Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை: ஊரடங்கை பயன்படுத்தி மர்மநபர்கள் சூறை!

கர்நாடகாவின் கடாக் பகுதியில் நேர்ந்த கொள்ளை சம்பவத்தை நினைத்தால் சிரிப்பதா, கோபப்படுவதா என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு மர்மக்கும்பல் பிளான் பண்ணி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கடாகில் செயல்பட்டு வந்த ஒரு மதுபான கடையில் சுமார் 1.5 லட்சம் அளவில் மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் கடைகள் தவிர வேறு கடைகள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வீடியோ மூலம் நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். சில தகவல்களை மக்களிடம் பகிரவுள்ளதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அதில் வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு சிறு செய்தியை பகிர இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு பின் 3வது முறையாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது. At 9 AM tomorrow morning, I’ll share a […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோ, டாக்ஸி, இ-ரிக்‌ஷா உள்ளிட்ட ஓட்டுநர் கணக்குகளில் ரூ.5000 செலுத்தப்படும்: டெல்லி முதல்வர் அதிரடி

ஆட்டோ, டாக்ஸி, இ-ரிக்‌ஷா, ஆர்.டி.வி மற்றும் கிராமின் சேவா ஓட்டுநர்கள் மற்றும் பொது சேவை வாகனங்கள் செல்லும் அனைவரின் கணக்குகளிலும் தலா ரூ.5000 செலுத்தப்படும் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்களுக்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார். தற்போது, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,000 நெருங்கியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் சிஆர்பிஎப் தலைமை மருத்துவருக்கும், எய்ம்ஸ் மருத்துவருக்கும் கொரோனா பாதிப்பு!

டெல்லியின் சாகேத்தில் அமைத்துள்ள சிஆர்பிஎப்-ல் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் தலைமை மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவர் ஏடிஜி மருத்துவமனையில் ஐசோலேஷன் வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக சிஆர்பிஎப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) உடலியல் துறையில் குடியுரிமை பெற்ற மருத்துவருக்கு கொரோனா நோய் தோற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதலாக ரூ. 3000 கோடி ஒதுக்க முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதலாக ரூ. 3000 கோடி ஒதுக்க முதல்வர் பழனிசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் 234 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டுமே 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரியவந்தது. மேலும் நூற்றுக்கணக்கானோர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா பரிசோதனை… ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த தொழிலாளி… காரணம் என்ன?

மதுரையில் கொரோனா பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை முல்லை நகரைச் சேர்ந்தவர் முஸ்தபா. 35 வயதான இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து முஸ்தபா தனது சொந்த ஊர் திரும்பினார். முஸ்தபா கேரளாவில் இருந்து வந்துள்ளதால்  பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் போலீசாருக்கும், சுகாதாரத்துறைக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து சுகாதாரத்துறையினர் விரைந்து வந்து, முஸ்தபா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்ற 1,400 பேரில் 1,300 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்: மஹாராஷ்டிர அமைச்சர்!

மகாராஷ்டிராவில் இருந்து 1,400க்கும் மேற்பட்டோர் டெல்லியில் தப்லிகி ஜமாஅத் அமைப்பு நடத்திய மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 1,300 பேரை கண்டறிந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். அவர்களின் மாதிரிகள் COVID19 சோதனைக்கு சேகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதுதவிர, மாநிலத்தில் உள்ள அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கவனிக்கும் பொறுப்பையும் நாங்கள் எடுத்து வருகிறோம் என்று கூறினார். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் உட்பட அனைத்து வசதிகளையும் வழங்கிவருவதாகவும் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனாவில் இருந்து 2 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் ….!!

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்துக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198க்கும் அதிகமான நாடுகளில் பரவி உலகையே கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]

Categories
தேசிய செய்திகள்

1-6 வகுப்புகளுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் 7,8 வகுப்பு மாணவர்களும் ஆல்பாஸ்: கர்நாடக அரசு!

கர்நாடக மாநில வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 7 மற்றும் 8ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என கர்நாடக தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். வருடந்தோறும் பள்ளிகளில் இறுதித் தேர்வுகள் வழக்கமாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும். புதிய அமர்வு பொதுவாக ஏப்ரல் மாதத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் மூடப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளும் குறிப்பிட்ட காலத்திற்கு மூடப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.150 கோடி வழங்கியது எச்.டி.எஃப்.சி குழுமம்..!

நாட்டில் தற்போது நடைபெற்று வரும் COVID19 தொற்றுநோயை நோக்கிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காகவும், இந்திய அரசை ஆதரிப்பதற்காகவும் PMCares நிதிக்கு ரூ .150 கோடியை எச்.டி.எஃப்.சி குழுமம் வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பயத்தால் அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கிய அரசு அதிகாரி: அதிர்ச்சியில் குடும்பம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரி ஒருவர் அலுவகத்திலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஹரன்பூர் அருகே நாகூர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய மூத்த போலீஸ் சூப்பிரண்டு தினேஷ் குமார், ” நாகூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் தற்கொலைக்கு முன்னதாக அவர் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

கொரோனா அச்சம்….! 10ம் வகுப்பு தேர்வு இரத்தா ? குழப்பத்தில் மாணவர்கள் …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தொடங்க இருந்தது. கொரோனா காரணமாக ஏப்ரல் 15 வரை ஒத்தி வைக்கப்பட்டு, ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இந்நிலையில் ஏப்ரல் 15 முதல் தேர்வு நடத்துவதாக இருந்தால் அதற்கான அட்டவணை வெளியிடபட்டு இருக்கும், தேர்வறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பார்கள், வினாத்தாள்களை ஒவ்வொரு மாவட்ட அனுப்பும் பணி […]

Categories
தேசிய செய்திகள்

மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கிய கேரள அரசின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை: ஐகோர்ட்!

கேரளா மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கிய அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 3 வார காலங்களுக்கு அனுமதியை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த 24ந்தேதி நள்ளிரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. திடீரென்று மது கிடைக்காத காரணத்தால் கேரளாவின் வெவ்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து கேரளாவில் மதுவிற்பனைக்கு அனுமதி வழங்கி அம்மாநில […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாதி, மதம் பார்த்து வைரஸ் பரவுவதில்லை – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கொரோனா  பரவும் விவகாரத்தில் மதம் சார்ந்த தவறான வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். கோவை குனியமுத்தூரில் உள்ள நியாய விலைக்கடைகளில்  ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நியாய விலை பொருட்கள் வழங்குவதை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் கொரோனா தொற்று உள்ளவர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றவே அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Categories
தேசிய செய்திகள்

தங்களது பணியாளர்களை கண்காணிக்க இன்ப்ராரெட் வெப்பநிலை சென்சாரை கண்டுபிடித்தது மும்பை கடற்படை

மும்பையில் உள்ள கடற்படை கப்பல்துறை அகச்சிவப்பு அடிப்படையிலான (Infrared based) வெப்பநிலை சென்சாரை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. நாவல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கப்பல்துறைக்குள் நுழையும் பணியாளர்களை திரையிடுவது அவசியம் என்று கடற்படை தெரிவித்துள்ளது. 285 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை கப்பல்துறையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 20,000 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கப்பல்துறைக்குள் நுழையும் அனைவரையும் வெப்பநிலை பரிசோதனைக்கு உள்ளாக்குவது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 236ஆக அயர்வு!

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். கொரோனா தொற்று உறுதியாகியுள்ள 2 பேரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனோவால் 234 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டுமே 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த 110 பேரும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு… எண்ணிக்கை 132 ஆக உயர்ந்தது!

ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் புதிதாக 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது. தற்போது, கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,965 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 131 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பரவாமல் கட்டுப்படுத்துவது, மருத்துவ வசதி அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி ஆலோனை நடத்தி வருகின்றார். இந்த ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் தமிழக முதல்வர் பழனிசாமி  பங்கேற்றுள்ளார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா நடவடிக்கை – அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலியில் பிரதமர் மோடி ஆலோசனை!

கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி முதலமைச்சரிடம் கேட்டு அறிகிறார். மருத்துவமனை மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நிவாரண உதவி ரூ. 1000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள்… ரேஷனில் வினியோகம் தொடங்கியது!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்தார். இன்று முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ. 1000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. எனவே அனைத்து நியாய விலை கடைகளுக்கான வாராந்திர விடுமுறை நாளான ஏப்ரல் 3ம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

144 தடை எதிரொலி – தேவையற்ற பயணம் செய்தவர்களுக்கு உடற்பயிற்சியை தண்டனையாக வழங்கிய போலீசார்

கொரோனா தொற்றின் காரணமாக 21 நாள் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் திருவொற்றியூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் வாகன ஓட்டிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தேவையற்ற காரணத்துடன் வெளியில் சுற்றி திரிந்தவர்களுக்கு உடற்பயிற்சியை தண்டனையாக வழங்கியுள்ளனர். மேலும் மீண்டும் இவ்வாறு காரணமின்றி வெளியில் சுற்றித் திரிந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா வந்தும் திருந்தாதவர்கள்… சீனர்களை சாடும் பிரபல இந்தி நடிகை..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொடங்கிய சீனாவில் மீண்டும் வவ்வால், தேள் போன்ற மாமிச உணவுகள் உண்பதை  பிரபல நடிகை கடுமையாக சாடியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி உயிர்களை உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. தற்போது சீனாவில் மட்டும் இந்த கொரோனோவால் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி இருக்கின்றனர். சீனாவில் வுஹான் நகரில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனைக்கு சென்ற சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல்.!!

மத்திய பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு போயிருந்த சுகாதார பணியாளர்கள் மீது பொதுமக்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து, சுகாதார பணியாளர்கள்  வீடு வீடாகச் சென்று கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், சுகாதார பணியாளர்கள் டட்பதி பாகல் பகுதிக்கு சென்ற போது அவர்கள் மீது பொதுமக்கள் கல்வீசி எரிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்குள் வராதீங்க… கொரோனா வந்திடும்… கணவனை மறுத்த மனைவி… கேரளாவில் பரபரப்பு!

கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த கணவனை மனைவி வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில்  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவி வீட்டுக்குள் வருவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. தன்னுடைய குடும்பத்தினருக்கு கணவரால் கொரோனா தாக்கம் ஏற்பட்டு விடுமோ […]

Categories
தேசிய செய்திகள்

கட்டணம் செலுத்துமாறு பெற்றோர்களுக்கு தனியார் பள்ளிகள் அழுத்தம் தரக்கூடாது: சத்தீஸ்கர் முதல்வர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தோற்று இந்தியா முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தற்போது வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,700-ஐ தாண்டி செல்கிறது. இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு இறுதி தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. மேலும் தமிழகம், டெல்லி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதித்த 150 பேர் குணமடைந்துள்ளனர் …!!

கொரோனா தொற்றால் 150 பேர் குணமடைந்தது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198க்கும் அதிகமான நாடுகளில் பரவி உலகையே கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நோய் பரவும் அபாயம் – தமிழக அரசு அறிவிப்பு!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41லிருந்து 50ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,834லிருந்து 1,965ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வரை 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். தமிழகத்தில் நேற்று மட்டுமே 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரியவந்துள்ளது. இதனால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவுக்கு 50 பேர் பலி …!!

இந்தியாவால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக்க அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா  வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வண்ணம் இருக்கின்றது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 இல் இருந்து 50 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த 151 […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 9, மகாராஷ்டிராவில் 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று…. ஹரியானாவில் ஒருவர் உயிரிழப்பு என தகவல்

ராஜஸ்தானில் பமேலும் 9 பேருக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது. ராம்கஞ்சில் இருந்து 7, மற்றும் ஜோத்பூர் மற்றும் ஜுன்ஜுனுவில் இருந்து தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ராம்கஞ்சில் பாதிக்கப்பட்டுள்ள 7 பேரும் ஏற்கனவே கொரோனா பாதித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். இதுவரை அந்த நபர் மூலம் 17 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. மேலும், ஜுன்ஜுனு பகுதியில் மேலும் ஒருவருக்கு சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், இவர் டெல்லி மதக்கூட்டத்தில் கலந்துகொண்டவர் என்பதையும் சுதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு!

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள மாஹேவைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டது. அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வந்த இவருக்கு மாஹே அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் புதிதாக இரண்டு பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என சுகாதாரத்துறை […]

Categories
உலக செய்திகள் மருத்துவம்

புகை பிடிப்பவரின் கவனத்திற்கு.. கொரோனோவால் ஆபத்து அதிகம்..!!

புகை பிடிப்பவர்களுக்கு தான் கொரோனா வைரஸால் அதிகம் பதிப்படைவர் என்றும் மிகப்பெரிய ஆபத்து உங்களுக்கு உள்ளது என்றும் உலக மருத்துவ துறை வல்லுனர்கள் அனைவரும் விளக்கம் அளித்துள்ளனர். புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு, புகை நமக்கு பகை, புகை பிடிக்காதீர்கள் என்று பல வழிகளில் மக்களுக்கு  விளம்பரத்தின் மூலம் புரிய வைக்கின்றனர். ஆனால் இது சிகரெட் பாக்கெட் முதல் திரையரங்கம் வரையிலும் இந்த வசனம் இடம் பிடிக்கிறது. ஆனால் புகை பிடிப்பதால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – பச்சிளம் குழந்தையையும் விட்டு வைக்கவில்லை…சோகத்தில் மூழ்கிய மக்கள்..!!

கொரோனாவின் கோரத்தாண்டவம் பச்சிளம் குழந்தையும் விட்டு வைக்கவில்லை, பிறந்து 42 நாட்கள் ஆன குழந்தை இந்த தொற்றினால் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் மேலும் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உருவெடுத்த கோரோனோ வைரஸ் இப்பொழுது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவி நிலைகுலைய செய்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 35 ஆயிரத்து 581 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை […]

Categories
உலக செய்திகள்

கொரோனோவால் கதிகலங்கும் 10 நாடுகள்..!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 935,431 பேர் பாதித்துள்ளனர். 193,999 பேர் குணமடைந்த நிலையில் 47,194 பேர் உயிரிழந்துள்ளனர். 694,238 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 35,478 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். உலகளவில் கொரோன வைரஸ் தாக்கத்தில் சிக்கியுள்ள முதல் 10 நாடுகள் :  1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 215,020 குணமடைந்தவர்கள் : […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பலி : உலகளவில் 45 ஆயிரத்தை தாண்டியது!

உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

தப்லீகி ஜமா அத் மதக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் தற்கொலை முயற்சி… காப்பாற்றிய மருத்துவர்கள்!

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மர்கஸ் மதக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மர்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு (மார்ச் 8,9,10 உள்ளிட்ட தேதிகளில்) மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சம்மர் கட்டிங் ஆஹ்… டைரக்டர் கட்… தனது மகனுக்கு முடி வெட்டிய இயக்குனர்!

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே இருக்கும் இயக்குநர் கெளரவ் நாரயணன் தன்னுடைய  மகனுக்கு தானே முடிவெட்டிய புகைப்படம் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ‘தூங்காநகரம்’ படத்தின் மூலம் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு இயக்குனராக அறிமுகமானவர் கெளரவ் நாரயணன். இதையடுத்து அவர்  சிகரம் தொடு, இப்படை வெல்லும் ஆகிய படங்களை இயக்கினார்.தற்போது கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் கெளரவ் நாரயணன் தனது […]

Categories
தேசிய செய்திகள்

JEE – அட்வான்ஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு: ஐஐடி டெல்லி அறிவிப்பு!

மே மாதம் நடக்கவிருந்த கூட்டு நுழைவுத் தேர்வுகளை (JEE) ஐஐடி டெல்லி ஒத்திவைத்துள்ளது. கொரோனா நோய் தோற்று இந்தியா முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தற்போது வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,700-ஐ தாண்டி செல்கிறது. இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு இறுதி தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. மேலும் தமிழகம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிமாணவர்கள் ஆல்பாஸ் என அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

144 தடை உத்தரவு… மதுரையில் 300 பேர் கைது… 752 வாகனங்கள் பறிமுதல்!

மதுரையில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 265 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 300 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு மார்ச் 23 ஆம் தேதி 144 தடை உத்தரவை பிறப்பித்தது. மேலும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது. ஆனால் பலரும் தடையை மீறி தேவையில்லாமல் வெளியே உற்றித்திரிவதால் தமிழகம் முழுவதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். அந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தடுப்புப் பணிக்காக இதுவரை ரூ.36.34 கோடி நிதி கிடைத்துள்ளது – தமிழக அரசு தகவல்!

கொரோனா தடுப்புப் பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.36.34 கோடி நிவாரண நிதி கிடைத்துள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. நிறுவனங்கள், பொதுமக்களிடமிருந்து மார்ச் 31ம் தேதி வரை ரூ.36,34,2,529 நிவாரண நிதி கிடைத்துள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் – ரூ. 5 கோடி, சக்தி மசாலா நிறுவனம் – ரூ. 5 கோடி, ஏசியன் பெயிண்ட் நிறுவனம் – 2 கோடி கொடுத்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர். மேலும் திமுக சார்பில் ரூ. 1 […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவாரூர் தூத்துக்குடி தேனி நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

24 மாவட்டத்தில் கொரோனா : ”கோவை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது.   தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா…உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரதமர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50,000 நிதி உதவி..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு 33 உச்சநீதிமன்ற நீதிபதிகளும் தலா ரூ.50,000 வழங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் என்ற அறக்கட்டளை இந்தியாவில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து பிரதமர் மோடியால் […]

Categories
உலக செய்திகள்

அதிபர் புதின் கைகொடுத்த மருத்துவருக்கு கொரோனா… அதிர்ச்சியில் ரஷ்யா!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் கைகுலுக்கிய மருத்துவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 8,72,447 பேர்  இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 43,269  பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் தான் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கிறது. அங்கு நாளுக்குநாள் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது. […]

Categories
கல்வி சற்றுமுன்

8ஆம் வகுப்பு வரை ஆல்-பாஸ்… 9மற்றும் 11ம் வகுப்பும் தேர்ச்சி – சி.பி.எஸ்.சி அறிவிப்பு …!!

சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் படிக்கும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாள் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமுலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநில அரசுகள் பல்வேறு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. பல்வேறு மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்: 1 -8 ம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்பட வேண்டும்: அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

கொரோனா நோய் தொற்று காரணமாக தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, I- ம் வகுப்பு முதல் VIII ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து சிபிஎஸ்சி (CBSE) பள்ளி மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல IX முதல் XI வகுப்பு மாணவர்களை உள் மதிப்பீட்டின் அடிப்படையில் அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த முறை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தனக்கு கொரோனா இருப்பதாக வீடியோ பரப்பியதால் இளைஞர் தற்கொலை…!!

மதுரையில் தனக்கு கொரோனா உள்ளதாக பக்கத்து வீட்டினர் வீடியோ பரப்பியதால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் தற்கொலை செய்துள்ளார். மதுரையை சேர்ந்த முஸ்தபா கேரளாவில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாக மதுரை பிபி குளத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று அங்கு தங்கி உள்ளார். சளி இருமல் மற்றும் உடல்சோர்வு இருந்ததால் முஸ்தபாவிற்கு கொரோனா இருக்கலாம் என்று கருதிய அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் இதுவரை 190 பேருக்கு கொரோனா தொற்று… அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரசால் நேற்று வரை 124 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக உயர்வு – சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1600ஐ தாண்டியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 124 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த நிலையில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 234ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரசால் நேற்று வரை 124 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்தது. இன்று மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 234ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று இருந்த 6 பேர் குணமடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லி மாநாட்டில் 8,400 பேர் பங்கேற்பு – அதிர்ச்சி தகவல் …!!

டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமுல்படடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் மக்கள் வெளியே வராமல் வீட்டிற்குள் இருந்து வருகின்றன. மத்திய மாநில அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் […]

Categories

Tech |