Categories
அரசியல்

கஷ்டம் தான்… இருந்தாலும் எல்லாம் யாருக்காக… உங்களுக்காக… தயவு செய்து வீட்டில் இருங்கள்… அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பொதுமக்கள் அனைவரும் தனித்திருங்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதல் தமிழ்நாட்டில் மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 144 தடை உத்தரவு இருக்கக்கூடிய இந்நேரத்தில் ஓர் சிறிய தகவல் தெரிவிக்கிறேன். உலக அளவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு, […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோர பிடியில் உள்ள முதல் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 683,937 பேர் பாதித்துள்ளனர். 146,400 பேர் குணமடைந்த நிலையில் 32,165 பேர் உயிரிழந்துள்ளனர். 505,372 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 25,426 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். உலகளவில் கொரோன வைரஸ் தாக்கத்தில் சிக்கியுள்ள முதல் 10 நாடுகள் :    1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 123,898 குணமடைந்தவர்கள் […]

Categories
அரசியல்

கொரோனாவை எதிர்கொள்ள ”15,000 படுக்கை தயார்” நிதி தடையில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் ..!!

கொரோனாவை தடுப்பதில் அரசுக்கு நிதி என்பது ஒரு தடையே இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று 1,024 பேருக்கு உறுதி செய்யப்பட்டதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். 96 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தை பொறுத்த வரை 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்து 5 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

1 வாரத்தில் 600 பேர் பாதிப்பு…. 1024 பேரை தாக்கிய கொடூர கொரோனா ….!!

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் மத்திய அரசு அதனை கட்டுப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.03) அன்று 499 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 34 பேர் குணமடைந்து 10 பேர் உயிரிழந்துள்ளனர். இருந்த எண்ணிக்கை  தற்போது ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒரே வாரத்தில் 600க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு தற்போது 1024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது ….!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. கொரோனாவால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடு : வீட்டிலேயே சிறப்பாக நடைபெற்ற இஸ்லாமியர் திருமணம்!

கொரோனா எதிரொலியால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக எளிய முறையில் வீட்டிலேயே இஸ்லாமியர்கள் திருமண விழாவை சிறப்பாக நடத்தினர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் திருப்பூர் மாவட்டத்தில் அப்பாஸ் – சையது ராபியா ஆகியோரின் திருமணம் இன்று திருப்பூர் காங்கயம் சாலையில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இருவரின் திருமணமும் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு திருப்பூர் தாராபுரம் சாலையில் அப்பாஸ் வீட்டிலேயே எளிய […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

வாட்ஸ்அப்பில் கொரோனா வதந்தி : தூக்கிச் சென்ற போலீஸ்!

கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை  காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள பல்வேறு துறைகளில் இருந்து பல தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் பொதுமக்களும் கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்தியை பரப்ப வேண்டாம் எனவும், அப்படி தவறாக தகவல் பரப்பினால் […]

Categories
தேசிய செய்திகள்

4 லட்சம் பேருக்கு உணவு கொடுக்கும் டெல்லி அரசு – முதல்வரின் அசத்தல் திட்டம் …..!!

வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் வகையில் டெல்லி அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா தடுப்பு நடிகையாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாட்டில் ஊரடங்கு அமுலில் இருக்கின்றது. இதனால் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அனைத்து தொழிற்சாலைகளும் நிறுத்தப்பட்டன. அத்தியாவசிய சேவைக்கான நடவடிக்கைகள் மட்டும் நடைபெற வேண்டுமென்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனால் டெல்லி பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் சிக்கி தவித்தனர். ஆயிரக்கணக்கான உத்தரபிரதேச தொழிலாளர்கள் நடந்து சென்று ஒரு இடத்தில் கூடினர். இதனால் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

யாரும் கேட்காதீங்க….”வாடகையை அரசாங்கம் கொடுக்கும்” கெஜ்ரிவால் அதிரடி …!!

வாடகை கேட்டு வீட்டின் உரிமையாளர்கள் யாரும் தொல்லை கொடுக்க கூடாது என டெல்லி முதலவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்ஸை கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் தினம் தோறும் மாலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பத்திரிகையாளர்களை சந்தித்து டெல்லியின் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசி வருகின்றார். இதில் பல்வேறு நிவாரண நலத்திட்ட உதவிகளையும், அறிவிப்புகளையும் அறிவித்து வருகின்றார்.மேலும் மக்களுக்கு அத்தியாவசியமான என்னென்ன தேவை இருக்கிறது தொடர்பாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ நடவடிக்கை ….!!

வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் தமிழகத்தில் சிக்கி தவிக்கின்ற நிலையில் வெளிமாநில தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்ட இரண்டு குழு அமைக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான இருப்பிட வசதி, உணவு வசதி, மருத்துவ வசதியை வேலை பார்த்த நிறுவனங்கள் உறுதி படுத்த வேண்டும். இதனை மாவட்ட […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி..! தமிழகத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா ….!!

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புக்கு 42 பேர் ஆளான நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதே போல காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.அதே போல டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் குணமடைந்த நிலையில் இன்று மேலும் […]

Categories
ஈரோடு சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஈரோட்டில்..!! ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா” ஒரே குடும்பத்தில் 4 பேர் …!!

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புக்கு 42 பேர் ஆளான நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதே போல காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.அதே போல டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் குணமடைந்த நிலையில் இன்று மேலும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா …..!!

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புக்கு 42 பேர் ஆளான நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதே போல காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். அதே போல டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் குணமடைந்த நிலையில் இன்று […]

Categories
Uncategorized

BIG BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆனது ….!!!

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புக்கு 42 பேர் ஆளான நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதே போல காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். அதே போல டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் குணமடைந்த நிலையில் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உள்ளே போ!… ட்விட்டரில் பெயரை மாற்றிய ஜீவா… காரணம் இதுதான்!

நடிகர் ஜீவா, கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றியது அனைவரையும் கவர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து கொலை நடுங்கச் செய்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் இந்தியாவில் இதுவரை 987 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 26 பேர் பலியாகியுள்ளனர். இந்த கொடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு அடுத்த ஏப்ரல்  14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மாசம் 10,000 ரூபாய்….! ”3 மாசம் 30,000 ரூபாய் கொடுங்க” – எச்.ராஜா வேண்டுகோள் ….!!

ஊரடங்கால் வேலையில்லாமல் இருக்கும் பூசாரிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா வேண்டுகோள் வைத்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்கள் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழகத்திலும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை தவிர தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள்  வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்ற 4 பேர் குணமடைந்தனர் …!!

கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 4 பேர் குணமடைந்து மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புக்கு 42 பேர் ஆளான நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதே போல காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதே போல டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் குணமடைந்த நிலையில் தற்போது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு : மகாராஷ்டிராவில்196ஆக உயர்வு ….!!

மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200யை நெருக்குகின்றது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நான் கிரிக்கெட்டைப் பற்றி சிந்திக்கவில்லை”… மக்களை விட அது பெரிது கிடையாது… கவலையில் ஹர்பஜன்!

கொரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நான் கிரிக்கெட்டைப் பற்றி துளியும் யோசிக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை உலகம் முழுவதும், 6 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியிருக்கின்றனர். இதனால் உலகில் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அந்தவகையில் இந்திய பிரதமர் நரேந்திர […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர் – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புக்கு 42 பேர் ஆளான நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதே போல காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதே போல டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் குணமடைந்த நிலையில் தற்போது மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓவியம் வரைந்து நேரத்தை செலவிடும் மஹிமா!

கொரோனா எதிரொலியாக நடிகை மஹிமா படப்பிடிப்பு இல்லமால் வீட்டிலேயே முடங்கி இருப்பதால், ஓவியம் வரைந்து தனது நேரத்தை செலவழித்து வருகிறார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அலுவலகங்கள், கடைகள் என பல்வேறு துறைகள் மூடங்கி கிடக்கிறது. அதேபோல அனைத்து மொழி சினிமா படப்பிடிப்புகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக ஓய்வே இல்லாமல் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துங்க – மத்திய அரசு உத்தரவு …!!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு குறித்து மத்திய அரசு மாநில அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதால் வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் அவரவர் மாநிலம் செல்ல  முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். நேற்று தலைநகர் டெல்லியில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களின் சொந்த மாநிலத்துக்கு திரும்ப டெல்லி […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

“என்னை எப்போதும் பெருமைப்படுத்துகிறார் அக்ஷய்”… ட்விட் செய்த மனைவி!

நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கண்ணா கணவரின் சேவையைப் பாராட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது. இந்தியாவில் இதுவரை 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், […]

Categories
அரசியல்

தமிழகத்தில் தடையை மீறிய 17,668 பேர் கைது… 11,565 வாகனங்கள் பறிமுதல்… காவல்துறை அதிரடி!

கொரோனா தொடர்பான ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 17,668 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தமிழகத்தில் நுழைந்து அச்சுறுத்தி நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. அதேபோல இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவையும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவையில்லாமல் மக்கள் வெளியேவர வேண்டாம் என்றும் அரசு அறிவுறுத்தியது. ஆனால் தேவையில்லாமல், அதனையும் மீறி மக்கள் இருசக்கர வாகனங்களில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : இந்தியாவில் கொரோனாவுக்கு பலி 26ஆக உயர்வு ….!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டான்ஸ் ஆடி… பாட்டு பாடி… பிராவோவின் ‘கொரோனா’ விழிப்புணர்வு… வைரலாகும் வீடியோ!

கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்ற பாடலை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ வெளியிட்டுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் (கோவிட்-19) காரணமாக உலக நாடுகள் முழுவதும் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காத்து கொள்வதற்காகவும், பிறருக்கு பரவகூடாது என்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் தங்களது மக்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும், ஊரடங்கு உத்தரவுகளைப் பின்பற்றுமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளன. இந்தநிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

வெளியே வராதீங்க…!! ”உங்களால் தப்ப முடியாது”…. மோடி எச்சரிக்கை …!!

விதிகளை மீறி வீட்டை விட்டு வெளியே வந்தால் சிலரால் வைரஸ் ஆபத்தில் இருந்து தப்பமுடியாது என்று பிரதமர் எச்சரித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : விவசாய பொருள் கொள்முதலுக்கு அனுமதி – தமிழக அரசு அதிரடி

தமிழக்கத்தில் விவசாய பொருட்களுக்கான தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு தொழிலுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. மளிகை கடைகள்,இறைச்சி கடைகள், மருந்தகங்கள் போன்றவற்றை திறக்க கூடாது என்பதற்கான தடை இல்லை, ஆனால் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. மருந்தகங்களுக்கு மட்டும் நேரக் கட்டுப்பாடு என்பது கிடையாது. இந்நிலையில் விவசாய பொருட்களை கொள்முதல் செய்வதற்கான தடை நீக்கப்பட்டிருக்கிறது. விவசாய பொருட்கள் கொள்முதல், நிறுவனங்கள், விவசாய […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“108 ஓட்டுநர் பாண்டித்துரை நீங்கள் என் நம்பிக்கையின் நாயகன்”… பாராட்டிய கமல்!

கொரோனா அச்சத்தால் பெற்றோர் கெஞ்சி கேட்டும் வேலையை விட்டு விலகாத 108 ஆம்புலன்ஸ் டிரைவரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். தமிழக சுகாதாரத்துறை இதனை கட்டுப்படுத்த பல்வேறு நவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகனான பாண்டித்துரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஏற்றுவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வாழ்வா சாவா போராட்டம்- மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் – மோடி பேச்சு

வாழ்வா சாவா போராட்டத்தில் நான் மக்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வானொலி மூலம் மங்கிபாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பேசி வருகின்றார். இன்று பேசிய பிரதமர் கொரோனா குறித்து பேசினார். அதில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் எடுத்த இந்த முடிவால் என் மீது சிலர் கோபத்தில் இருப்பதை நான் அறிகிறேன்.கொரோனாவை தடுப்பது என்பது வாழ்வா சாவா போராட்டம். […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஸ்பெயினில் இதுவரை 5,812 பேர் பலியாகியுள்ள நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: குமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா இல்லை- தமிழக சுகாதாரத்துறை

கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்தவர் மரணமடைந்துள்ளார்.இந்நிலையில் கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் 66 வயது முதியவருக்கு சிறுநீரக நோய் இருந்ததாகவும், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : இந்தியாவில் கொரோனாவுக்கு பலி 25ஆக உயர்வு ….!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில்…! ”ஒரே நாளில் 2 மரணம்” 22ஆக அதிகரித்தது …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : குஜராத்தில் கொரோனா பலி 5ஆக உயர்வு ….!!

கொரோனா நோய் தொற்றால் குஜராத்தில் மேலும் ஒருவர் பலியான சோகம் அரங்கேறியுள்ளது.  கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் […]

Categories
உலக செய்திகள்

தும்சம் செய்த கொரோனா…. ”இத்தாலியில் ஒரே நாளில் 889 பேர் பலி” உயிரிழந்தோர் 10,023ஆக உயர்வு …!! 

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இத்தாலியில் தொடர் மரணம் நிகழ்வது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

கொடூர கொரோனா…! ஒரே நாளில் ”3,078 பேர் பலி” கதறி துடிக்கும் உலகம் ..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 24 மணி நேரத்தில் 3ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளை வேதனையடைய வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் […]

Categories
உலக செய்திகள்

198 நாடுகள்…! 30,000த்தை தாண்டிய உயிர் பலி…. கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30,000த்தை தாண்டியது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள்

பீகார் இளைஞர்களை தாங்கி பிடித்த முதல்வர்…. உடனடி நடவடிக்கையால் குவியும் பாராட்டு ….!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க முதல்வர் உத்தரவிட்டார்  கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக பிரதமர் மோடி வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். அதனை மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுத்தும் வகையில் மாநில அரசுக்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. மாநிலம் முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

கெஜ்ரிவால் கைது ? ஆயிரக்கணக்கில் கூடியவர்களால் பரபரப்பு ….!!

டெல்லியில் உத்தரபிரதேச தொழிலாளர்கள் பலரும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதால் வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் அவரவர் மாநிலம் செல்ல  முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். சம்மந்தப்பட்ட மாநில அரசாங்கம் அவர்களுக்கு தங்க இடம் கொடுத்து, உணவளித்து கவனித்துக் கொள்கிறது. தலைநகர் டெல்லியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது ஊருக்கு செல்ல முடியாமல், பேருந்து இன்றி, உணவின்றி சாலைகளில் தங்கி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில்…! ”ஒரே நாளில் 292 மரணம்” புரட்டி போட்ட கொரோனா…. !!

உலக வல்லரசு நாடான அமெரிக்காவையே கொரோனா வைரஸ் விட்டுவைக்காதது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் கொரோனாவின் கொடூரம்…! “ஒரே நாளில் 674 பேர் பலி” …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒரே நாளில் 889 பேர் உயிரிழந்தது இத்தாலியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோர பிடியில் உள்ள 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 629,682 பேர் பாதித்துள்ளனர். 1,38,089 பேர் குணமடைந்த நிலையில் 28,970 பேர் உயிரிழந்துள்ளனர். 462,623 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 24,282 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். உகலளவில் கொரோன வைரஸ் தாக்கத்தில் சிக்கியுள்ள முதல் 10 நாடுகள் :  1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 112,560 குணமடைந்தவர்கள் : […]

Categories
உலக செய்திகள்

ஆடி போன அமெரிக்கா…. அலறும் இத்தாலி…. அரண்ட சீனா … கொரோனாவின் தாக்கம் …!!

சீனாவை மிரட்டிய கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 629,682 பேர் பாதித்துள்ளனர். 1,38,089 பேர் குணமடைந்த நிலையில் 28,970 பேர் உயிரிழந்துள்ளனர். 462,623 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 24,282 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். அமெரிக்காவில் 1,12,560 பேரை தாக்கிய கொரோனா வைரசால் 3,219 […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ 10 லட்சம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!

கொரோனா வைரஸ் தொற்றால் வேலையிழந்துள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ரூ 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தொற்றால் பல்வேறு துறைகள் முடங்கி கிடப்பதால் பெரிதும் நஷ்டமடைந்துள்ளன. அதிலும், குறிப்பாக அனைத்து படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளதால் திரைப்பட தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நடிகர்கள் மற்றும் நடிகர்கள் உதவ முன்வர வேண்டும் என்று, ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு : அதிக பாதிப்பில் அமெரிக்கா – முழு நிலவரம் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது.  அதிகமான பாதிப்பை பெற்றுள்ள அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸ் 1,12,314 பேரை பாதித்துள்ளது. 1,873 பேர் இறந்துள்ள நிலையில் 3,219  குணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்த 107,222 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 2,666 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்குள்ள நியூயார்க்கில் மட்டும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள நியூயார்க்கில் மட்டும் 46,262 பேருக்கு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே இடத்தில் குவிந்த மக்களால், காற்றில் பரந்த ஊரடங்கு…. அபாய கட்டத்தை நெருக்குதா இந்தியா ?

டெல்லியில் தங்கி வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆனந்த விஹார் பேருந்து நிலையத்தில் கூடியதால் கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரசால் 933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 84 பேர் குணமடைந்துள்ளனர். கொரோன வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. ஏற்கனவே 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி முதல் வரை நாட்டில் அனைத்துப் பகுதிகளும் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

கொரோனா நிவாரணம் : BCCI ரூ 51,00,00,000 வழங்குவதாக அறிவிப்பு!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) 51 கோடி வழங்குவதாக தெரிவித்துள்ளது.  கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. 900க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பூமி நமக்கு ஓய்வெடுப்பதற்கு நேரம் கொடுத்திருக்கிறது”… நிவேதா பெத்துராஜ் அறிவுரை!

கோரோனா வைரஸில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று நடிகை நிவேதா பெத்துராஜ் அறிவுரை வழங்கி தனது ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருவதன் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல மத்திய அரசும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக  தமிழ் உட்பட அனைத்து மொழி திரைப்படப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீட்டிலேயே முடங்கி கிடைக்கும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக செயல்பட்டு […]

Categories

Tech |