Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா… 12 ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா  பாதிப்பு இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலாகிறது. இதுவரை தமிழகத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கல்யாண வீட்டில் 30 பேருக்கு மேல் கூட கூடாது – தமிழக அரசு உத்தரவு …!!

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கல்யாண வீடுகளில் 30 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை மாநில அரசு பிறப்பித்து வருகிறது. நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட நிலையில் மாவட்ட எல்லைகளையும் மூட மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த 144 தடை உத்தரவு குறித்த விளக்கம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் , கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு விதித்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை – அரசு அதிரடி உத்தரவு …!!

தமிழகத்தில் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் நடத்தினார். இந்நிலையில் இதுகுறித்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING : இந்தியாவில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.  உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். 19 மாநிலங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 400யை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு …!!

தமிழகத்தில் மார்ச் 31ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் நடத்தினார். இந்நிலையில் 144 உத்தரவு குறித்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் பொதுஇடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை …!!

தமிழகத்தில் + 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் நடத்தினார். இந்நிலையில் 144 தடை உத்தரவு குறித்த […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் பிளஸ் +1 தேர்வு ஒத்திவைப்பு …..!!

தமிழகத்தில் + 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் நடத்தினார். இந்த கூட்டம் முடிந்து இதற்கான விளக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் லாட்டரியில் கிடைத்தது ரூ 1,00,00,000… சொந்த ஊரில் ஏழைக்கு அடித்தது அதிர்ஷ்டம்..!

கொரோனா அச்சத்தால் கேரளாவை விட்டு சொந்த ஊருக்கு சென்ற ஏழைக்கு லாட்டரியில் 1 கோடி ரூபாய் பரிசு விழுந்த நிலையில் திடீரென கோடீஸ்வரராக மாறியுள்ளார். மேற்குவங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம் மிர்சார்பூரை சேர்ந்தவர் இசருல் ஷேக் (Izarul Seikh) . 30 வயதான இவர் தச்சனாக இருக்கிறார். இவருக்கு உள்ளுரில் வருமானம் மிகவும் குறைவு என்பதால் வேலைதேடி கேரளாவுக்கு சில காலத்திற்கு முன்பே சென்று இருந்தார். அங்கு அவர் கடுமையாக உழைத்தால் அவருக்கு தினமும் கூலியாக ரூபாய் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : அதிகாரிகளுடன் முதல்வர் அவரச ஆலோசனை …!!

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசும் இந்திய அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார். தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதனால்  ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : +1, +2 தேர்வு தாமதமாக தொடங்கும் – தேர்வு இயக்ககம் அதிரடி …!!

தமிழகத்தில் +1 ,+ 2 தேர்வை 30 நிமிடம் தாமதமாக தொடங்க தேர்வு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் போதுமான அளவில் முகக் கவசங்கள் , சனிடைசர் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது , பொது தேர்வு நடைமுறைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்று கடந்த வாரம் கேட்ட கேள்விக்கான விளக்கம் அரசின் சார்பில் இன்று அறிக்கையாக  அளிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு வழக்கறிஞ்சர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ஈரானில் சிக்கியுள்ள 400 இந்தியர்களை மீட்க நடவடிக்கை ….!!

ஈரானில் சிக்குள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மற்ற நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் மிக மும்மரமாக செயல்பட்டு வருகின்றது. சமீபத்தில் ஈரானில் 400 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகியது. அவர்கள் அனைவரும் ஆன்மீகச் சுற்றுலாவுக்காக ஈரான் சென்றவர்கள். தற்போது அவர்கள் அனைவரும் அங்கிருந்து திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. ஈரான் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் ரத்தானது திருமணம்… ஆனாலும் இந்தஜோடி செய்த செயல்… நெகிழவைத்த சம்பவம்!

கொரோனா காரணமாக திருமணம் ரத்தானதையும் பொருட்படுத்தாமல் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு ஜோடி தேசிய சுகாதார சேவை ஊழியர்களை நெகிழ வைத்துள்ளனர் . கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததன் காரணமாக கடைசி நேரத்தில் பிரிட்டனை சேர்ந்த ஒரு ஜோடிக்கு திடீரென திருமணம் ரத்தாகி விட்டது. இதனால் அந்த ஜோடி மதிய உணவுக்காக கொடுக்கப்பட்ட முன் பணத்தை திரும்ப வாங்காமல், அதனை மாற்று வழியில் பயன்படுத்த முடிவு செய்தது.  அதன்படி, அவர்கள் ஒரு அறக்கட்டளையின் உதவியுடன் 250 ஹாக் ரோஸ்ட் சாண்ட்விச்களை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி : காவல்துறைக்கு கட்டுப்பாடு – DGP அதிரடி உத்தரவு …!!

கொரோனா தடுப்பு , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக காவல்துறைக்கு 22 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி அனைத்து காவல் ஆணையர் மற்றும் அனைத்து  ஏடிஜிபி களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பிள்ளார். அதில் 22 உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் அறிகுறி இருக்கக்கூடியவர்களை காவல் நிலையங்களில் அனுமதிக்க வேண்டாம். ஸ்கேனர் மூலமாக காவல் நிலையங்களுக்கு வருபவர்களுக்கு சோதிக்க வேண்டும் காவல்நிலையங்களில் இருக்கும் கிளப் ,  மன்றம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ” வழக்கறிஞர்கள் ஆஜராக தடை” உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டாம் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் வேகமாக பரவிவரும் நிலையில் நீதிமன்றத்திலும் அதிகமான கூட்டம் இருந்துவந்த நிலையில் நீதிபதி சந்திரகுட் தேவையில்லாமல் ஏன் இவளவு கூட்டம் என்றும் , மக்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு எல்லாருக்கும் பொருந்தும் , நீதிமன்றம் வாயிலாக கொரோனா பரவி விடக்கூடாது என்று பல்வேறு அறிவுறுத்தல்களை முந்தைய அமர்வில் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்திலோ அல்லது தீர்ப்பாயங்களிலோ […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : நாளை முதல் உள்நாட்டு விமான சேவைகள் முடக்கம் …!!

நாடு முழுவதும் உள்ள உள்நாட்டு விமான சேவை இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில் ரயில்கள், மெட்ரோ ரயில் சேவை, நகர்புற ரயில் சேவைகள் ஆகிய அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.  ஒரு மாநிலத்தை விட்டு இன்னொரு மாநிலத்துக்கு செல்லக்கூடிய பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை மூலம் கொரோனா வைரஸ் பரவக் கூடாது என்பதற்காக இப்படியான அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் பன்னாட்டு விமான சேவைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கொரோனா” பறவைக்கு சோறு கொடுக்க சொல்லுங்க… சேரன் ட்விட்….!!

ஊரடங்கு உத்தரவால் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாநிலங்கள் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற கடைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் சாலைகளும் அனாதையாக வெறிச்சோடி காட்சியளிக்கின்றன. இதனால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் மிக அமைதியாக காணப்படுகிறது. இது குறித்து பல பிரபலங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் : நாட்டில் 19 மாநிலங்களுக்கு ஊரடங்கு உத்தரவு – மத்திய சுகாதாரத்துறை!

கொரோனா வைரஸால் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 55 வயதான நபர் உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 415ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து யூனியன் பிரதேசங்கள் உட்பட நாட்டில் 19 மாநிலங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு …!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொல்கத்தாவில் முதல் மரணம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். 19 மாநிலங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 400யை […]

Categories
உலக செய்திகள்

எங்ககிட்ட கொரோனா மருந்து இருக்கு… துட்ட கொடுங்க… வாங்கிட்டு போங்க… குளோஸ் செய்த நீதிமன்றம்!

கொரோனா தடுப்பு மருந்துகளை விற்பனை செய்வதாக மோசடி செய்த இணையதளத்தை முடக்குவதற்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா உள்பட பல நாடுகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கா தடுப்பூசி மூலம் ஒரு பெண்ணுக்கு பரிசோதனை செய்ததோடு மட்டுமில்லாமல், மேலும் சிலருக்கு செலுத்தி அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வருகிறது. இதில் நல்ல முன்னேற்றம் […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING ”கொரோனாவுக்கு மருந்து” மத்திய அரசு பரிந்துரை..!!

கொரோனாவுக்கு அமெரிக்கா பரிந்துரைத்த மருந்தை இந்தியாவும் பரிந்துரை செய்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ்சால் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் உயிர்களை பலி வாங்கிய இந்த கொடூர வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ குழுவினர் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நாளை மாலை 6 மணி முதல்…. அனைத்து மாவட்டங்களுக்கும் சீல் …. !!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நாளை முதல் 144 தடை உத்தரவை முதல்வர் பழனிசாமி பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மாவட்ட எல்லைகள் மூடப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டத்தை  மத்திய அரசு முடக்க பரிந்துரை செய்த நிலையில் மாவட்டம் அனைத்தையும் முடக்கியது தமிழக அரசு.நாளை மாலை 6 மணி முதல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எச்சரிக்கை…. ”உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு” வாசலில் நோட்டீஸ் …!!

சென்னையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வசிக்கும் 3 ஆயிரம் வீடுகளை கண்காணித்து வருவதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதங்களில் 9,000_திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.   ஆனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு….. !!

தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதங்களில் 9,000_திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. இதையடுத்து தமிழகத்தின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : கொரோனா – சென்னையில் 3000 வீடுகள் கண்காணிப்பு …!!

சென்னையில் தனிப்பட்டு இருக்கும் 3 ஆயிரம் வீடுகளை கண்காணித்து வருவதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதங்களில் 9,000_திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.   தொடர்ச்சியாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : வெளிய வந்தா ”பாஸ்போர்ட் முடக்கப்படும்” தமிழக அரசு எச்சரிக்கை …!!

வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் வெளியே வந்தால் அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.   இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதங்களில் 9,000_திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக வீடுகளில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி… செர்ரி பூக்களை ரசிக்க தவறிய மக்கள்… வெறிச்சோடிய பூங்கா!

ஜப்பானில் கொரோனா பீதியால் செர்ரி பூக்களை ரசிக்க யாரும் வராததால் பூங்காக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஜப்பான் நாட்டில் மார்ச் மாத ஆரம்பம் முதல் மே மாதம் இறுதி வரை வசந்த காலமாகும். தற்போது அங்கு வசந்த காலம் நிலவி வருகிறது. அதன் காரணமாக செர்ரி பூக்கள் அதிக அளவில் பூக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் புகுவோகா, ஒசாகா, நகோயா, டோக்கியோ, சென்டாய், ஹிரோஷிமா ஆகிய நகரங்களில் இருக்கும் பூங்காக்களில் செர்ரி பூக்கள் பூக்க தொடங்கி விட்டது. இந்நிகழ்வை கண்டு […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING புதுச்சேரியில் அனைத்து மதுக்கடைகளும் மூடல் … முதல்வர் உத்தரவு …!!

புதுச்சேரியில் இன்று மாலை முதல் மதுக்கடைகளை மூட முதலவர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அந்த உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும் நிலையில் தற்போது முதல் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர் சந்தித்தார். அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் சரியாகக் கடைப் பிடிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இன்று இரவு 9 முதல்  […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – நாடு முழுவதும் வங்கிகளின் சேவை நேரம் குறைப்பு!

இந்தியாவில் கொரோனாவால் 415 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் தாக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய தேவை தவிர நாடு முழுவதிலும் உள்ள பல அத்தியாவசியமற்ற கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கொரோனா – சிறையில் கைதிகளை குறைக்க அறிவுறுத்தல்! 

கொரோனா அச்சம் காரணமாக சிறையில் கைதிகளை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளை குறைக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சட்ட வல்லுநர் குழுவை அமைத்து கைதிகளை குறைப்பது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. சிறைக்கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சிறையில் கைதிகளின் நெரிசலை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி : நெல்லை, கோவை முடக்கம் ? மாலை முதல்வர் அறிவிக்கிறார் …!!

திருநெல்வேலி , கோவை மாவட்டமும் முடக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநில தலைமைச் செயலாளருடன்  மத்திய அரசு அதிகாரிகள் நேற்று ஆலோசித்தனர். அதில் கொரோனா வைரஸ் பாதித்த மாவட்டங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 80 மாவட்டங்களை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கினர். இதில் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை ,காஞ்சிபுரம் , ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு […]

Categories
சற்றுமுன் திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் 31ஆம் தேதிவரை மூடல் …!!

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனம் வரும் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்த நிலையில் ஒருவர் குணமடைந்து கண்காணிப்பில் இருந்து வருகினிற்றார். இதனிடையே தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. பேருந்து போக்குவரத்து சேவை , ரயில் போக்குவரத்து சேவை  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவன […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீங்களா சொல்லீருங்க….. சிக்குனீங்க அவ்வளவு தான் – அரசு அதிரடி உத்தரவு

கொரோனா அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியபடுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்றய சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய தமிழக முதலவர் , நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கு பின்பற்றிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்தார். முதலமைச்சர் பழனிசாமி தற்போது அறிகுறியுடன் இருப்பதே அரசுக்கு தெரியப்படுத்த விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதேபோல தமிழகத்தில் பால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்க தடை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : கொரோனா தடுப்பு கூடுதலாக ரூ.500 கோடி நிதி – முதல்வர் அதிரடி அறிவிப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கி உத்தராவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  பல்வேறு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுகின்றது.  ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் பேருந்து சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. பெரிய பெரிய கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் தமிழகத்திற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி : சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு – சபாநாயகர் தனபால் அறிவிப்பு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவை நாளையுடன் முடிகிறது என சபாநாயகர் அறிவித்துள்ளார். ஏற்கனவே மார்ச் 31ம் தேதி வரை பேரவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனால் ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த கூட்டத்தொடர் 31ம் தேதியோடு முன்கூட்டியே முடிக்கப்படும் என சபாநாயகர் தனபால் அறிவித்தார். எனினும் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : +1 , +2 தேர்வுகளை தாமதமாக தொடங்குங்க- நீதிமன்றம் உத்தரவு ..!!

11 ,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 30 நிமிடம் தாமதமாக தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் போதுமான அளவில் முகக் கவசங்கள் , சனிடைசர் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது , பொது தேர்வு நடைமுறைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்று கடந்த வாரம் கேட்ட கேள்விக்கான விளக்கம் அரசின் சார்பில் இன்று அறிக்கையாக  அளிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு வழக்கறிஞ்சர் பத்தாம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 100 பேர் பாதிப்பு – மத்திய அரசு தகவல் …!!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 தடியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்து அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பலரது ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 415 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடைகளை மூட உத்தரவு …..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசியமாக தவிர பிற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சென்னை,  காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது. இது தொடர்பாக தமிழக அரசும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளை  தவிர மற்ற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 71 தற்போது உயர்ந்திருக்கிறது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஊரடங்கை கடுமையாக்குங்க….. இல்லனா நடவடிக்கை எடுங்க…. மத்திய அரசு உத்தரவு ….!!

ஊரடங்கு உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இன்று காலை பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவு , கொரோனா அறிவுறுத்தலை முழுமையாக கடைபிடிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்திருந்தார். பொதுமக்கள் சிலர் வைரஸை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், அரசுகள் கொடுக்கக்கூடிய அறிவுரைகளை முழுமையாக பின்பற்றவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மிக […]

Categories
மாநில செய்திகள்

ஈரோட்டில் இருவருக்கு கொரோனா அறிகுறி!

ஈரோட்டில் வடமாநில இளைஞர்கள் இருவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிப்பில் இருக்கின்றார். அதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டடு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து நேற்று முன்தினம் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தாய்லாந்தில் இருந்து வந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஏன் ? இப்படி பண்ணுறீங்க….. விதிமுறையை ஒழுங்கா பின்பற்றுக – மோடி கவலை ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தீவிரமாக பின்பற்றவில்லை என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இரவு பகல் பாராமல் பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் மற்றும் மற்ற பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பால்கனியில் வந்து நின்று மக்கள் கைகட்டி உற்சாகப்படுத்தும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் நேற்றைய தினம் அந்த நிலைமை அப்படி தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் அதனை தவறாக புரிந்து கொண்டு சாலைகளில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட தொடங்கியிருந்தார்கள். தலைநகர் டெல்லி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் அதிரடி உத்தரவு ….!!

தனிமைப்படுத்த  அறிவுறுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இந்திய நாடு முழுவதும் 390 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏழு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மார்ச் 31 வரை பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்பே தமிழகத்தில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சுய ஊரடங்கு…மிக பெரிய போராட்டத்தின் தொடக்கம்.. பிரதமர் மோடி ட்விட்..!!

நாம் கடைப்பிடித்த சுய ஊரடங்கை  வெற்றியாக கருதாமல் மிகப்பெரிய போராட்டத்தின் ஒரு தொடக்கமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பகுதியில் மக்கள் ஊரடங்கு நேற்று 9 மணியுடன் நிறைவு பெற்றது என்றும், ஆனால் இதை நாம் கொண்டாடி முடிக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை ஒரு வெற்றி என்றும் யாரும் கருதக்கூடாது  என்று குறிப்பிட்டுள்ள  பிரதமர் நம்முடைய மிகப் பெரிய போராட்டத்திற்கு இது ஒரு தொடக்கம்தான் என்று குறிப்பிட்டுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எதையும், யாரையும் பொறுத்தப்படுத்தாத புள்ளிங்கோஸ்… சாகசம் என்று செய்த சேட்டைகள்..!!

சென்னையில் புள்ளிங்கோக்கல் எதையும் பொருட்படத்தாமல் கொரோனா பற்றிய ஆபத்து அறியாமல், நேற்று அசாகசம் என்று அடாவடியில் இறங்கியுள்ளனர். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை இந்தியாவில் பரவாமல் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனோவை  கட்டுப்படுத்த பிரதமர் மோடி ஞாயிறு ஒரு நாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்தார். அதனை நாடு முழுவதும் மக்கள் கட்டுப்பாட்டுடன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு : இந்தியாவில் 400 ஐ நெருங்கியது!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 396 ஆக அதிகரித்துள்ளது  சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்து அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள்  கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பலரது ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 396 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பிஸியா இருக்கும் சூர்யா….. நன்றி சொன்ன அமைச்சர்…. கொண்டாடும் ரசிகர்கள் ….!!

கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகர் சூர்யா வீடியோ வெளிட்டதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவில்வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. மார்ச் 31-ஆம் தேதி வரை போக்குவரத்து சேவை ரத்து, ஊரடங்கு உத்தரவு , பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதேபோல கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இன்று ஒருநாள் நாடு முழுவதும் சுய ஊரடங்கை பின்பற்றுமாறு […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள்

BREAKING : நெல்லையில் ஒருவருக்கு கொரோனா – அமைச்சர் உறுதி …!!

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை தீவிரப்படுத்தி வருகின்றது. இன்று மட்டும் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. காலை 11 மணிக்கு ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த ஒருவர்க்கு கொரோனா இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி படுத்தியநிலையில் தற்போது மேலும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா…. தமிழகத்தில் 9ஆக உயர்வு…..!!

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இது மிகவும் கவலைக்குரிய தகவலாக பார்க்கப்படுகிறது. புதிதாக பாதிக்கப்பட்ட 2 பேரில் ஒருவர் கலிபோர்னியாவில் இருந்து வந்திருக்கிறார். 64 வயதான இவர் சென்னை ராயபுரத்தில் இருக்கக்கூடிய ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு நபர் துபாயில் இருந்து வந்திருக்கிறார். 43 வயதான இவர் திருநெல்வேலி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நமக்காக வெளிய இருக்காங்க…. வீட்டில் இருந்தே போராடுவோம் – சூர்யா வேண்டுகோள் …!!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்ஸை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு பிரபலங்களும் இது குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் கொரோனா வைரஸ் நாம் நெனச்சதை விட, ரொம்ப வேகமாக பரவிக் கொண்டு இருக்கின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

யப்பா…. என்னா அடி…, கொரோனா மீது கோபம்….. கொந்தளித்த பாட்டி …..!!

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்ற பொதுமக்கள் இன்று மாலை வீடுகளின் வெளியே வந்து கைதட்டி நன்றி செலுத்தினர். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தடுக்கும் வகையில் இன்று சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதனால் இன்று நாடு முழுவதும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இந்திய நாடே முடங்கியது. அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. அதேபோல பல்வேறு மாநில அரசுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி,  புதுச்சேரியில் 144 தடை உத்தரவு நாளை (திங்கட்கிழமை) அமலுக்கு வரும் என்று அம்மாநில முதல்வர் நாரயணசாமி தெரிவித்தார். ஆனால் சமீபத்தில் […]

Categories

Tech |