Categories
உலக செய்திகள்

BIG BREAKING : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதி!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், கடந்த 24 மணி நேரமாக தனக்கு மிக மெல்லிய அளவில் கொரோனா அறிகுறிகள்  தென்பட்டதாகவும் , சோதனை செய்ததில் கொரோனா உறுதியானதால் அமைச்சர்களுடன் தொடர்பு இல்லாமல் தனித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வீடியோ காணொளி மூலம் அரசை தொடர்ந்து நடத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 55 வயதான போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

”மகாராஷ்டிரா கொரோனாவில் 147 பேருக்கு கொரோனா” கேரளாவை முந்தியது …!!

மஹாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது. சீனா தொடங்கி உலகையே சின்னாபின்னமாக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்வது மக்களை வேதனையடைய வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 46 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அதே போல பாதிக்கப்பட்ட எண்ணிக்கையும் 724லிருந்து 743ஆக அதிகரித்துள்ளது. இதில் 47 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் யாருக்கும் தெரியாமல் சொந்த ஊருக்கு சென்ற கொல்லம் சப்-கலெக்டர்!

கேரளாவின் கொல்லம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சப்-கலெக்டர் யாருக்கும் தெரியாமல் தனது சொந்த மாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளார். இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்திருந்தது. அதில் இந்தியர்கள் 677 பேரும், வெளிநாட்டவர் 47 பேரும் அடங்குவர். இதுவரை இந்தியாவில் குணமடைத்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. மேலும், […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

ரூ.25 லட்சம் கொரோனா நிதியுதவி அளித்த சச்சின் …. மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என வேண்டுகோள்! 

இந்தியாவில் கொரோனோ வைரஸால் 170க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 11ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசின் உத்தரவை ஏற்று அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். एक समाज के तौर पर हमारी ज़िम्मेदारी है कि हम में से जो लोग positive टेस्ट हुए है, […]

Categories
அரசியல்

கொரோனா ஊரடங்கு : போலீஸ் நடவடிக்கை – விளாசிய தலைமை நீதிபதி …!!

தனிமைப் படுத்துதல் என்பது சிறைவாசம் அல்ல என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாஹி தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரைஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் தேவதையில்லாமல் கூட்டமாக கூட கூடாது. அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியே வரவேண்டும் என்ற அறிவுறுத்தல் இருந்தும் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வெளியே வந்தனர். தேவையில்லாமல் வாகனங்களை சுற்றுவதனால் கொரோனா பரவும் என்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : ”மின் இணைப்பு தூண்டிக்கப்படாது” மின் வாரியம் உறுதி …!!

மின்கட்டணம் குறித்த தேதிக்குள் செலுத்த வில்லை என்றாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில் மக்கள் யாரும் வெளியே வராமல் வீட்டுக்குளே இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மார்ச் மாதத்திற்குள் செலுத்த வேண்டிய கட்டணத்தை ஏப்ரல் 15ஆம் தேதி வரை செலுத்தலாம் என்றும் மின் வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக மார்ச் மாதத்திற்கான மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞசெய்தி வந்ததையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு : இந்தியாவில் 743 ஆக அதிகரிப்பு… 18 பேர் மரணம்!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 743 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் உலக நாடுகளில் நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து  கதிகலங்க வைத்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724 […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு ஐநா சபை வரவேற்பு!

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு ஐநா சபை வரவேற்பு தெரிவித்துள்ளது. கொரோனாவை தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம் ஐ.நா. அறிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிப்பை ஏற்படுத்தி கதிகலங்க வைத்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. இதில் கேரளா , மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு : ”நிதியுதவி அளியுங்கள்” முதல்வர் வேண்டுகோள் …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலவர் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கவேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் கொரோனா நோய்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு என்பது அமலில் இருக்கிறது. இந்த நிலையில் ஏழை எளிய மக்களை கொரோனா தொற்றில் இருந்து விடுவிக்கவும், தமிழகத்தில் தீவிரமாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதி மனமுவந்து தங்கள் பங்களிப்பினை பொதுமக்கள் அளிக்கலாம் […]

Categories
உலக செய்திகள்

சார் எங்க முதலாளிக்கு சீட்டோஸ் வேணும்… ஆரஞ்சு கொடுங்க…. கடைக்கு சென்ற நாய்… வைரலாகும் புகைப்படம்!

உரிமையாளருக்காக சீட்டோஸ் பாக்கெட் வாங்க கடைக்குச் சென்ற நாயின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து  தற்காத்துக்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. முதல்கட்டமாக அனைத்து நாடுகளுமே மக்கள் அனைவரும் வீட்டிலே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனால்  மக்கள் வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. இந்த சமயத்தில் சில மக்களின் கிரியேட்டிவ் ஐடியாவும் வெளியே எட்டிப்பார்க்கிறது. ஆம், மெக்ஸிகோவை சேர்ந்த அன்டோனியோ முனோஸ் (antonio […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

530 மருத்துவர், 1000 செவிலியர், 1,508 டெக்னிஷியன், 200 ஆம்புலன்ஸ் – மாஸ் காட்டும் EPS

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக முதல்வர் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றார். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்குக்கு முன்னதாகவே தமிழகஅரசு 144 தடை உத்தரவை பிறப்பித்தது பள்ளி மாணவர்கள் தேர்ச்சி இன்றி தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் நடைமுறையையும் அமல்படுத்தியது. கொரோனாவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் தமிழக சுகாதாரத்துறை சிறப்பான பணியை மேற்கொண்டு வருகின்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : கொரோனா தடுப்பு – புதிதாக 530 மருத்துவர்கள் நியமனம் …!!

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுளார். கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் குணமடைந்து வீடு திரும்ப உள்ளார். இந்தநிலையில் வேகமாக பரவி வரும் கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

530 மருத்துவர்கள்…. 1000 செவிலியர்கள்…. 200 ஆம்புலன்ஸ்…. முதல்வர் ஆணை ….!!

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுளார். கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் குணமடைந்து வீடு திரும்ப உள்ளார். இந்தநிலையில் வேகமாக பரவி வரும் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு நடுத்தர மக்கள், தொழில் நிறுவனங்களுக்கு உதவும்… பிரதமர் மோடி பாராட்டு!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள், சலுகைகளையும் அறிவித்து வருகின்றது. நேற்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : இந்தியாவில் பலி எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு …!!

இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் உலக நாடுகளில் மரணத்தை ஏற்படுத்தி  கதிகலங்க வைத்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. இதில் கேரளா , மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று  வருகின்றனர். மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எப்படி அதிகரித்து வருகின்றதோ அதே போல உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. […]

Categories
அரசியல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறிய 4,100 பேர் மீது வழக்குப் பதிவு!

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4,100 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தி, பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வலியுறுத்தியது. ஆனால், சிலர்  இந்த உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனர். இவர்களை போலீசார் தோப்பு கரணம் போட […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் தினமும் 4 லட்சம் பேருக்கு உணவுகள் வழங்கப்படும்: டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு 3 வது நாளாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்திய முழுவதும் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஐடி ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலேயே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காய்கறி, மருந்து, மளிகை பொருட்கள் விற்கும் கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக டெல்லி முழுவதும் தினக்கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றோர், குடியிருப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா…. பாதிக்கப்பட்டவர்கள் 35 ஆக உயர்வு ..!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் 29 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 பேருக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளது. அதில், மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதில், மதுரையில் கொரோனவால் பாதிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி … பாதிப்பு எண்ணிக்கை 35ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா இருப்பது இன்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கொரோனாவால் 29 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 6 new positive cases of #Covid19 in TN, 2 family contacts from #MDU #CN12, 2 contacts from #Erode CN5,6 ,1 contact of CN14 of Chennai, 1 25yr old fem, […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதார துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் 144 தடை ஏப்., 14ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். முன்னதாக தமிழக முதலமைச்சருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார் […]

Categories
தேசிய செய்திகள்

144 தடை: உத்தரகண்டில் கூலித்தொழிலாளர்கள், மூத்த குடிமக்களை கணக்கிட்டு உணவு வியோகிக்க உத்தரவு!

உத்தரகண்ட் மாநிலத்தில் கூலி தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டு அவர்களுக்கு குடிநீர், உணவு ஆகியவை விநியோகிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை செயலாளர் அமித் நேகி அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் மொத்தம் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. இதன் எதிரொலியாக 144 தடை உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2மடங்காக உயர்ந்தது. தற்போது, நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில்… 3 நாடுகளில் 1,795 பேர் மரணம்… கொலை நடுங்கச் செய்யும் கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும்  இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 1,795 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.  சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 198 நாடுகளில் பரவி அச்சுறுத்து வருகிறது. கொரோனாவின் கோரப்பிடியில் தற்போது ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் சிக்கித் தவித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த வைரசால் இதுவரையில் 5, 27,288 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 23,927 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர். முதலில் வேகமாக பரவத் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இருவர் காணாமல் போனதாக தகவல்: வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை!

ஆந்திர மாநிலத்தில் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய இருவர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மைலவரம் பகுதியை சேர்ந்த இருவர் மார்ச் மாதம் 14 ம் தேதி அமெரிக்காவில் இருந்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மக்கள் பீதியில் உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

RBI எடுத்த அதிரடி…. வீட்டுக்கடன் வட்டி குறைப்பு ….. மக்கள் ஹாப்பி …!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ரெப்போ விகிதம் 5.5 சதவிகிதத்திலிருந்து 4.4% ஆக குறைப்பு என்று தெரிவித்தார் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் , சலுகைகளையும் அறிவித்து வருகின்றது. அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ். கொரோனாவால் […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி…பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

பீகார் மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக ராஜேந்திர நினைவு ஆராய்ச்சி மருத்துவ நிறுவனம் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து பீகார் மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள இருவரில், ஒருவர் சிவான் பகுதியை சேர்ந்தவர் என்பதும் இவர் முன்னதாக துபாய்-க்கு பயணம் மேற்கொண்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மற்றொருவர், நளன்ந்தா பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவில்லை என […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா : பலி எண்ணிக்கை 17… பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் உலக நாடுகளில் மரணத்தை ஏற்படுத்தி  கதிகலங்க வைத்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 16 லிருந்து 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

27 மாநிலம்…. 647 இந்தியர்கள்…. 47 வெளிநாட்டினர்…. 17 உயிரிழப்பு….. கொரோனா பிடியில் இந்தியா …!!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவில் வெளிநாட்டினர் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இருந்து 67 பேர் விடுபட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 130 பேரும், கேரளாவில் 137 பேருக்கும் கொரோனாபாதிப்பு […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

உலகை மிரட்டும் கொரோனா…பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோர், குணமடைந்தவர் எண்ணிக்கை..!!

உலகளவில் கோரோனோ தோற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,31, 609 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தையும் தாண்டியது. அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அமெரிக்க முதலிடம்.  அமெரிக்க      பாதிக்கப்பட்டவர்கள்         – 69,425 பலியானவர்கள்                    – 1,045  குணம் அடைந்தவர்கள்   – 428 இந்தியா  பாதிக்கப்பட்டவர்கள்            – 719  பலியானவர்கள்    […]

Categories
உலக செய்திகள்

சிகிச்சையளிக்க சிரமம்… அதிவேக ரயிலில் கொண்டு செல்லப்படும் நோயாளிகள்… வெளியான வீடியோ!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் அதிவேக ரயிலில் ஏற்றப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய வைரசுக்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி ,ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகள் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில், அந்த வரிசையில் பிரான்சும்  இருக்கிறது. பிரான்சில் இதுவரை மட்டும் 25, 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,331 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசு […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனா பாதிப்பு : உலகளவில் 5 லட்சத்தை தாண்டியது …!!

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசால் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரசால் அங்கு 81,000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 3,200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. கொரோனா தாக்கத்தால் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி, சீனாவை விட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல ஸ்பெயின் […]

Categories
உலக செய்திகள்

7 ஊழியர்கள் பாதிப்பு… அரண்மனையில் நுழைந்த கொரோனா… தனிமைப்படுத்தப்பட்ட மலேசிய மன்னர்- ராணி!

அரண்மனை ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மலேசிய மன்னர் மற்றும் இராணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரசால் உலக அளவில் இதுவரையில் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஏழை நாடுகள்,  வளர்ந்து வரும் நாடுகள், பணக்கார நாடுகள் என்று வேறுபாடு எதையும் காட்டாமல் கொன்று குவித்து வருகிறது இந்த கொரோனா வைரஸ். அந்த வரிசையில் மலேசியாவும் இருக்கிறது. ஆம், அந்நாட்டில் 2,031 பேர்  பாதிக்கப்பட்டதுடன், 23 பேர் பலியாகி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

27 மாநிலம்…. 647 இந்தியர்கள்…. 47 வெளிநாட்டினர்…. 16 உயிரிழப்பு….. கொரோனா பிடியில் இந்தியா …!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் உலக நாடுகளில் மரணத்தை ஏற்படுத்தி  கதிகலங்க வைத்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறித்த முழு விவரம் வருமாறு : வ.எண்  மாநிலம்  இந்தியர்களுக்கு  தொற்று வெளிநாட்டினருக்கு  தொற்று குணமடைந்தவர்கள்  இறப்பு  1 அந்தமான் நிக்கோபார் 1 0 0 0 2 ஆந்திரா 11 0 1 0 3 பீகார் 6 0 0 1 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா : இந்தியாவில் பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு …!!

இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் உலக நாடுகளில் மரணத்தை ஏற்படுத்தி  கதிகலங்க வைத்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 121 , கேரளாவில் 110 பேரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வருகின்றனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எப்படி அதிகரித்து வருகின்றதோ அதே போல உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ஏப்.2ஆம் தேதி முதல் ரேஷன் கார்டுக்கு ரூ.1000 …!!

தமிழகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் 29 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரையை சேர்ந்தவர் இறந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் இரண்டு நாள் கழித்து வீடு திரும்ப இருக்கின்றார்.   இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக மாநில அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எல்லாரும் உங்க சம்பளத்தை அனுப்புங்க – OPS , EPS அறிக்கை …!!

கொரோனா நிவாரண நிதியாக அதிமுக சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் 29 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரையை சேர்ந்தவர் இறந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் இரண்டு நாள் கழித்து வீடு திரும்ப இருக்கின்றார். இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக மாநில அரசு பல்வேறு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா…. பாதிக்கப்பட்டவர்கள் 29ஆக உயர்வு ..!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை ஒருவனா வைரசால் 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் உயர்ந்துள்ளது. முன்னதாக  காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மதுரையை சரிந்த நபர் உயிரிழந்துள்ள நிலையில் உத்தரப் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக அம்மாநில அரசாங்கம் தகவல்

உலகையே பீதியில் அச்சுறுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ். கொரோனா தொற்று நோய் இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களில் பரவியுள்ளது. வெளிநாட்டினர் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 650 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 43 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கொரோனாவால் […]

Categories
தேசிய செய்திகள்

நீ ஒரு கொரோனா வைரஸ்… சட்டையில் துப்பி… இளம்பெண் மீது இனவெறி தாக்குதல்… சிசிடிவியால் சிக்கிய நபர்!

மணிப்பூர் இளம்பெண் மீது இனவெறி தாக்குதல் நடத்தி, கொரோனா வைரஸ் என்று கத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் மணிப்பூர்.. இந்த மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் டெல்லியில் உள்ள ஒரு மார்க்கெட்டில் நின்றுள்ளார். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவன் அவர் அருகில் வந்து முகத்திலும், சட்டை மீதும் எச்சில் மற்றும் புகையிலையை காரி துப்பியுள்ளான். அதுமட்டுமில்லாமல் மேலும் அப்பெண்ணை பார்த்து நீ கொரோனா வைரஸ், சீனா கொரோனா வைரஸ் வருகிறது […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி-ல் 144 தடையை மீறியவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையால் சர்ச்சை: மன்னிப்பு கேட்ட மாவட்ட எஸ்எஸ்பி

உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சொந்த ஊருக்கு நடைபாதையாக சென்ற நபர்களுக்கு காவல்துறை அளித்த தண்டனையால் சர்ச்சை கிளம்பியது. நாடு முழுவதும் பிரதமர் வேண்டுகோளின் அடிப்படையில் 144 தடை உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேபோல பல்வேறு முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு பணியில் காவல்துறை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – 27ஆக உயர்வு …!!

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 27 ஆக அதிகரித்து உள்ளது . தற்போது துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் உடல்நிலை சீராக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். #UPDATE: One new #COVID19 positive case reported from Trichy. 24 […]

Categories
தேசிய செய்திகள்

144 தடையால் சிக்கலை சந்தித்துள்ள தினக்கூலி மக்கள்… குடிநீர் கூட கிடைக்காமல் பசியால் வாடும் அவலம்!

உலகையே பீதியில் அச்சுறுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ். கொரோனா தொற்று நோய் இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களில் பரவியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளது. வெளிநாட்டினர் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649. இதையடுத்து கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 43 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேருக்கும், கேரளாவில் 118 […]

Categories
மாநில செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை கண்காணிக்க 9 குழுக்கள் அமைப்பு – முதல்வர் பழனிசாமி

தமிழ்நாட்டில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளித்து வரும் நிலையில். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் ஏப்.14 வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் காலை 6-9 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சரியான பாதையில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது… மத்திய அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு!

கொரோனா நிதியுதவி அளித்த மத்திய அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். சரியான பாதையில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் விவசாயிகள், தினக்கூலிகள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் முதியோருக்கு உதவும் என அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். The Govt announcement today of a financial assistance package, is the first step in the right direction. India owes a debt to its farmers, […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கொரோனா வராமல் தடுக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்..!!

கரோனா வைரஸ் அச்சத்தில் மக்கள் உள்ள நிலையில் என்னென்ன உணவு வகைகளை தவிர்க்க வேண்டும் என்பது தொடர்பாக இப்பொழுது பார்க்கலாம் 1. சாலையோரங்களில் விற்கப்படும் பானி பூரி போன்ற சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிட வேண்டாம். 2. பல நாட்களுக்கு முன்பே தயார் செய்து பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்ட பானங்களை தவிர்க்க வேண்டும். 3. கோடைகாலம் என்று குளிர்ந்த உணவுகளை மட்டுமே சாப்பிடாமல் கொரோனாவிலிருந்து தப்பிக்க வெந்நீர், சூடான பால் இவற்றை சாப்பிடுவது நல்லது. 4. பதப்படுத்தப்பட்ட இறைச்சி […]

Categories
உலக செய்திகள்

உஷார் : கொரோனா மரணம்… பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி….. எச்சரிக்கும் சீனா …!!

கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் சடலத்தை அதிக நேரம் வைத்திருக்க வேண்டாம் என்று சீனா எச்சரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா  வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் 81 ஆயிரத்துக்கும் ஆதிக்கமோருக்கு பாதிப்பை உண்டாக்கிய கொரோனா மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிரை காவு வாங்கியது. தற்போது உலகம் முழுவதும் உயிர் இழப்பை ஏற்படுத்தி வருகின்ற கொரோனா குறித்து சீனா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலக முழுமைக்கும் சீனா வழங்கி வரும் அறிவுரை எச்சரிக்கையாக இருக்கின்றது.அதில் கொரோனா வைரசால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… மக்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு முக்கிய அறிவிப்புகள்!

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்புகள் கொரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு. மருத்துவர்கள், செவிலியர்கள் வெள்ளை நிற உடை அணிந்த கடவுள்கள் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் உணவு டெலிவரி வாகனங்களுக்கு அனுமதி… சிகிச்சையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை பரிசோதிக்க ஆலோசனையில் முடிவு: அரவிந்த் கெஜ்ரிவால்

நாடு முழுவதும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை காரணமாக கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்கி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக இந்திய நாட்டின் பொருளாதாரம் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு உத்தரவு…. எங்க போறீங்க…. மருந்து வாங்க… காட்ட சொல்லிய போலீசார்.. பெண் செய்த செயல்!

மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய பெண்ணை போலீசார் சாலையில் தடுத்து நிறுத்தியதால், அவர் தனது பழைய காயத்தை கடித்து இரத்தத்தை காவல் துறை அதிகாரி மீது பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா, ஈரான்,  அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இதனுடைய தாக்கம் மிகவும் வேகமாகவே உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 630க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 1,100 வழக்குகள் பதிவு!

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 1,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா  வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் நாள் அதிகரித்து வந்த நிலையில், தமிழக அரசு 144 தடை உத்தரவை நேற்று முன்தினம் அமல்படுத்தி, அததியாவசிய தேவையின்றி வெளியே வரக்கூடாது என்றும் வலியுறுத்தியது. இருப்பினும், நேற்று பல நகரங்களில் ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடினார்கள். அவர்களை காவல்துறை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தார்கள். சில இடங்களில் போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதங்கள் செய்தனர் இந்த நிலையில், 144 […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… இதுவரை 1 கோடி மக்கள் கண்காணிப்பு: சுகாதாரத்துறை செயலாளர் ஜெயந்தி ரவி

இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திலும் ஆட்டம் காட்டி வருகிறது கொரோனா வைரஸ். தற்போதைய நிலையில், இந்தியாவில் மட்டும் நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 649 ஆக உள்ளது. பலி எண்ணிக்கையும் 13ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதி தான் 144 தடை உத்தரவு. இந்த ஊரடங்கு மூலம் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்பது ஒரு நம்பிக்கையாக உள்ளது. […]

Categories

Tech |