Categories
உலக செய்திகள்

வடகொரியாவில் தீவிரமடையும் கொரோனா…. அதிகரித்த உயிரிழப்பு….!!!

வட கொரியா நாட்டில் ஒரு நபருக்கு கூட தடுப்பு செலுத்தப்படாத நிலையில் அங்கு கொரோனா  உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் தற்போது வரை கொரோனா பாதித்தவர்கள் குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தற்போது அந்நாட்டிலும் கொரனோ பரவல் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இது பற்றி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 12ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டிருந்தார். மேலும் நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தினார். அங்கு தற்போது வரை ஒரு நபருக்கு […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவில் அதிகரித்த கொரோனா… இது பெரும் பேரழிவு… -கிம் ஜாங் உன்…!!!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டில் கொரோனா ஒரு பெரும் பேரழிவு என்று கூறியிருக்கிறார். வட கொரியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், இது நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவு என்று கிம் ஜாங் உன் கூறியிருக்கிறார். வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன் அவசரக் கூட்டத்தில் கொரோனாவை எதிர்த்து ஒரு முழு போருக்கு அதிகாரிகளை அழைத்தார். நேற்று ஒரே நாளில் அங்கு 1,74,440 நபர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதில், தற்போது வரை […]

Categories
உலக செய்திகள்

நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா…. பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல்…!!!

நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டெனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவலை, பிரதமர் அலுவலகம் உறுதி செய்திருக்கிறது. பிரதமருக்கு கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் லேசாக இருந்திருக்கிறது. எனவே, அவர் ஒரு வாரம் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வார் என்று அரசாங்கம் அறிக்கை வெளியிட்டிருகிறது. பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், கொரோனா பரவத்தொடங்கிய போது, முதல் அலையில் நாட்டை சிறப்பாக வழிநடத்தி, கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போடும் பணி தீவிரம்…. கொரோனாவை வென்ற 47 கோடிக்கும் அதிகமான நபர்கள்…. வெளியான சில தகவல்கள்…!!

உலகில் கொரோனா  தொற்றினால் 3 கோடியே 89 லட்சத்து 65 ஆயிரத்து 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்றானது ஏராளமான நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.  இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என கொரோனா தொற்று  உருமாறி […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் முகக்கவசம் கட்டாயமில்லை…. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிவிப்பு…!!!

ஐரோப்பிய ஒன்றியம் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் இனிமேல் கட்டாயமாக முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவித்திருக்கிறது. கொரோனா தொற்று பரவத்தொடங்கி இரண்டு வருடங்கள் தாண்டிய நிலையில், தற்போது உலக நாடுகளில் தொற்று குறைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த வாரத்திலிருந்து விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டிய தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏவியேஷன் சேஃப்டி ஏஜென்சியானது, ஐரோப்பா முழுக்க பொது போக்குவரத்தில் கொரோனோவிற்கு எதிரான கொள்கையை […]

Categories
உலக செய்திகள்

4-ஆம் தவணை தடுப்பூசி…. அதிக நோய் எதிர்ப்பு சக்தியை தரும்… ஆய்வில் வெளியான தகவல்…!!!

கொரோனாவிற்கு எதிரான 4-ஆம் தவணை தடுப்பூசியானது அதிக நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. கொரோனா தொற்றை எதிர்த்து ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன. அதன் பின்பு மூன்றாம் தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் நான்காம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. இந்த நான்காம் தவணை தடுப்பூசி என்பது அதிக தொற்று பாதிப்பிற்கு உள்ளான நபர்களுக்கு மட்டும் செலுத்தப்படுகிறது. அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த இந்த நான்காம் […]

Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தவணை செலுத்த… கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம்…!!!

கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் தவணையாக செலுத்த அனுமதி வழங்க கோரிக்கை வைத்து மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பிக்கப்பட்டிருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை எதிர்த்து பூஸ்டர் தவணை தடுப்பூசி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயது நிரம்பியவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஒன்பது மாதங்கள் கழித்து தனியார் நிலையங்களில் பூஸ்டர் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம். முதல் இரண்டு தவணைகள் எந்த தடுப்பூசி எடுத்துக் கொண்டார்களோ அதே தடுப்பூசியை தான் பூஸ்டர் தவணையாகவும் […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவில் கால் பதித்த கொரோனா…. ஊரடங்கு உத்தரவு அமல்…. அதிபர் கிம் ஜாங் உன் அறிவிப்பு….!!!!

சீன நாட்டின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் இறுதியில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இப்போது கொரோனா 225க்கும் அதிகமான நாடுகளில் நுழைந்து பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் சூழ்நிலையிலும், வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ், ஒமிக்ரான் என உருமாறி வரும் வகைகளால் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் […]

Categories
உலக செய்திகள்

#JUSTIN : ஒருவருக்கு கொரோனா…. நாடு முழுவதும் லாக் டவுன்…!!!!

உலகம் முழுவதும் கொரோனா கோர தண்டவம் ஆடியபோதும், வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என அந்நாடு தெரிவித்துவந்தது.  கொரோனா தொற்று பரவலை தடுக்க வட கொரியா தனது எல்லைகளை உடனடியாக மூடியதுடன் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது இதற்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் வடகொரியாவில் முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கை வடகொரியா அதிபர் ஜிம் ஜாங் உத்தரவிட்டுள்ளார்.

Categories
உலக செய்திகள்

உலகில் பெரும் பணக்காரரான பில் கேட்சுக்கு கொரோனா உறுதி…. வெளியான தகவல்…!!!!!!!

உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்சுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான  பில்கேட்சுக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா  உறுதி செய்யப்பட்டிருப்பதால், தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக பில்கேட்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் பில்கேட்ஸ் தடுப்பூசிகளின் 2 டோஸ்களையும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளார்.

Categories
உலக செய்திகள்

வருங்கால கணவருக்கு கொரோனா பாதிப்பு… தனிமைப்படுத்திக்கொண்ட நியூசிலாந்து பிரதமர்….!!!

நியூசிலாந்தின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னின் வருங்கால கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரின் வருங்கால கணவரான கிளார்க் கேபோர்டிற்கு  நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவலை வெளியிட்ட பிரதமர் ஜெசிந்தா தன்னை ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்திக்கொள்ளப்போவதாக தெரிவித்திருக்கிறார். எனினும், பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மற்றும் அவரின் மூன்று வயது குழந்தை நலமாக உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி… ஷாங்காயில் தள்ளிவைக்கப்பட்ட நுழைவு தேர்வுகள்…!!!

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று காரணமாக உயர்நிலை பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நடத்தப்படவிருந்த நுழைவு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் சமீப நாட்களாக கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்திருக்கிறது. எனவே, ஐந்து வாரங்களாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில், ஷாங்காய் அரசு, உயர்நிலை பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நடத்தப்படவிருந்த நுழைவு தேர்வுகளை தள்ளி வைத்திருக்கிறது. அதன்படி, கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வுகள் வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதியிலிருந்து, 9 ஆம் தேதி வரை நடக்கும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியீடு…. இந்திய அரசு மறுப்பு…!!!!!

இந்தியா முழுவதும்  இதுவரை 190 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டிருக்கிறது  என மத்திய சுகாதார துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளிவிவரங்களை உலக சுகாதார நிறுவனம்  வெளியிட்டுள்ளது. அதில், உலகம் முழுவதும் 1,50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும்  அரசுகள் அளித்த தரவுகளோடு ஒப்பிட்டுபார்க்கும்போது, இது இரண்டு மடங்குக்கும் அதிகம் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்தியாவில் 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், இது இந்திய […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி!…. அதிக இறப்பை சந்தித்த இந்தியா…. வெளியான பலி எண்ணிக்கை….!!!!!

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதாரஅமைப்பு வெளியிட்ட தகவலின்படி இப்போதுவரை வைரஸ் பாதிப்பால் உலகம் முழுதும் 62,43,000 நபர்கள் உயிரிழந்து உள்ளனர். இதில் இந்தியாவை பொறுத்தவரையிலும் நாடு முழுதும் இதுவரையிலும் 5 லட்சத்து 23 ஆயிரம் பேர் உயிரிழந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே பல நாடுகளில் நிகழ்ந்த கொரோனா இறப்புகள் தொடர்பாக கணிதமாதிரி […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…. கோடையில் அடுத்த ஆபத்து வரலாம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

கோடை காலத்தில் டெல்டா அல்லது வேறொரு உருமாறிய கொரோனா அலை வரலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதலாக கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. கொரானா  வைரஸ் தொடர்ந்து உரு மாற்றங்களை அடைந்து பரவி வருகிறது. இது தொடர்பாக உலக அளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டிலுள்ள பென் குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி, அதுபற்றி “சயின்ஸ் ஆப் த டோட்டல் என்விரான்மென்ட்” என்ற பத்திரிகை ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு வெளியுறவு மந்திரி கொரோனா பாதிப்பு உறுதி…. வெளியான தகவல்….!!!!!!!

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் கொரோனா பாதிப்புகளுக்கான லேசான அறிகுறிகள் தெரிய வந்தவுடன் உடனடியாக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டார்.  இந்த பரிசோதனையில்  அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.  இதனையடுத்து  அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதுபற்றி ஆன்டனியின் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முழு அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டும், முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திய பின்னரும் அவருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளது.மேலும் அவருக்கு எடுத்த முதல் பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிய வந்தது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி…. சீனாவில் சுரங்க ரெயில் நிலையங்கள் அடைப்பு…!!!

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் நேற்றிலிருந்து 40 சுரங்க ரயில்கள் அடைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். சீனாவில் பெய்ஜிங் நகரில் கொரோனா ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதை தவிர்க்க அந்நகரத்தின் 40 சுரங்க ரயில் நிலையங்கள் நேற்றிலிருந்து அடைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். அந்த சுரங்க ரயிலில் நிலையங்களை மீண்டும் எப்போது திறப்பார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. பெய்ஜிங் நகரில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு ஏற்படும் நபர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  எனவே, அந்நகரத்தை எச்சரிக்கை நிலையில் வைத்திருக்கிறார்கள் என்பது […]

Categories
தேசிய செய்திகள்

“யாரையும் தடுப்பூசி போட சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது”…. உச்சநீதிமன்றம் அதிரடி….!!!!!

தடுப்பூசி செலுத்துவதற்கு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா எனும் கொடிய வைரஸ் மக்களை ஆட்டிப்படைத்து வந்தது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் ஒரு ஆயுதமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனினும் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்துவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என […]

Categories
தேசிய செய்திகள்

5-12 வயது குழந்தைகளுக்கான தடுப்பூசி பணி…. எப்போது தொடங்கப்படும்?…. இன்று எடுக்கப்போகும் முடிவு…..!!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்தாலும், தற்போது மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட 84 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டதாலும், இயற்கையான தொற்றின் வாயிலாகவும் ஏராளமானோருக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி அதிகரித்துள்ளது. இது மேலுமாக அதிகரிக்கும் அடிப்படையில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 2-வது தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் ஆகி இருந்தால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் முன்எச்சரிக்கை டோஸ் எனும் பெயரில் போடப்படுகிறது. ஆகவே குழந்தைகள் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் இறந்தவர்களுக்கு….. இழப்பீடு கோர காலக்கெடு நிர்ணயம்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கொரோனா இறப்புகளுக்கு இழப்பீடு கோருவதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் காலக்கெடு விதித்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. நேற்று காலை நிலவரப்படி இந்தியாவில் இதுவரை 5 லட்சத்து 23 ஆயிரத்து 654 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பலியானவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு கோருவதற்கு என்டிஎம்கே என்று அழைக்கப்படுகிற தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் காலக்கெடு நிர்ணயித்து ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் “கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி முன்பு  […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க துணை அதிபருக்கு கொரோனா தொற்று…. வெள்ளைமாளிகை வெளியிட்ட தகவல்…!!!

அமெரிக்க நாட்டின் துணை அதிபராக கமலா ஹாரிஸிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை அளிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, அங்கு தொற்று எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாக குறைந்து விட்டது. இந்நிலையில் அந்நாட்டின் துணை அதிபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு கொரோனோவிற்கான அறிகுறிகள் இல்லை எனவும் அவர் அதிபர் ஜோ பைடனுடன்   நெருங்கிய தொடர்பில் இல்லை எனவும் வெள்ளை மாளிகை கூறியிருக்கிறது. தற்போது அவர் […]

Categories
உலக செய்திகள்

இவர்களால் தடுப்பூசி போட்டவர்களுக்கும் ஆபத்து…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

கொரோனா தடுப்பூசி போடாதவர்களால் தடுப்பூசி செலுத்தியர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று  ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனட நாட்டில் டொரோண்டோ பல்கலைக்கழகம் தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் போடாதவர்களை கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தியவர்களின் நோய் எதிர்ப்புதிறன் அதிகமாகவே இருந்தாலும் தடுப்பூசி போடாதவர்களிடமிருந்து புதிதாக கொரோனா தொற்று பரவக்கூடும் என்று இந்த ஆய்வறிக்கை எச்சரித்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 2 குழுக்களை ஒன்றாக ஆய்வில் ஈடுபடுத்தியதில் அவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளைவிட, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்குக் குறைவான […]

Categories
தேசிய செய்திகள்

5 – 12 வயது சிறார்களுக்கு…. “கோர்பேவாக்ஸ்”….. தடுப்பூசி போட அனுமதி..!!

இந்தியாவில் 6 – 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல 5 முதல் 12 வயதான சிறார்களுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஜைகோவ்-டி கொரோனா தடுப்பூசி போடவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அவசரகால பயன்பாடாக இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 6 -12 வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட அனுமதி!!

6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட அனுமதி என வழங்கப்பட்டுள்ளது. அவசரகால பயன்பாடாக இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?….. மருத்துவத்துறை செயலாளர் சொன்னது என்ன?

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்து மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.. பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தமிழகத்தில் 1000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் 3 […]

Categories
தேசிய செய்திகள்

2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு…. பூஸ்டர் டோஸ் தேவையா?…. நிபுணர்கள் முக்கிய தகவல்…..!!!!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் செயல்படும் தேசியநோய் நுண்ணுயிரியல் நிறுவன விஞ்ஞானிகள் பிரக்யா டி. யாதவ், கஜனன் என்.சப்கல், ரீமா ஆர். சகாய் மற்றும் சில மருத்துவர்கள் உருமாறிய ஒமிக்ரான் பிஏ-1 வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதன் முடிவில் ஒமிக்ரான் பிஏ-1 வகை வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி மிககுறைந்த அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பது தெரியவந்தது. அதேபோன்று கோவேக்சின் தடுப்பூசியும் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் கிளம்பிய கொரோனா…. தமிழகத்தில் அமலாகும் புதிய கட்டுப்பாடுகள்?… முதல்வர் அவசர ஆலோசனை…..!!!!!!

கடந்த 2 வருடங்களாக கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. எனினும் கொரோனா முதல் மற்றும் 2வது அலையில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதன்பின் கொரோனா 3வது அலையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். தற்போது கொரோனா 4வது அலை தொடர்பான தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

மலேசியாவில் நேற்று ஒரே நாளில்…. 5,624 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு…!!!

மலேசியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 9 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நேற்று ஒரே நாளில் 5,624 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 9 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்து 10,041 பேர் வீடு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 73,767 தவணை தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 84.8% மக்கள், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். 81.2% மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

பொது மக்கள் கூடும் இடங்களில் அதிக கவனம் தேவை…. டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவுரை…!!!!!

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு கிடங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்துள்ளார்.அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது, சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை 1,420 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா பாதிப்பு 55 ஆக […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…. மூன்று மண்டலங்களில் பாதிப்பு உயர்வு…!!!!!

சென்னை முழுதும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. குறிப்பிட்ட மண்டலங்களில் மட்டுமே, சற்று அதிகமான பாதிப்பு உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.இரண்டாம் அலை தொற்று அதிகரித்த பின், சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால், தினசரி 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் வாழ்ந்தாலும், தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, கோவை, ஈரோடு மாவட்டங்களை விட, குறைவான பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது, பெரும்பாலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை மாநகராட்சியின் அடையாறு, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் பொதுமக்களுக்கு அபராதம் விதிப்பதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து நடவடிக்கையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறையினருக்கு உத்தரவிடபட்டுள்ளது. இதையடுத்து  நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் தவறாமல் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு 1,16,452 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கையானது மேலும் அதிகப்படுத்தி உள்ளதால் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ஐஐடியில் 55 பேருக்கு கொரோனா தொற்று….. அச்சத்தில் மாணவர்கள்…..!!!!

சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். சென்னை ஐஐடியில் இதுவரை 1420 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 55 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் XE வகை கொரோனா இல்லை”…. மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்…!!!!!!

ஜனவரி 19 ஆம் தேதி பிரிட்டனில் முதன்முதலாக XE வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது ஒமைக்ரான் வைரஸில் இருந்து உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் திரிபு என தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய வகை வைரஸ் ஒமைக்ரானை விட அதிகமாகப் பரவக் கூடியதாக இருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. XE என்பது ஒமைக்ரானிலிருந்து உருமாறிய வைரஸ்களான BA.1 மற்றும் BA.2 ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து உருமாறியுள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த XE வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் மும்பையை […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. பூஸ்டர் டோஸ் அவசியம்…. மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தல்…..!!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் அதிகரிக்க தொடங்கியதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன்படி ஊரடங்கு, பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில், மீண்டும் பள்ளி- கல்லூரிகள் திறக்கபட்டதோடு, அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் 4வது அலை தொடங்கிவிட்டதா என்று மக்கள் அச்சத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

விற்பனையாகாமல் இருக்கும் தடுப்பூசி…. தயாரிக்கும் பணிகள் நிறுத்தம்… சீரம் நிறுவனம் அறிவிப்பு…!!!!!

தடுப்பூசி உற்பத்தியை நிறுத்தி விட்டதாக கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 187 கோடியே 26,26,515 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது.மேலும் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், விற்பனையாகாமல் கோடி கணக்கில் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதால் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதிப்பு குறைந்தது…. உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு…!!!!!!

உலக அளவில் கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதாக  உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலக அளவில் ஏப்ரல் 11 முதல் 17-ந் தேதி வரையிலான ஒரு வார கால கொரோனா நிலவரம் குறித்த அறிக்கையை, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ஒரு வார காலத்தில் 55 லட்சத்து 90 ஆயிரம் பேரை கொரோனா பாதித்துள்ளதாகவும், இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும் போது  17.24 சதவீதம் வீழ்ச்சி எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால், ஒரு வார காலத்தில் 18 […]

Categories
உலகசெய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி…. பிரபல நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிப்பு…!!!!!!

சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்திருக்கிறது.  ஆனால், சீனாவில் இதற்கு நேர்எதிராக  ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றது. இந்தநிலையில் சீனாவின் ஷாங்காய் நகரில், ஒரு சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் அங்கு முழு ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஷாங்காய் நகரில் கடந்த மாதம் கொரோனா பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளன. இதனையடுத்து இந்தமாதம் தொடக்கம் முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி…. டெல்லியில் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு…‌ மாநில அரசு அறிவிப்பு…!!!!!

டெல்லியில் கொரோனா  பரவலை தடுப்பதற்காக பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டிருக்கிறது. நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்திருப்பதால், மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் பரவலாக தளர்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பல மாநிலங்கள் அறிவித்துள்ளது. இந்த நிலையில், டெல்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா பரவலின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பரவலை […]

Categories
உலக செய்திகள்

ஷாங்காய் நகரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…. 8 போ் உயிரிழப்பு….. வெளியான தகவல்……!!!!!

சென்ற சில வாரங்களாக தீவிர கொரோனா பரவலைக் கண்டுவரும் சீனாவின் வா்த்தக மையமான ஷாங்காய்நகரில் மேலும் 8 போ் பலியாகினா். இதனால் புதிய அலையில் அந்நகரின் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 25ஆக உயா்ந்துள்ளது. இதை தவிர்த்து வேகமாகப் பரவும் ஒமிக்ரான் வகை கொரோனா காரணமாக நாடு முழுதும் புதிதாக 19,300-க்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா்களில் ஏராளமானவர்கள் ஷாங்காய் நகரில் வசிப்பவா்கள் ஆவர். அந்நகரில் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவா்களில் 62 […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு ஜூலை 1 முதல் 16ம் வரை கோடை விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு வெளியீடு…!!!!!

கொரோனா  மூன்றாம் அலை தாக்குதலுக்கு பின் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு இந்த ஆண்டு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நீண்ட நாட்கள் பள்ளி மூடப்பட்டிருந்ததால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த கற்றல் இடைவெளியை  ஈடுசெய்ய மாநில பொதுப்  பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் கோடை விடுமுறையை குறைக்க […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயின்: வெறும் 20 நாட்களில் 2 முறை பெண்ணை தாக்கிய கொரோனா…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

ஸ்பெயின் நாட்டில் 31 வயது பெண்ணிற்கு 20 நாட்களுக்குள் 2 முறை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஒரே நபருக்கு அடுத்தடுத்து 2 முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இதுவரையிலும் அறியப்பட்ட குறைந்தபட்ச காலஇடைவெளி இதுவே என ஸ்பெயினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த ஆய்வில் சுகாதார பணியாளரான அப்பெண்ணுக்கு கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் டெல்டா திரிபாலும், ஜனவரியில் ஒமிக்ரான் திரிபாலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதன் வாயிலாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. மாஸ்க் அணிவது பற்றி வெளியான தகவல் உண்மையல்ல…. அமைச்சர் அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும் ஊரடங்கு உட்பட பல கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனை யடுத்து மத்திய அரசு பிறப்பித்த அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகத்தில் தற்போது பொதுயிடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வரவேண்டும் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனினும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் நீக்கப்படவில்லை. ஆகவே பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து முக்கவசம் அணிதல் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி…. 20.16 கோடிக்கும் அதிகமாக இருப்பு…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!

20.16 கோடக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் மாநிலம், யூனியன் பிரதேசங்களில் இன்னும் இருப்பு இருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று தன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. மத்திய அரசானது நேரடிமாநில கொள்முதல் வாயிலாக இதுவரையும் இலவசமாக,192.27கோடிக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியிருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் மூலம் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 %-த்தை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கொள்முதல் செய்து இலவசமாக வழங்கி வருகிறது. […]

Categories
விளையாட்டு

IPL 2022: பஞ்சாப் VS டெல்லி…. குழப்பம் இருந்தாலும் விளையாட்டில் கவனம் செலுத்தினோம்…. ரிஷப் பண்ட்…..!!!!!

IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியானது 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டி நிறைவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேசியதாவது “தம் அணியில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதால் குழப்பமும் பதட்டமும் இருந்தது. எனினும் நாங்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தினோம். பஞ்சாப் அணியை 115 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய அற்புதமான பந்து வீச்சுக்குப் பின் டேவிட் வார்னர் மற்றும் ப்ரித்வி […]

Categories
உலகசெய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பரவல்… கட்டுப்பாடுகளை தளர்த்திய பிரபல நாடு….!!!!!

ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு  குறைந்துள்ளது.  ஆனால், சீனாவில் இதற்கு நேர்எதிராக  ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. சீனாவின் ஷாங்காய் மாநகரில், கடந்த 3 வாரங்களாக பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வாகனத் தொழில் கடும் இழப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில், ஷாங்காயில் அதிகரித்துவரும் கொரோனா இறப்புகளுக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டிருக்கிறது. இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

“எனது நண்பருக்கு கொரோனா” விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்… பிரதமர் டுவீட்…!!!!

இத்தாலிய பிரதமர் மரியோ ட்ரெகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது அன்பு நண்பர் இத்தாலியின் பிரதமர் மரியோ ட்ராகி கோவிட்-19 நோயிலிருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்…..!!!!!!

சென்னையில் ஏராளமான இடங்களில் மக்கள் முகக்கவசம் இன்றி செல்வதை பார்க்க முடிகிறது. ஏனென்றால் சென்னையில் கொரோனா தாக்கம் குறைந்துவிட்டதே என்ற அலட்சியம்தான். கடந்த ஏப்ரல் முதல் வாரத்துக்கு முன்புவரை சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. அப்போது 100-க்கும் கீழ் தான் கொரோனா நோயாளிகள் இருந்தனர். மேலும் அரசு மாவட்ட மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளே இல்லாத நிலையும் உருவாகியது. இதனால் மக்களும் சென்னையை விட்டு கொரோனா ஓடிவிட்டது என்று பெருமூச்சு விட்டனர். ஆனால் தற்போது கொரோனா தாக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…. 5 மாநிலங்களுக்கு அலெர்ட்…!!!!

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும், முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரபிரதேசம், அரியானா, மராட்டியம், மிசோரம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேச அரசிற்க்கு  மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக அந்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், கொரோனா அதிகரித்து வருவதால் பரிசோதனைகள், தடுப்பூசி செலுத்துதல் போன்ற பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளது. மேலும் தமிழகம் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “கொரோனா தடுப்பு நடவடிக்கை”… கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்…..!!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கையானது சென்ற 2 மாதங்களாக சரிவைக் கண்டு வந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக நாட்டில் சில மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனிடையில் தமிழ்நாட்டில் 30 என்ற கணக்கில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருந்து வருகிறது. இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடைபிடிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாதடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை… மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்…!!!!!!!

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும், முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரபிரதேசம், அரியானா, மராட்டியம், மிசோரம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேச அரசிற்க்கு  மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக அந்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியிருக்கிறார்.

Categories

Tech |