது.இது ஒருபுறம் இருக்க மஹாராஷ்டிரா மாநிலத்தில் நோய் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக சென்ற மருத்துவர்கள் […]
ஊரடங்கு உத்தரவை மக்கள் பின்பற்றவில்லை என்றால் 144 தண்டனை கடுமையாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எச்சரித்துள்ளார். வெளிமாநில முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பிற மாநிலங்களிலிருந்து வந்து பணியாற்றும் 1.34 லட்சம் பணியாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு மக்களை துன்புறுத்துவதற்காக அல்ல, இது அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கானது, இதை மனதில் […]
மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சைகளை அளிக்காவிடில் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. டயாலிசிஸ், கீமோதெரபி தொடர்பான அத்தியாவசிய சிகிச்சைகளையும் தொடர்ந்து அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு தற்போது வரை 309ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. இதனால் கொரோனா தொற்றுக்கு […]
ஆலப்புழாவில் 50 வயது மதிக்கத்தக்க நபர் படகில் சென்று தனித்தீவில் சிக்கிய குடும்பங்களுக்கு தேவையான உணவு பொருட்கள்,காய்கறிகள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகிறார். உயிரை பொருட்படுத்தாது இவர் செய்யும் சேவையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், நாட்டில் உள்ள அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வார சந்தைகள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களை […]
கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த 40 முன்னணி வீரர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். Prime Minister Narendra Modi held meeting with 40 top sportspersons from various sports via video conferencing today, on #COVID19 situation in the country. pic.twitter.com/NGzl4mL45x — ANI (@ANI) April 3, 2020 உலகம் […]
டெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இருக்கும் சப்தர்ஜங் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பெண் டாக்டர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவரான அவருடைய கணவரும் பரிசோதனை செய்தார். இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்கில் பணியாற்றும் பெண் டாக்டர் (48 வயது) ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இதே கிளினிக்கில் டாக்டராக பணிபுரிந்த […]
ஆந்திர மாநிலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். காக்கினாடா மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நபர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இவருக்கு கை குலுக்கி மருத்துவர்கள் வீட்டிற்கு வழியனுப்பி வைத்துள்ளனர். முன்னதாக இவர் வெளிநாட்டிற்கு சென்று திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் 335 பேருடன் மஹாராஷ்டிரா முதலிடத்தையும், 309 பேருடன் தமிழகம் 2வது இடத்தையும் […]
சென்னையில் 24 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்ட்டுள்ளதை பொது சுகாதாரத் துறை உறுதி செய்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாக சென்னை விமான நிலையத்திற்கு ஓமன், அயர்லாந்து, லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்களை சோதனை செய்ததில் கிட்டத்தட்ட 24 ஆயிரம் பேரை பொது சுகாதாரத் துறையும், சென்னை மாநகராட்சியும் தனிமைப்படுத்தி உள்ளது. அதிலும் நோய் தொற்று உள்ள […]
ஏப்ரல் 5ம் தேதி பிரதமர் மோடி கூறியதை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் ஒளியேற்ற கூறும் பிரதமர் தயவு செய்து பொருளாதார வல்லுநர்கள், தொற்று நோயியல் நிபுணர்களின் ஆலோசனையையும் கேட்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார். Dear @narendramodi,We will listen to you and light diyas on April 5. But, in return, please listen to us and to the wise counsel of epidemiologists and […]
கொரோனாவால் பேரம் பேசும் சீனா : உலக நாடுகளுக்கு கொரோனாவை ஏற்றுமதி செய்ய சீனா தற்போது அதிலிருந்து லாபம் பார்க்க தொடங்கியாச்சு. ஆசியா உட்பட அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும் சீன எல்லைக்குள் வர தடை விதித்துள்ளார். மற்ற நாடுகளை சேர்ந்தவங்க சீனர்களுக்கு கொரோனாவை பரப்பி விடுவார்கள் என்று காரணம் சொல்றாங்க. தற்போது பாதிக்கப்பட்ட பல நாடுகளுடன் ஃபேஸ் மாஸ்க், ஹாண்ட் கிளவுஸ், வெண்டிலேட்டர் போன்ற இயந்திரங்களை உற்பத்தி செய்து அவர்களுக்கு தருவதற்கு பல கோடி ரூபாய்க்கும் பேரம் பேசிக்கிட்டு […]
அமெரிக்காவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 204 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இதில், வல்லரசு நாடான அமெரிக்கா கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்திருக்கிறது. அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 2,45,193 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 6,088 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பார்த்தால் […]
கொரோனா வைரஸ் லாக் டவுனின் போது உத்தரபிரதேச மாநிலத்தில் காவல்துறையினரைத் தாக்கும் நபர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் உள்பட பல இடங்களில் காவல்துறையினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மக்களை கண்காணிக்க ரோந்து பணிக்கு சென்ற காவலர்கள் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 157 பேர் குணமடைந்துள்ளது ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகின்றது. உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. உலகமெங்கும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2069 இலிருந்து 2301 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடெங்கும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. […]
அனைத்து மதத் தலைவர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா குறித்து மதரீதியாக கருத்துகள் வெளியாவதைத் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு தற்போது வரை 309ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. மேலும் நேற்று மற்றும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த […]
கொரோனா வைரசுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.7,000 கோடி கடனுதவி அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மருத்துவ உபகரணங்கள், நிவாரண உதவிகளை மேற்கொள்ளவதில் வளரும் நாடுகள் பெரும் சவாலை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் முதற்கட்டமாக வளரும் நாடுகளுக்கு உதவ உலக வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவுக்கு 7,000 கோடி ரூபாய் கடனுதவி வழங்குவதாக உலக வாங்கி அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். அதில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். ஊரடங்கை கடைபிடித்து வருவதில் இந்தியா முன்னுதாரணமாக இருந்து வருகிறது என தெரிவித்த அவர், வரும் ஞாயிற்றுக்கிழமை கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் மஹா சக்தியை உருவாக்க வேண்டும் என்று கூறிய அவர், வரும் ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு […]
ஒடிசாவில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து வதந்தி பரப்பிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் குறித்து தவறான வதந்தி பரப்பினால் சட்டப்படி நவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஒடிசாவில் கொரோனா தொற்று குறித்து வதந்தி பரப்பினால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு ஏற்கனவே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]
ஏப்ரல் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் மின்விளக்கை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். அதில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். ஊரடங்கை கடைபிடித்து வருவதில் இந்தியா முன்னுதாரணமாக இருந்து வருகிறது. […]
கொரோனாவுக்கு எதிராக நாம் மஹா சக்தியை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி உரையாற்றியதில், கொரோனா வைரஸுடனான போரில் 9 நாட்களை நிறைவு செய்துள்ளோம். ஊரடங்கிற்கு நாட்டு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். அதில் கொரோனா வைரஸுடனான போரில் 9 நாட்களை நிறைவு செய்துள்ளோம். ஊரடங்கிற்கு நாட்டு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என்று கூறியுள்ள அவர், அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வரும் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். A video messsage to my fellow Indians. https://t.co/rcS97tTFrH — Narendra Modi (@narendramodi) April 3, […]
மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த நாமக்கல் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவன் பலியாகியுள்ளார். உயிரிழந்த 22 வயதான லோகேஷ் மகாராஷ்டிரா மாநிலம் வர்தா பகுதியில் பயிற்சி பெற்று வந்தார்.லோகேஷ் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் வேளாண் உணவுப் பொருள் தயாரிக்கும் பயிற்சி பெற்று வந்தனர். ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து ரத்தானதால் 30 பேரும் தமிழகம் நோக்கி நடந்து வந்தனர். […]
குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வுப், தற்காப்பு பற்றி குழந்தைகளுக்கு பெற்றோர்கள் புரியவைக்க வேண்டும். வேகமாக பரவி வரும் கொரோனோவை தடுப்பதற்கு, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் என்றால் என்ன என்பதை நம் வீட்டு பிள்ளைகள் அறிந்திருக்க மாட்டார்கள், அதனால் அவர்கள் விளையாட்டாக இருப்பார்கள். நாம் தான் அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை பற்றி எடுத்துரைத்து அலட்சியம் இல்லாமல் இருக்க செய்ய வேண்டும். இந்த நேரத்தில் பெற்றோர்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை சமாளிக்க முடியாமல் திணறுவார்கள். இவற்றிற்கு […]
உலகளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 50,239 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் […]
உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் இதுவரை 48,135 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,46,875 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பிடியில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 2,00,317 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6,00,098 ஆக உள்ளது. உலகளாவிய பெரும் தொற்று நோய் என அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 […]
மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த பேராசியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. கூகுள் டிரைவ், வாட்ஸ்ஆப், ஜி-மெயில், ஸ்கைப் உள்ளிட்ட செயலிகள் மூலம் பாடம் நடத்த பேராசியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அதில், செமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் ஆன்லைனை பயன்படுத்தி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைத்து கல்வி நிறுவனங்களும் […]
கேரளாவில் மேலும் 21 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் கொல்லம் பகுதியை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணும் அடங்குவார். இதையடுத்து கேரளாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,000 நெருங்கியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 131 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா […]
சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால் சென்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள லைப்ஸ்டைல் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த இருவருக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் 2 பேரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பது […]