கொலம்பியாவில் தீப்பற்றி எரிந்து எரிபொருள் டேங்க் வெடித்ததில் தீயணைப்பு படை வீரர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டின் வடப்பகுதியில் இருக்கும் பாரன் கில்லா துறைமுகத்தின் அருகே அமைந்துள்ள ஒரு நிறுவனத்தில் நேற்று இரவு திடீரென்று எரிபொருள் டேங்க் வெடித்தது. இதில் தீப்பற்றி எரிந்ததால் பணியாளர்கள் பதறியடித்துக்கொண்டு வேகமாக ஓடினர். உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு குழுவினர், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர். அருகே இருக்கும் எரிபொருள் டேங்குகளில் […]
Tag: கொலம்பியா
கொலம்பியாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவின் ரிசரால்டா மாகாணத்தில் பெரேரா- கிப்டோ என்ற மலைபாங்கான பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் கடந்த 5-ம் தேதி வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு ஏற்பட்ட பயங்கர நிலச்சரவில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு பேருந்து, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவை மண்ணுக்குள் புதைந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் […]
கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமாக டுமாகோவிற்கும் காலிக்கும் இடையே பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த பகுதி பனிமூட்டமான மற்றும் வளைவுகள் உள்ள பகுதி என்பதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. […]
கொலம்பியா நாட்டின் கரீபியன் கடலோர பகுதியிலுள்ள வடக்கு நகரான பண்டேசியன் நகரில் சொல்டிஜிட்டல் என்ற பெயரிலான வலைதள செய்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இவற்றில் லீனர் மோன்டிரோ ஆர்டிகா (37) மற்றும் திலியா கான்ட்ரிராஸ் கேன்டில்லோ (39) ஆகிய இருவர் செய்தியாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் திருவிழா ஒன்றை படம்பிடிக்க சென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் சான்டா ரோசா டி லிமா பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் செய்திகளை சேகரித்துகொண்டு திரும்பி கொண்டிருந்தனர். அதன்பின் […]
கொலம்பியாவில் புதிய அதிபருக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றுள்ளது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்து இடதுசாரி பிரிவு தலைவரான கஸ்டாவோ பெட்ரோ வெற்றி பெற்றுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியினர் பொருளாதாரத்தில் மிக அளவிலான மாற்றங்களை கொண்டு வந்த போதிலும் அது வாக்காளர்களை சென்றடையவில்லை. மேலும் அதிகரித்து வரும் வறுமை மனித உரிமை தலைவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு எதிரான வன்முறை போன்றவற்றால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன. அது தேர்தலில் எதிரொலித்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற கஸ்டோ […]
கொலம்பியாவில் பிரபல பாப் பாடகிக்கு வரி ஏய்ப்பு புகாரில் 8 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவில் வசிக்கும் பிரபலமான பாப் பாடகியான 45 வயதுடைய ஷகிரா, கடந்த 2012-ஆம் வருடத்திலிருந்து 2014-ஆம் வருடம் வரை ஸ்பெயினில் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் சுமார் 116 கோடி ரூபாய் வருமானத்துக்கான வரியை அவர் செலுத்தவில்லை. எனவே, வழக்கறிஞர்கள் ஷகிராவிற்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில், தன் தவறை ஒப்புக்கொண்டு வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதனை […]
கொலம்பியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள துலுவா நகரில் பெரிய சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறையில் உள்ள கைதிகள் நேற்று முன்தினம் திடீரென கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறையில் தீப்பற்றி மளமளவென கொழுந்து விட்டு எரிந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சிறை முழுவதும் பரவியது. இதில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 49 கைதிகள் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் […]
கொலம்பியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சியை சேர்ந்த குஸ்டோவோ அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொலம்பியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மை மற்றும் வன்முறை காரணமாக அரசிற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றார்கள். இந்தநிலையில் அங்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் இடதுசாரி கட்சியைச் சேர்ந்த குஸ்டோவோ பெட்ரோ அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் மொத்தம் 50.48 சதவீதம் ஓட்டுகளை பெற்று குஸ்டோவோ வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரியல் எஸ்டேட் அதிபர் […]
கொலம்பியா நாட்டிற்கு அருகில் கரீபியன் கடல் பகுதியில் கடந்த 1708 ஆம் வருடம் சான் ஜோஸ் எனும் கப்பல் சுமார் 600 பேருடன் கடலில் மூழ்கியுள்ளது. அதில் 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம் இருந்தது. மேலும் உலகிலேயே அதிக தங்கத்துடன் கடலில் மூழ்கிய கப்பல் ஆக இது கருதப்படுகின்றது. இந்த கப்பலை தேடும் பணிகள் பல வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் 2015 ஆம் வருடம் கப்பல் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சான் […]
கொலம்பியாவில் பழமை வாய்ந்த கப்பலில் தங்க நாணயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலம்பியா நாட்டில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கப்பல்களிலிருந்து தங்க நாணயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலம்பியா கடற்படை அதிகாரிகள் 1708 ஆம் ஆண்டில் கடலில் மூழ்கிய சான் ஜோஸ் கேலியன் கப்பலில் ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் போது தங்க நாணயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தங்க நாணயங்கள் மற்றும் பீரங்கிகள் உள்ள காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் கப்பலை மேலே கொண்டு வரும் முயற்சியில் அதிகாரிகள் […]
கொலம்பியாவில் நடந்த அதி பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளார்கள். கொலம்பியாவிலுள்ள ஆண்டுயோகுயா மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக லாரியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்கள். இந்நிலையில் இவர்களது லாரி அம்மாநிலத்திலுள்ள கிராம பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது சாலையோரம் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டின் மீது ஏறியுள்ளது. இதனையடுத்து அந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் லாரியிலிருந்த 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். […]
வணிக வளாகத்தில் 3 மர்ம நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் கொலம்பியா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் திடீரென 3 மர்ம நபர்கள் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது ” வணிக வளாகத்தில் திடீரென மூன்று மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அவர்களில் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இந்த […]
கொலம்பியாவில் பலத்த மழை பெய்ததில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருக்கிறது. கொலம்பிய நாட்டில் ஆண்டியோக்வியா என்ற மாகாணத்தில் பலத்த மழை பெய்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் அங்கிருந்த சுரங்க முகாம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சூழப்பட்டது. தற்போது வரை, பலத்த மழையில் 13 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மீட்பு குழுவினர், மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் ஆண்டியோக்வியா மாகாணத்தில் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கொலம்பியா நாட்டிலுள்ள காசநாரி மாகாணத்தில் மனிதர்களால் கடத்திச் செல்லப்பட்ட 163 விலங்கினங்களை மீட்டு, அதை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் உப்புநீர் ஏரி மற்றும் வனப்பகுதிகளுக்குள் கொண்டுவிட்டனர். எறும்புத் திண்ணிகள், ஆமைகள், மக்காவ் கிளிகள், டக்கன் எனப்படும் பழந்தின்னி பறவைகள், சிறுத்தை உள்ளிட்ட இனங்களும் அவற்றில் அடங்கும். இதற்கிடையில் கால்நடை மருத்துவர்கள் மூலமாக அவற்றிற்கு சிகிச்சை மேற்கொண்டு ஆரோக்கியத்துடன் அதை அவற்றின் வாழ்விடத்திற்கு கொண்டு சென்று கார்ப்போரினோகியூபா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் விடுவித்தனர். அவர்கள் கடந்த வருடத்தில் மட்டும் […]
ஏர்பஸ் ஏ320-200 ரக வர்த்தக விமானம் ஒன்று கொலம்பியாவில் உள்ள ரியோநிக்ரோ என்ற பகுதியில் அமைந்துள்ள ஜோஸ் மரியா கார்டோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானம் லாத்தம் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்தது. இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற போது ஒரு சில நிமிடங்களிலேயே அதிலிருந்த விமானம் தரையிறங்க உதவும் கியர் ஒன்று கீழே விழுந்துள்ளது. இதன் காரணமாக அந்த விமானம் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பி வந்துள்ளது. இந்த சம்பவத்தில் […]
கொலம்பியாவில் மின்கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஸ்லாத் கரடியை மின்சார பணியாளர் காப்பாற்றியிருக்கிறார். கொலம்பியா நாட்டில் இருக்கும் ஆன்டியோக்குவியா என்ற மாகாணத்தின் டராசா பகுதியில் ஒரு கரடி மின் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இது பற்றி மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அந்த இடத்திற்கு சென்ற மின்சார பணியாளர் ஒருவர், மின்கம்பத்தில் ஏறி கரடியை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரை பார்த்தவுடன் கரடி பயந்தது. எனினும் நீண்ட நேரமாக போராடி, துடைப்பத்தை பயன்படுத்தி கரடியை பாதுகாப்பாக மீட்டுவிட்டார். தற்போது, அந்த […]
ராணுவ தளத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவில் ராணுவ தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ராணுவத் தளத்திற்கு மர்ம நபர் ஒருவர் நுழைய முயன்றுள்ளார். அப்போது அங்குள்ள வீரர்கள் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். அந்த சமயத்தில் மர்ம நபர் வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்ததாக ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதில் இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு […]
கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்து 11பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். கொலம்பியாவின் மத்திய பகுதியில் Dosquebradas எனும் ஊர் அமைந்துள்ளது . இங்கு காபி பயிர் உற்பத்தி செய்யப்படும். இந்நிலையில் இங்கு திடீரென பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்து 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 35 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து Otun ஆற்றில் அதிக […]
கொலம்பியாவில் நடுக்கடலில் கடற்படையினர், நீர்மூழ்கி கப்பலை விரட்டிச் சென்று 4 டன் மதிப்புக் கொண்ட கொக்கைன் போதைப் பொருளை பறிமுதல் செய்திருக்கிறார்கள். தெற்கு பசிபிக் கடலில் ஒரு நீர்மூழ்கி கப்பலானது, போதைப் பொருட்களுடன் மத்திய அமெரிக்காவை நோக்கி செல்வதாக கொலம்பியவை சேர்ந்த கடற்படையினருக்கு தகவல் வந்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து, உடனடியாக நடுக்கடலில் அந்த கப்பலை கடற்படையினர் விரட்டி பிடித்தனர். அதன்பின் அந்த கப்பலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுமார் 200 கோணி பைகளில், செவ்வக வடிவத்தில் கொக்கைன் போதைப் பொருட்கள் […]
எண்ணெய் வளமிக்க வெனிசுலாவில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெனிசுலா நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அங்கு ஏற்பட்டிருக்கும் நிர்வாக குளறுபடியால் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெனிசுலாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 1 ரூபாய் 64 பைசாவிற்கு விற்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு கொலம்பியாவில் இருந்து பெட்ரோல் கடத்திவரப்பட்டு விற்கப்படுகிறது. மேலும் மக்கள் பெட்ரோல் பங்குகளில் காத்திருந்து பெட்ரோல் வாங்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நபருக்கும் குறித்த அளவுதான் […]
நீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவை தொடர்ந்து பல நோயால் வாடி வந்த கொலம்பியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலம்பியாவில் 60 வயதாகின்ற விக்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இதயக்கோளாறு, சர்க்கரை மற்றும் நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளார். அதுமட்டுமின்றி இவரால் எழுந்து நடக்க முடியாததால் எப்போதும் விக்டர் வீல் சேர்லயே நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையினால் விக்டர் சுமார் 2 வருடங்களுக்கு முன்பாக தன்னை கருணைக் கொலை […]
கொலம்பியாவில் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் காவல்துறையினர் இருவர் பலியாகியுள்ளனர். கொலம்பியாவில் அதிகமாக போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. எனவே, போதைப் பொருள் விற்பனையை தடுப்பதற்காக அந்நாட்டின் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், அங்கு பல கிளர்ச்சியாளர்கள் அமைப்பு இயங்கி வருகிறது. பக்கத்து நாடான வெனிசுலாவின் ஆதரவோடு தேசிய விடுதலை ராணுவமும், கொலம்பியா புரட்சிகர இராணுவமும், அங்கு இயங்கி வருகிறது. இந்த இரண்டு கிளர்ச்சியாளர்கள் அமைப்பையும் அந்நாட்டு அரசு தீவிரவாத […]
கொலம்பியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு கடத்த முயற்சி செய்த அரியவகை சிலந்திகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் தேள்களை காவல்துறையினர் கைப்பற்றினர். கொலம்பியாவில் இருந்து 210 பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டு இருந்த 232 டிராண்டுலா வகை சிலந்திகள், சிலந்தி முட்டைகள், தேள்கள் மற்றும் 67 கரப்பான் பூச்சிகளை 2 பேர் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்த முயற்சி செய்தனர். இவ்வாறு கடத்த முயற்சி செய்த 2 ஜெர்மானியர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த அரியவகை ஊர்வன ஜீவராசிகளை பறிமுதல் செய்தனர். […]
கனடாவிலுள்ள கொலம்பியா மாவட்டம் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளம், புயல், நிலச்சரிவு, மழை போன்ற இயற்கை பேரிடர்களால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் வான்கூவர் என்னும் கடற்கரை நகரம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட புயலில் காரணத்தால் மிகவும் கடுமையான மழை பெய்துள்ளது. அவ்வாறு பெய்த மழையின் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவ லுள்ள நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப் […]
கொலம்பியா நாட்டில் போதை பொருள் கடத்தல் கும்பல் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. கொலம்பியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளிலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போதைப் பொருள் கடத்தலை தடுக்க அரசு பல்வேறு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையில் அந்த நாட்டின் மிகப்பெரிய போதை பொருள் கடத்தல் கும்பலின் […]
கொலம்பியா நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. கொலம்பியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் இருந்து பிற பகுதிகளுக்கு போதை பொருள் கடத்தல் சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக கொலம்பிய அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அந்த நாட்டின் கடற்படையினர் நேற்று பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் திடீரென அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மல்பிலோ பகுதியில் 3 சிறிய நீர்மூழ்கி […]
கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் கொலம்பியா ஒன்றாக இருக்கின்றது. அந்நாட்டின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாகாணத்தில் உள்ள பல மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நரினோ மாகாணம் மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மலையடிவாரத்திலுள்ள வீடுகள் நிலச்சரிவில் சிக்கி […]
மருத்துவமனையில் இருந்து பெண் அரசியல்வாதி தப்பித்து செல்லும் காணொளி காட்சியானது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டில் தேர்தலுக்குப் பிறகு வாக்காளர்களிடம் மோசடி, ஊழல் போன்ற பல குற்றச்சாட்டுகளை செய்ததாக அந்நாட்டின் முன்னாள் பெண் அரசியல்வாதியான ஐடா மெர்லோனா ரெபோல்டோ அவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் பொகட்டா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் உடல்நலக்கோளாறு காரணமாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். https://videos.dailymail.co.uk/video/mol/2021/10/30/2142610508976767689/640x360_MP4_2142610508976767689.mp4 அப்பொழுது ரெபோல்டோவின் மகளான ஜடா விக்டோரியா மெர்லோனா […]
கொலம்பியாவில் 2.2 டன் கொக்கைன் போதை பொருள்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலம்பியாவில் 2.2 டன் கொக்கைன் போதை பொருள்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த போதை பொருட்கள் பார்சல் செய்யப்பட்டு பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகாரிகள் அந்த பார்சல்களை ஸ்கேனிங் செய்தபோது போதை பொருள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் பலரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அந்த கொக்கைன் போதை பொருள் மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க […]
இளம் சகோதரர்கள் 2 பேர் தங்கள் பாட்டி வீட்டின் தோட்டத்தில் இருந்த பழத்தை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டின் Montecitos என்ற கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 5 வயதுள்ள ஜோஃப்ரான் சாயா மற்றும் அவரது சகோதரி அமிரா சாயா(3) ஆகிய இருவரும் ஆப்பிள் சாப்பிடுவதாக நினைத்துக் கொண்டு குறித்த பழங்களை சாப்பிட்டுள்ளனர். அப்போது சிறுவர்கள் 2 பேரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாந்தி மற்றும் வலிப்பு நோயால் சிரமப்பட தொடங்கினர். […]
கொலம்பியாவைச் சேர்ந்த பெண் நோயின் காரணமாக அவதிப்பட்டு வந்ததால் கருணைக்கொலை செய்யப்பட்டார். தென் அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவைச் சேர்ந்தவர் 51 வயதான Martha Sepúlveda. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் Lou Gehrig’s எனப்படும் amyotrophic lateral sclerosis நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை அடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் கருணைக்கொலை செய்வதற்கு அனுமதி பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதில் “என்னை பொறுத்தவரை வாழ்க்கையின் முழு உரிமையாளர் கடவுள் தான். […]
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் விலங்குகள் பலவும் வாழுகின்றன. வீட்டில் வளர்க்கக்கூடிய பலவகை செல்லப்பிராணி உயிரினங்ளை மக்கள் மிகவும் பாசமாக வளர்த்து வருகிறார்கள். இவைகளை தங்கள் வீடுகளில் உள்ள மனிதர்களை போல பேணி பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் செல்லப்பிராணிகளை பாதுகாக்கும் வகையில் ஒரு நாடு வித்தியாசமான ஒரு முயற்சியை தற்போது நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. செல்ல பிராணிகள் இறந்துவிட்டால், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என கொலம்பியா […]
கொலம்பியா ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கொலம்பியாவில் அராகிட்டா நகராட்சி பகுதியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது கொரில்லா தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் .இதையடுத்து படுகாயமடைந்த 6 பேர்சிகிச்சைக்காக அருகில் உள்ள சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் என […]
கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கொலம்பியாவில் அரசுப்படையினருக்கு , கிளர்ச்சியாளர் அமைப்பினருக்கும் இடையே பல ஆண்டுகளாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து ராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையே அவ்வப்போது மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பலிடிஸ், சன் வென்செடி டி கல்மம், ஹலி ஆகிய நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் போலீசார் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 போலீசார் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த […]
கொலம்பியாவின் ஜனாதிபதி உட்பட 4 பேர் சென்ற ஹெலிகாப்டரின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவின் ஜனாதிபதி உட்பட 4 பேர் ஹெலிகாப்டரில் வெனிசுலா எல்லைக்கு அருகே சென்றுள்ளார்கள். அப்போது மர்ம நபர்கள் ஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள். ஆனால் ஹெலிகாப்டர் தரை இறங்கும் போதே மர்ம நபர்கள் அதன் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார்கள். இதனால் ஹெலிகாப்டரில் இருந்த ஜனாதிபதி உட்பட 4 பேருக்கும் […]
கொலம்பியாவில் இராணுவத்தளத்தில் வாகன வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 36 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். கொலம்பியாவில் அரச படை மற்றும் தேசிய விடுதலை இராணுவம் என்ற அமைப்பினருக்கிடையே பல வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் கிளர்ச்சியாளர்களும் ராணுவத்தினரிடம் மோதி வருகிறார்கள். இந்நிலையில் குகுடா என்ற நகரத்தில் இருக்கும் ராணுவ தளத்தில் இராணுவ ஆடை அணிந்து ஒரு வாகனத்தில் இரண்டு நபர்கள் வந்துள்ளார்கள். அவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு உடனடியாக தப்பியோடிவிட்டனர். அடுத்த சில நிமிடங்களில் அந்த வாகனத்தில் […]
கொலம்பியாவில் அதிபரை எதிர்த்து நாட்டு மக்கள் கடந்த 3 வாரங்களாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கொலம்பியா குடியரசில் இவான் டியூக் என்பவர், கடந்த 2018 ஆம் வருடத்தில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அதன் பின்பு, கடந்த 2020 ஆம் வருடத்தில் உலகம் முழுவதிலும் கொரோனா தீவிரமடைந்தது. இதில் கொலம்பியா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. எனவே கொலம்பியா மக்கள் சிலர், இந்த நிலைக்கு அதிபர் இவான் டியூக், சரியாக திட்டமிடாதது தான் காரணம் என்று விமர்சித்து வந்தனர். இந்நிலையில் […]
கொலம்பியா தங்க சுரங்கத்தில் இடிபாடுகளில் மாட்டிய 20 தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தென் அமெரிக்க நாட்டில் கொலம்பியாவின் மத்திய பகுதியில் உள்ள கால் டாஸ் என்ற இடத்தில் நெய்ரா நகரில் தங்க சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. அந்த சுரங்கத்தில் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் செய்து வருகிறார்கள் . அவர்கள் வழக்கம் போல நேற்று மாலை வேலை செய்து கொண்டிருந்தபோது சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதனால் […]
கொலம்பியாவை சேர்ந்த தம்பதிகள் கடந்த 22 வருடங்களாக சாக்கடையில் வாழ்ந்து வருகின்றனர். மரியா கார்சியா மற்றும் என்பவர் வாழ்ந்து வருகின்றனர். இவரின் கணவர் மிகுவல் ரோபோ. இந்த தம்பதிகள் போதைப்பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யும் மெண்டலின் தான் முதல் முதலில் சந்தித்துக்கொண்டனர். அப்போது இருவருக்கும் போதை பழக்கம் அதிகமாக இருந்தது. ஆழ்ந்த துயரத்தில் இருவரும் இருந்தனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் இவர்கள் ஆறுதலாக இருந்து வந்தனர். போதை பழக்கத்தில் இருந்து மீண்ட இவர்களுக்கு உதவி செய்ய யாரும் […]
கொலம்பியாவில் அசுர வேகத்தில் கொரோனா இரண்டாம் அலை வீசுவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவி ஒரு வருடம் ஆகிய நிலையில், ஒருசில நாடுகளில் இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இரண்டாம் அலை வீசி வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் பிப்ரவரி மாதம் வரை தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படாது என கொலம்பியா அரசு அறிவித்துள்ளதால் […]
கொலம்பியா நாட்டில் ஒரு மனிதனின் தொண்டையிலிருந்து ஏழு அங்குல நீளம் உள்ள மீனை மருத்துவர்கள் அகற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. ஜனவரி 23 அன்று கொலம்பியாவில் பிவிஜய் நகரில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்ற போது அவர் வலையில் ஒரு மீன் சிக்கியது. அந்த மீனை எடுத்து கையில் வைத்துள்ளார். மீண்டும் வலையை விரித்த போது இரண்டாவது மீன் சிக்கியது. அதையும் இழக்க விரும்பாததால் அந்த மீனை வாயில் வைத்துள்ளார். துரதிஷ்டவசமாக அந்த அவரது தொண்டைக்குள் […]
அமெரிக்காவில் கொலம்பியா மாகாணத்தில் பிரபல உணவகம் ஒன்றில் 24 கேரட் பர்கர் உணவகம் ஒன்று தயாரிக்கப்பட்டது. இது அனைவரையும் ஈர்த்துள்ளது. துரித உணவு பட்டியலில் பீட்சாவை அடுத்து மிகவும் பிரபலமான உணவுப் பொருள் என்றால் அது பர்கர். காய்கறிகளைக் கொண்டும் பலவகை இறைச்சிகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பார்கருக்கு அனைத்து நாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கொலம்பிய தலைநகர் பொகாட்டாவில் உள்ள பிரபல உணவகத்தில் 24 கேரட் தங்கத்தாலான பர்கரை தயாரித்து உள்ளது. வழக்கமான இறைச்சியின் […]
கொரோனா தொற்றால் கோமா நிலைக்கு சென்ற பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் நாட்டின் கொலம்பியா என்ற பகுதியை சேர்ந்த பெண் Gillian McIntosh (37). இவரது கணவர் Dave. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் Gillian இரண்டாவது கர்ப்பமாக இருந்ததால் அவரது கணவர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதையடுத்து தனது முதல் குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக Dave வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த Gillian க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு […]
இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன பெண் நடுக்கடலில் உயிருடன் மிதந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது கொலம்பியா கடற்பகுதியில் கடந்த 26ஆம் தேதி மீனவர்கள் பெண்ணொருவரை மீட்டுள்ளனர். 46 வயதான ஏஞ்சலிகா என்ற அந்தப் பெண் இரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். கடுமையான குளிரில் ஆபத்தான நிலையில் தான் அந்தப் பெண்ணை மீனவர்கள் மீட்டுள்ளனர். அவருக்கு முதலுதவி கொடுத்த உதவிக்குழுவினர் அந்தப்பெண் பேசக்கூட முடியாத படி பலவீனமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். மீனவர்களான குஸ்டாவோ, விஸ்பால் ஆகிய […]
கொலம்பியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் தென்னாப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி கொலம்பியா ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில் கொலம்பியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.50 இலட்சத்தை எட்டியுள்ளது. அந்நாட்டில் ஒரே நாளில் 8,488 பேருக்கு கொரோனா பாதிப்பு […]
கொலம்பியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா, தற்போது 215 நாடுகளுக்கும் மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கொலம்பியா 8-வது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் கொலம்பியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டியுள்ளது. கொலம்பியாவில் ஒரேநாளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். அதனால் கொரோனாவால் […]
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 212,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்aவில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 275,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 266,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]
உலகளவில் கொரோனா பாதிப்பால் 692,794 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]