திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரத்தில் சுந்தர் என்ற மீனாட்சி சுந்தர் (28) வசித்து வருகிறார். இவர் பர்மா காலனியை சேர்ந்த வடை கடை வியாபாரி ராமன் என்பவரிடம் 4 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் ராமன் அந்த கடனை திருப்பி கேட்ட போது சுந்தர் கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து ராமன் தன்னுடைய கடையில் இரவு நேரத்தில் சிக்கன் 65 செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை […]
Tag: #கொலை
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகை ரியாகுமாரி மரணத்தில் திடீர் திருப்பமாக அவரது கணவரே சுட்டுக் கொன்று விட்டு கொள்ளையர்கள் கொன்றதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரியாகுமாரி. இவர் கடந்த புதன்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் கணவர் பிரகாஷ் குமார் மற்றும் 2 1/2 வயது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தபோது கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கணவர் புகாரளித்திருந்தார். இந்நிலையில் ரியா குமாரியின் பெற்றோர் அளித்த புகாரின் கீழ் பிரகாஷ் குமாரை […]
முன்னாள் எம்பி மஸ்தானை உறவினர் உட்பட 5 பேர் இணைந்து கொலை செய்துள்ளனர். கார் ஓட்டுநர் இம்ரான், உறவினரான சித்தா டாக்டர் சுல்தான் அகமது, நண்பர்கள் நசீர், தவ்பிக், லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்தானின் சகோதரரின் மருமகன் சித்தா டாக்டர் சுல்தான் அகமது, கார் ஓட்டுநர் இம்ரான் உட்பட 5 பேரும் கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலம் ஆகியுள்ளது. மாரடைப்பால் உயிரிழந்தார் என கூறப்பட்ட நிலையில் முன்னால் எம்பி மஸ்தானை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பணம் […]
மகாராஷ்டிரா புனேவிலுள்ள சார்ஹோலி பகுதியில் வசித்து வரும் 65 வயதான கெர்பா தோர்வ் என்ற முதியவர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. அவர் அந்த பெண்ணுடன் ஊரை விட்டு ஓடிப்போய் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நினைத்து உள்ளார். அதற்காக சினிமாவை மிஞ்சும் அளவிற்கு அவர் ஒரு சம்பவத்தை செய்துள்ளார். அதாவது, கெர்பா தான் இறந்து போனதாக நாடகமாட கொலை செய்து உள்ளார். தன்னுடன் நட்பாக பழகி வந்த ரவீந்திர பீமாஜி கெனந்த்(48) என்பவரை, தனது […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசித்து வந்தவர் நடிகை ரியாகுமாரி. இவருடைய கணவர் பிரகாஷ் குமார் படத் தயாரிப்பாளர் ஆவார். இந்த தமபதியினருக்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இவர்கள் காரில் கொல்கத்தாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, பக்னன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மகிஷ்ரேகா எனும் இடத்தில் காரை 3 பேர் கொண்ட மர்ம நபர்கள மறித்தனர். இதையடுத்து பிரகாஷ் குமாரை கொள்ளையர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ரியாகுமாரியை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர். […]
கேரளா திருவனந்தபுரம் மாவட்டம் வட சேரிகோணம் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சீவ். இவருடைய மகள் சங்கீதா(17) கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இதில் சங்கீதாவும் பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த கோபு(20) என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் காதலர்களுக்கு இடையில் சிறுசிறு பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து தன் காதலி வேறு யாருடனும் பழகுகிறாரா? என்பதை அறிய கோபு ஒரு திட்டம் போட்டுள்ளார். அதன்படி கோபு சமூகவலைதளத்தில் அகில் என்ற பெயரில் போலி கணக்கு (பேக் ஐடி) […]
சத்தீஸ்கர் கோர்பா மாவட்டத்திலுள்ள ஜாஷ்பூரில் துத்ராம் பன்னா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புலொல்ஜினா என்ற மனைவியும், நீலீஸ் என்ற மகனும், நீல்குஷம்(20) என்ற மகளும் இருக்கின்றனர். இதில் நீல்குஷம் சென்ற 3 வருடங்களுக்கு முன்பு மதன்பூர் பகுதியிலுள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்போது பள்ளிக்கு போக ஜாஷ்பூர் -கோர்பா இடையில் செல்லும் தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். அந்த பேருந்து கண்டெக்டர் ஷபாஷ் கான் என்ற இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து தொந்தரவு […]
மத மாற்ற சம்பவங்களை தடுக்க கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பிரபல மந்திரி கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷரத்தா என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் என்பவர் கொலை செய்தார். பின்னர் அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி டெல்லி முழுவதும் வீசினார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த கொலைக்கு பின்னால் […]
தெலங்கானா ஹைதராபாத்திலுள்ள பாலா நகர் நர்சாபூர் குறுக்கு சாலையில் ஸ்ரீனிவாஸ் (35) என்பவர் வசித்து வந்தார். இவர் சென்ற 2 நாட்களுக்கு முன் காசிராம் மற்றும் பிற தொழிலாளர்களுடன் கட்டிட வேலை செய்துள்ளார். இதற்காக ரூபாய்.1,200 சம்பளமாக பேசப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் காசிராம் என்பவருக்கு ஸ்ரீனிவாஸ் ரூபாய்.800 மட்டுமே ஊதியமாக வழங்கியுள்ளார். இதன் காரணமாக நர்சாபூர் நடைபாதையில் வைத்து ஸ்ரீனிவாஸ் மற்றும் காசிராம் இடையில் மீதமுள்ள 400 ரூபாய்காக தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அப்பகுதியினர் அவர்களை […]
உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் இப்ராகிம் (60)- ஹஸ்ரா தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் இப்ராகிம் காசியாபாத்தில் இரும்புக்கடை நடத்தி வந்தார். கடந்த மாதம் 22ஆம் தேதி இப்ராகிம் மற்றும் அவரது மனைவி ஹஸ்ரா கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பணத்திற்காக 12 வயது சிறுவன் கூட்டாளியுடன் சேர்ந்து இப்ராகிம் மற்றும் அவரது மனைவியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதாவது, கொலையான தம்பதியினருக்கு 12 வயது சிறுவனை முன்கூட்டியே தெரியும். இதற்கிடையில் […]
கர்நாடகாவின் மங்களூர் நகரில் சூரத் கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஜலீல் என்பவர் தனது கடை முன்பாக நேற்று இரவு நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் திடீரென தாக்கி கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் காயமடைந்த ஜலீல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சம்பவம் எதிரொலியாக மங்களூருக்கு உட்பட்ட பகுதிகளில் அதாவது […]
உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் சுசில் வர்மா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்மிரிதி ராணி வர்மா ஆவார். இத்தம்பதியினரின் மகள் குஷ்பூ வர்மா (16). இதற்கிடையில் தம்பதியினர் சில வருடங்களுக்கு முன் பிரிந்து விட்டனர். இதன் காரணமாக கணவரை பிரிந்த ராணிக்கு புதியதாக அனில் குமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தாயின் இந்த செயல் குஷ்பூ வர்மாவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்ற புதன்கிழமை காலை மொகல்லா காலா சாஹீத் எனும் இடத்தில் […]
பீகார் மாநிலம் பாட்னாவின் ஜானிபூர் பகுதியிலிருந்து இளம்பெண் ஒருவரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அர்வால் பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கும், ஜெகனாபாத்தை சேர்ந்த ராணுவ வீரர் ரஞ்சித்குமாருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டட்து. அப்பெண்ணுக்கு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இதில் ரஞ்சித்தின் இளைய சகோதரன் பிஜேந்திரன். இதற்கிடையில் திருமணம் நின்றுபோனதை அடுத்து அப்பெண்ணுடன் பிஜேந்திரன் நெருங்கி பழகி உள்ளார். அதன்பின் பிஜேந்திரனும், அந்த […]
ராஜஸ்தான் தோல்பூர் பகுதியிலுள்ள பர்வதி நதிப் படுகை அருகில் சாக்குப்பைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், 4 சாக்குப்பைகளில் துண்டு துண்டாக இருந்த உடல் பாகங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இறந்தவர் பகாபுதீன் கான் எனவும் இவர் சென்ற 10 வருடங்களுக்கு முன் இஸ்லாமிய மதத்திலிருந்து இந்துவாக மாறி அங்குள்ள சாமுண்டி மாதா ஆலயத்தில் உழவார பணிகளை மேற்கொண்டு […]
பெண்ணை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள கெண்டுகுரி பகுதியில் நிதுமோனி லுகுரஷான் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிறந்து 10 மாதம் ஆன ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த 19-ஆம் தேதி திடீரென வீட்டிலிருந்து காணாமல் போய் உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த […]
ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பாலமு மாவட்டத்தில் தனுகி என்பவர் பேய் ஓட்டும் வேலையை செய்து வந்தார். சென்ற சில மாதங்களுக்கு முன் தனுகிக்கும் அவரது மகன் பல்ராமுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதற்கிடையில் பல்ராமின் இளைய மகன் திடீரென்று இறந்து விட்டார். இதையடுத்து மகன் இறப்பிற்கு தந்தை தனுகி தான் காரணம் என பல்ராம் நினைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் தனுகி வெளியில் சென்று கொண்டிருந்தபோது, பல்ராமும் அவரது மனைவியும் அவரைப் பின்தொடர்ந்து சென்று உள்ளனர். அதன்பின் ஆள் நடமாட்டம் […]
மனைவியின் நடத்தை மீது சந்தேகம் பட்டு அம்மிக்கல்லால் அடித்து தொழிலாளி கொலை செய்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளத்தை அருகே இருக்கும் கோழிப்பண்ணையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நூர்தீன் ஷேக் என்பவர் தனது மனைவியுடன் தங்கி வேலை செய்து கொண்டிருந்தார். இதனிடையே சொந்த ஊருக்குச் சென்று மீண்டும் கோழி பண்ணைக்கு வேலைக்கு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் நூர்தின் ஷேக் தனது […]
சென்னை மாவட்டத்தில் உள்ள சூரப்பட்டு அன்னை நகரில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேவதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு குடிப்பழக்கத்திற்கு அடிமையான வேலாயுதத்தை குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த வேலாயுதம் மீண்டும் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது தன்னை போதை மறுவாழ்வு மையத்தில் […]
பிரபல நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு மீது நேற்று முன்தினம் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் […]
பிரபல நாட்டில் நடந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பிரபல நாடான பாகிஸ்தானில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷன் மீது ஒரு அமைப்பு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]
ஜார்கண்ட் மாநிலத்தில் இளம் பெண்ணை கொலை செய்து 50 துண்டுகளாக வெட்டிய கணவரின் கொடூர செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சாகிப்கஞ்ச் மாவட்டத்தின் போரியோ காவல் நிலைய எல்லையில் ரூபிகா பகதின் (22) என்பவர் வசித்து வந்தார். பழங்குடி இனத்தை சேர்ந்த இந்த இளம் பெண் தில்தார் அன்சாரி(28) என்பவரை காதலித்து உள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். 2 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் அண்மையில் திருமணம் […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலுள்ள வித்யாதர் நகரில் சரோஜ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய கணவர் கடந்த 27 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் சென்ற டிசம்பர் 11ம் தேதியன்று இளைஞர் அனுஜ், தன் அத்தையான சரோஜை கொடூரமாக கொலை செய்து 10 துண்டாக வெட்டி சமையலறையில் மறைத்து வைத்து உள்ளார். இதையடுத்து ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு சென்று துண்டாக வெட்டிய உடல் உறுப்புகளை […]
ஜார்கண்டில் இளம்பெண் ஒருவரை 12 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்டின் சாகேப்கஞ்ச் என்னும் நகரில் 22 வயது மதிக்கத்தக்க பழங்குடியினம் இளம்பெண் ஒருவர் 12 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வெட்டப்பட்ட அந்த இளம் பெண்ணின் உடலை போலீசார் இன்று கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் கணவரான திலகர் அன்சாரி என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அந்த இளம் […]
பிரபல நாட்டில் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள கெட்டெரிங் நகரில் கேரளாவை சேர்ந்த அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் அஞ்சு மற்றும் அவரது 2 குழந்தைகளும் வீட்டில் படுகாயங்களுடன் கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் […]
மது போதைகளில் தம்பியை அடித்துக்கொன்ற அண்ணனை போலீசார் வலைபேசி தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் மேல பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த கொம்பையா என்பவரின் மகன்கள் பாண்டித்துரை மற்றும் கருப்பசாமி. இவர்கள் இருவரும் நேற்றும் முன்தினம் இரவில் டாஸ்மாக் கடையில் மது குடித்துக் கொண்டிருந்தனர். போதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கின்றது. இதன்பின் இருவரும் பாரில் இருந்து வெளியே வந்து சிறிது தூரம் நடந்து சென்றார்கள். அப்போது பாண்டித்துரை திடீரென ஆட்டோவில் இருந்து இரும்பு […]
சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தில் பச்பேடி அரசு பள்ளியில் பிரதீப் ஸ்ரீவஸ்தவா(61) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் டிசம்பர் 15ஆம் தேதி நள்ளிரவில் தன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து சென்றார். இதையடுத்து தலைமை ஆசிரியர் வீட்டின் வாயிலுக்கு சென்றபோது அவரை தடுத்து நிறுத்திய வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அதன்பின் அந்த வாலிபர் தலைமை ஆசிரியரை சுத்தியல், கத்தி போன்றவற்றால் கொடூரமாக தாக்கி இருக்கிறார். […]
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பெதுள் மாவட்டத்தில் 300 ரூபாய் பணத்திற்காக இரண்டு சகோதரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ரமேஷ் ககோடியா என்ற நபர் தன்னுடைய சுமன் சிங் ககோடியாவின் மனைவிக்கு 300 ரூபாய் கடனாக கொடுத்துள்ளார்.. இதனால் சகோதரர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ரமேஷ், ஒரு குழாயை எடுத்து சுமனின் தலையில் அடித்துள்ளார். அதில் சுமன் பலத்த காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சண்டையின்போது சகோதரர்கள் […]
10 ரூபாய்க்காக நண்பனை வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு பகுதியில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் […]
பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள டோம்பிலி பகுதியில் 44 வயதுடைய மஸ்தூத் என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவரிடம் அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் குடிப்பதற்காக அடிக்கடி பணம் கேட்பது வழக்கம். அதேபோல் நேற்றும் அந்த நபர் பணம் கேட்டுள்ளார். ஆனால் மஸ்தூத் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் கத்தியை கொண்டு மஸ்தூத்தை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் […]
உத்தரப்பிரதேசம் காஸியாபாத் மாவட்டத்தில் உள்ள மோடிநகர் பகுதியில் உமேஷ் சர்மா என்பவர் வசித்து வந்துள்ளார். அவருடைய வீட்டில் ஆராய்ச்சி மாணவரான அன்கித் கோகார் என்பவர் தங்கி பயின்று வந்துள்ளார். அவர் லெக்னெள பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் அன்கித்தின் பெற்றோர் சென்ற சில மாதங்களுக்கு முன் இறந்துள்ளனர். இதையடுத்து பாக்பாத் பகுதியிலிருந்த அவர்களின் பூர்விகசொத்தை அன்கித் விற்பனை செய்துள்ளார். இதன் வாயிலாக ரூ.1 கோடி கிடைத்துள்ளது. அதன்பின் பெற்றோர் துணை இன்றி தனியொருவராக பயின்று […]
சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சஞ்சு திரிபாதி (38) நேற்று (டிச.14) சக்ரி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரது காரை முகமூடி அணிந்துவந்த சிலர் சுற்றிவளைத்தனர். அதன்பின் அவர்கள் கார் ஓட்டிவந்த சஞ்சு திரிபாதி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் சஞ்சு திரிபாதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு கிடந்த 7 தோட்டா உறைகளை கைப்பற்றியுள்ளனர். மேலும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், […]
பிரபல ரவுடி ராக்கெட் ராஜா நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.. பனங்காட்டு படை கட்சி தலைவராக இருக்க கூடிய ராக்கெட் ராஜா நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை என்பவரை கடந்த ஜூலை மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேலும் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இந்த நிலையில் நாங்குநேரி நீதிமன்றத்தில் அந்த வழக்கு சம்பந்தமாக போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே […]
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் நகரைச் சேர்ந்த இம்மானுவேல் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கன்னித்தாய் (30). கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அலி பாத்திமா (4), கஜிதா பிஸ்மி (3) என்னும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இம்மானுவேல் அப்துல்லா நேற்று முன்தினம் அவரது மனைவியை அடித்து கொன்று விட்டு தலைமறைவாகிவிட்டார். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். […]
வேலை தேடி சென்ற வாலிபரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள செங்குட்டை கிராமத்தில் சீனிவாசன்-பாரதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வெங்கடேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி வெங்கடேசன் வேலை தேடி செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசனின் தம்பி மணிகண்டனின் வாட்ஸ் அப்புக்கு வெங்கடேசன் வெட்டப்பட்டு ரத்த காயங்களுடன் இருப்பது போல் ஒரு புகைப்படம் வந்துள்ளது. இதனை […]
பிரபல நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒரு பகுதியில் வசித்து வந்த ஒரு நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அந்த நபர் விம்பிலா நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆலந்துரை அடுத்த கீழ் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான பழனி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக அவருடைய மனைவி வள்ளியம்மாள் மற்றும் அவரது மகள் திரிஷா, மோனிஷா, மகன் சிவா, பூர்ணிமா, பூமிகா ஆகியோரை அருவாளால் வெட்டியதாக சொல்லப்படுகிறது. இதில் த்ரிஷாவுக்கு 14 வயதாகிறது. மேலும் பார்த்தோம் என்றால் மோனிஷா 11 வயது, சிவாவுக்கு 4 வயது, பூரணிமா மூன்று வயது, பூமிகா 9 வயதாகும் இவர்கள் ஐந்து பேருமே சிறுவர்கள். மிகவும் […]
செங்குன்றத்தை அடுத்த அமலாதி ஊராட்சிக்குட்பட்ட எடப்பாளையம் எம்.ஜி.ஆர் தெருவில் வசித்து வந்த முரளி என்பவர் கடந்த அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் அலமாதி சாந்தி நகரை சேர்ந்த திலீபன் (25), நவீன் (24), தீபன் (41), ஆறுமுகம் (60) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் முரளியின் உறவினர்கள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் வீணா கபூர் (74). இவர் ஏராளமான படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக் கும் நிலையில் மூத்த மகன் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில் 2-வது மகன் சச்சின் (42) தன்னுடைய தாயார் வீணாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வீணா கபூர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி அவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த […]
முன்னாள் இந்தி சீரியல் நடிகை வீனா கபூர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது சொத்து தகராறு காரணமாக அவரது மகனான சச்சின் வீனா, கபூரின் தலையில் பேஸ்பால் மட்டையால் தாக்கி இருக்கிறார். இதையடுத்து தாயின் உடலை அருகில் உள்ள ஆற்றில் சச்சின் வீனா தூக்கி வீசி இருக்கிறார். இதற்கிடையில் வீனா கபூர் பல நாட்களாக வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் அவரது காதலி குற்றத்தை மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூரில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஷாரோன் ராஜ் என்பவர் பிஎஸ்சி “ரேடியாலஜி” இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் ராமன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டிற்கும் தெரிந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 14-ஆம் தேதி திடீரென கிரீஷ்மா […]
மராட்டிய மாநிலம் புனே நகரில் சகான் ஷிக்ராப்பூரிலுள்ள தபா ஒன்றில் சமையல்காரராக பணிபுரிந்த நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து 2 நாட்களுக்கு பின் யாருக்கும் தெரியாமல் உடலை குற்றவாளிகள் புதைக்க சென்றபோது அதை தொழிலாளி ஒருவர் பார்த்துள்ளார். சில தினங்களுக்கு அமைதியாக இருந்த தொழிலாளி சமூகஆர்வலர் ஒருவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அதை கேட்ட சமூக ஆர்வலர், காவல்துறையினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கொலை சம்பவம் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சமையல்காரர் பணியாற்றிய தபாவின் பெயர் மட்டும் […]
கர்நாடகா மாநிலம் ஹப்பள்ளி பகுதியை சேர்ந்த அகில் (26) என்ற நகைக்கடை அதிபர் ஒருவர் சென்ற சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இது தொடர்பாக அவரது உறவினர் காவல் நிலையத்தில் சென்ற 3-ஆம் தேதி புகாரளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சந்தேகத்தின் படி அகிலின் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது, அகிலின் தந்தையான பரத் மகாஜன் சேட், கூலிப் படையை வாடகைக்கு அமர்த்தி மகனை கொலை செய்தது […]
உத்தரப்பிரதேசம் முஸாபர்நகர் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி, சென்ற 2015-ம் வருடம் பிப்..17ம் தேதி காணாமல்போனார். இது தொடர்பாக கோண்டா போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து ஆக்ராவில் ஒரு பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்ட நிலையில், அது தனது மகள்தான் என தந்தையால் அடையாளம் காட்டப்பட்டது. அதன்பின் பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 18 வயதான 12ம் வகுப்பு மாணவர் மீது பெண்ணை கடத்தி கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். எனினும் தன் […]
மதுபழக்கத்திற்கு அடிமையான கணவர், பிரிந்து பல வருடங்களாக தனியாக வசித்து வந்த மனைவியை மண் வெட்டியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 7 மணி அளவில் பைத்தானில் உள்ள நேருநகர் பகுதியில் அரேங்கேறியுள்ளது. இச்சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கணவரின் குடிப்பழக்கம், போதையில் அடித்தல், ஆபாசமாக பேசுதல் ஆகிய காரணங்களால் இருவரும் சுமார் 2,3 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனிடையில் தன் மனைவி மீண்டும் தன்னுடன் இணைந்து […]
பீகார் பாகல்பூர் பிர்பைண்டியை சேர்ந்த அசோக்யாதவ் என்பவரின் மனைவி நீலம் தேவி(40). இந்த தம்பதியினர் மளிகை கடை வைத்து நடத்தி வந்தனர். இவர்கள் அதே ஊரைச் சேர்ந்த ஷகீல் அகமது என்பவரிடம் கடன் வாங்கியிருந்தனர். ஒரு மாதத்துக்கு முன்னதாக பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நீலம் தேவி தன் மகனுடன் பக்கத்திலுள்ள சந்தையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு ஷகீல் தன் சகோதரர் முகமது ஜூதினுடன் வந்துள்ளார். அங்கு […]
உத்தரபிரதேசம் கிரேட்டார் நொய்டாவில் வசித்து வந்த பயல் பாஹ்தியின்(22) பெற்றோர் சென்ற மே மாதம் தற்கொலை செய்துகொண்டனர். ஏனெனில் தன் உறவினராக சுனில் என்பவரிடமிருந்து பயலின் பெற்றோர் ரூபாய்.5 லட்சம் கடன் வாங்கியிருந்தனர். கடனை திருப்பி தரும்மாறு பயலின் பெற்றோரிடமும் சுனில் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். அதேபோல் பயலின் அண்ணி மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேரும் பயலின் பெற்றோரிடம் பணத்தை கொடுக்கும்படி தொந்தரவு செய்து உள்ளனர். இதையடுத்து கடன் தொல்லையால் பயலின் பெற்றோர் மே மாதம் […]
ராஜஸ்தான் ஜெய்ப்பூர் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ் சந்த். இவருடைய மனைவி ஷாலு. சென்ற அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி ஷாலு தன் உறவினர் ராஜூவுடன் கோயிலுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். இந்நிலையில் கார் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை காவல்துறையினர் சாலை விபத்தாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையில் ஷாலு மரணம் அடைந்தால் அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணமான ரூபாய்.1.90 கோடியை மகேஷ் சந்த் பெற்றார். […]
வாலிபர் தனது காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரில் சந்தோஷ் தமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேபாள நாட்டை சேர்ந்த கிருஷ்ண குமாரி என்ற பெண்ணுடன் லிவ்-இன் முறையில் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று திடீரென கிருஷ்ண குமாரி வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
வெளிநாட்டு பெண்ணை கொலை செய்த இந்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். வடக்கு ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள கெய்ர்ன்ஸ் பகுதியில் குயின்ஸ்லேண்ட் கடற்கரை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் கடந்த 2018-ஆம் ஆண்டு 24 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஜ்விந்தர் சிங் என்பவர் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று அந்த நாட்டில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் வருடம் ராஜ்விந்தருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜ்விந்தர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது ராஜ்விந்தர் கையில் பழம் வெட்டும் கத்தியுடன் குயின்ஸ்லாந்தின் கிரின்ஸ் நகரில் உள்ள வெங்ஹடி கடற்கரைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அந்த கடற்கரைக்கு அதே பகுதியை சேர்ந்த மருந்தக […]